விருந்து போற்றுதும்
1) “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – என்று விருந்தின் முகமலர்சியைப் பற்றி எந்த நூல் குறிப்பிடுகிறது?
விடை: கலிங்கத்துப்பரணி
2) “அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்” – என்று எந்த நூல் குறிப்பிடுகிறது?
விடை: நற்றினை
3) ”காலின் ஏழடிப் பின் சென்று” – என்று எந்த நூல் விருந்தினரின் வழியனுப்பனுதலைப் பற்றி கூறுகிறது?
விடை: பொருநராற்றுப்படை
4) “குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலன்” – என்று எந்த நூல் விருந்து வைப்பதற்காக வாளை விற்றப்பற்றிக் கூறுகிறது?
விடை: புறநானூறு
காசிக்காண்டம்
1) காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் எது?
விடை: காசிக்காண்டம்
2) அதிவீரராம பாண்டியன் எழுதிய நூல்கள் யாவை?
- காசிக்காண்டம்
- நறுந்தொகை
- நைடதம்
- லிங்கபுராணம்
- வாயு சம்கிதை
- திருக்கருவை அந்தாதி
- கூர்ம புராணம்
3) வெற்றி வேற்கை என்று எந்த நூல் அழைக்கப்படுகிறது?
விடை: நறுந்தொகை
4) நன்மொழி என்பது ——– தொகை ஆகும்.
விடை: பண்புத்தொகை
5) சீவலமாறன் என்ற பட்டப்பெயர் கொண்ட அரசர் யார்?
விடை: அதிவீரராம பாண்டியர்
6) அதிவீரராம பாண்டியர் எந்த நாட்டு அரசர்?
விடை: கொற்கை
மலைபடுகடாம்
1) மலைபடுகடாம் ——– நூல்களுல் ஒன்று.
விடை: பத்துப்பாட்டு
2) கூத்தாற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: மலைபடுகடாம்
3) தவறான தொடரை தேர்வு செய்க
அ) பரிசு பெற்ற கூத்தர் மற்ற கூத்தர்களுக்கு பரிசு பெற்ற வள்ளலைப் பற்றி கூறி பரிசு பெறும்படி கூறுவது ஆற்றுப்படை.
ஆ) மலைபடுகடாம் 583 அடிகளைக் கொண்டது.
இ) நன்னன் என்னும் குறுநில மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடியது மலைபடுகடாம்.
ஈ) மலைபடுகடாத்தை இயற்றியது திருநாவுக்கரசர்.
விடை: ஈ
4) மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
5) அசைஇ, கெழீஇ என்பவை ———- அளபெடைகள்.
விடை: சொல்லிசை
கோபல்புரத்து மக்கள்
1) கோபல்புரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர் யார்?
விடை: கி.ராஜநாராயணன்
2) 1991 ஆம் ஆண்டு கோபல்புரத்து மக்கள் என்னும் கதை எந்த விருதைப் பெற்றது?
விடை: சாகித்திய அகாதெமி விருது
3) கி.ராஜநாராயணனின் வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் ——— இலக்கியல் என்று அழைக்கப்படுகிறது.
விடை: கரிசல் இலக்கியம்
தொகாநிலைத் தொடர்கள்
1) தொகாநிலைத் தொடர்கள் ——— வகைப்படும்
விடை: 9
2)” காவிரி பாய்ந்தது” என்பது ——- தொடர் ஆகும்.
அ) எழுவாய்த்தொடர் ஆ) விளித்தொடர் இ) வேற்றுமைத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
விடை: அ) எழுவாய்த்தொடர்
3) “கேட்ட பாடல்” என்பது ——– தொடர் ஆகும்.
அ) எழுவாய்த்தொடர் ஆ) விளித்தொடர் இ) வேற்றுமைத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
விடை: ஈ) பெயரெச்சத்தொடர்
4) முற்றுப்பெறாத வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது —— ஆகும்.
அ) எழுவாய்த்தொடர் ஆ) விளித்தொடர் இ) வேற்றுமைத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
விடை: ஈ) பெயரெச்சத்தொடர்
5) முற்றுப்பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது —– ஆகும்.
அ) எழுவாய்த்தொடர் ஆ) பெயரெச்சத்தொடர் இ) வேற்றுமைத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
விடை: ஆ) பெயரெச்சத்தொடர்
6) “கட்டுரையைப் படித்தான்” என்பது ——– தொடர் ஆகும்.
அ) எழுவாய்த்தொடர் ஆ) விளித்தொடர் இ) வேற்றுமைத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
விடை: இ) வேற்றுமைத்தொடர்
சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) பின்வருவனவற்றுள் முறையான தொடர் –
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பா ட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
விடை: இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
2). “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்ப து-
அ) புத்தூர் ஆ) மூதூர் இ) பேரூர் ஈ) சிற்றூர்
விடை: ஈ) சிற்றூர்
3) அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொ டர்களில் பொருளை வே றுபடுத்தக் காரணமாக அமைவது –
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
விடை: அ) வேற்றுமை உருபு
4) காசிக்காண்டம் என்ப து –
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தை க் குறிக்கும் மறுபெய ர்
இ) காசி நகரத்தின் பெருமையை ப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்ப டுத்தும் நூல்
விடை: இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
5) ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
விடை: ஆ) இன்மையிலும் விருந்து
திருக்குறள்
1) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு – இந்தக் குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
விடை: உவமை அணி
2) பண்என்னாம் பாடற் கியையின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இதில் பயின்று வந்துள்ள அணி யாது?
விடை: எடுத்துக்காட்டு உவமை அணி
3) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இந்தக் குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யாது?
விடை: உவமை அணி
பத்தாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 2
1 thought on “பத்தாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 3”
Comments are closed.