பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 1

சிற்றகல் ஒளி

1) “எனது போராட்டம்” என்ற தலைப்பில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியவர் யார்?

     விடை: ம.பொ.சிவஞானம்

2) “சிலம்புச்செல்வர்” என்று போற்றப்படுபவர் யார்?

     விடை: ம.பொ.சிவஞானம்

3) ம.பொ.சிவஞானம் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்னும் நூலுக்காக 1966 ஆம் ஆண்டு என்ன விருது கிடைத்தது?

     விடை: சாகித்திய அகாதெமி விருது

4) சிலப்பதிகார மாநாடு நடத்தியவர் யார்?

     விடை: ம.பொ.சிவஞானம்

ஏர் புதிதா?

1) கு.ப. ராஜாகோபாலன் பிறந்த ஊர் எது?

     விடை: கும்பகோணம்

2) கு.ப. ராஜகோபாலன் பிறந்த ஆண்டு எது?

     விடை: 1902

3) தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் யார்?

     விடை: கு.ப. ராஜகோபாலன்

மெய்க்கீர்த்தி

1) “கோப்பரகேசரி”, “திருபுவனச் சக்கரவர்த்தி” என்ற பட்டங்களைக் கொண்ட சோழன் யார்?

     விடை: இரண்டாம் இராசராச சோழன்

2) புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை —– ஆகும்.

     விடை: மெய்க்கீர்த்தி

சிலப்பதிகாரம்

1) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

     விடை: இளங்கோவடிகள்

சிலப்பதிகாரம்

2) சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?

     விடை: 3

3) முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

     விடை: சிலப்பதிகாரம்

4) “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்” என்பது எந்த நூல்?

     விடை: சிலப்பதிகாரம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே

1) “மகசேசே விருது” பெற்ற முதல் இசைக் கலைஞர் யார்?

     விடை: எம்.எஸ். சுப்புலட்சுமி

2) இந்திய அரசு எம்.எஸ். சுப்புலட்சுமி க்கு என்ன விருது அளித்து பெருமைப்படுத்தியது?

     விடை: இந்திய மாமணி

3) எம்.எஸ் சுப்புலட்சுமி 1954 ஆம் ஆண்டு —— விருதைப் பெற்றார்.

     விடை: தாமரையணி விருது

4) நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் பரவி இருந்த இருபதாம் நூற்றாண்டில் தன் நடத்தால் தாமரைச் செவ்வணி விருதைப் பெற்ற பெண் யார்?

     விடை: பாலசரசுவதி

5) சாகித்திய அகாதெமி விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?

     விடை: ராஜம் கிருஷ்ணன் (நூல்: வேருக்கு நீர்)

6) ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினங்கள் யாவை?

  • பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
  • கரிப்பு மணிகள்
  • குறிஞ்சித் தேன்
  • அலைவாய்க் கரையில்
  • சேற்றில் மனிதர்கள்
  • வேருக்கு நீர்
  • கூட்டுக் குஞ்சுகள்
  • மண்ணகத்து பூந்துளிகள்
மேலும் படிக்க  ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் - பாடம் 3

7) மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார்?

     விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

8) இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும், சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருதையும் சுவிட்சர்லாந்தின் காந்தி அமைதி விருதையும் பெற்ற பெண்மணி யார்?

     விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

9) “உழுபவருக்கே நிலம் உரிமை இயக்கம்” என்ற அமைப்பினை உருவாக்கியவர் யார்?

     விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

10) சின்னப்பிள்ளை பெற்ற விருதுகள் யாவை?

  • பெண் ஆற்றல் விருது (ஸ்திரி சக்தி புரஸ்கர்)
  • ஔவை விருது
  • பொதிகை விருது
  • தாமரைத்திரு விருது

11) சின்னப்பிள்ளை ஆரம்பித்த குழுவின் பெயர் என்ன?

     விடை: களஞ்சியம்

புறப்பொருள் இலக்கணம்

1) புறத்திணை எத்தனை வகைப்படும்?

     விடை: 12

2) “ஆநிரைகளை கவர்தல்” என்பது —— திணை ஆகும்.

     விடை: வெட்சி திணை

3) “ஆநிரைகளை மீட்டல்” என்பது ——— திணை ஆகும்.

     விடை: கரந்தை திணை

4) “பகைவர் நாட்டின் மீது போர்தொடுப்பது” என்பது ——- திணை ஆகும்.

     விடை: வஞ்சித்திணை’

5) “நாட்டை கைப்பற்ற வந்த அரசனோடு எதிர்த்து போரிடுதல்” என்பது ——– திணை ஆகும்.

     விடை: காஞ்சி

6) “கோட்டையின் உட்புறத்தில் இருந்து போரிடுவது” —— திணை ஆகும்.

     விடை: நொச்சித்திணை

7) “கோட்டையைக் கைப்பற்ற போரிடுவது” —– திணை ஆகும்.

     விடை: உழிஞை

8) “அரசர்கள் நேருக்கு நேர் போரிடுவது” ——- திணை ஆகும்.

     விடை: தும்பைத் திணை

9) “வெற்றி பெற்ற அரசன் வாகை பூ சூடுவது” —— திணை ஆகும்.

     விடை: வாகைத்திணை

10) கைக்கிளை என்பது —— ஆகும்.

     விடை: ஒருதலைக் காமம்

11) பெருந்திணை என்பது ——- ஆகும்.

     விடை: பொருந்தாக் காமம்

சரியான விடையைத் தேந்தெடுத்து எழுதுக

1) சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க .

அ) உழவு, மண், ஏர், மாடு  ஆ) மண், மாடு, ஏர், உழவு

இ) உழவு, ஏர், மண், மாடு  ஈ) ஏர், உழவு, மா டு, மண்

     விடை: இ) உழவு, ஏர், மண், மாடு

2) ‘மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

அ) திருப்பதியும் திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்ப தியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்ப ரங்குன்றமும் பழனியும்

மேலும் படிக்க  எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடம் – 1

     விடை: ) திருப்பதியும் திருத்தணியும்

3) ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தை யும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –

அ) மேம்ப ட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

ஆ) மிகுந்த செல்வம் உடையவர்

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

     விடை:) நெறியோடு நின்று காவல் காப்பவர்

4) இருநாட்டு அரசர்களும் தும்பை ப் பூவை ச் சூடிப் போரிடுவதன் காரணம் ………….

அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்

     விடை: ) வலிமையை நிலைநாட்டல்

5) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமா க ம.பொ.சி. கருதியது ………..

அ) திருக்குறள் ஆ) பு றநானூறு இ) கம்பராமா யணம் ஈ) சிலப்பதிகாரம்

     விடை: ) சிலப்பதிகாரம்

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் 3

1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 1”

Comments are closed.