You have been blocked from seeing ads.

உயிருக்கு கொடுத்த இறுதிப் பரிசு

பத்மனின் கனவு:

பத்மன் தன் காதலியான தேவசேனாவின் மடியில் படுத்துக் கொண்டு மரத்தில் உள்ள இரண்டு கிளிகளின் ஊடல்களை இரசித்துக் கொண்டிருந்தான்.

தேவசேனா அவனின் தலையை வருடிக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய முதல் குழந்தையை அரவணைப்பது போன்ற தாய்மையை உணர்கிறாள்.

உண்மையாய் ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலர்களுக்குத் தான் தெரியும் அவர்களின் காதலனோ காதலியோ அவர்களின் முதல் குழந்தை என்று.

சரி எழுந்திரிங்கள் நேரம் ஆகிவிட்டது கிளம்பலாம் என்றாள்.

என்னடா சொல்றா இப்பதானே வந்தோம் அதுக்குள்ளே ஏன் கிளம்பனும் என்று கொஞ்சலாக கேட்டான் பத்மன்.

நம்ம இந்த பார்க்கிற்கு வந்து 3 மணி நேரம் ஆகிவிட்டது, இப்போதான் வந்தோமுனு சொல்லிறீங்க என்று அவன் கன்னத்தில் அடிப்பது போன்று பாவனை செய்தாள்.

உன் மடியில் படுத்திருந்தது எனக்கு 3 நிமிடம் மட்டுமே நகர்ந்த மாறி தெரியுதுமா.

uyir 1
பத்மனுக்கு அம்மா இல்லை, இவளை காதலித்த முதல் தன் தாயின் மறு உருவமாகவே கருதினான்.

அவன் எழுந்து அவளின் கையை பிடித்துக் கொண்டு என்னை எப்பொழுதும் விட்டுவிட்டு சென்று விடாதே நீ எனக்கு இல்லை என்று தெரிந்த மறுகணமே இவ்வுலகில் என் உயிர் இருக்காது உயிரே என்று சொல்லும்போதே அவனின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது.

தேவசேனா அவனின் கண்ணீரை தன்னுடைய கைக்குட்டையால் துடைத்துவிட்டு அப்படி எதுவும் நடக்காதுமா நீயேன் கண்டதையும் நெனச்சு கவலைபடுற…. சரி சரி  எனக்கு வேலைக்கு நேரம் ஆகிட்டு நான் கிளம்புறேன் என்றாள்.

போகாதே தேவசேனா நில் நில் என்றான்…..

தம்பி பஸ் நின்னுகிட்டுதான் இருக்கு எழுந்து போய்டு டீ எதுவும் குடிச்சிட்டு வாங்க இனி சிங்காநல்லூரில் தான் போய் நிக்கும் என்றார் நடத்துனர்.

பத்மனின் காதல்:

பத்மன் தன்னாலே சிரித்துக் கொண்டான் இவ்வளவு நேரம் கனவுதான் கண்டோமா?  எப்பொழுதும் தேவசேனாவை மட்டும் நினைத்திருந்தால் இப்படி கனவிலும் வந்து என்னை தன்னாலே பேசவைப்பாள் என் உயிர் என்று பேசிக் கொண்டிருந்தான். நாளை விடிந்தபின் அவளின் அழகிய முகத்தை காணலாம் என்று விடியலை நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.

பின்பு அவன் ரெஸ்ட் ரூம் போய்டு ஒரு ஸ்ட்ராங்கா டீ ஒன்று குடித்தான்.

நம்முடைய கதாநாயகன் இப்பொழுது தேவசேனாவை பார்க்க சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருக்கிறான்.

அவனுக்கு ஒருநாள் தான் விடுமுறை இருந்தாலும் அதில் தன்னுடைய உயிரை பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணி நைட் ட்ராவல் பண்ணுகிறான்.

அவனின் முதல் சம்பளத்தில் தன்னுடைய உயிருக்கு ஒரு வெள்ளிக் கொலுசை வாங்கி அவளிடம் சொல்லாமல் அவளின் காலில் போட்டுவிட்ட பின் அவளின் அந்த சந்தோஷத்தைப்  தன்னுடைய கண்ணால் பார்க்க வேண்டும் என்று எண்ணினான்.

பேருந்தும் நகர்ந்தது….. தன் காதல் தேவதையைப் பார்க்க வேண்டும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் தான் நாளை அழகாக தெரிவோம் என்று கண்மூடி சீட்டின் மேல் சாய்ந்தான்.

மேலும் படிக்க  மூன்சென் ஸ்ரீரங்கநாதர் காதல் கதை

காலை 5 மணிக்கு பஸ் சிங்காநல்லூர் வந்தது,  நடத்துனர் அனைவரையும் எழுப்பி விட்டார்.

பத்மனும் போனை எடுத்து தன் காதலிக்கு குட் மானிங்க் உயிரே என்று வாட்ஸ்சப்பில் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டான்.

தேவசேனா 10.30 க்கி தான் வேலையை முடித்துவிட்டு வந்தாள், அதனால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தன்னுடைய காதலனை பார்க்கச் செல்வதற்காக அவள் வேலை செய்யும் இடத்தில் நாளை எனக்கு லீவு வேண்டும் என்று அனுமதி பெற்று வந்தாள்.

தேவசேனாவிற்கு செவ்வாய் கிழமை மட்டுமே வார விடுமுறையாக இருந்தது.

தேவசேனாவின் காதல்:

மறுநாள் காலையில் எழுந்து தன் காதலனுக்கு குட் மானிங்க் சொல்லிவிட்டு குளிக்க வேகமாக பாத்ரூம்க்கு சென்றாள்.

குளித்துவிட்டு தன் அறையில் தங்கியிருக்கும் தன் தோழியை எழுப்புகிறாள், ஆனால் அவளின் உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது, அவளால் என்னவென்று கேட்க கூட முடியாமல் கிடந்தாள்.

அவளை அப்படியே விட்டுவிட்டு தன் காதலனை சந்திக்கச் செல்வது தப்பு இவளை முதலில் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் சென்று விட்டு பின்பு தன் காதலனை சந்திக்கச் செல்லலாம் என்று முடிவு செய்தாள்.

ஒரு ஆட்டோக்கு கால் பண்ணி வரவழைத்தாள், பின்பு அவளை அதில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை சென்றாள்.

அங்கு பயங்கர கூட்டம் இவர்கள் 60 வது டோக்கன். பத்மன் தேவசேனாவுக்கு கால் பண்ணிக் கொண்டே இருந்தான் எப்பொழுதுமா வருவாய் என்று. உன் முகத்தைப் பார்க்க 5 மணியிலேருந்து பஸ் ஸ்டாண்டில் இருக்கேன்மா என்றான்.

என் தோழிக்கு உடம்பு சரி இல்லமா இவளை ரூம்ல விட்டுவிட்டு வருகிறேன் என்றாள்.

60 வது டோக்கன் வர நேரம் 12 மணி ஆகிற்று….. பத்மனுக்கு இதுவும் ஒரு சுகமாகவே இருந்தது. தன் காதலியை பார்க்க போறோம் என்ற ஆனந்ததில் சாப்பிடமால் கூட இருந்தான்.

இருவரும் ஒன்றாக சாப்பிடலாம் என்று.

தேவசேனா தன் தோழியை ரூம்பில் கொண்டு போய் விடும்பொழுது மணி மதியம் 1 ஆகிவிட்டது.

பின்பு தேவசேனா பஸ் ஏறி காந்திபுரத்துக்கு ஒரு டிக்கெட் எடுத்தாள். பத்மனுக்கு அடுத்த மாதம் பிறந்தநாள் வருது அவனுக்கு ஒரு நல்ல வாட்ச் வாங்கிவிட்டு வேகமாக அவனைப் பார்க்கச் செல்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

இவளும் பஸ்ஸை விட்டு இறங்கி ஒரு பெரிய வாட்ச் கடைக்கு சென்று டைட்டன் வாட்சை வாங்கிக் கொண்டு விரைந்து வந்தாள்.

தன்னுடைய போனை எடுத்து பத்மனுக்கு கால் செய்து பேசிக் கொண்டு வந்தாள்.

அவள் இருக்கும் இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் தான் அவன் இருந்தான் அவன் சொன்ன அடையாளங்களை வைத்துக் கொண்டு அவனை நெருங்கிச் சென்று கொண்டிருந்தாள்.

அவள் பேசிக் கொண்டே அந்தப்பக்கம் உள்ள சாலைக்குச் செல்ல முயற்சித்தாள்.

இதயத்தின் இறுதி மூச்சு:

வேகமாக வந்த லாரி ஒன்று தேவசேனாவின் மேல் மோதியது அவள் ஒரு 10 அடி தூரத்திற்கு சென்றுவிட்டு கீழே வந்து விழுந்தாள்.

மேலும் படிக்க  இருளான வாழ்வில் ஒளியாய் வந்த காதல் - சாஹிரா

பத்மன் ஹலோ….. ஹலோ… என்று கத்துகிறான் என்னாயிற்றுமா ஏன் பேசாமல் இருக்கிறாய் என்று கதறுகிறான்.

அந்தப் பஸ் ஸ்டான்டில் உள்ளவர்கள் ஏதோ ஒரு பொண்ணு மேல லாரி மோதிருச்சாம் வாங்க என்னாயிற்றுனு போய் பாக்கலாமுனு பேசிக்கிறாங்க.

uyir

You have been blocked from seeing ads.

பத்மனுக்கு தூக்கி வாரிப் போட்டது, தேவசேனாவிற்கு எதுவும் ஆகி இருக்க கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டான்

அவளுக்கு கால் செய்து கொண்டே அந்த நபர்கள் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தான்.

அவள் போன் ஸ்சுவிச் ஆப்னு சொன்னதும் பத்மனின் பாதி இதயம் நின்னது.

இருந்தும் விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடுகிறான், தன் காதலியாக இருக்கக் கூடாது என்று அனைத்து கடவுளையும் வேண்டுகிறான்.

கூட்டத்தை விளக்கிவிட்டு சென்று பார்க்கிறான் தேவசேனா இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தாள்.

பத்மன் ஒரு பிரம்மை பிடித்தவன் போல் ஆகிவிட்டான். தேவசேனாவின் அருகில் சென்று எழுப்புகிறான் எழுந்திரிமா உன்னைப் பார்க்க தானேமா இவ்வளவு நேரம் காத்திருந்தான்…. உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா நான் கனவு கண்டு கொண்டு இருந்தேன் கடவுளே இது உனக்கே நியாமா இருக்கா? என்று கத்துகிறான்.

ரோட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர்.

அவன் தன் முதல்மாத சம்பளத்தில் வாங்கி வந்த கொலுசை எடுத்து அவளின் குருதி பெருகிய பாதத்தில் போட்டு விட்டு அழுகிறான். உன்னுடைய முகத்தில் வரும் சந்தோஷத்தை என் கண்ணால் பார்த்து இரசிக்க வேண்டும் என்று தானே உன்னிடம் சொல்லாமல் கூட வாங்கி வந்தேன்…. இந்தக் கோலத்திலா உனக்கு நான் போட்டு அழகு பார்ப்பேன் என் உயிரே….. என்று அவளை அணைத்து கொள்கிறான்.

அவன் கதறுவதைப் பார்த்து வீடியோ எடுத்த மனிதர்களின் கண்களிலும் நீர் பெருகியது.

பின்பு அவன் நீ இல்லாத உலகத்தில் நான் இருக்க மாட்டேன்மா என்று கூறிவிட்டு, எழுந்து போய் ஒரு பேருந்தின் முன் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

பத்மனும் தேவசேனாவும் கைகோர்த்துக் கொண்டே சொர்க்கத்தை நோக்கி புறப்பட்டனர்.

காட்டுக்குள் ஒர் காதல் தீ – காதல் கதை (ரஞ்சா-ஹீரா)

சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை
You have been blocked from seeing ads.

2 thoughts on “உயிருக்கு கொடுத்த இறுதிப் பரிசு”

Comments are closed.