ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம்-3

சிற்பக்கலை

1) தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை எந்த ஊரில் நடத்தி வருகிறது?
விடை: மாமல்லபுரம்
2) மாளிகையில் உள்ள பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை இருந்ததை ——— காப்பியம் மூலம் அறிய முடிகிறது.
விடை: மணிமேகலை
3) மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை எல்லாம் ——– காலச் சிற்பக்கலைகள் ஆகும்.
விடை: பல்லவர்
4) சிற்பங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
விடை: இரண்டு ( முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள்)
5) திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோயில்களின் சிற்பங்கள் ——— காலச் சிற்பக்கலைகளுக்குச் சான்றாகும்.
விடை: பாண்டியர்
6) செப்புத்திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுவது யாருடைய ஆட்சிக்காலம்?
விடை: சோழர்காலம்
7) சிற்பக்கலைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசு ——– என்ற நூலை வெளியிட்டுள்ளது.
விடை: சிற்பச்செந்தூல்
8) எந்த இடத்தில் உள்ள சிற்பங்களில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன?
விடை: திருநாதர்குன்று
9) நாயக்கர் காலச் சிற்பங்களுக்கு சான்றாக விளங்குபவை எவை?

 • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
 • இராமேசுவரம் பெருங்கோவில்
 • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
 • கிருஷ்ணபுரம் பெருமாள் கோவில்

10) சோழர்காலச் சிற்பக்கலைகளுக்கு சான்றாக விளங்குபவை எவை?

 • தஞ்சை பெரிய கோவில்
 • தாராசுரம் ஐராவதிசுவரர் கோவில்
 • திரிபுவன வீரேசுவரம் கோவில்
 • நார்தாமலையில் நடன முத்திரைகளுடன் சிற்பங்கள்
 • கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சிற்பங்கள்
 • சீனிவாசநல்லூரில் உள்ள குரங்கநாதர் கோவில் சிற்பங்கள்

11) யாருடைய ஆட்சிக்காலத்தில் குதிரையின் உருவங்கள் சிற்பங்களில் பொறிக்கப்பட்டன?
விடை: விஜயநகர மன்னன்

இராவண காவியம்

1) இராவண காவியத்தை இயற்றியவர் யார்?
விடை: புலவர் குழந்தை
2) இராவண காவியம் எத்தனைக் காண்டங்களைக் கொண்டது?
விடை: 5

   • தமிழகக் காண்டம்
   • இலங்கைக் காண்டம்
   • விந்தகக் காண்டம்
   • பழிபுரி காண்டம்
   • போர்க்காண்டம்

3) தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில்
திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?
விடை: புலவர் குழந்தை
4) யாப்பதிகாரம், தொடையதிகாரம் இலக்கண நூல்களை எழுதியவர் யார்?
விடை: புலவர் குழந்தை
5) இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று கூறியவர் யார்?
விடை: பேரறிஞர் அண்ணா
6) அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங் கிளி
பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் – என்ற பாடல் வரிகளில் முருகியம் என்பது எதைக் குறிக்கிறது?
விடை: குறிஞ்சிப்பறை
7) மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும் – இதில் மல்லல் என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை: வளம்
8) வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர் – இதில் துவரை என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
விடை: பவளம்
9) மரை என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை: தாமரை மலர்
10) கோவை, கோர்வை என்பதன் வேர்ச்சொல் என்ன?
விடை: கோ
11) எருத்துக்கோடு என்ற சொல் ——— தொகை ஆகும்.
விடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
12) கரைபொரு என்பது ——- வேற்றுமைத்தொகை ஆகும்.
விடை: இரண்டாம் வேற்றுமைத் தொகை
13) வருமலை என்பது ——– தொகை ஆகும்.
விடை: வினைத்தொகை
14) மலர்க்கண்ணி என்பது ——- தொகை ஆகும்.
விடை: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
15) பொருத்து

 1. இன்னிளங்குருளை – வினைத்தொகை
 2. அதிர்குரல் – பெயரெச்சம்
 3. மன்னிய – உவமைத்தொகை
 4. மரைமுகம் – பண்புத்தொகை
மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் -2

விடை:

 • இன்னிளங்குருளை – பண்புத்தொகை
 • அதிர்குரல் –வினைத்தொகை
 • மன்னிய – பெயரெச்சம்
 • மரைமுகம் – உவமைத்தொகை

16) கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார்
படிக்குற எருத்துக்கோடு அன்ன பாலை க்காய் – இதில் கோடு என்பது எதைக் குறிக்கிறது?
விடை: கொம்பு
17) மைவனம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
விடை: மலை நெல்
18) பொருத்துக

 1. சிறை – காடு
 2. கடறு – தானியக்குவியல்
 3. பொலி – வயல்
 4. செறு – இறகு

விடை:

 1. சிறை – இறகு
 2. கடறு – காடு
 3. பொலி – தானியக்குவியல்
 4. செறு – வயல்

நாச்சியார் திருமொழி

1) திருப்பாவை, நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார்?
விடை: ஆண்டாள்
2) முத்துடைத்தாமம் என்பது ——– தொகை ஆகும்.
விடை: இரண்டாம் வேற்றுமைத்தொகை
3) சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: ஆண்டாள்
4) ஆழ்வார்கள் பாடிய தொகுப்பு ——— ஆகும்.
விடை: நாலாயிர திவ்விய பிரபந்தம்
5) ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
விடை: 12
6) பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?
விடை: ஆண்டாள்
7) நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
விடை: 143
8) தாமம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
விடை: மாலை

செய்தி

1) தி. ஜானகிராமன் தனது ஜப்பான் அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் ———- வார இதழலில் எழுதினார்.
விடை: சுதேசமித்திரன்தி. ஜானகிராமன்

2) ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை ——— என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார் ஜானகிராமன்.
விடை: கருங்கடலும் கலைக்கடலும்
3) ஜானகி ராமன் காவிரிக்கரை வழியான பயணத்தை ———- நூலில் குறிப்பிட்டுள்ளார்.
விடை: நடந்தாய் வாழி காவேரி
4) அடுத்த வீடு ஐம்பது மைல் என்ற பயணக்கட்டுரையை எழுதியவர் யார்?
விடை: தி. ஜானகி ராமன்
5) உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிப்பரப்பு அமைப்பாளராகவும் இருந்து தஞ்சை மண்வாசனையுடன் கதைகளை எழுதுபவர் யார்?
விடை: தி. ஜானகி ராமன்
6) செய்தி என்னும் சிறுகதை எந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை: சிவப்பு ரிக்ஷா
7) தி. ஜானகிராமனின் கதைகள் எந்த எந்த இதழ்களில் வெளிவந்தன?
விடை:

 • மணிக்கொடி
 • சுதேசமித்திரன்
 • கிராம ஊழியன்
 • கணையாழி
 • கலைமகள்
 • ஆனந்த விகடன்
 • கல்கி

8) ‘அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வெடிப்பதும் அவரவர் முறை” என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்த எழுத்தாளர் யார்?
விடை: தி. ஜானகிராமன்
9) தஞ்சையில் பிறந்த தமிழ் எழுத்தாளர்கள் யார் யார்?

 • உ.வே.சாமிநாதர்,
 • மௌனி,
 • தி.ஜானகிராமன்
 • தஞ்சை பிரகாஷ்
 • தஞ்சை ராமையா தாஸ்
 • தஞ்சாவூர்க் கவிராயர்

10) நாகசுரம் எந்த மரத்தினால் செய்யப்படுகிறது?
விடை: ஆச்சா மரம்
11) நாகசுரத்தின் மேல்பகுதியில் ——– கருவி பொருத்தப்பட்டுள்ளது.
விடை: சீவாளி
12) சீவாளி எந்த புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது?
விடை: நாணல்
13) நாகசுரம் ——— ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.
விடை: 600
14) சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதைகள் யாவை?

 • அன்பளிப்பு – கு.அழகிரிசாமி
 • சக்தி வைத்தியம் – தி. ஜானகிராமன்
 • முதலிலில் இரவு வரும் – ஆதவன்
 • அப்பாவின் சிநேகிதர் – அசோகமித்திரன்
 • மின்சாரப்பூ – மேலாண்மை பொன்னுசாமி
 • சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
 • ஒரு சிறு இசை – வண்ணதாசன்
மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் பாடம் – 1

புணர்ச்சி

1) இரு மொழிகளுக்கு இடையே நிகழ்வது ——– ஆகும்.
விடை: புணர்ச்சி
2) எழுத்து வகையால் சொற்கள் ——- வகைப்படும்.
விடை: நான்கு
3) புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது ——- எனப்படும்.
விடை: விகாரப் புணர்ச்சி
4) புறநானூறு என்பது —— விகாரம்.
விடை: கெடுதல் விகாரம்
5) பற்பசை என்பது ——- விகாரம்.
விடை: திரிதல் விகாரம்
6) நுழைவுத்தேர்வு என்பது ——- விகாரம் ஆகும்.
விடை: தோன்றல் விகாரம்
7) நாடியாது என்பது —— ஆகும்.
விடை: குற்றியலுகரம்
8) தே + ஆரம் என்பது ——- ஆகும்.
விடை: உடம்படுமெய்

திருக்குறள்

1) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண் – இதில் என்ன அணி பயின்று வந்துள்ளது?
விடை: ஏகதேச உருவக அணி
2) ஊழி பெய ரினும் தாம்பெய ரார் சான்றாண ்மைக் (கு)
ஆழி எனப்ப டு வார்இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: ஏகதேச உருவக அணி
3) உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொ றுத்து – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: ஏகதேச உருவக அணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

 1. பல்லவ ர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ___________

அ) மாமல்லபுரம் ஆ) பிள்ளை யார்ப ட்டி இ) திரிபுவனவீரே சுவர ம் ஈ) தா டிக்கொம்பு
விடை: அ) மாமல்லபுரம்

 1. ’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி _______

அ) குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
விடை: ) முல்லை

 1. மரவே ர் என்ப து ________ புணர்ச்சி

அ) இயல்பு ஆ) திரி தல்_ இ) தோன்றல் ஈ) கெடுதல்
விடை: ஈ) கெடுதல்

 1. ’அதிரப் புகுதக் கனாக் கண்டே ன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தா ர்?

அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
ஆ)தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டா ளின் கனவில் தோழி புகுந்தாள்
ஈ) ஆண்டா ளின் கனவில் கண்ணன் புகுந்தா ன்
விடை: ) ஆண்டா ளின் கனவில் கண்ணன் புகுந்தான்
5) திருநாதர்குன்றில் ஒரு பாறை யில் புடைப்புச் சிற்ப ங்களாக உள்ளவை ________
அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள் இ) தெய்வ உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
விடை: ) தீர்த்தங்கரர் உருவங்கள்

 ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் -2

1 thought on “ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம்-3”

Comments are closed.