நிகழ்கலை
1) “நீரற வறியாக் கரகத்து” என்று எந்த நூல் கரகத்தை பற்றி கூறியிருக்கிறது?
விடை: புறநானூறு
2) தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி எது?
விடை: தேவதுந்துபி
3) இராஜஸ்தானில் கச்சிக்கொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படும் ஆட்டம் எது?
விடை: பொய்க்கால் குதிரையாட்டம்
4) “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்று கூறியவர் யார்?
விடை: ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு
5) ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு எந்த எந்த விருதைப் பெற்றுள்ளார்?
- தாமரைத்திரு விருது
- கலைமாமணி விருது
பூத்தொடுத்தல்
1) கவிஞர் உமா மகேஸ்வரி எந்த ஊரில் பிறந்தார்?
விடை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி
2) கவிஞர் உமா மகேஸ்வரி படைத்த கவிதை நூல்கள் யாவை?
- நட்சத்திரங்களின் நடுவே
- வெறும் பொழுது
- கற்பாவை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
1) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் யார்?
விடை: குமரகுருபரர்
2) குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
விடை: கி.பி 17 ஆம் நூற்றாண்டு
3) 96 வகைச் சிற்றியலக்கியங்களில் ஒன்று ——
அ) பிள்ளைத்தமிழ் ஆ) திருவிளையாடற் புராணம் இ) பத்து[ப்பாட்டு ஈ) சிலப்பதிகாரம்
விடை: அ) பிள்ளைத்தமிழ்
4) பிள்ளைத்தமிழை —— வகையாகப் பிரிக்கலாம்.
விடை: 2 (ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்)
5) ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருங்கள் யாவை?
- சிற்றில்
- சிறுபறை
- சிறுதேர்
6) பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் யாவை?
- கழங்கு
- அம்மானை
- ஊசல்
7) இருபாலருக்கும் பொதுவாக உள்ள பிள்ளைத்தமிழ் பருவங்கள் யாவை?
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
8) பொருத்துக
- பண்டி – ஒளிவீசுகிற
- அசும்பிய – வியங்கோள் வினைமுற்று
- குண்டலமும் குலைகாதும் – வயிறு
- ஆடுக – எண்ணும்மை
விடை:
- பண்டி – வயிறு
- அசும்பிய – ஒளிவீசுகிற
- குண்டலமும் குலைகாதும் – எண்ணும்மை
- ஆடுக – வியங்கோள் வினைமுற்று
கம்பராமாயணம்
1) கம்பராமயணத்தை இயற்றியவர் யார்?
விடை: கம்பர்
2) கம்பர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
விடை: சோழநாட்டு திருவழுந்தூர்
3) கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
விடை: திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல்
4) கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
- சரசுவதி அந்தாதி
- சடகோபர் அந்தாதி
- திருக்கை வழக்கம்
- ஏரெழுபது
- சிலையெழுபது
5) இராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
விடை: 6
பாய்ச்சல்
1) தக்கையின் மீது நான்கு கண்கள் என்னும் சிறுகதையை இயற்றியவர் யார்?
விடை: சா. கந்தசாமி
2) சா. கந்தசாமி எழுதிய எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?
விடை: விசாரணைக் கமிஷன்
3) சா. கந்தசாமியின் அனைத்துலக விருதைப் பெற்ற குறும்படம் எது?
விடை: சுடுமண் சிலைகள்
4) சா. கந்தசாமி எழுதிய புதினங்கள் யாவை?
- தொலைந்து போனவர்கள்
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சாயவனம்
5) கந்தசாமி பிறந்த ஊர் எது?
விடை: மயிலாடுதுறை (நாகப்பட்டினம்)
அகப்பொருள் இலக்கணம்
1) ஐவகை நிலங்கள் யாவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
2) பொருத்துக
- கார்காலம் – ஐப்பசி, கார்த்திகை
- குளிர்காலம் – மாசி, பங்குனி
- முன்பனிக் காலம் – ஆனி, ஆடி
- பின்பனிக் காலம் – ஆவணி ,புரட்டாசி
- இளவேனிற் காலம் – மாசி, பங்குனி
- முதுவேனிற் காலம் – சித்திரை , வைகாசி
விடை:
- கார்காலம் – ஆவணி, புரட்டா சி
- குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை
- முன்பனிக் காலம் – மார்கழி, தை
- பின்பனிக் காலம் – மாசி, பங்குனி
- இளவேனிற் காலம் – சித்திரை , வைகாசி
- முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி
3) பொருத்துக
- காலை – காலை 10 மணி முதல் 2 மணி வரை
- நண்பக ல் – காலை 6 மணி முதல் 10 மணி வரை
- எற்பா டு – மாலை 6 மணி முதல் 10 மணி வரை
- மாலை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- யாமம் – மாலை 10 மணி முதல் இரவு 2 மணி வரை
- வைகறை – பிற்பகல் 2 மணி முதல் காலை 6 மணி வரை .
விடை:
- காலை – காலை 6 மணி முதல்10 மணி வரை
- நண்பக ல் – காலை 10 மணி முதல்2 மணி வரை
- எற்பா டு – பிற்பகல் 2 மணி முதல்6 மணி வரை
- மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
- யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
- வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
4) குறிஞ்சி நிலத்தின் பெரும்பொழுது ———–, ———– ஆகும்.
விடை: குளிர்காலம், முன்பனிக்காலம்
5) ஆறு பெரும்ம்பொழுதுகளையும் கொண்ட இரு நிலங்கள் யாவை?
விடை: மருதம், நெய்தல்
6) கார்காலத்தை பெரும்பொழுதாகக் கொண்ட நிலம் எது?
விடை: முல்லை
7) இளவேனில், முதுவேனில், பின்பனியைக் பெரும்பொழுதாகக் கொண்ட நிலம் எது?
விடை: பாலை
8) சிறுபொழுதுகளை பொருத்துக
- குறிஞ்சி – மாலை
- முல்லை – வைகறை
- மருதம் – எற்பாடு
- நெய்தல் – நண்பகல்
- பாலை – யாமம்
விடை:
- குறிஞ்சி – யாமம்
- முல்லை – மாலை
- மருதம் – வைகறை
- நெய்தல் – எற்பாடு
- பாலை – நண்பகல்
9) சேர்ப்பன் என்பது எந்த நிலத்தின் மக்களை குறிப்பிடுவது?
விடை: நெய்தல்
10) செங்கழுநீர் எந்த நிலத்திற்குரிய பூ?
விடை: மருதம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் …………..
அ) முல்லை , குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை , நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
விடை: இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
2) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசை யில் நின்று ஆடுவர்.
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசை யில் நின்று ஆடப்படுகிறது.
இ) ஒயிலாட்டம் இருவரிசை யில் நின்று ஆடப்படுகிறது.
ஈ) ஒயிலாட்டம் இருவரிசை யில் நின்று ஆடப்படுகின்றனர்.
விடை: இ) ஒயிலாட்டம் இருவரிசை யில் நின்று ஆடப்படுகிறது.
3) மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால். ஆ) தளரப் பிணைத்தால்.
இ) இறுக்கி முடிச்சிட்டால். ஈ) காம்பு முறிந்தால்.
விடை: ஆ) தளரப் பிணைத்தால்
4) கரகாட்டத்தைக் கும்பா ட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத் தொடருக்கா ன வினா எது?
அ) கரகாட்டம் என்றா ல் என்ன ? ஆ) கரகாட்டம் எக்கா லங்களில் நடைபெ றும்?
இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை? ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
விடை: ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
5) கோசல நாட்டில் கொடை இல்லா த காரணம் என்ன ?
அ) நல்ல உள்ள ம் உடை யவர்கள் இல்லா ததால்
ஆ) ஊரில் விளைச்ச ல் இல்லா ததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லா ததால்
விடை: ஈ) அங்கு வறுமை இல்லாததால்
திருக்குறள்
1) தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.- இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: வஞ்சப் புகழ்ச்சி அணி
2) பொருளல் வரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: சொல் பின்வருநிலையணி
3) குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: உவமை அணி
4) இன்மை யின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: சொல்பொருள் பின்வருநிலையணி
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 2
1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் 3”
Comments are closed.