இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை தன் வீரம் மிகுந்த பேச்சால் அச்சமுறச் செய்தவர்.
தன்னுடைய இரண்டு அண்ணன்கள் இருந்த போதும் தன்னுடைய வீரத்தாலும் விவேகத்தாலும் அரியணை ஏறிய வீரன்.
தன்னுடைய வீரத்தால் ஆங்கிலேயரையே தன்னுடைய கோட்டையில் இருந்து விரட்டியடித்தவர்.
அவர் தான் பொம்மு மரபில் இருந்து வந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.
அவரின் பெயருக்கு ஏற்றார் போலவே வீரத்தில் சிறந்து விளங்கினார்.
இளமைக்காலம்:
வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோரான கெட்டி பொம்முலு என்பவர் ஜெகவீர பாண்டியன் என்ற அரசனின் அரசவையில் அமைச்சராகப் பணியாற்றிவர்.
இவர்கள் தெலுங்கு பேசும் நாயக்க வம்சத்தை சார்ந்தவர்கள், தெலுங்கில் பொம்லு என்பது தமிழில் பொம்மன் என்றானது.
பின்னாளில் கெட்டி மொம்முலு சுத்தமாக மருவி கட்டபொம்மன் என்றானது.
அந்தக் கட்டபொம்மனின் வாரிசில் வந்தமையால் அவர்கள் வாரிசு அனைவருக்கும் கட்டபொம்மன் என்ற பட்டம் தொற்றிக் கொண்டது.
அப்படித்தான் வீரபாண்டியனுக்கும் கட்டபொம்மன் என்றானது, இவரை வீரபாண்டிய நாயக்கர் என்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் அழைப்பார்கள்.
திக்விஜய கட்டபொம்மன் அல்லது ஜெகவீர கட்டபொம்மன் என்ற அரசனுக்கும் ஆறுமுகத்தம்மாள் என்ற அரசிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இவர் 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 நாம் நாள் திருநெல்வேலி அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.
இவருக்கு ஊமைத்துரை மற்றும் துரைச்சிங்கம் என்ற அண்ணனும் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு என்ற தங்கைகளும் இருந்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சிறுவயது முதலே வீரமும் போர்க்குணமும் கொண்டிருந்தார்.
யாருக்கும் அஞ்சாமல் நேருக்கு நேர் வாதிடுவார், தன் அண்ணங்களை காட்டிலும் வீரத்தில் சிறந்து விளங்கியதாலும் நாட்டை ஆள்வதற்கான தகுதியை முழுமையாக பெற்றிருந்ததாலும் ஜெகவீர கட்டபொம்மன் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு முடி சூட்ட எண்ணினான்.
வீரபாண்டியனும் தன்னுடைய 30 வயது வரை தந்தைக்கு உதவியாளனாகே இருந்து வந்தார்.
அரியணையில் கட்டபொம்மன்:
1790 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முடிசூட்டப்பட்டு அரியனை ஏறினான்.
கட்டபொம்மனின் ஆட்சிக் காலத்தில் மக்கள் இன்பமுற்று இருந்தனர், இவனுடைய வீரத்தால் மற்ற தேசத்து அரசர்கள் இவரிடம் போர்புரிய வருவதில்லை.
கட்டபொம்மனின் அரசும் ஆற்காடு நவாப் அரசனின் ஆட்சிக்கு கீழ் இருந்து வந்தது.
ஆற்காடு நவாப் அரசனும் ஆங்கிலேய அரசு அதிகாரிகளும் நண்பர்களாக இருந்தனர்.
ஆங்கிலேயர்களிடம் நவீன போர்கருவிகளை கடனுக்கு வாங்கி இருந்தான் நவாப், அதனால் கடனை அடைக்க முடியாமல் இருந்ததால், அதை சாதகமாகப் பயன்படுத்தி நவாப்பின் ஆட்சிக்கி கீழ் இருக்கும் அரசர்களிடம் வரி வசூலித்து அதை நவாப்பின் கடனை அடைக்கும் முறையாக எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.
நவாப்பும் சரி என்றார், அப்படி முதலில் ஆரம்பித்தது தான் இந்த வரிவசூல், அதுவே பின்னாளில் வரிகட்டுவது கட்டாயமாக்கப்பட்டது ஆங்கிலேயர்களிடம்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய காலடித்தடத்தைப் பதித்துக் கொண்டிருந்தனர் ஆங்கிலேயர்கள்.
அப்படி வரி வசூலிக்க என்று தனியாக ஒரு கலெக்டர்களை பிரீட்டீஷ் அரசு நியமித்திருந்தது.
அப்பொழுது பிரிட்டீஷ் அரசு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை திருநெல்வேலியில் இயக்கியது.
இதனாலும் வரியை கட்யமாக்கப்பட்டு அனைத்து பாளையக்கார்களிடமும் வரியை வசூலித்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 47 ஆவது பாளையக்காரராக இருந்தார்.
ஜாக்சன் துரை என்பவர் அப்பொழுது திருநெவேலி மற்றும் இராமநாதபுரத்திற்கு கலெக்டராக நியமிக்கப்பட்டிருந்தவர்.
வரி வசூலிக்க சென்ற ஜாக்சன் துரையிடம் வீரபாண்டியன் தன் வீரப்பேச்சால் அவமதித்து அனுப்பினார்.
அது என்னவென்றால், வரி, வட்டி, கிஸ்தி, யாரைக் கேட்கிறாய் வரி, எதற்கு கேட்கிறாய் வரி, வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, எங்களோடு வயலுக்கு வந்தாயா? இல்லை ஏற்றம் இறைத்தாயா? இல்லை கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சள் அறைத்துக் கொடுத்தாயா? நீ என் மாமனா இல்லை மச்சானா? மானங்கெட்டவனே, என்ற வசனம் தான் 200 ஆண்டுகள் கழித்தும், அனைத்து மக்களின் மனதில் இடப்பெற்றிருப்பது.
இதனால் வீரபாண்டியனிடம் மீது கடுங்க்கோபமாய் இருந்தது ஆங்கிலேய அரசு, ஆலன் துரை என்ற தளபதியின் கீழ் 1797 ஆம் ஆண்டு செப்டம்டர் 6 நாள் பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டையின் மீது முற்றுகையிட்டது.
ஆனால் வீரபாண்டியனின் படைகள் ஆங்கிலேயர்களை விரட்டியடித்தது, இதனலால் ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து உயிர்பிழைத்து ஓடினார்.
சிறிது நாட்களுக்குப் பின் கலெக்டர் லுஷிங்டன் என்பவரை சந்திக்க ஆர்டர் வந்தது.
வீரபாண்டியனும் அவரை சந்திக்க சென்றபொழுது அவரை தந்திரமாக பிடிக்க திட்டமிட்டுள்ளனர் ஆனால் அவர்களிடம் இருந்து சண்டையிட்டு தப்பித்து வந்தார்.
பின்னர் 1799 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் இறந்த பின்பு மீண்டும் வீரபாண்டியனின் கோட்டையின் மீது முற்றுகையிட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக பீரங்கிக் குண்டுகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை துளைத்தது.
வீரர்களும் பாதி பேர் போரில் மாண்டு போயின, இனிமேல் நம் படை வெல்வது சிரமம் என்று நினைத்து, கோட்டையில் இருந்து தப்பித்து புதுக்கோட்டை மன்னரான விஜயரகுநாத எட்டப்ப நாயக்கரிடம் தஞ்சம் புகுந்தார்.
ஆனால் அவன் ஆங்கிலேயருடம் காட்டி கொடுத்து விட்டான்.
இறப்பு:
இதனால் அவரை கைது செய்து கயத்தாறு புளிய மரம் ஒன்றில் பானர்பென் ஆணையின் படி தூக்கிலிடப்பட்டது.
அவர் தூக்கு ஏறுவதற்கு முன்பு சொன்னது, இப்படி நான் சாவதற்கு பதிலாக என் நாட்டின் கோட்டையை காப்பாற்றியே செத்துருக்கலாம் என்று வருந்தினார்.
வீரபாண்டியன் அக்டோபர் 16 ஆம் நாள் 1799 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
அவர் இரண்டு மணி நேரம் தூக்கில் தொங்கிய பிறகே அவரின் உடலை எடுத்தனர்.
இவருடைய இரண்டு அண்ணனான ஊமைத்துரை மற்றும் துரைச்சிங்கத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிறகு இரண்டு வருடம் கழித்து பாஞ்சாலங்கோட்டையின் வீரர்கள் மூலம் தப்பித்து மீண்டும் கோட்டையை திறந்தனர்.
ஆனால் சிறிது நாளிலே அவர்கள் இருவரையும் கைது செய்து தூக்கிலிட்டது, பின்னர் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தரை மட்டமாக்கியது ஆங்கிலேய அரசு.
மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை 1974 ஆம் ஆண்டு அப்போது இருந்த முதல் அமைச்சர் மு. கருணாநிதி எழுப்பினார்.
தேசியகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு
2 thoughts on “வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு”
Comments are closed.