You have been blocked from seeing ads.

சித்தன்னவாசலில் நடந்த காதல் கதை

சித்தன்னவாசலில் நடந்த காதல் கதை…

அன்னவாசல்:

குருபரமனாரடிகள் 30 க்கும் மேற்பட்ட சமணத்துறவிகளை தம்முடன் அழைத்துக் கொண்டு அன்னவாசலை அடைகிறார்.

அதன் மலைப்பகுதியில் குருபரமானாரைப் பின் தொடர்ந்து அவரின் சீடர்கள் ஏறத்தொடங்கின.

அன்னவாசலின் மலைப்பகுதியில் மிகுந்த மரங்களும், கனிகளும், பச்சை தளிர்களும் சுனைகளும் காணப்பட்டன.

சீடர்கள் மரத்தில் இருந்த பழங்களை பறித்து வந்து உண்டனர். அன்னவாசலின் மலைப்பகுதியில் ஒரு குளமாய் விரிந்து சன்னல் வைத்த அறைபோல் காணப்பட்டதைக் கண்டு அதை இயற்கையின் குடையாகவே கருதினர்.

அந்த இடத்திலேயே உணவு சமைக்க  ஏற்பாடு செய்தனர்.

அரசரின் வருகை:

அப்போது மலையின் அடிவாரத்தில் ஒரு தேர் வரும் சத்தம் கேட்டு சமணத்துறவிகள் கீழே  எட்டிப் பார்த்தனர், வல்லவப் பாண்டியனும், அரசி முத்துடைச் செல்வி, அமைச்சர் மற்றும் சில வீரர்கள் தேரில் இருந்து இறங்கினார்கள்.

அவர்களைக் காண குருபரமனாரும் அவரின் சமணத் துறவிகளும் மலையில் இருந்து இறங்கி கீழே வந்தனர்.

குருபரமனாரின் திருவடிகளில் விழுந்து மன்னரும் அரசியும் வணங்கினர்.

இவர்கள் அன்னவாசல் முழுவதும் அழகானா ஓவியங்கள் தீட்டவிருக்கும் பணிகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த மலையைச் சுற்றி வளர்ந்துள்ள வண்ணம் பொருந்திய மூலிகைதான் இம்மலையின் சிறப்பு, இந்த மூலிகையின் இரசத்தால் வரையப்படும் ஓவியங்கள் காலகாலத்துக்கும் அழியாது புகழ்பாடும் என்றார் குரு.

அதற்கு அரசரோ, இந்த மூலிகை ஓவியத்திற்கு உரியது என்று எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்றார்.

பூம்புகார் செல்லும் பாதையில், துறவிக் குழுவோடு வந்த ஒரு இளம் துறவியே இந்த அற்புதத்தைக் கண்டான் என்றார் குரு.

யார் அந்த துறவி? என்றார் அரசர். அதற்கு குரு, சாகித்யன் என்றார். அவர்கள் முன் சாகித்யன் இளம் புயலாய் வந்து நின்றார். அவனின் கண்களைப் பார்த்து நம்பிக்கை கொண்டார் மன்னர் வல்லபாண்டியன்.

சாகித்யன் மலையின் மேலுள்ள அருவியில் நீராடி விட்டு, ஒரு பிரம்புக் கூடையுடன் மூலிகைகளை பறிக்கச் சென்றான்.

அவனை குரு வண்ண மூலுகைகளை பதம் பார்த்து தம்பிடம் சேர்க்கும் படி அதிகாலையிலே உத்தரவு போட்டிருந்தார்.

அவன் ஒவ்வொரு இலையையும் பறித்து நுகர்ந்து, உள்ளங்கையில் சாறு பிழிந்து அதன் நிறத்தைக் கண்டு பிடித்துக் கொண்டிருந்தான், அப்போது ஒரு மலைப்பாம்பு போன்ற உருவம் செடியினுள் புகுவதைக் கண்டான், மறுபடியும் தன் முழுக்கண்ணால் காணும் போது வளையல் அணிந்து இருப்பதைக் கண்டான் அந்த உருவம்.

துறவி மலைநாகம் நாகக்கன்னியாக உருமாறி இருக்கிறதா என்று அஞ்சினான், யார் என்று கேட்டான். எதிரே இருந்த அந்த நங்கையும் யார் என்று அதே நேரத்தில் கேட்டாள்.

அதற்கு சாகித்யனோ நான் குருபரமானரின் சீடன் மூலிகை பறிப்பதற்காக இங்கு வந்தேன் என்றான்.

மதுரதேவி:

அதற்குள் அவள் நான் மதுரதேவி, பாண்டிய நாட்டு இளவரசி என்றாள், இவனோ அந்த இடத்தை விட்டு நழுவினான். அவன் சிறிது தூரன் வந்த பின்பு “ஐயோ” என்ற சத்தம் இவன் காதில் விழுந்தது.

அங்கு இளவரசி செடியின் மேல் விழுந்து கிடந்தாள், இவன் ஓடினான் அவளருகில்.

அவள் தன் வலதுகண்ணை கைகளால் பொத்தியபடி முனங்கினால், என்னாயிற்று என்று வினவினான், அதற்கு அவளோ கண் வலிக்கிறது என்றாள். அவள் கையில் தரையை ஊன்றி எழுந்து நின்றாள்.

அதற்குள் அவளின் தோழிகள் வந்து என்ன செய்தாய் என்று துறவியிடன் கேட்டனர், அவனோ அதைப் பொருட்படுத்தாமல் , இந்த மூலிகையை தொட்ட கையால் கண்களை தொட்டீர்களா? என்றான் மதுரதேவியிடம். ஆம் என்றால் அவள்.

உடனே அவன் விரைந்து சென்று ஒரு மூலிகை இலைகளை பறித்து வந்து பணிப்பெண்ணிடம் கொடுத்து இதை கசக்கி அவர்களின் கண்களில் ஊற்று என்றான்.

மேலும் படிக்க  ஆப்ரகாம் லிங்கனின் காதல் கதை

பணிப்பெண் இளவரசியின் கண்களில் ஊற்ற முனைய, அவர்கள் நிற்கும் பொழுது சாறை ஊற்ற இயலாது, அவர்களை உங்கள் மடிமீது அணைத்து ஊற்றுங்கள் என்றான். உடனே அதில் இருந்த ஒருத்தி நீ போ நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றாள்.

அவன் சிறிது தூரம் வந்த பிறகு, அதிலிருந்த ஒருத்தியின் குரல் கேட்டது, துறவியே இதில் சாறு வரவில்லை என்றால், அவன் அந்த மூலிகையை வாங்கி கசக்கி அவள் கண்களில் அந்த சாறை ஊற்றி விட்டு விருட்டென்ன வெளியேறினான்.

குருபரமனாரின் ஆலோசனைப்படி மற்ற சீடர்களும் மூலிகைகளைப் பறிப்பதற்கு பிரம்புக் கூடையுடன் சென்று பறித்து வந்தனர்.

இளவரசி மலையின் உச்சிக்கு வந்தாள், அங்கு ஒரு சுனை இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தாள்.

அந்த சுனையைச் சுற்றி அழகிய மரங்களும் மலர்களும் பறவைகளும் இருந்தது.

அவள் அந்த சுனை நீரில் இறங்கி விளையாடினாள், பின்பு அவளுக்கு  தான் அணிந்திருந்த ஆடை தடையாக இருக்கிறது என்று எண்ணினாள்.

பின்பு சுற்றி பார்த்தாள், யாரும் இல்லை என்பதனை உணர்ந்து, நீரின் கரையோரத்தில் ஆடையை கழற்றி வைத்து விட்டு ஒரு மீன் போல் மாறி துள்ளல் போட்டாள்.

மலையின் கீழே பல்வேறு வகையான மூலிகைகள் தனித்தியாக பிரிக்கப்பட்டு இருந்தது, அதை பரிசுத்தமாக கழுவி வா என்று சாகித்தியனிடம் குருபரமனார் கூறினார்.

சாகித்யன் பிரம்புக் கூடைகளைக் தூக்கிக் கொண்டு ஒரு அருவிக்கு சென்றார், அங்கு நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.

இவ்வளவு வகையான இலைகளைக் கழுவ இந்த நீர் போதாது என்று நினைத்து மலையின் உச்சியில் உள்ள சுனைக்கு எடுத்துச் சென்றான், அங்கு நீர் பரிசுத்தமாக இருக்கும் என்று எண்ணி.

மதுர தேவியைக் காணல்:

அவன் மலையின் உச்சியை அடைந்து சுனையின் அருகே சென்று கூடைகளை சுனையில் போட்டான், திடீரென சத்தம், கழுத்தளவு நீரில் சுனையில் மூச்சடக்கி விளையாடிக் கொண்டிருந்த மதுரதேவி, இடுப்பளவு தெரியும் படி மேலே வந்து மீண்டும் உள்ளே போக முற்படும் போது துறவியைக் கண்டாள்.

அதிர்ந்து போயின, அந்த ஒரு நிமிடத்தில் இருவரும், அந்த ஆடை இல்லாத காட்சியைப் பார்த்ததும் இவனுக்கு கண்ணை மூடுவதா இல்லை ஓடுவதா என்று யோசித்தான்.

அவளுக்கும் அதே எண்ணங்கள் ஓடியது. ஒரு சில நிமிடம் சென்ற பின் அவன் பாறையின் பின்னால் சென்றான்.

இவள் நீருக்குள் சென்றாள். அவன் நீண்ட நேரம் பாறையின் பின்னால் நின்றான்.

மெல்ல இருட்ட ஆரம்பித்த பிறகு இவனுக்கு தான் சுனையில் விட்ட மூலிகை இலைகள் யாபகத்திற்கு வந்தது.

அங்கே அவன் நீரினுள் கொட்டிய மூலிகை இலைகள் சுனையின் கரையில் கூடையில் இருந்தது, இவனுக்கு மனதில், இலைகளை சுத்தம் செய்ய வந்த என் இதயம் அசுத்தம் ஆகிவிட்டதே என்று வருந்தினான்.

அவன் மலையின் மீது அமர்ந்து தியானம் செய்தான், விடியும் தருவாயில் கண்களைத் திறந்தான்.

குருபரமனார் சீடர்களை அழைத்து  மூலிகை அரைத்து சாறுகளைப் பிழிந்து பாறைகளின் மீது ஓவியங்களை தீட்டச் சொன்னார்.

ஓவியம் வரைதல்:

சமணத்துறவிகள் ஆங்காங்கே தங்களுக்கு பிடித்த பாறைகளில் தங்களுக்கு பிடித்த ஓவியங்களை வரையத் தொடங்கினர்.

மூலிகைச் சாறு எப்படி ஓவியமாகிறது என்பதைக் காண குருபரமனார் ஒவ்வொரு ஓவியமாய் கூர்ந்து கவனித்தார், குயில்,மரம், பூ போன்றவை காணப்பட்டது.

சாகியத்யன் தான் ஓவியம் தீட்டி முடிக்கப் போகும் தருவாயில் அவன் வரைந்த ஓவியத்தை அவனே உற்றுப் பார்த்தான்.

குளித்த நிலையில் நீர்த்துளிகள் ஒட்டியிருக்க ஒரு ஆடையில்லாத பெண், இது யாரது?  இளவரசி மதுரதேவியா?. ஆம் அவள் தான். இதை நான் எப்படி வரைந்தேன் என்று புரியாமல் இருந்தான்.

மேலும் படிக்க  சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை

குரு பார்வையிட்டு வருவதைப் பார்த்து, அவர் இரண்டடி வரும்போது  அவளின் தோளில் பச்சைக்கிளி வரைந்தான், தலையில்  நீண்ட கூந்தல் கொண்டை பொருத்தினான்.

குருபரமனார் அதைக் கண்டு களித்தார், சாகித்யனின் ஓவியம் தென்மதுரையையில் உள்ள ஆண்டாளாகத் காட்சி தந்தாள்.

அன்று அதிகாலைப் பொழுது சமணர்கள் சிற்றுண்டிகளை தயாரித்துக் கொண்டிருந்தனர், அப்போது வல்லவப் பாண்டியனும் ராணி முத்துடைச் செல்வி மற்றும் மதுர தேவியும் குருபரமனார் இருக்கும் இடம் சென்றனர்.

சாகித்தியனும் சில துறவிகளும் அரச இலைகளை கழுவி அதில் மலைத்தேன் கொண்டு வந்தனர்.

வாழை தட்டுக்குகளில் மலைத்தேனும் – தினைமாவுவும் பரிமாறப்பட்டு அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி எடுத்துச் சென்றனர்.

அங்கே குருவின் அருகில் கவுந்தி அடிகளார் அமர்ந்திருந்தார். அவரின் அருகில் கோவலுனும் கண்ணகியும் அமர்ந்து இருந்தனர்.

கோவலனையும் கண்ணகியையும் மதுரையில் அடைக்கலம் விட கவுந்தி அடிகளார் அழைத்துச் செல்கிறார், செல்லும் வழியில் ஓய்வுக்காக அன்னவாசல் துறவிகளை கேள்விப்பட்டு அங்கு வந்திருக்கின்றனர்.

அனைவரும் துறவிகள் தயாரித்த சிற்றூண்டிகளை அருந்தினர். அங்கு அனைவரும் பக்தியும் நாட்டின் வளமும் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இருவரை மட்டும் காணவில்லை. சாகித்யனும் மதுரதேவியும் காதலில் விழத் தொடங்கினர்.

அவன் தான் மனதில் உள்ளதை மதுர தேவியிடம் சொன்னான், அவள் வெட்கப்பட்டு ஓடி விட்டாள். ஒரு சமணத் துறவியும் சாமானிய மனிதனாக மாறிவிட்டான்.

கோவலனும் கண்ணகியும் மதுரையை நோக்கி புறப்பட்டன. துறவிகள் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

ஒரு சில குகைகள் தேர்வு செய்யப்பட்டு வண்ண வண்ண ஓவியங்கள் பறைகளின் மேற்புறமும் உட்புறமும் வரையத் தொடங்கின.  

சாகித்யனின் காதல்:

தினசரி ஓவியங்களை உற்றறிந்த குருபரமனார் சாகித்யன் வரையும் ஓவியங்களில் மட்டும் ஒரு வித உயிரோட்டம் உள்ளதாக நினைப்பார்.

தினமுன் ஓவியங்களைப் பார்க்க மதுரதேவி வருவாள் , சாகித்யன் அவளைப் பார்ப்பான், இருவரும் கண்களாலே பார்த்துக் கொள்வார்கள்.

அவள் மாலை பொழுது வரும்பொழுது அவன் காதில் நாளை இந்த ஓவியம் வரைய வேண்டும் என்று அவன் காதில் சொல்லிவிட்டு சென்று விடுவாள்.

சாகித்யன்

You have been blocked from seeing ads.

அவனும் அவ்வாறே வரைவான், அவள் மாலை வந்து பார்த்து கைதட்டி சிரிப்பாள்.

ஒருநாள் இதே போல் தன்னையும் சாகித்யனையும் சேர்த்து ஒரு ஓவியம் வரையச் சொன்னாள். காதல் காட்சி வரைதலால் இரவு நேரம் வரையத் தொடங்கினான்.

பொழுத் விடிந்தது, மதுரதேவி ஆனந்தமாய் வந்தாள், ஒரு பாறையில் ஏதோ ஒரு உருவம் ஆரம்பித்த கட்டத்தில் இருந்தது அதற்கு கீழே சமணர்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர், அந்த பாறையின் நேராக இரத்தத் திட்டுக்கள் வடிந்திருந்தன.

சாகித்யன் இரவில் மலையின் மீது தவறி விழுந்திருக்கலாம், காட்டு விலங்குகள் தூக்கிச் சென்று இருக்கலாம் என்று சில துறவிகள் சொல்வதைக் கேட்டு மயங்கி கீழே விழுந்தாள்.

குருபரமனாரும் சமணத்துறவிகளும் கண்ணீர் விட்டனர்.

ஒரு கல்லாய் அரண்மனை நோக்கி நடந்தாள். ஒரு காட்டின் குளத்தில் இருந்து சில அரசாங்க படைவீரர்கள் இரத்தம் படிந்த கரைகளை கழுவி விட்டு புறப்பட்டன.

சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை
You have been blocked from seeing ads.