You have been blocked from seeing ads.

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் பாடம் – 1

அன்னை மொழியே

1) சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

  சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் – என்று கூறியவர் யார்?

     விடை: க.சச்சிதானந்தன்

2) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

     விடை: துரை மாணிக்கம்

3) தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் யார்?

     விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

You have been blocked from seeing ads.

4) பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை?

 • உலகியல் நூறு
 • பாவவியக்கொத்து
 • நூறாசிரியம்
 • கனிச்சாறு
 • எண்சுவை எண்பது
 • மகுபுகுவஞ்சி
 • பள்ளிப்பறவைகள்

5) தவறான தொடரை தேர்வு செய்க

அ) பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது.

ஆ)  பெருஞ்சித்திரனாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

இ) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம்.

ஈ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் எட்டயபுரத்தில் பிறந்தார்ர்.

     விடை:

தமிழ்ச்சொல் வளம்

1) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு எது?

     விடை: மலேசியா (தமிழ்)

2) “மொழிஞாயிறு” என்று அழைக்கப்படுபவர் யார்?

     விடை: தேவநேயப் பாவணார்

3) திருச்சிக்கி அருகில் உள்ள அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவரும் பாவணார் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?

     விடை: இரா. இளங்குமரனார்

4) விழிகளை இழக்க நேரிட்டாலும் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணி திரு.வி.க போல தன் இமைகளை மூடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?

                விடை: இரா. இளங்குமரனார்

5) இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை?

 • இலக்கண வரலாறு
 • தமிழிசை இயக்கம்
 • தனித்தமிழ் இயக்கம்
 • பாவாணர் வரலாறு
 • குண்டலகேசி உரை
 • யாப்பருங்கலம் உரை
 • புறத்திரட்டு உரை
 • திருக்குறள் தமிழ் மரபுரை
 • காக்கை பாடினியார் உரை
 • தேவநேயம்

6) பொருத்துக

 1. கொழுந்தாடை – மூங்கிலின் அடி
 2. கழை – கரும்பின் அடி
 3. கழி – நெல்,தினை முதலியவற்றின் கதிர்
 4. குரல் – கரும்பின் நுனிப்பகுதி

     விடை:

 1. கொழுந்தாடை – கரும்பின் நுனிப்பகுதி
 2. கழை – மூங்கிலின் அடி
 3. கழி – கரும்பின் அடி
 4. குரல் – நெல், தினை முதலியவற்றின் கதிர்

இரட்டுற மொழிதல்

1) சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்?

     விடை: தமிழழகனார்

2) தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

     விடை: சண்முகசுந்தரம்

3) மெத்த வணிகலன் என்ற சொல்லின் பொருள் யாது?

     விடை: ஐம்பெரும் காப்பியங்கள்

உரைநடையின் அணிநலன்கள்

1) முதல் தமிழ்க்கணினியின் பெயர் என்ன?

மேலும் படிக்க  ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 2

     விடை: திருவள்ளுவர் (1983)

2) “களம்புகத் துடித்து நின்ற உனக்கு,

வெற்றிச்சாறு கிடைத் துவிட்டது, உண்டு

மகிழ்ந்தாய் ; உன் புன்னகை தான் அதற்குச்

சான்று – என்று கூறியவர் யார்?

     விடை: அறிஞர் அண்ணா

3) எழில் முதல்வன் எழுதிய எந்த நூல் சாகிக்திய அகாதெமி விருதைப் பெற்றது?

      விடை: புதிய உரைநடை

4) எழில் முதல்வன் எழுதிய நூல்கள் யாவை?

 • எங்கெங்கு காணினும்
 • யாதுமாகி நின்றாய்
 • இனிக்கும் நினைவுகள்
 • புதிய உரைநடை

5) அவர் (பெ ரியார் .வெ .ரா) பேசாதநாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை

உண்டா? எதைக் கண்டு அவர் திகை த்தா ர்?

எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப்

பெறாதது?… எனவே தான், பெரியாருடைய

பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின்

வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம்ஒரு

காலகட்டம்ஒரு திருப்பம்என்று

கூறுகிறேன்.” – என்று பெரியாரைப் உணர்ச்சி பொங்க பாராட்டியவர் யார்?

     விடை: அறிஞர் அண்ணா

எழுத்து, சொல்

1) சார்பெழுத்து —— வகைப்படும்.

     விடை: 10

2) மொழிக்கு முதல்,இடை,கடையில் உயிர் நெட்டெழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது———

     விடை: உயிரளபெடை

3) செய்யுளிசை அளபெடையை ——– அளபெடை என்றும் அழைக்கலாம்.

     விடை: இசைநிறை

4) “ஓஒதல் வேண்டும்” – இதில் ——– அளபெடை வந்துள்ளது.

     விடை: செய்யுளிசை அளபெடை

5) “உரனசை உள்ளம்” – இதில் ——– அளபெடை வந்துள்ளது.

விடை: சொல்லிசை அளபெடை

6) “கெடுப்பதூஉம் கெட்டார்க்கு” – இதில் ——- அளபெடை வந்துள்ளது.

     விடை: இன்னிசை அளபெடை

7) “எங்ங்கிறைவன்” – இதில் ——- அளபெடை வந்துள்ளது?

     விடை: ஒற்றளபெடை

8) செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி ஒலிப்பது —— ஆகும்

     விடை: இன்னிசை அளபெடை

9) வேங்கை, எட்டு என்பது ——- மொழி ஆகும்.

     விடை: பொதுமொழி

10) நடவாமை, கொல்லாமை என்பது —— தொழிற்பெயர்.

     விடை: எதிர்மறைத் தொழிற்பெயர்

11) தட்டு, உரை, அடி என்பவைகள் எல்லாம் —– தொழிற்பெயர்.

     விடை: முதனிலைத் தொழிற்பெயர்

12) கேடு, சூடு என்பது ——- தொழிற்பெயர்.

மேலும் படிக்க  ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் - பாடம் 1

     விடை: முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெ ரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

     விடை: அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

2) ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்‘ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோ டிட்ட பகுதி குறிப்பிடுவது –

அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்

இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்

     விடை: ஈ) சருகும் சண்டும்

3) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் –

அ) எந் + தமிழ் + நா_ஆ) எந்த + தமிழ் + நா

இ) எம் + தமிழ் + நா_ஈ) எந்தம் + தமிழ் + நா

     விடை: இ) எம் + தமிழ் + நா

4) ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே –

அ) பாடிய; கேட்டவர் ஆ) பாடல்; பாடிய

இ) கேட்டவர்; பாடிய ஈ) பாடல்; கேட்டவர்

     விடை: ஈ) பாடல்; கேட்டவர்

5) வேர்க்கடலை, மிளகாய் விதை , மாங்கொட்டை ஆகியவற்றை க் குறிக்கும் பயிர்வகை –

அ) குலை வகை__ஆ) மணி வகை

இ) கொழுந்து வகை_ஈ) இலை வகை

விடை: ஆ) மணிவகை

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 3
You have been blocked from seeing ads.

1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் பாடம் – 1”

Comments are closed.