ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 2

இன்பத்தமிழ்க் கல்வி

1) இன்பத்தமிழ்க் கல்வி என்ற பாடலை இயற்றியவர் யார்?

     விடை: பாரதிதாசன்

2) வெற்பு என்பதன் பொருள் யாது?

     விடை: மலை

3) பரிதி என்பதன் பொருள் யாது?

     விடை: கதிரவன்

4) எத்தனிக்கும் என்பதன் பொருள் யாது?

     விடை: முயலும்

5) கார்முகில் என்பதன் பொருள் யாது?

     விடை: மழைமேகம்

6) பாரதிதாசன் எழுதிய எந்த நூல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது?

     விடை: பிசிராந்தையார்

இன்பத்தமிழ் கல்வி

7) இன்பத்தமிழ்க் கல்வி என்னும் பாடல் எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?

     விடை: பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூலில் தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் இருந்து.

8) பாரதிதாசன் எழுதிய நூல்கள் யாவை:கள்?

 •      பாண்டயன் பரிசு
 •      அழகின் சிரிப்பு
 •      இசையமுது
 •      இருண்ட வீடு
 •      குடும்ப விளக்கு
 •      கண்ணகி புரட்சிக் காப்பியம்
 •      பிசிராந்தையார்
 •      பாரதிதாசன் கவிதைகள்

9) பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது——–

     விடை: மயில்

10) ஏடெடுத்தேன் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: ஏடு + எடுத்தேன்

11) துயின்றிருந்தார் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: துயின்று + இருந்தார்

12) என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக

     விடை: என்றுரைக்கும்

13) பொருத்துக.

 1. கழனி – கதிரவன்
 2. நிகர் – மேகம்
 3. பரிதி – சமம்
 4. முகில் – வயல்

விடை: வயல், சமம், கதிரவன், மேகம்

அழியாச் செல்வம்

1) அழியாச் செல்வம் என்னும் தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது? அதன் ஆசிரியர் யார்?

     விடை: நாலடியார், சமண முனிவர்

2) நாலடியார் ——— நூல்களுல் ஒன்று.

     விடை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்

3) நாலடியார் நூலின் வேறு பெயர்கள் யாவை?

     விடை: நாலடி நானூறு, வேளாண்வேதம்

4) திருக்குறளைப் போன்று அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக்களைக் கொண்ட நூல் எது?

     விடை: நாலடியார்

5) நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற வரிகளில் நாளு என்பது எதைக் குறிக்கிறது?

     விடை: நாளு – நாலடியார்

             இரண்டு – திருக்குறள்

     நாலடியார் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் பார்க்கப்படுகிறது.

6) விச்சை என்பதன் பொருள் யாது?

     விடை: கல்வி

7) வைப்புழி என்பதன் பொருள் யாது?  

     விடை: பொருள் சேமித்து வைக்கும் இடம்

8) கோட்படா என்பதன் பொருள் யாது?

     விடை: ஒருவரால் கொள்ளப்படாது

9) வாய்த்து ஈயில் என்பதன் பொருள் யாது?

     விடை: வாய்க்கும்படி கொடுத்தலும்

10) ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்——-

     விடை: கல்வி

11) கல்வியைப் போல் ——— செல்லாத செல்வம் வேறில்லை

     விடை: கேடில்லாத

12) வாய்த்தீயின் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: வாய்த்து + ஈயின்

13) கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

     விடை: கேடு + இல்லை

14) எவன் + ஒருவன் என்னும் சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: எவனொருவன்

வாழ்விக்கும் கல்வி

1) வாழ்விக்கும் கல்வி என்னும் தலைப்பில் உள்ள தொகுப்பு——- நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

     விடை: சிந்தனைக் களஞ்சியம்

2) திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும்  திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் யார்?

     விடை: திருக்குறளார் வீ. முனிசாமி

3) திருக்குறளார் வீ. முனிசாமி எழுதிய நூல்கள் யாவை?

 •      வள்ளுவர் உள்ளம்
 •      வள்ளுவர் காட்டிய வழி
 •      திருக்குறளில் நகைச்சுவை
 •      உலகப்பொதுமறை திருக்குறள் உரை
 •      சிந்தனைக் களஞ்சியம்

4) வீ. முனிசாமியின் எந்த நூல் அவருக்கு புகழைத் தேடித் தந்தது?

     விடை: உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

5) காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்——–

     விடை: காலம் அறிதல்

6) கல்வியில்லாத நாடு ——— வீடு

மேலும் படிக்க  எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றா பருவம் பாடம் – 3

     விடை: விளக்கியில்லாத

7) பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர்——-

     விடை: பாரதியார்

8) வள்ளுவர் கல்லாதவர்களை யாருடன் ஒப்பிட்டுச் சொல்கிறார்——-

     விடை: விலங்குடன்

9) உயர்வடைவோம் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: உயர்வு + அடைவோம்

10) இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக

     விடை: இவையெல்லாம்

பள்ளி மறுதிறப்பு

1) பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியர் யார்?

     விடை: சுப்ரபாரதிமணியன்

2) சுப்ரபாரதிமணியன் நடத்திய இதழின் பெயர் என்ன?

     விடை: கனவு

3) சுப்ரபாரதிமணியன் எ ழுதிய நூல்கள் யாவை?

 •      பின்னல்
 •      வேட்டை
 •      தண்ணீர்
 •      யுத்தம்
 •      புத்துமண்
 •      கதை சொல்லும் கலை

ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

1) ஓரெழுத்து மொழி என்றால் என்ன?

 •      ஒரு எழுத்தே தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவது ஆகும்.
 •      எ.கா: கை, பூ, ஈ

2) நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் யார்?

     பவணந்தி முனிவர்

3) பவணந்தி முனிவர் தமிழில் மொத்தம் எத்தனை ஓரெழுத்து மொழிகள் இருக்கின்றது என்று கூறினார்?

     விடை: 42

4) 42 ஓரெழுத்து மொழிகளில் எந்த இரண்டு எழுத்துகள் மட்டும் குறில் எழுத்துக்கள்?

     விடை: நொ, து

5) பகுபதம் என்றால் என்ன?

 •      சொற்களை சிறு சிறு உறுப்புகளாக பிரிக்கும் வகையில் அமைந்த சொற்கள் ஆகும்.
 •      எ.கா: வேலன் – வேல் + அன்
 •           படித்தான் – படி + த் + த் + அன்

6) பெயர் பகுபதம் என்றால் என்ன?

 •   பெயர்சொல்லால் அமைந்த பகுபதம் பெயர்பகுபதம் ஆகும்.
 • (எளிய முறையில் சொன்னால் ஒரு பெயர்ச்சொல்லை  சிறு உறுப்புகளாக பிரிக்க முடிந்தால் அதை பெயர் பகுபதம் என்கிறோம்)
 •      பெயர் பகுபதம் ஆறு வகைப்படும்.
 •      எ.கா: பொருள் – பொன்னன் ( பொன் + அன் )
 •            இடம் – நாடன் ( நாடு + அன்)
 •            காலம் – சித்திரையான் (சித்திரை + ஆன்)
 •            சினை – கண்ணன் (கண் + அன்), (மூக்கன் – மூக்கு + அன்) (சினை என்றால் உடல் உறுப்பு)
 •            பண்பு – இனியன் (இனிமை + அன்)
 •            தொழில் – உழவன் (அழவு + அன்)

7) வினைப்பகுபதம் என்றால் என்ன?

     வினைச்சொல்லைக் கொண்டு அமையும் பகுபதம் வினைப்பகுபதம்.

 •      எ.கா: உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
 •            ஆடுகின்றான் – ஆடு + கின்று + ஆன்
 •            நடக்கின்றான் – நட + க் +  கின்று + ஆன்

8) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

     விடை: 6

9) பகுபதத்தின் உறுப்புகள் யாவை

 1.      பகுதி
 2.      விகுதி
 3.      இடைநிலை
 4.      சந்தி  
 5.     சாரியை
 6.     விகாரம்

10) பகுபதத்தின் எந்த உறுப்பு கட்டளைச் சொல்லாக அமையும்?

     விடை: பகுதி ( இது சொல்லின் முதலில் மட்டும் தான் வரும் கூட கட்டளையாகவே ஒலிக்கும்)

     எ.கா: வந்தனன் – வா(வ) + த் (ந்) + அன் + அன்

           வா – பகுதி (கட்டளைச் சொல்)

           வ – விகாரம்

           த் – சந்தி

           ந் – விகாரம்

           த் – இறந்தகால இடைநிலை

           அன் – சாரியை

           அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

11) பகாப்பதம் என்றால் என்ன?

     சிறு சிறு பகுதிகளாக பிரிக்க முடியாத சொற்களை பகாப்பதம் என்பர்.

     எ.கா: மரம், கழனி, உண், எழுது

12) பகாப்பதம் எத்தன்னை வகைப்படும்?

     விடை: 4

 1.            பெயர் பகாப்பதம் –  நிலம், நீர், நெருப்பு, காற்று
 2.            வினைப் பகாப்பதம் – நட, வா, படி,  வாழ்
 3.            இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்
 4.            உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி
மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 1

13) 42 ஓரெழுத்து மொழிகள் யாவை?

  உயிரெழுத்துக்களில் ஒர் எழுத்து சொற்கள்:

    ஆ – பசு

     ஈ – கொடு

     ஊ – இறைச்சி

     ஏ – அம்பு

     ஐ – தலைவன்

     ஓ – மதகுநீர் தாங்கும் பலகை

வரிசையில்:

கா – சோலை

     கூ – பூமி

     கை – ஒழுக்கம்

     கோ – அரசன்

ச வரிசையில்:

சா – இறந்து போ

     சீ – இகழ்ச்சி

     சே – உயர்வு

     சோ – மதில்

த – வரிசையில்:

     தா – கொடு

     தீ – நெருப்பு

     தூ – தூய்மை

     தே – கடவுள்

     தை – தைத்தல்

ந வரிசையில்:

    நா – நாவு

     நீ – முன்னிலை ஒருமை

     நே – அன்பு

     நை – இழிவு

     நோ – வறுமை

ப வரிசையில்

     பா – பாடல்

     பூ – மலர்

     பே – மேகம்

     பை – இளமை

     போ – செல்

ம வரிசையில்:

    மா – மாமரம்

     மீ – வான்

     மூ – மூப்பு

     மே – அன்பு

     மை – அஞ்சனம்

     மோ – முகத்தல்

ய வரிசையில்:

     யா – அகலம்

வ வரிசையில்:

     வா – அழைத்தல்

     வீ – மலர்

     வை – புல்

     வௌ – கவர்

குறில் எழுத்துக்களில்:

நொ – நோய்

     து – உண்

 ( குறிப்பு : அனைத்து ஒரு எழுத்து சொற்களையும் படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த 42 ஓரெழுத்துகளில் இருந்து எப்படி வேண்டுமானலும் கேள்வி கேட்கலாம், நிறையா இருக்குதுனு விட்டு போய்டாதீங்க! நீங்க கேட்க மாட்டாங்கனு விட்டுட்டு போற கேள்வியைத்தான் கேப்பாங்க, எல்லாத்தையும் கவர் பண்ணுங்க)

14) நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ——–

அ) 40 ஆ) 42 இ) 44 ஈ) 46

     விடை: 42

15) எழுதினான் என்பது ———-

அ) பெயர்ப் பகுபதம் ஆ) வினைப் பகுபதம்

இ) பெயர்ப் பகாப்பதம் ஈ) வினைப் பகாப்பதம்

     விடை: வினைப் பகுபதம்

16) காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு———

     அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி

விடை: இடைநிலை

17 பொருத்துக.

 1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
 2. வினைப் பகுபதம் – மன்
 3. இடைப் பகாப்பதம் – நனி
 4. உரிப் பகாப்பதம் – பெரியார்
   1.  பெயர்ப் பகுபதம் – பெரியார்
   2. வினைப் பகுபதம் – வாழ்ந்தான்
   1. இடைப் பகாப்பதம் – மன்
   2. உரிப் பகாப்பதம் – நனி

18) பெயர்பகுபதம் எத்தனை வகைப்படும்?

     அ) நான்கு ஆ) ஐந்து இ) ஆறு ஈ) ஏழு

     விடை: ஆறு

ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடம் – 1