பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 2

மொழிபெயர்ப்புக் கல்வி

1 “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்
கண்டுள்ள கலை களெல்லாம் தமிழில் எண்ணி
பேசிமகிழ் நிலை வேண்டும்”- என்று தமிழின் பெருமையை பாடியவர் யார்?
விடை: குலோத்துங்கன்
2) “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” – என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார்
3) “வால்காவிலிருந்து கங்கை வரை” – என்ற நூலை முதன் முதலில் இந்தியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை: கணமுத்தையா

நீதி வெண்பா

1) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் யார்?
விடை: செய்குதம்பிப் பாவலர்
2) செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஆண்டு மற்றும் இறந்த ஆண்டு எது?
விடை: 1874 முதல் 1950
3) தவறான தொடரை தேர்வு செய்க
அ) செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
ஆ) “சதாவதானி” என்று பாரட்டைப் பெற்றவர் செய்குதம்பிப் பாவலர்.
இ) ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் சதாவதானம் ஆகும்,
ஈ) சீறாப்புராணத்திற்கு அப்துல் ரகுமான் உரை எழுதினார்.
விடை:

திருவிளையாடற் புராணம்

1) திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?
விடை: பரஞ்சோதி முனிவர்
2) பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை?

 • வேதாரண்யப் புராணம்
 • திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா
 • மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

3) பரஞ்சோதி முனிவர் எந்த ஊரில் பிறந்தார்?
விடை: திருமறைக்காடு (வேதாரண்யம்)
4) திருவிளையாடற் புராணம் ——- காண்டங்களையும் —— படலங்கலையும் கொண்டது.
விடை: மூன்று காண்டம், 64 படலம்
7) பரஞ்சோதி முனிவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
விடை: கி.பி 17 ஆம் நூற்றாண்டு
8) பொருத்துக

 1. முனிவு – மாலை
 2. தார் – வினையாலணையும் பெயர்
 3. தமர் – சினம்
 4. கேள்வியினான் – உறவினர்

விடை:

 1. முனிவு – சினம்
 2. தார் – மாலை
 3. தமர் – உறவினர்
 4. கேள்வியினான் – வினையாலணையும் பெயர்

புதிய நம்பிக்கை

1) “உனக்குப் படிக்க தெரியாது” என்ற தலைப்பில் நூலை இயற்றியவர் யார்?
விடை: கமலாலயன்
2) உலகெங்கும் மூலை முடுக்களில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்த அமெரிக்க கறுப்பின பெண்மணி யார்?
விடை: மேரி மெக்லியோட் பெத்யூன்
3) கமலாலயனின் இயற்பெயர் என்ன?
விடை: வே. குணசேகரன்

வினா, விடை வகைகள், பொருள்கோள்

1) வினா எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு
2) “ இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா? என்று வினவுனது ——- வினா ஆகும்.
அ) அறிவினா ஆ) அறியா வினா இ) ஐய வினா ஈ) கொடைவினா
விடை: இ) ஐய வினா

அறிவினா


3) ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது —— வினா ஆகும்.
அ) அறிவினா ஆ) கொளல் வினா இ) ஐய வினா ஈ) கொடைவினா
விடை: ஆ) கொளல் வினா
4) “வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்குச் சென்று வாங்கி வருகிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவுவது —— வினா ஆகும்.
அ) அறிவினா ஆ) அறியா வினா இ) ஐய வினா ஈ) ஏவல் வினா
விடை: ஈ) ஏவல் வினா
5) “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் மாணவனிடம் கேட்பது ——- வினா ஆகும்.
அ) அறிவினா ஆ) அறியா வினா இ) ஐய வினா ஈ) கொடைவினா
விடை: அ) அறிவினா
6) ) “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று மாணவன் ஆசிரியரிடம் கேட்பது ——- வினா ஆகும்.
அ) அறிவினா ஆ) அறியா வினா இ) ஐய வினா ஈ) கொடைவினா
விடை: ஆ) அறியா வினா
7) “ என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளது, உனக்கு ஒன்று வேண்டுமா? என்று வினவுவது ——- வினா ஆகும்.
அ) அறிவினா ஆ) அறியா வினா இ) ஐய வினா ஈ) கொடைவினா
விடை: ஈ) கொடை வினா

மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் பாடம் – 1

8) விடை எத்தனை வகைப்படும்?

விடை: 8
9) கடைத்தெரு எங்குள்ள து?’ என்ற வினா விற்கு, இப்பக்கத் தில் உள்ளதுஎனக் கூறுவது —— விடை ஆகும்.
அ) சுட்டு விடை ஆ) மறை விடை இ) நேர் விடை ஈ) ஏவல் விடை
விடை: அ) சுட்டு விடை
10) கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் “போகமாட்டேன்” என மறுத்துக் கூறுவது ——- விடை ஆகும்.
அ) சுட்டு விடை ஆ) மறை விடை இ) நேர் விடை ஈ) ஏவல் விடை
விடை: ஆ) மறை விடை
11) கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் “போவேன்” என கூறுவது ——- விடை ஆகும்.
அ) சுட்டு விடை ஆ) மறை விடை இ) நேர் விடை ஈ) ஏவல் விடை
விடை: ) நேர் விடை
12) இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்என்று ஏவிக் கூறுவது ——- விடை ஆகும்.
அ) சுட்டு விடை ஆ) மறை விடை இ) நேர் விடை ஈ) ஏவல் விடை
விடை: ஈ) ஏவல் விடை
13) உனக்குக் கதை எழுதத் தெ ரியுமா ?” என்ற வினா விற்குக் கட்டுரை எழுதத் தெரியும்என்று கூறுவது ——- விடை ஆகும்.
அ) இனமொழி விடை ஆ) சுட்டு விடை இ) மறை விடை ஈ) ஏவல் விடை
விடை: அ) இனமொழி விடை
14) என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினா விற்கு வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது ——- விடை ஆகும்.
அ) வினா எதிர் வினாதல் விடை ஆ) சுட்டு விடை இ) மறை விடை ஈ) ஏவல் விடை
விடை: அ) வினா எதிர் வினாதல் விடை
15) நீ விளையாடவில்லையா?’ என்ற வினா விற்குக் கால் வலிக்கிறதுஎன்று உற்றதை உரைப்பது ——– விடை ஆகும்.
அ) இனமொழி விடை ஆ) உற்றது உரைத்தல் விடை இ) மறை விடை ஈ) ஏவல் விடை
விடை: ஆ) உற்றது உரைத்தல் விடை
16) நீ விளையாடவில்லையா?’ என்ற வினா விற்குக் கால் வலிக்கும்என்று உறுவதை உரை ப்பது ——- விடை ஆகும்.
அ) உறுவது கூறல் விடை ஆ) உற்றது உரைத்தல் விடை இ) மறை விடை ஈ) ஏவல் விடை
விடை: அ) உறுவது கூறல் விடை
17) பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
விடை: 8
18) ஆற்றுநீர்ப்போல நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்த பாடல் ——பொருள்கோள் ஆகும்.
விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
19) நிரல்நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
விடை: 2
20) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது ——-பொருள்கோள் ஆகும்.
விடை: கொண்டுகூட்டுப் பொருள்கோள்

மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 2

ரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
விடை: அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
2) அருந்துணை என்பதைப் பிரித்தால்………………….
அ) அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருமை + இணை ஈ) அரு + இணை
விடை: அ) அருமை + துணை
3) ”இங்கு நகரப் பே ருந்து நிற்குமா ?” என்று வழிப்போக்கர் கேட்டது ………… வினா .“அதோ , அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது ………. விடை .
அ) ஐயவினா , வினா எதிர் வினாத ல் ஆ)அறிவினா , மறை விடை
இ) அறியா வினா , சுட்டு விடை_ஈ) கொளல் வினா , இனமொழி விடை
விடை: இ) அறியா வினா, சுட்டு விடை
4) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை “- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ்__ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
விடை: இ) கல்வி
5) இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……… இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ……….
அ) அமைச்சர் , மன்னன் ஆ) அமைச்சர் , இறைவன்
இ) இறைவன், மன்னன் ஈ) மன்னன், இறைவன்
விடை: ஈ) மன்னன், இறைவன்

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 1

1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 2”

Comments are closed.