ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடம் – 1

கலங்கரை விளக்கம்

1) கலங்கரை விளக்கம் என்னும் தலைப்பில் உள்ள பாடலை இயற்றியவர் யார்?

     விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கலங்கரை விளக்கம்

2) கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய நூல்கள் யாவை?

 • பெரும்பாணாற்றுப்படை
 • பட்டினப்பாலை

3) பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்?

     விடை: தொண்டைமான் இளந்திரையன்

4) வள்ளலிடம் பரிசு பெற்ற புலவர் ஒருவர் தன்னைப் போன்ற புலவர் மற்றும் பாணர்களிடம் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற வழிகாட்டுவதாகப் பாடப்படும் இலக்கியத்தின் பெயர் என்ன?

     விடை: ஆற்றுப்படை

5) மதலை என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: தூண்

6) அழுவம் என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: கடல்

7) ஞெகிழி என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: தீச்சுடர்

8) சென்னி என்பதன் பொருள் யாது?

     விடை: உச்சி

9) உரவுநீர் என்பதன் பொருள் யாது?

     விடை: பெருநீர்ப் பரப்பு

10) வேயா மாடம் என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாமல் திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்.

11) பத்துப்பாட்டு நூல்கள் யாவை?****

 1. திருமுருகாற்றுப்படை
 2. பொருநராற்றுப்படை
 3. பெரும்பாணாற்றுப்படை
 4. சிறுபாணாற்றுப்படை
 5. முல்லைப்பாட்டு
 6. மதுரைக்காஞ்சி
 7. நெடுநல்வாடை
 8. குறிஞ்சிப்பாட்டு
 9. பட்டினப்பாலை
 10. மலைபடுகாடாம்.

12) உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக் கோடிட்ட சொல்லின் பொருள் யாது?

   அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலை

     விடை: கடல்

கவின்மிகு கப்பல்

1) கவின்மிகு கப்பல் என்னும் தலைப்பில் உள்ள பாடலை இயற்றியவர் யார்?

     விடை: மருதன் இளநாகனார்

2) மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்?

     விடை: மருதன் இளநாகனார்

3) அகநானூறு ——– நூல்களில் ஒன்று

     விடை: எட்டுத்தொகை

4) அகநானூறு ——– நூல்கள் என்றும் அழைப்பார்கள்.

     விடை: நெடுந்தொகை

5) இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் _____

     விடை: காற்று

6) மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

    அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்

     விடை: வங்கத்தில்

7) புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____________.

   அ) காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்

     விடை: கடல்

8) ‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது          ____________.

விடை: பெருமை + கடல்

9) இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

விடை: இன்றாகி

10) எதுகை இடம்பெறாத இணை ____________.

  அ) இரவு- இயற்கை ஆ) வங்கம் – சங்கம்

  இ) உலகு – புலவு ஈ) அசைவு – இசைவு

     விடை: அ) இரவு- இயற்கை

11) எட்டுத்தொகை நூல்கள் யாவை?

 1. நற்றிணை
 2. குறுந்தொகை
 3. ஐங்குறுநூறு
 4. பதிற்றுப்பத்து
 5. பரிபாடல்
 6. கலித்தொகை
 7. அகநானூறு
 8. புறநானூறு

12) உரு என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: அழகு

13) வங்கூழ் என்பதன் பொருள் யாது?

     விடை: காற்று

14) நீகான் என்பதன் பொருள் யாது?

     விடை: நாவாய் ஓட்டுபவன்

15) மாட ஒள்ளெறி என்பதன் பொருள் யாது?

     விடை: கலங்கரை விளக்கம்

16) எல் என்பதன் பொருள் யாது?

விடை: பகல்

தமிழரின் கப்பற்கலை

1) முந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தை பற்றி கூறிய நூல் எது?

     விடை: தொல்காப்பியம்

2) கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி——-

     விடை: சுக்கான்

3) கலம் தந்த பொற்பரிசம்

  கழித்தோணியால் கரை சேர்க்குந்து – என்று கப்பலைப் பற்றி கூறிய நூல் எது?

மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 3

     விடை: புறநானூறு

4) கப்பல் ஓட்டியின் வேறுபெயர்கள் யாவை?

 • மாலுமி
 • மீகாமன்
 • நீகான்
 • கப்பலோட்டி

5) கப்பல் கட்டும் கலைஞர்களை ——– என்றும் அழைத்தனர்.

     விடை: கம்மியர்

6) “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” – என்ற அடி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

     விடை: மணிமேகலை

7) மரத்திலான ஆணிகளை ———– என்றும் கூறுவர்.

     விடை: தொகுதி

8) ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டாம் என்று கூறியவர் யார்?

     விடை: வாக்கர்

9) கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ___________.

     விடை: நங்கூரம்

10) கலங்கரை விளக்கத்தின் விளக்கம் யாது?

     விடை: கப்பலை அழைக்கும் விளக்கு ( கலம் – கப்பல்) ( கரை – அழைத்தல்)

11) சமுக்கு என்னும் ஒரு கருவியை கப்பலில் பயன்படுத்தியதாக எந்த நூல் குறிப்பிட்டள்ளது?

     விடை: கப்பல் சாத்திரம்

12) “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

    வளி தொழில் ஆண்ட உரவோன் மருக”- என்னும் வரி எந்த நூலில் குறிப்பிட்டப்பட்டுள்ளது?

     விடை: புறநானூறு

13) கப்பலின் அடிமரம் ——– என்றும் அழைக்கப்படும்.

விடை: எரா

14) கப்பலின் குறுக்கு மரத்தை ——– .என்றும் அழைக்கப்படும்.

     விடை: பருமல்

15) இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ——– ஆகும்.

     விடை: கண்ணடை

16) தமிழர்களின் கப்பல் கட்டும் கலையை பார்த்து வியந்து பாராட்டியவர் யார்?

     விடை: கடற்பயணி மார்க்கோபோலோ (இத்தாலி)

17) பொருத்துக.

 1. எரா – திசைகாட்டும் கருவி
 2. பருமல் – அடிமரம்
 3. மீகாமன் – குறுக்கு மரம்
 4. காந்தஊசி – கப்பலைச் செலுத்துபவர்

     விடை: அடிமரம் குறுக்கு மரம், கப்பலைச் செலுத்துபவர், திசைக்காட்டும் கருவி

18) தமிழர்கள் சிறிய நீர்நி்லைகளைக் கடக்கப் பயன்படுத்தியது எவை?

     விடை: ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம், தோணி

19) தமிழர்கள் பெரிய நீர்நிலைகளில் கடக்கப் பயன்படுத்துவது யாது?

     விடை: கலம், வங்கம், நாவாய்

20) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்

    பெருங்கலி வங்கம்”- என்று கப்பலைப் பற்றி கூறியிருப்பது எந்த நூலில்?

     விடை: சேந்தன் திவாகரம்

21) உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் – என்ற வரி எந்த நூலிலி குறிப்பிடப்பட்டுள்ளது?

     விடை: அகநானூறு

22) கப்பலின் உயரம், அகலம், நீளம் ஆகியவற்றை அளக்க எந்த அளவையை பயன்படுத்தினர்?

     விடை: தச்சுமுழம் என்னும் நீட்டலளவை

ஆழ்கடலின் அடியில்

1) அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?

     விடை: ஜூல்ஸ் வெர்ன்

2) ஜூல்ஸ் வெர்ன் என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 

     விடை: பிரான்சு

3) ஜூல்ஸ் வெர்ன் எழுதிய நூல்கள் யாவை?

 • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி,
 • பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்,
 • ஆழ்கடலின் அடியில்

4) விந்தை விலங்கு என்று அழைக்கப்பட்ட அந்த் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன?

     விடை: நாட்டிலஸ்

5) நாட்டிலஸ் நீர்மூழ்கிக் கப்பலின் தலைவர் யார்?

     விடை: நெமோ

இலக்கியவகைச் சொற்கள்

1) சொல் என்பதன் வேறு பெயர்கள் யாவை?

     விடை: மொழி, பதம், கிளவி

2) இலக்கண முறைப்படி சொல்லை எத்தனை வகைகளாக வகைப்படுத்தலாம்? அவை யாவை?

     விடை: 4

 1. பெயர்ச்சொல்
 2. வினைச்சொல்
 3. இடைச்சொல்
 4. உரிச்சொல்
மேலும் படிக்க  ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 3

3) இலக்கிய முறைப்படி சொல்லை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? அவை யாவை?

     விடை: 4

 1. இயற்சொல்
 2. திரிசொல்
 3. திசைச்சொல்
 4. வடசொல்

4) இயற்சொல் என்றால் என்ன?

     எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் ஆகும்.

எ.கா: கப்பல், கடல், எழுதினான், படித்தான்

     இயற்சொல்லும் 4 வகைப்படும்.

 1. பெயர் இயற்சொல் – மண், பொன்
 2. வினை இயற்சொல் – நடந்தான், வந்தான்
 3. இடை இயற்சொல் – அவனை, அவனால்
 4. உரி இயற்சொல் – மாநகர்

5) திரிசொல் என்றால் என்ன?

     ஓரு சொல்லின் பொருளானது கற்றோர்களுக்கு மட்டும் புரிவது ஆகும்.

     எ.கா: வங்கூழ், அழுவம், சாற்றினான், உறுபயன்

     திரிசொல்லும் 4 வகைப்படும்.

 1. பெயர் திரிசொல் – அழுவம், வங்கம்
 2. வினை திரிசொல் – இயம்பினான், பயின்றான்
 3. இடை திரிசொல் – அன்ன, மான
 4. உரி திரிசொல் – கூர், கழி
 • திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்றும் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.
 • வங்கம், அம்பி, நாவாய் என்ற மூன்று வார்தைகளும் கப்பல் என்ற ஓரே வார்த்தையை குறிப்பதால் இவை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்று அழைக்கப்படுகிறது.
 • இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் என்று பல பொருள்களை தருகிறது, இதனால் இவை பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்று அழைக்கப்படுகிறது.

6) திசைச் சொல் என்றால் என்ன?

     வட மொழியைத் தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் ஆகும்.

     எ.கா: சாவி, சன்னல், பண்டிகை, இரயில்,

     முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச் சொற்கள் என்றே வழங்கினர்.

7) வடசொல் என்றால் என்ன?

 •      வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் ஆகும்.
 •      எ.கா: வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்
 •      வடசொல் இரண்டு வகைப்படும்.
 1. தற்சமம்
 2. தற்பவம்
 • கமலம், அலங்காரம் – வடமொழியில் இருப்பதை தமிழில் அப்படியே எழுதுவது தற்சமம்.
 • லக்ஷ்மி என்மதை இலக்குமி என்றும் விஷம் என்பதை விடம் என்று மாற்றி எழுதுவது தற்பவம் ஆகும்.

8) எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________.

  அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச் சொல் ஈ) வடசொல்

     விடை: இயற்சொல்

9) பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________.

  அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச் சொல் ஈ) வடசொல்

     விடை: திரிசொல்

10). வடமொழி என்று அழைக்கப்படும் மொழி___________.

   அ) மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு

     விடை: சமஸ்கிருதம்

11) பொருத்துக.

 1. இயற்சொல் – பெற்றம்
 2. திரிசொல் – இரத்தம்
 3. திசைச் சொல் – அழுவம்
 4. வடசொல் – சோறு

     விடை: சோறு, அழுவம், பெற்றம், இரத்தம்

ஏழாம் வகுப்பு முதலாம் பருவம் பாடம் – 3