இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் வரலாறு

சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இவர்.

பல துண்டுகளாக பிளவுபட்டு கிடந்த இந்திய மாகாணத்தை தன் சொந்த முயற்ச்சியால் ஒன்றிணைத்தவர்.

ஏழை விவசாயிகளுக்காக போராடி வெற்றி பெற்றவர்.

ஏழை மக்களால் சர்தார் பட்டத்தைப் பெற்றவர்.

சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்றும் நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்றும் அழைக்கப்பட்டவர்.

அவர்தான் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்.

இளமைக்காலம்:

வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஜாவேரிபாய் மற்றும் லாத்பாயி என்ற தம்பதிகளுக்கு 4 ஆவது மகனாகப் பிறந்தார்.

இவருக்கு மூன்று அண்ணங்களும் ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர்.

சோமாபாய் படேல், நரசிம்மபாய் படேல், விட்டல் பாய் படேல் என்ற அண்ணனும் காசிபாய் என்ற தம்பியும் டாசி பாய் என்ற தங்கையும் இருந்தார்.

இவர் மெட்ரிக்குலேசன் படிப்பையே தன்னுடைய 22 ஆம் வயதில் தான் முடித்தார்.

இவருக்கு 18 வயது ஆகும் பொழுது கரம்சந் என்ற 12 வயது சிறுமியை மணமுடித்து வைத்தனர்.

இவருக்கு மனியன் பாய் படேல் மற்றும் தாயாபாய் படேல் என்ற பிள்ளைகள் இருந்தனர்.

இவர் பள்ளிப் படிப்பையே நிறைய நாட்கள் படித்தால் அவர்களின் அண்ணங்கள் இவரை திட்டினர்.

இவருக்கு இரும்பு மனிதர் என்ற பெயர் வைத்தற்கு ஏற்றார் போல் சிறுவயதிலே பல செயல்களை செய்துள்ளார்.

அவர் பள்ளியில் படிக்கும் பொழுதே அவருடைய ஆசிரியர் ஒருவர் அவருடைய கடையில் உள்ள புத்தக நோட்டுகளை எடுத்து வந்து மாணவர்களிடம் விற்பனை செய்வார்.

அவரிடம் வாங்காமல் இருந்தால் தடியால் அடிப்பார், இதனை பொறுக்க முடியாத படேல் தனக்கு நெருங்கிய நண்பர்களைக் கொண்டு ஆசிரியருக்கு எதிராக போராட்டம் செய்தார்.

இதனால் அந்த ஆசிரியர் அன்றிலிருந்து எந்த மாணவர்களையும் நோட்டு புத்தகங்களை வாங்க கட்டாயப் படுத்தவில்லை.

இவரின் இரும்பு மனது சிறுவயதிலிருந்தே வந்தது என்று கூறினால் மிகையாகது, இவருக்கு காலில் சீல் வடியும் பொழுது கரண்டியை காய வைத்து சூடு போட வந்தவரின் கரண்டியைப் பறித்து அவரே சூடு போட்டுக் கொண்டு கொண்டார்.

அந்த சிறுவயதில் அவருக்கு இருந்த மன தைரியம் வேறு எந்த சிறுவர்களுக்கும் வராது.

இவருக்கு சிறுவயது முதலே தான் ஒரு அரசு வழக்கறிஞராக ஆக வேண்டும் என்று ஆசைகொண்டு இருந்தார்

இவர் வழக்கறிஞர் படிப்பை முடித்து விட்டு கோத்ராவிலே வழக்கறிஞராக வேலை பார்த்தார்.

இவருக்கு பாரீஸ்டர் பட்டம் படிக்க வேண்டுமென்று ஆசை, ஆனால் இவரின் அண்ணன் விட்டல் பாய் நான் முதலில் பாரீஸ்டர் பட்டம் பெறுகிறேன் பின்பு நீ பெறலாம் உனக்கு வந்த உதவித்தொகையை எனக்கு கொடு என்று கேட்டதும்.

மேலும் படிக்க  ஆங்கிலேயரை முதலில் எதிர்த்த பூலித்தேவன்...

வல்லபாய் படேலும் சரி என்று ஒப்புக்கொண்டார்.

இரும்பு மனம்:

1909 ஆம் ஆண்டு அவர் சொந்த ஊரிலே வழக்காடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு தந்தி வந்தது.

அதைப் பிரித்து படித்து விட்டு மீண்டும் வாதத்தில் ஈடுபட்டார், அந்த வழக்கிலும் வெற்றி அடைந்தார்.

வழக்கு முடிந்த பின்பு அனைவரும் கேட்கத் தொடங்கின என்ன தந்தி வந்தது என்று.

அப்பொழுது இரண்டு கண்களிலும் கண்ணீரோடு என் மனைவி மருத்துவமையில் இருந்தபடியே சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனாளாம் என்று சொன்னார்.

அப்பொழுது அருகில் இருந்த வக்கீல்கள் எல்லோரும் நீ கேசை நிறுத்தி வைத்து விட்டு சென்றிருக்காலாமே என்றனர்.

அதற்கு படேலோ இறந்து போன என் மனைவி திரும்பி வரப் போவதில்லை, ஆனால் ஒரு நிரபராதியின் மீது இருக்கும் குற்றத்திற்கு நீதி கிடைக்காமல் போகக்கூடாது என்றாராம்.

அப்பொழுது அருகில் இருந்தவர்கள் இவரின் கடமை உணர்ச்சியையும் மன வலிமையும் கண்டு வியந்து போயின.

இவர் நிரபராதிகளின் வழக்கை மட்டுமே வாதாடுவார், அநியாயக்காரர்களுக்கு குரல் கொடுக்க மாட்டார்.

இவர் மனைவி இறந்த பிறகு  1910 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள மிடில் டெம்பிள் என்னும் கல்லூரியில் பாரீஸ்டர் பட்டம் பெற்றார்.

அவர் முதல் மதிப்பெண் பெற்றதால் அங்கே அரசுப் பணியும் கிடைத்தது, ஆனால் இவரும் நேதாஜியைப் போலவே ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை செய்ய பிடிக்காமால் இந்தியாவில் உள்ள அகமதாபாத் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தார்.

அரசியலில் படேல்:

இவர் ஒருமுறை காந்தியடிகள் அகமதாபாத் வந்திருக்கும் பொழுது அவரின் மேடைப் பேச்சைக் கேட்டார்.

அவரின் பேச்சால் மனம் கவர்ந்த படேல் காங்கிரஸில் இணைந்தார், அன்று முதல் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பின் 1917 ஆம் ஆண்டு நடந்த தர்யாபூர் என்ற மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அங்கு 12 வருடம் நல்லாட்சி புரிந்து வந்தார், அவருடைய ஆட்சியில் கேடா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக விவசாயம் அனைத்தும் பாலாகிப் போனது.

ஆனால் ஆங்கிலேய அரசு அந்த நிலத்திற்கு வரி கேட்டு அராஜகம் செய்தது, இதனைக் கண்டித்து போராட்டம் செய்தார் படேல் அதில் வெற்றியும் பெற்றார்.

பின்னர் அதேபோல் பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகளுக்கு போராட்டம் செய்து வெற்றி பெற்றதால் இவருக்கு சர்தார் என்ற பட்டத்தை வழங்கி மக்கள் அன்போடு அழைத்தனர்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் பார்சாத் என்ற கொள்ளையன் இருந்தான், அவன் இரவானதும் மக்களை துன்புறுத்தினான்.

அவனை பிடிக்க பலமுயற்சிகள் எடுத்தும் பிடிக்க முடியவில்லை போலீசால், பின்னர் படேல் சிறந்த வீரம்மிக்க இளைஞர்களுக்கு நன்கு பயிற்ச்சி அளித்து இரவில் ரோந்து பணிக்கு நியமித்தார்.

மேலும் படிக்க  மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

இதனால் அந்தக் கொள்ளையன் அந்த ஊரைவிட்டே ஓடி விட்டான்.

1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து காந்தியின் உரையாடலால் தன்னுடைய அரசுப்பணியை துறந்தார்.

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் வரலாறு

1931 ஆம் ஆண்டு “ ராஸ் ” என்ற இடத்தில் மாநாட்டில் பேச தடை விதித்தது ஆங்கிலேய அரசு அதனையும் மீறி பேசியதால் படேலை மார்ச்  7 அன்று கைது செய்து ஏராவாடா என்ற இடத்தில் சிறை வைத்தது.

அப்பொழுது உப்புச்சத்தியாக் கிரகத்தில் போராடியதால் காந்தியும் அதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

படேலுக்கும் காந்திக்கும் சிறையிலே நல்ல நட்பு உருவானது.

பின்பு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 சுதந்திரம் அடைந்தது.

துணைபிரதமர் படேல்:

சுதந்திரம் அடைந்தவுடன் முதல் துணை பிரதமாராகவும் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

அப்பொழுது நேருஜி பிரதமாராக இருந்தார், பலர் இவரை பிரதமாரக இருக்க வற்புறுத்தினார்கள்.

ஆனால் படேலோ நேரு தான் காந்தியின் அடுத்த வாரிசு அவர் இருப்பது தான் சிறந்தது என்று கூறி விட்டார்.

பின்னர் இவர் பிரிந்து கிடந்த 565 மாகாணங்களை பல மன்னர்களிடம் சண்டையிட்டு ஒன்றிணைத்தார்.

இந்தியாவை ஒரு வலுவான நாடாக ஆக்கியதில் வல்லபாய் படேலுக்குத் தான் அதிக பங்கு இருந்த்து.

பின்னர் இவர் சோமநாதபுரம் கோயிலை முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்பினார், இதனால் நேருவுக்கு இவருக்கும் முரண்பாடு ஏற்ப்பட்டது.

மேலும் இவர் குடிபெயர்ந்து போன முஸ்லீம்களின் வீடுகளை அகதிகளாக வந்த இந்துக்கள் இருக்க அனுமதி அளித்தார்.

இவரின் இந்த மனதால் தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

இவருக்கு குஜராத்தில் உள்ள நர்மதா ஆற்றில் அருகில் உலகிலே மிக உயரமான சிலை ஒன்று நிறுவியுள்ளது. அது 597 அடி நீளமாகும்.

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் வரலாறு

இது அவரின் 143 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஒற்றுமைக்கான சிலையாக அறிவித்து பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

இவர் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் இறந்து போனார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு

1 thought on “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் வரலாறு”

Comments are closed.