ஜெயகாந்தம்
1) சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம் எது?
விடை: சில நேரங்களில் சில மனிதர்கள்
2) ஜெயக்காந்தனின் எந்த நூலுக்கு சோவியத் நாட்டு விருது கிடைத்தது?
விடை: இமயத்துக்கு அப்பால்
3) ஜெயக்காந்தனின் உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் என்ன விருதைப் பெற்றது?
விடை: குடியரசுத் தலைவர் விருது
4) ஞானபீட விருது மற்றும் தாமரைத்திரு விருது பெற்ற எழுத்தாளர் யார்?
ஆ) கண்ணதாசன் ஆ) வேணுகோபாலன் இ) சிவஞானம் ஈ) ஜெயகாந்தம்
விடை: ஈ) ஜெயகாந்தம்
5) ஜெயகாந்தனின் சிறுகதைப் தொகுப்புகள் யாவை?
குருபீடம், யுகசந்தி, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
6) ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் யாவை?
பிரளயம், பிரம்ம உபதேசம், கைவிலங்கு, யாருக்காக அழுதான், சினிமாவுக்கு போன சித்தாளு, ரிஷி மூலம், கருணையினால் அல்ல
7) ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்?
உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரசுக்குப் போ, சுந்தரகாண்டம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கங்கை எங்கே போகிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை
8) ஜெயகாந்தன் பிறப்பு மற்றும் இறப்பு?
பிறப்பு: 24.4.1934
இறப்பு: 8.4.2015
9) சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: ஜெயகாந்தன்
சித்தாளு
1) நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?
விடை: முகம்மதுரஃபி
2) கணையாழி என்ற இதழைத் தொடங்கியவர் யார்?
விடை: நாகூர்ரூமி
3) நாகூர்ரூமி எழுதிய நாவலின் பெயர் என்ன?
விடை: கப்பலுக்கு போன மச்சான்
4) நாகூர்ரூமி எழுதிய கவிதை நூல்கள்?
- நதியின் கால்கள்
- ஏழாவது சுவை
- சொல்லாத சொல்
தேம்பாவணி
1) தேம்பாவணியை இயற்றியவர் யார்?
விடை: வீரமாமுனிவர்
2) வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
விடை: கான்சுடான்சு சோசப் பெசுகி
3) தேம்பாவணி எத்தனை காண்டங்களைக் கொண்டது?
விடை: 3 காண்டம் (36 படலம், 3615 பாடல்கள்)
4) வீரமானிவரின் எளிமையையும் துறவையும் கண்டு திருச்சி மன்னன் சந்தாசாகிப் என்ன பட்டத்தை வழங்கினார்?
விடை: இஸ்மத் சன்னியாசி (தூய துறவி)
5) வீரமாமுனிவர் எழுதிய நூல்கள் யாவை?
- தேம்பாவணி
- சதுரகராதி
- தொன்னூல் விளக்கம்
- பரமார்த்த குருகதைகள்
- சிற்றிலக்கியங்கள்
- உரைநடைநூல்கள்
6) தேம்பாவணி யாரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது?
விடை: கிறித்துவின் வளர்ப்பு தந்தை சூசையப்பர் (யோசேப்)
7) கைமுறை என்பது ——- தொகை ஆகும்.
விடை: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
8) காய்மணி, உய்முறை, செய்முறை, மெய்முறை என்பது ——- தொகை ஆகும்.
விடை: வினைத்தொகை
9) பொருத்துக
- படலை – மலர்கள்
- அசும்பு – மாலை
- துணர் – வாட
- தேம்ப – படுக்கை
- சேக்கை – நிலம்
விடை:
- படலை – மாலை
- அசும்பு – நிலம்
- துணர் – மலர்கள்
- தேம்ப – வாட
- சேக்கை – படுக்கை
10) கிறித்துவிற்கு முன் தோன்றியவர் யார்?
விடை: திருமுழுக்கு யோவான் (அருளப்பர்)
ஒருவன் இருக்கிறான்
1) கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் யார்?
விடை: கு. அழகிரிசாமி
அணி
1) கவிஞன் தன் குறிப்பை செய்யுளில் ஏற்றிக் கூறுவது —— அணி ஆகும்.
விடை: தற்குறிப்பேற்ற அணி
2) ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட ’ – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: தற்குறிப்பேற்ற அணி
3) தீவக அணி எத்தனை வகைப்படும்?
விடை: 3
4) சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து
திசை அனைத்தும், வீரச் சிலை பொழிந்த அம்பும்,
மிசை அனைத்தும் புள்குலமும் வீழ்ந்து – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: தீவக அணி
5) அன்பும் அறனும் உடைத்தா யின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: நிரல்நிறை அணி
6) மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர் – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: தன்மை அணி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும் …” – இவ்வடிகளில் கற்காலம் என்பது
அ) தலைவிதி ஆ) பழைய காலம் இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது
இ) ஏழ்மை
2) சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
அ) அரசின் நலத்திட்டங்களைச் செ யல்ப டுத்த ல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெ ளிநாட்டு முதலீடுகள்
விடை: ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
3) பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று
…………………………………. வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்கா க ஈ) எலிசபெத், பூமிக்காக
விடை: அ) கருணையன், எலிசபெத்துக்காக
4) வாய்மையே மழை நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
விடை: இ) உருவகம்
5) கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
அ) தம் வாழ்க்கை யில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
இ) அறத்தை க் கூறுவதற்கா க எழுதினார்
ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
விடை: ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 2