கொடிக்காத்த குமரன் வாழ்க்கை வரலாறு

மண்டை உடைந்து குருதி பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் கூட நன் தாய் நாட்டின் மானம் பறிபோகக் கூடாது என்பதற்காக நம் நாட்டின் தேசியக் கொடியை கையில் இருந்து விடாமலே வந்தே மாதரம் என்ற முழக்கத்தோடு மண்ணில் சாய்ந்த மாபெரும் வீரர்.

தன் தாய் நாட்டிற்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறி அறவழியில் பல போராட்டங்களை நடத்தியவர்.

தன்னுடைய வேலை நேரம் போக மீதி நேரம் எல்லாம் நாட்டின் விடுதலைக்காக தேசபக்தி பாடல்களையும் நாடகங்களையும் நடத்திய மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்ப்படுத்திய மாவீரர்.

அவர் தான் திருப்பூர் குமரனாய் இருந்து பின்னாளில் கொடிக்காத்த குமரனாய் மாறிய மாபெரும் வீரர்.

இளமைக்காலம்:

கொடிக்காத்த குமரன் அக்டோபர் 4, 1904 ஆம் ஆண்டு நாச்சிமுத்து மற்றும் கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள செ.மேலப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தார்.

கொடிக்காத்த குமரனனின் உண்மையான பெயர் குமாரசாமி முதலியார், அவரை குமரன் என்று அழைத்து வந்தனர்.

இவர் முதலியார் இனத்தைச் சேர்ந்தவர், இவரின் தந்தையான நாச்சிமுத்து முதலியார் நெசவுத் தொழில் செய்து வந்தார்.

நாச்சிமுத்துவிற்கு நெசவுத்தொழில் அவ்வளவாக வருமானம் இல்லாத காரணத்தினால் குமரனை அதிக அளவில் படிக்க வைக்கவில்லை.

அவருடைய படிப்பு தொடக்கப்பள்ளியிலே முடிந்து விட்டது.

தொடக்க கல்வியை முடித்த குமரன் வறுமையின் காரணமாக தன்னுடைய தாய்மாமன் வீட்டிற்கு சென்றார்.

அங்கு அவருடைய நெசவுத்தொழிலுக்கு உதவியாக இருந்தார், பின்னர் தன் பெற்றோர்கள் வறுமையில் வாடுவதால் அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்தார்.

நாச்சிமுத்துவிற்கு நூல் வாங்கிக் கொண்டு வருவதும் நெய்த துணிகளை விற்பதிலும் பக்கபலமாக இருந்தார் குமரன்.

அதனால் அவர்கள் தொழிலில் சற்று லாபம் அதிகரித்தது, அவர்களுக்கு போதுமான வருமானம் வந்ததால் குமரனுக்கு அவருடைய 19 ஆம் வயதில் திருமணம் செய்து வைத்தனர் அவருடைய பெற்றோர்கள்.

குமரனின் மனைவியின் பெயர் கருப்பாயி அம்மாள்.

விடுதலைப் போராட்டத்தில் குமரன்:

செ.மேலப்பாளையத்தில் வருமானம் குறைந்து வந்ததால் குமரனின் குடும்பம் முழுவதும் திருப்பூருக்கு குடி பெயர்ந்தது.

அவர் திருப்பூரில் வசித்து வந்ததால் அவரை திருப்பூர் குமரன் என்று பெருந்தலைவர்கள் அழைத்து வந்தனர்.

இவர் திருப்பூரில் ஒருவரின் பஞ்சு மில்லில் கணக்கராக பணிபுரிந்து வந்தார்.

குமரன் பணிபுரியும் நேரத்தை தவிர மீதி நேரத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.

இவர் திருப்பூரில் இருந்த தேசபந்து வாலிபர் சங்கம் என்ற அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தார்.

இவர் நாட்டின் விடுதலை உணர்வை தூண்டும் வகையில் தேசபக்தி பாடல்களையும் நாடகங்களையும் நடத்தினார்.

மேலும் படிக்க  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு

1925 ஆம் ஆண்டு காந்தி திருப்பூர் வந்தபொழுது அவரின் கொள்கைளால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

பின்னர் காந்தி கதர் அணியச் சொன்னதால் குமரனும் அவரது மனைவியும் கதர் ஆடையே அணிந்தனர்.

கதர் குல்லாவை அணிந்தார் குமரன்.

காந்தியின் அறப்போராட்டதின் மீது அதிகப் பற்றுக் கொண்ட காரணத்தால் காந்தியின் தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் அந்நிய துணி எரிப்பு போராட்டம், கள்ளுக்கடை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.

ஒருமுறை கள்ளுக்கடை மறியலின் போது கள்ளுக்கடையின் முன் நின்று போராட்டிக் கொண்டிருக்கும் பொழுது அந்தக் கள்ளுக்கடை உரிமையாளர் குமரனின் மீது கள்ளை எடுத்து ஊத்தினார்.

ஆனாலும் அதை துடைத்து எரிந்துவிட்டு போராட்டத்தை விட்டு நகர்ந்து செல்லாமல் இருந்தார்.

அதேபோல் அந்நிய வெடி எதிர்ப்பு போராட்த்திலும் அந்த கடையின் உரிமையாளர் பட்டாசை குமரனின் மூஞ்சில் எரிந்தார்.

அவரின் முகத்தில் தீக்காயம் பட்டும் கூட போராட்டத்தை நிறுத்தாமல் போராட்டிக் கொண்டிருந்தார்.

கொடிக்காத்த குமரன் வாழ்க்கை வரலாறு

1930 லில் காந்தி தண்டியிலும் ராஜாஜி வேதாராண்யத்திலும் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினர்.

இதில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு வீட்டிலும் அவர் பணிபுரியும் இடத்திலும் அனுமதி கேட்டார், ஆனால் இரு இடங்களிலும் மறுப்பு தெரிவித்ததால் அவர் அன்று முழுவதும் உண்ணாவிரதத்தை மேற்க்கொண்டார்.

பின்பு காந்தியின் அந்நிய துணி எரிப்பு மற்றும் கள்ளுக்கடை மறியல் போன்ற அறப்போராட்டத்தை முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு அப்போது இருந்த இர்வின் என்ற ஆங்கிலேய அரசு அதிகாரி காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்பு அவருக்கு பின்பு வந்த வேறு அதிகாரி அதை ஏற்கமறுத்தார், பின் காந்தியையும் சிறையில் அடைத்தார்.

சட்ட மறுப்பு கொள்கை:

இந்தச் சட்ட மறுப்பு கொள்கையை எதிர்க்கும் பொருட்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர் காங்கிரஸ் தலைவர்கள்.

இந்தப் போராட்டத்தை தடுக்கும் பொருட்டு ஆங்கிலேய அரசு அதற்கு முந்திய நாளே முக்கியமான தலைவர்களை கைது செய்தது.

அதில் திருப்பூரில் உள்ள பி.டி.ஆஷர் மற்றும் அவரது மனைவி பத்மாவதியையும் சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர்களின் போராட்டத்தை பி.டி.சுந்தரம் என்பவர் தலைமை தாங்கினார்.

அந்தப் போராட்டத்தில் தேசபந்து இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் திருப்பூர் நகர் முழுவதும் போராட்டம் செய்தனர்.

அவர்கள் காவல் நிலையம் அருகில் வந்ததும் 30 காவல் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் இழுத்து பிடித்து தன்னுடைய தடியாலும் பூட்ஸ் கால்களாலும் மிதித்தனர்.

சிலர் அடிதாங்க முடியாமல் போராட்டத்தில் இருந்து தப்பி ஓடினார்.

அப்பொழுது தலைமை தாங்கிய பி.டி.சுந்தரம் முதலில் மயங்கி விழுந்தார், பின்னர் குமரனை தாக்கியதில் அவரின் மண்டை பிளந்து குருதி முகம் முழுவதும் வழியத் தொடங்கியது.

மேலும் படிக்க  முதல் தற்கொலைப் போராளி குயிலி வரலாறு

அவருக்கு மயக்கம் வரும் தருவாயில் கூட அவர் வந்தே மாதரம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

பின் அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்தார், அப்பொழுது அவர் வாயில் வந்தே மாதரம் என்ற சொல் முனுமுனுத்தது.

அவர் நிலைதடுமாறி மயங்கிய பொழுதும் அவரது வலதுகையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தார்.

அவரின் செயலைக் கண்ட ஆங்கிலேய காவல் அதிகாரி அவரது கையை கொடியில் இருந்து பிரிக்க முயற்ச்சி செய்தனர், ஆனால் பலமுறை முயற்ச்சி செய்த பின் தான் அவரது கையில் உள்ள கொடியைப் பிரித்து எரிந்தனர்.

ஆனால் அவர் ஜனவரி 10, 1932 ஆம் ஆண்டு தாக்கப்பட்ட அவர் மறுநாள் அதாவது ஜனவரி 11 இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இவர் கொடியை கீழே விடாமல் காத்ததால் அவருக்கு கொடிக்காத்த குமரன் என்னும் பெயர் வந்தது.

இவர் இறந்த பின் காந்தியடிகள் இவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற திருப்பூர் வந்தார்.

இவரது உடலுக்கு பல விடுதலை வீரர்கள் கொல்லி வைத்தனர்.

அவருக்கு தமிழ்நாடு அரசு திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

2004 ஆம் ஆண்டு அவரது 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு தபால்தலை ஒன்றை வெளியிட்டது.

விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு

1 thought on “கொடிக்காத்த குமரன் வாழ்க்கை வரலாறு”

Comments are closed.