பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 1

செயற்கை நுண்ணறிவு

1) ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய ரோபோ வின் பெயர் என்ன?
விடை: பெப்பர்
2) “இலா” என்னும் மென்பொருள் ஒரு விநாடிக்கு எத்தனை வாடிக்கையாளர்களுடன் உரையாடும்?
விடை: பத்தாயிரம்
3) சரியான தொடர்களை தேர்வு செய்க
அ) சீனநாட்டில் காண்டன் நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ துறைமுக நகர் உள்ளது.
ஆ) சூவன்சௌ நகரில் குப்லாய்கானின் ஆணையின் கீழ் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இ) அந்த சிவன் சோயிலில் சோழர்கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விடை: மூன்றும் சரி (அ, ஆ, இ)

பெருமாள் திருமொழி

1) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ———- ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
விடை: பெருமாள் திருமொழி
2) பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?
விடை: குலகேசராழ்வார்
3) குலசேகர ஆழ்வார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
விடை: எட்டாம் நூற்றாண்டு
4) பெருமாள் திருமொழி எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
விடை: 105

பரிபாடல்

1) பரிபாடல் என்னும் நூலை இயற்றியவர் யார்?
விடை: கீரந்தையார்
2) பரிபாடல் ——– நூல்களுள் ஒன்று.
விடை: எட்டுத்தொகை
3) பொருத்துக

  1. விசும்பு – யுகம்
  2. ஊழி – முறை
  3. ஊழ் – சிறப்பு
  4. தண்பெயல் – வானம்
  5. பீடு – குளிரிந்த மழை

விடை:

  1. விசும்பு – வானம்
  2. ஊழி – யுகம்
  3. ஊழ் – முறை
  4. தண்பெயல் – குளிர்ந்த மழை
  5. பீடு – சிறப்பு

4) “செந்தீ” என்பது —— தொகை ஆகும்.
விடை: பண்புத்தொகை
5) “வளர்வானம்” என்பது —— தொகை ஆகும்.
விடை: வினைத்தொகை
6) ஊழ்ஊழ் என்பது —– தொடர் ஆகும்.
விடை: அடுக்குத்தொடர்
7) இதில் தவறான தொடரைத் தேர்வு செய்க
அ) பரிடாலை “ஓங்கு பரிபாடல்” என்றும் கூறுவர்.
ஆ) பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று பரிபாடல் ஆகும்.
இ) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல் ஆகும்.
ஈ) பரிபாடலில் 24 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
விடை:

விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

1) “மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக் கூர்மை” – என்ற வாசகத்திற்கு சொந்தக்காரர் யார்?
விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
2) ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் யாவை?

  • அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
  • உல்ஃப் விருது
  • காப்ளி பதக்கம்
  • அடிப்படை இயற்பியல் பரிசு

3) கலீலியோ நினைவு நாளில் பிறந்து ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்த விஞ்ஞானி யார்?
விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
4) ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?
விடை: 40 மொழிகளில்
5) “தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்” – என்று கூறியவர் யார்?
விடை: ஸ்டீபன் ஹாக்கிங்

மேலும் படிக்க  ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடம் – 1

இலக்கணம் – பொது

1) இருதிணை என்பவை யாவை?

  • உயர்திணை
  • அஃறிணை

2) ஐம்பால் என்பவை யாவை?

  • ஆண்பால்
  • பெண்பால்
  • பலர்பால்
  • ஒன்றன்பால்
  • பலவின்பால்

3) வழு எத்தனை வகைப்படும்?
விடை: 7
4) வழாநிலை எத்தனை வகைப்படும்?
விடை: 7
5) இலக்கண பிழையுடன் பேசுவது எழுதுவதும் ——- ஆகும்.
அ) வழு ஆ) வழாநிலை இ) வழுவமைதி ஈ) உயர்திணை
விடை: அ) வழு

வழு வழாநிலை வழுவமைதி


6) இலக்கண பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் —— ஆகும்.
அ) வழு ஆ) வழாநிலை இ) வழுவமைதி ஈ) உயர்திணை
விடை: ஆ) வழாநிலை
7) “செழியன் வந்தது” என்பது ——- வழு ஆகும்.
அ) திணை வழு ஆ) பால்வழு இ) இடவழு ஈ) கால வழு
விடை: அ) திணைவழு
8) “நீ வந்தேன்” என்பது —— வழு.
அ) திணை வழு ஆ) பால்வழு இ) இடவழு ஈ) காலவழு
விடை: இ) இடவழு
9) “நேற்று வருவான்” என்பது —— வழு.
அ) திணை வழு ஆ) பால்வழு இ) இடவழு ஈ) கால வழு
விடை: ஈ) கால வழு
10) “ஒரு விரலைக் காட்டி சிறியதோ? பெரியதோ?” – என்று கேட்டல் —– வழு ஆகும்.
அ) வினா வழு ஆ) பால்வழு இ) இடவழு ஈ) கால வழு
விடை: அ) வினாவழு
11) “தென்னந்தோட்டம்” என்று கூறுதல் —– வழு ஆகும்.
அ) திணை வழு ஆ) மரபுவழு இ) இடவழு ஈ) கால வழு
விடை: ஆ) மரபுவழு
12) “கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல் —— வழு ஆகும்.
அ) விடைவழு ஆ) பால்வழு இ) இடவழு ஈ) காலவழு
விடை: அ) விடைவழு
13) இலக்கண முறையின்றி இருந்தும் ஏதேனும் ஒரு காரணம் கருதி இலக்கண ஆசிரியர்களால் பிழையன்று ஏற்றுக்கொள்ளப்படுவது —– ஆகும்.
விடை: வழுவமைதி
14) “என் அம்மை வந்தாள்” என்பது —— வழுவமைதி.
அ) திணை வழுவமைதி ஆ) கால வழுவமைதி இ) பால் வழுவமைதி ஈ) இடவழுவமைதி
விடை: அ) திணை வழுவமைதி
15) “முதலமைச்சர் நாளை வருவார்” என்பது ——– வழுவமைதி
அ) திணை வழுவமைதி ஆ) கால வழுவமைதி இ) பால் வழுவமைதி ஈ) இடவழுவமைதி
விடை: ஆ) கால வழுவமைதி
16) “கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் பாடவேணும்” – என்பது ——- வழுவமைதி.
அ) மரபு வழுவமைதி ஆ) கால வழுவமைதி இ) பால் வழுவமைதி ஈ) இடவழுவமைதி
விடை: அ) மரபு வழுவமைதி

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம்-3

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
விடை: ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
2) தலைப்புக்கும் குறிப்புகளுக்கும்பொருத்தமான விடையை த் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ண றிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடை: அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
3) பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டை யும் ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
விடை: ஆ) வானத்தையும் புகழையும்
4) குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா ‘ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி ஆ) இடவழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி, இடவழுவமைதி
விடை: இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
5) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென் பொருள் எது?
அ) துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா
விடை: ஈ) இலா

பத்தாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 3

1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 1”

Comments are closed.