விஸ்வாமித்திரர் வாழ்க்கை வரலாறு – தமிழில்

பிறப்பு:

காதி என்ற மன்னனுக்கு சத்யவதி என்ற அழகான மகள் இருந்தாள்.

காதிக்கு ஆண் வாரிசுகள் இல்லாமல் இருந்தது, அதனால் தன் மகளை ஒரு சிறந்த அரசனுக்கு மணம் முடிக்க விரும்பினார்.

ஒருநாள் ரிசிக முனிவர் காதி மன்னனின் அரண்மனைக்கு வருகை தந்தார்

ரிசிக முனிவர் காதி மன்னனின் மகளான சத்தியவதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரிடம் பெண் கேட்டார்.

செல்வ செழிப்புடன் வாழ்ந்த தம் பெண்ணை ஒரு முனிவருக்கு கொடுக்க மனம் இல்லாததால் ரிசிக முனிவரிடம் நான் கன்னிகா தானம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் 1000 தெய்வ அம்சம் பொருந்திய குதிரைகளை கொண்டு வர வேண்டும், அதன் காது பச்சை நிறத்திலும் மற்ற பாகங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலும் இருக்க வேண்டும் என்றார் காதி.

முனிவரும் காதி அரசன் சொன்ன பச்சை நிற காதுகளை உடைய குதிரைகளை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார், ஆனால் கிடைக்கவில்லை.

பின்னர் வருண பகவானிடம் வேண்டினார், வருண பகவான் அருளால் அவருக்கு 1000 தெய்வ அம்சம் பொருந்தியத குதிரைகள் கிடைத்தது.

பின்னர் காதி அரசனிடம் குதிரைகளை கொடுத்து விட்டு சத்தியவதியை திருமணம் செய்து கொண்டார்.

ரிசிக முனிவருக்கும் சத்தியவதிக்கும் திருமணம் ஆகி பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது.

காதி மன்னரும் நாட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு ஆண் குழந்தை இல்லாமல் இருந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார்.

இதனால் சத்தியவதி தன் கணவனான ரிசிக முனிவரிடம் தனக்கும் தன் தாயாருக்கும் புத்திர பாக்யம் பெற வரம் தாருங்கள் என்று வேண்டினாள்.

ரிசிக முனிவர் தன் தவ வலிமையால் சத்தியதிக்கு அந்தண குணம் உள்ள குழந்தையும் அவளின் தாயாருக்கு சத்திரிய குணம் உள்ள குழந்தையும் பிறக்க வேண்டும் என்று மந்திரத்தை சொல்லி அந்த பிரசாதத்தை சத்யவதியிடம் கொடுத்து வலது கையில் வைத்திருப்பதை நீ சாப்பிட்டு இடது கையில் உள்ளதை உன் தாயை சாப்பிட சொல் என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்று விட்டார்.

அப்பொழுது சத்தியவதியும் அவளின் தாயும் பிரசாதத்தை மாற்றி உண்டு விட்டனர்.

இதையறிந்த ரிசிக முனிவர் பதறிப் போனார், நீங்கள் செய்த தவறால் உனக்கு சத்திரிய குணமுடைய மகனும் உன் தாயாருக்கு அந்தண குணமுள்ள மகனும் பிறப்பான் என்று கோபமாக சத்யவதியிடம் கூறினார் ரிசிக முனிவர்.

பின்பு சத்யவதியின் வேண்டுகோளால் மனம் மாறிய ரிசிக முனிவர், உனக்கு பிறக்கும் குழந்தை அந்தண குணத்தில் பிறப்பான் ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சிறிது காலம் ஆட்சி புரிந்து விட்டு முனிவராக தவம் புரிய சென்றுவிடுவான் என்னும் வரத்தை நல்கினார்.

மேலும் படிக்க  ரத்தன் நாவல் டாடா கதை - தமிழில்

சத்யவதியின் தாய்க்கு பிறந்தவர் தான் கௌசிகர், பின்னாளில் விஸ்வாமித்திராக அழைக்கப்பட்டார்.

அவர் சத்திரியனாக இருந்தாலும் அந்தண குணத்துடன் பிறந்தார்.

அவர் சிறிது காலம் ஆட்சி செய்து விட்டு பின்பு தவ வாழ்க்கையை நோக்கி சென்று விட்டார்.

சத்தியவதிக்கி மகனாகப் பிறந்தவர் தான் ஜமதக்கனி முனிவர்.

விஸ்வாமித்திரர் திருமணம்:

விஸ்வாமித்திரர் அரசனாக இருக்கும் பொழுது அகந்தை, கோவம், கர்வம் எல்லாம் சற்று அதிகமாகவே இருந்தது.

ஒருநாள் விஸ்வாமித்திரர் குரு வசிஸ்டரை சந்திக்க நேர்ந்தது, குரு வசிஸ்டர் தவத்தால் மட்டுமே அனைத்தையும் அடைய இயலும் என்றார் அவரின் தவவலிமையைக் கண்டு தானும் முனிவனாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது விஸ்வாமித்திரருக்கு.

தன்னுடைய ராஜ்யத்தை விட்டு விட்டு தவம் புரிய சென்று விட்டார், அப்பொழுது அவரின் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன் தேவலோக அழகியான மேககையை அழைத்து விஸ்வாமித்திரர் தவத்தை கலைக்கும்படி ஆணையிட்டார்.

இந்திரன் ஆணைக்குப் கட்டுப்பட்டு மேனகையும் விஸ்வாமித்திரர் முன் நடனமாடினாள், அவளின் ஒவ்வொரு அங்க அசைவிலும் தன்னுடைய சுயநினவை இழக்க ஆரம்பித்தார்.

அவருடைய ஆண்மையை சீண்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவளின் நடனத்தை தன்னுடைய கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார், பின் அவளை தன் மார்போடு வாரி அணைத்துக் கொண்டு இதழ்களை கவ்வினார், முனிவரின் தாகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மேகனை தினறினாள்.

இதைக் தேவலோகத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த இந்திரனுக்கு பேரானந்தமாக இருந்தது.

பின் விஸ்வாமித்திரர் மேனகையை மணந்து கொண்டார், அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் சகுந்தலை.

ஒருநாள் மேனகை தான் தேவலோகத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்தது, நான் தங்களின் தவத்தை கலைக்கவே இந்திரனால் அனுப்பப்பட்டேன் என்றாள்.

மேனகை சொன்னதைக் கேட்ட விஸ்வாமித்திரர் கடுங்க்கோபமுற்றார், பின் மேனகையை சபித்து விட்டு மீண்டும் தவம் செய்ய புறப்பட்டார்.

விஸ்வாமித்திரர் தவ வலிமை:

விஸ்வாமித்திரர் பல வருடங்களாக கடும் தவம் புரிந்து கொண்டார், அவறின் தவத்தைக் கண்டு பிரம்மா அவருக்கு பிரம்மரிஷி பட்டத்தை வழங்கினார்.

அன்றிலிருந்து விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி என்றழைக்கப்பட்டார்.

ஒருமுறை திரிசங்கு என்னும் மன்னன் குரு வசிஸ்டரிடம் தன்னுடைய பூத உடலுடன் சொர்க்கத்திற்கு செல்லும்படியாக செய்ய சொன்னார்.

ஆனால் வசிஸ்டர் அதற்கு மறுத்து விட்டார், வசிஸ்டரின் புதல்வர்களிடமும் தன்னை சொர்க்கத்திற்கு அனுப்பும்படி வேண்டினார்.

விஸ்வாமித்திரர்

ஆனால் அவர்கள் திரிசங்குவின் உடலை ஒரு வெட்டியான் உருவம் போல் மாற்றினர்.

இதனால் திரிசங்குவை அடையாளம் காண இயலாத மக்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற்றினர்.

அப்பொழுது பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் அவனுக்கு உதவ முற்பட்டார்.

மேலும் படிக்க  காந்தியடிகளின் எளிமைக்கான கதை

அவனை பூத உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்ப தேவர்கள் யாரும் அனுமத்திக்கவில்லை.

பின் திரிசங்குவிற்கு தனியாக ஒரு சொர்க்கலோகத்தை அமைத்தார், அப்பொழுது பிரஜாபாதி அதை தடுத்தார், அதனால் வானிலே திரிசங்கு நட்சத்திரமாக தொங்கி விட்டார்.

மேலும் விஸ்வாமித்திரர் ராமனும் சீதையும் திருமணம் செய்ய காரணமாக இருந்தார்.

ஒருமுறை விஸ்வாமித்திரர் சிவ தனுசை காண மிதிலைக்கு ராமனையும் இலக்குவனையும் அழைத்துச் சென்றார், அப்பொழுது இராவணின் அகந்தையான பேச்சால் இராமன் சிவ தனுசை இரண்டாக உடைந்து விட்டார்.

பிறகு இருவருக்கும் திருமணம் விஸ்வாமித்திரரே நடத்திய வைத்தார்.

அரிசந்திரனின் சத்தியத்தை சோதிப்பதற்கு முழுக்காரணமாய் இருந்தவர் விஸ்வாமித்திரர் ஆவார்.

அதனாலயே சத்தியத்திற்கு எடுத்துக்காட்டாய் விலங்கும் அரிச்சந்திரன் பெயரின் பின்னாள் விஸ்வாமித்திரர் என்று அழைக்கப்படுகிறார்.

பகவான் பரசுராமர் வாழ்க்கை கதை

1 thought on “விஸ்வாமித்திரர் வாழ்க்கை வரலாறு – தமிழில்”

Comments are closed.