சங்க இலக்கியத்தில் அறம்
1) “கவிதை வாழ்க்கையின் திறனாய்வு” என்று கூறிய திறனாய்வாளர் யார்?
விடை: ஆர்னால்டு
2) “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்“- என்று அறத்தைப் பற்றி புறநானூற்றில் கூறிய வள்ளல் யார்?
விடை: முடமோசியார்
3) “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்
அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” – என்று எந்த நூல் அறத்தைப் பற்றி கூறுகிறது?
விடை: மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்)
4) எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று கபிலர் எந்த வள்ளலை கூறினார்?
விடை: மலையமான் திருமுடிக்காரி
5) இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்று யார் குறிப்பிடுட்டுள்ளார்?
விடை: நச்செள்ளையார்
6) பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்
சான்ற வர்க்கு எல்லா ம் கடன் – என்று யார்? எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
விடை: நல்லந்துவனார் (கலித்தொகை)
7) சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே – என்று யார்? எந்நூலில் குறிப்பிட்டுள்ளார்?
விடை: பெருங்கடுங்கோ (நற்றிணை)
ஞானம்
1) ‘கோடைவயல்’, ‘மீட்சி விண்ணப்பம்’ என்ற கவிதை தொகுப்புகளின் ஆசிரியர் யார்?
விடை: தி.சொ.வேணுகோபாலன்
2) தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் எது?
விடை: திருவையாறு
3) எழுத்து காலப் புதுக்கவிஞர்களுள் ——- ஒருவர்.
அ) திருநாவுக்கரசர் ஆ) ம.பொ.சிவஞானம் இ) தி.சொ.வேணுகோபாலன் ஈ) ராஜகோபாலன்
விடை: தி.சொ.வேணுகோபாலன்
காலக்கணிதம்
1) கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
விடை: முத்தையா
2) கண்ணதாசன் பிறந்த ஊர்?
விடை: சிறுகூடல்பட்டி
3) கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
விடை: சாத்தப்பன் – விசாலாட்சி
4) சாகித்திய விருது பெற்ற கண்ணதாசனின் புதினம் எது?
விடை: சேரமான் காதலி
பா – வகை, அலகிடுதல்
1) யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது?
விடை: 6
2) பா எத்தனை வகைப்படும்?
விடை: 4
4) ஓசை ——- வகைப்படும்.
விடை: 4
5) பொருத்துக
- செப்பல் ஓசை – கலிப்பா
- அகவல் ஓசை – வெண்பா
- துள்ளல் ஓசை – வஞ்சிப்பா
- தூங்கல் ஓசை – ஆசிரியப்பா
விடை:
- செப்பல் ஓசை – வெண்பா
- அகவல் ஓசை – ஆசிரியப்பா
- துள்ளல் ஓசை – கலிப்பா
- தூங்கல் ஓசை – வஞ்சிப்பா
6) வெண்பா எத்தனை வகைப்படும்?
விடை: 5
7) ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?
விடை: 4
8) பொருத்துக
- நேர் – மலர்
- நிரை – பிறப்பு
- நேர்பு – நாள்
- நிரைபு – காசு
விடை:
- நேர் – நாள்
- நிரை – மலர்
- நேர்பு – காசு
- நிரைபு – பிறப்பு
9) “குறளும் நாலடியாரும்” ——- பா ஆகும்.
விடை: வெண்பா (செப்பல் ஓசை)
10) “சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை” —— பா ஆகும்.
விடை: ஆசிரியப்பா (அகவல் ஓசை)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) மேன்மை தரும் அறம் என்பது…….
அ) கைமாறு கருதாமல் அறம் செய்வ து
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வ து
இ) புகழ் கருதி அறம் செய்வ து
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
விடை: அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது
2) ‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பிடுவது ……………
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ண ம் பூசுவதை
விடை: இ) இடையறாது அறப்பணி செய்தலை
3) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
விடை: ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
4) காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
விடை: அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
5) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……….
அ) அகவற்பா_ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா_ ஈ) கலிப்பா
விடை: அ) அகவற்பா
பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 1
1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 2”
Comments are closed.