ஒரு கிராமத்து காதல் கதை – (சின்னம்மா, செலையன்)

சின்னம்மாவின் இளமைகாலம்:

 புதுக்கோட்டை அருகே உள்ளே பூக்கோட்டை கிராமத்தில் நடந்த காதல் கதை.

உயர்சாதியில் பிறந்த சின்னம்மாவிற்கு ஏழு அண்ணன்மார்கள் இருந்தன.

அந்த சின்னம்மாவிற்கு பன்னீர் தெளிக்கும் பணியாளனாக இருந்த பாலகன் செலையன்.

நாட்கள் ஓட ஓட சின்னமாவும் பூப்படைந்து விட்டாள். அந்த அழகிய தேவதைக்கு ஏற்ற பருவமகனாய் மாறி இருந்தான் செலையன்.

அவனும் வாலிபன் ஆகி செலையனும் சக்தி என்னும் நாய்க்குட்டியும். மூவரும் காடும் மேடும் சுற்றி திரிந்தனர்.

மடியில் நாய்க்குட்டி மனதில் செலையனை சுமப்பதில் சுகமாய் நடந்தாள் சின்னமா.

  சின்னம்மாவின் காதல்:

எல்லா மரங்களிலும் ஊஞ்சல் ஆடினாள் சின்னமா. அவள் ஊஞ்சல் ஆடாத மரம் வழைமரம் மட்டுமே பாக்கி இருந்தது.

அவள் வழை மரத்தில் ஊஞ்சல் ஆட வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

ஓடையோரம் இருந்த வாழைமரத்தில் ஊஞ்சல் கட்டி, வா இருவரும் சோடியாக ஆடுவோம் என்றான் செலையன்.

அவர்கள் இருவரும் வாழைமர ஊஞ்சல் ஏற சடக்குனு ஒடிஞ்சு விழுந்தது ஊஞ்சல் ஓடைக்குள்.

கலகலன்னு கைதட்டி சிரிச்சுக்கிட்டு செலையன் மேல் ஓடை தண்ணியை அடித்து நனைத்து விட்டாள்.

 இருவரும் வெற்றிலையைப் போட்டுக் கொண்டு காதலின் ஆழத்தில் நுழைந்தனர்.

அண்ணமார்கள் ஏழுவரும் அருவாக்கள் ஏந்தினர். சின்னமாவும் செலையனும் ஊரை விட்டு ஓடினார்கள்.

அண்ணன்மார்கள் ஏழுபேரும் அருவாளை ஏந்திக் கொண்டு சக்தி நாயை கூட்டிக் கொண்டு புறப்பட்டன.

இரவு வருவதற்கு முன்னாடியே தங்கச்சியோடு வீட்டிற்கு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சென்றன.

மலை, மேடை, ஓடை அனைத்தும் தாண்டினாங்க, தூரத்தில் ஒரு விஷ முள்காடு சின்னமா செலையன் காலில் இரத்தம் ஒழுக அந்த தடத்தை நாய்க்குட்டி கண்டுபிடுச்சு அதன் வழியிலே சென்றனர் ஏழுவரும்.

 சாதிவெறியால் வந்த அழிவு:

அண்ணனுங்க வந்துடாங்க கண்ணில் நீர் ஒழுக காலில் இரத்தம் ஒழுக சின்னம்மா வெடவெடத்துப் போனாள்.

சின்னம்மா ஒரு முடிவு எடுத்தாள் ஏழு அண்ணனும் உன்னை ஏழு துண்டாக்க நான் மட்டும் இருந்து என்ன செய்யப் போறேன்.

இருவரும் ஒரு கத்தி போன்ற மரத்தில் ஏறி அதில் இருந்து குதித்து உயிரை விட்டனர்.

அதை கண்ட ஏழுவரும் கதறினர். அதில் மூத்த அண்ணன் வீரய்யன், ஏன் நிக்குறீங்க? அவன் அவன் அருவாளால அவன் அவன் தலையை வெட்டிக்குங்க என்றான். ஏழு தலையும் கொலை கொலையாக விழுந்தது.

அவர்களை வழி காட்டி வந்த சக்தி நாய்க்குட்டிக்கு குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் ” ஊ”  என்று கத்திக் கொண்டே விஷ முள்ளில் கண்டபடி புரண்டு தன் உயிரை விட்டது………….

கேரளாவில் நடந்த காதல் கதை

சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை