You have been blocked from seeing ads.

வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமி காதல் கதை

வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமி காதல் கதை…

வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமியின் சிறுவயது:

இந்தக் கதை 150 வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வாகும். அந்தக் காலகட்டத்தில் சாதி என்னும் வெறி மக்களிடம் ஒரு தொற்று வியாதி போவலே காணப்பட்டது.

இன்றைய காலகட்டதிலும் சாதி என்னும் உணர்வு கிராமங்களில் இருங்கத்தான் செய்கிறது. இந்தக் கதையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களில்  நாடகங்கள் நடைபெறும் ,சில பேர் பாத்திருப்பதும் உண்டு.

தென்மதுரையை அடுத்து சோழவந்தான் என்னும் குக்கிராமத்தில் நடந்த கதை ஆகும். பதினோறு வயதான வெள்ளையம்மாள் ஆடுகளை ஓட்டிக்கொண்டு காட்டு மேட்டில் அழைந்து திரிவாள்.

இவள் பறையன் இனத்தைச் சார்ந்தவள். இவளுடன் சேர்ந்து ஆடு மேய்ப்பவன் தான் வெள்ளைச்சாமி.

இவனுக்கு 14 வயது இருக்கும். இவன் பண்டார இனத்தைச் சார்ந்தவன்.

சாதிக் கொள்கை:     அந்தக் காலத்தில் எல்லாம் உயர்சாதி மட்டுமே பட்டு சேலை, பட்டு வேட்டி அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தது அந்த ஊர்களில்.

அது ஊர்களின் சட்டமே. வெள்ளையம்மாளோ நல்ல அழகி, கண்ணத்தில் குழி விழுகும் கற்கண்டு. அந்த அரும்பு விடும் வயதில் வெள்ளைச்சாமிக்கு வெள்ளையம்மாளின் மீது அளவு கடந்த பாசம்.

அவளுக்கு ஒன்று என்றால் துடித்து போய்டுவான்.

ஒருநாள் வெள்ளையம்மாளுக்கு காலில் ஒரு பெரிய காட்டுமுள் ஒன்று குத்தி விட்டது.

இரத்தம் தொறதொறனு கொட்டுகிறது. வெள்ளைச்சாமி அழுகிறான், அவளோ அழுகாத வெள்ளைச்சாமி என்கிறாள்.

அவள் காலில் உள்ள முள்ளைப் புடிங்கி தன் காலில் குத்திக் கொண்டான். அந்த பிஞ்சி வயசில் அவனுக்கு அவன் மேல் அளவு கடந்த பாசம் இருந்தது.

அவன் தன் வீட்டில் என்ன பலகாரம் சுட்டாலும் வெள்ளையமாளுக்கு சூட்டோடு சூடாக கொண்டு வந்து கொடுப்பான்.

அவளும் அப்படித்தான் தன் வீட்டில் உள்ள திண்பண்டங்களை வெள்ளைசாமிக்கு தருவாள்.

இவர்கள் இருவரும் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிவதைப் பார்த்து சில கிழவிகள் நீங்கள் இருவரும் புருசன் பொண்டாட்டியா என்று கேட்டதும் வெள்ளையம்மாள் கக்க புக்க வென்று சிரித்துக் கொண்டிருப்பாள்.

வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமியின் காதல்:

     நாட்களும் நகர்ந்து ஓடிக் கொண்டிருந்தது வெள்ளைச்சாமியும் வயது வந்த பையனாக வந்து விட்டான்.

வெள்ளையம்மாளுக்கும் 15 வயது ஆக அவளும் வயதுக்கு வந்து விட்டாள் அந்த கள்ளிக் காட்டுக்குள்.

மூன்று நாள் ஆகியும் வெள்ளையம்மாள் ஆடு மேய்க்க வரவில்லை.

இவன் என்ன ஆச்சு ஏது ஆச்சுனு தெரியலையேனு பதறி அடித்துக் கொண்டு பறையர் தெருவை நோக்கி ஓடுகிறான்.

அன்று தான் அந்த தெருவில் வேறு சாதி பையன் முதன் முதலில் வருகிறான்.

மேலும் படிக்க  கடவுள் போட்ட முடிச்சு - காதல் கதை

வெள்ளையம்மாளோ மூக்குத்தி போட்டு போட்டிருந்தாள், விளையாட்டாக வெள்ளையம்மாள் கையைப் புடிச்சான் வெள்ளைச்சாமி, அவளோ வெட்கத்தில் போங்க என்று சொல்லி மறைந்தாள்.

இவன் பறைய தெருவிற்கு சென்றதை அறிந்த மேட்டுக்குடி மக்கள் கொந்தளித்தனர்.

Vallaiyamma Vellasaami

You have been blocked from seeing ads.

     சோழவந்தான் கிராமத்தில் இராவண காவியம் நாடகம் நடந்து கொண்டிருக்க இங்கே இருவரும் கண்களால் காதல் செய்து கொண்டிருந்தனர்.

அவன் தெருக்கூத்து முடிஞ்சதும் பாட்டுப் படித்தான் வெள்ளையம்மாளை வர்ணித்தும் அவள் மேல் உள்ள காதலை உணர்த்தும் படியாகவும் அவன் டவுனுக்கு போகிறானாம் அவளுக்கு என்ன வாங்கிட்டு வர வேண்டும் என்பதற்காக கீரைக்காட்டிற்கு வரும்படியாகவும் அதில் பாடிருந்தான்.

இதை உணர்ந்த வெள்ளையம்மாள் அவனை சந்திக்க கீரைக்காட்டிற்கு சென்றாள். அவனின் நண்பனான பாண்டி இவர்களை சேர்த்து வைக்க முயன்றான்.

     அந்த வெயிலில் காத்திருந்தாள் அவள். இச்சுனு ஒரு சத்தம் கேட்டு கத்திப்புட்டாள் வெள்ளையம்மாள். எனக்கு ஊதாவால் வெள்ளப் பூப் போட்ட ரிப்பன் ஒண்ணு மட்டும் வாங்கி வரச் சொன்னால்.

வெள்ளைச்சாமியும் பாண்டியும் பறந்து பட்டணம் புறப்பட்டனர். பகல் எல்லாம் அழைந்து திரிந்தான், அவள் கேட்ட ரிப்பன் கிடைக்கவில்லை.

ஆனால் அவள் கேட்ட நிறத்தில் 16 அடி புடவை ஒன்று தான்  இருந்தது. அதை வாங்கினான்.

அதை சின்ன சின்ன துண்டுகளாக ரிப்பன் போல வெட்டி  அவளிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

அதைப் பார்த்ததும் அவள் முத்தம் தந்தாள் நூற்றுக் கணக்கில். இருவரும் தன்னை அறியாமல் காதலிலும் காமத்திலும் திளைத்துக் கொண்டிருந்தனர்.

போதும் போதும் என்ற அளவிற்கு முத்தத்தை விருந்து படைத்தால் வெள்ளையம்மாள்.

ஆணவப் படுகொலை:     இவர்களின் இந்த காதல் விருந்தை ஆடு மேய்க்கும் ஒரு ஊமையன் மூலம் அறிந்து கொண்டனர் மேட்டுக்குடி மக்கள்.

 பாண்டியைப்  பிடித்து அடித்து உதைத்தனர், அவன் உடம்பில் இரத்தம் வராத இடமே இல்லை. அவன் வலி தாங்க முடியாமல் அவர்கள் இருக்கும் இடத்தை கூறி விட்டான்.

அங்கே அரிவாளுடன் சென்ற அவர்கள் பிண்ணி பினைந்து கொண்டிருந்த இருவரையும் பிரித்து வெள்ளையம்மாளை ஒரே வெட்டில் தலை துண்டானது.

இரண்டாவது வெட்டு வெள்ளைச்சாமிக்கு இருவரும் துண்டாகி போனனர்.

அங்கு வந்து அவர்களைப் பார்த்த பாண்டி நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன் சத்தியத்தை மீறி விட்டேன் என்று சொல்லி கதறுகிறான் அவர்களின் உடல்களைப் பார்த்து.

பிறகு அரிவாளை எடுத்து அவனே தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

மேட்டுக்குடி மக்கள் காதலை அளித்த மகிழ்ச்சியில் சிரிப்பில் திளைக்கின்றன.

கருத்து:

     நாம் எந்த குலத்தில் பிறந்தாலும் இறுதியில் மிஞ்சப் போவது ஒரு பிடி சாம்பல் மட்டுமே  அதற்குள் ஏன் இந்த போராட்டம். இதை மனிதர்கள் உணர்ந்தாலே மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு என்று ஒன்று நெருங்காது.

காட்டுக்குள் ஒரு காதல் தீ

ஒரு கிராமத்து காதல் கதை

You have been blocked from seeing ads.