சத்யவான் சாவித்திரி கதை – தமிழ் கதை

சாவித்திரியின் இளமைக்காலம்:

மத்திர தேசத்தை ஆண்ட அசுவபதி மன்னனுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை.

நாரதர் ஒருநாள் அசுவபதியிடம் சூரியபகவானை மனம் உருகி வேண்டுங்கள் உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்றார்.

அதனால் அவர் சூரிய பகவானிடம் மனம் உருகி வேண்டி ஒரு அழகான பெண் குழந்தையை வரமாக பெற்றார்.

அவளுக்கு சாவித்திரி என்று பெயர் வைக்கின்றனர்.

அவள் நேர்மையானவள் அனைவரிடமும் இரக்கமாக நடந்து கொள்பவள், சாவித்ரி எதையும் எதிர்த்து போராடும் குணம் கொண்டவள்., அவளுக்கு அடம்பிடிக்கும் குணமும் இருந்தது.

சாவித்திரியை மிகவும் செல்லமாக வளர்க்கிறார் அசுவபதி. தன் மகள் ஆசைப்பட்ட அனைத்துப் பொருளும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

சாவித்திரி அசுவபதி மன்னனிடம்  தனக்கு பிடித்த மணமகனை நானே தேர்ந்தெடுத்து கொள்கிறேன் தந்தையே என்றாள் .

அசுவபதி மன்னர் அப்படியே ஆகட்டும் மகளே உன் விருப்பமே எனது விருப்பம் என்றார், நீ யாரை திருமணம் செய்துகொள்ள ஆசை கொள்கிறாயோ அவரை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என்றார்.

தனக்கு பிடித்த மணமகனைத் தேடி அனைத்து நாடுகளுக்கும் செல்கிறாள் சாவித்திரி.

சத்தியவானின் முதல் சந்திப்பு:

அங்கு யாரையும் அவளுக்கு பிடிக்கவில்லை, அவள் ஒரு காட்டின் வழியே வரும் பொழுது  கண் தெரியாத தாய் தந்தைக்கு சேவை புரியும் அந்த இளைஞனை பார்த்ததும் அவனை திருமணம் செய்ய முடிவு செய்கிறாள்.

சாவித்ரி தன் தந்தை அசுவபதியிடம் சென்று தனக்கு பிடித்த இளைஞனை பற்றி கூறுகிறாள், அவரையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள்.

அவரும் தன் ஆட்களை அனுப்பி அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் அந்த இளைஞனைப் பற்றியும் அறிந்து வரச் செய்கிறார்.

அந்தநேரம் பார்த்து அசுவபதி மன்னனின் அரசபைக்கு நாரத முனிவர் வருகை தருகிறார்.

அவர் அந்த இளைஞன் சத்யவான் என்றும் அவரின் தந்தை சால்வ தேசத்து அரசன் துய்வத் சேனன் என்றும் அவருக்கு கண் தெரியாமல் போனபிறகு எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு அந்த குடிலில் வாழ்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியையும் கூறினார், சத்யவான் ஆயுள் மிகக் குறைவு இன்னும் ஒரு ஆண்டு காலம் மட்டும் உயிரோடு வாழ்வான், என்று.

இதைக்கேட்ட சாவித்திரி எனக்கு முன்கூட்டியே தெரியும், கண் தெரியாத அந்த தாயிடம் பேசிய பொழுது அவர்கள் கூறினார்கள் என்றாள்.

அவன் இறந்துவிடுவான் என்று தெரிந்துமா நீ அவனை மணக்க ஆசை கொள்கிறாய் என்றார் நாரதர்.

ஆம் என்னை திருமணம் செய்த பிறகு என்னோட கர்ம வினைகளால் அவரோட விதி மாறலாம் அல்லவா? என்று பதிலுரைத்தாள்.

மேலும் படிக்க  MOTIVATIONAL STORY - ஜென் துறவி

இவளின் பதிலைக் கேட்டு நாரத முனிவரே இவர்கள் இருவருக்கும் மணம் முடித்து வைக்கும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார்.

saavithri

  சாவித்திரியின் திருமண வாழ்க்கை:

அசுவபதிக்கு சத்தியவானுக்கு திருமணம் முடித்து வைக்க  விருப்பம் இல்லை என்றாலும் நாரதர் சொன்ன வார்தையாலும் தன் மகளின் விருப்பத்துக்காகவும் வேறுவழியின்றி சத்யவானுக்கே திருமணம் செய்து வைத்தார்.

சாவித்திரியும் சத்யவானும் அந்த குடிலுக்கே சென்று அவர்களின் தாய் தந்தையருக்கு சேவை புரிந்தனர்.

சாவித்திரி தன் மாமனார் மாமியாரை மிகவும் கருணையுடன் நடத்தினாள்.

சத்தியவான் தன் வாழ்வில் பொய்யே உரைக்காதவனாய் வாழ்ந்தான்.

சத்தியவானின் தாயும் தந்தையும் வெளியில் சந்தோஷமாக இருந்தாலும் உள்ளுக்குள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு ஆண்டு காலம் முடிய இன்னும் மூன்று நாட்களே இருந்தது.

சாவித்திரி தன் கணவன் தன்னை விட்டு போகக் கூடாது என்று நினைத்து ஊண், உறக்கம் இல்லாமல் மூன்று நாட்கள் வாடிக் கொண்டிருந்தாள்.

அன்று சத்யவானின் கடைசி நாள் என்று தெரிந்ததும் சாவித்திரி  தன் கணவனிடம் நானும் இன்று உங்களுடன் விறகு வெட்டும் இடத்திற்கு வருகிறேன் என்றாள்.

அதற்கு சத்யவான் அங்கு பயங்கர வெயிலாக இருக்கும் நீ வீட்டிலே இரு என்றான்

அதற்கு அவனின் பெற்றோர்கள் அவலையும் காட்டிற்கு கூட்டிக் கொண்டு போ உன்னுடன் வந்தால் ஆனந்தம் கொள்வாள் என்றனர்.

அவளுக்கு வைரமுத்துமாலை வாங்கி கொடுத்தால் தான் ஆனந்தம் கொள்வாள்.

ஒருநாள் அவளுக்கு வாங்கிக் கொடுப்பேன் என்றான்.

சரி நீங்கள் வாங்கிக் தரலாம் நானும் இன்று வருவேன் என்றாள் அவள், சரி வா என்று கூட்டிக்கொண்டு சென்றான்.

அவன் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும் பொழுதே அவன் மூர்ச்சையாகி கீழே விழுகிறான்.

சாவித்திரி ஓடிப்போய் தன் மடிமேல் தாங்கிக் கொள்கிறாள்.

அப்பொழுது அவள் கண்ணுக்கு எமதர்மனின் உருவம் தெரிகிறது.

தன் கணவன் உயிரை எடுத்துச் செல்ல எமன் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவரிடம்  என் கணவனின் உயிரை எடுப்பது நியாயமா? என்று கேட்கிறாள்.

எமனுக்கு ஒரே ஆச்சர்யம் தான் எப்படி அந்தப் பெண்ணுக்கு தெரிகிறோம் என்று.

பெண்ணே உயிரை எடுத்துக்கிட்டு போறது என்னுடைய கடமை இதில் நீ குறுக்கிடாதே என்று சொல்லி விட்டு செல்கிறார்.

ஆனால் சாவித்திரி எமனை பின் தொடர்ந்து செல்கிறாள்.

அவள் பின்னாடியே வருவதானால் எமன் நீ வேண்டுமென்றால் ஒரு வரம் கேள் உன் கணவனின் உயிரைத் தவிர மற்ற எதையும் கேள் என்றாள். சாவித்திரி நன்கு யோசிக்கிறாள், பிறகு எமனிடம் என் மாமனார் மாமியார் அரசபையில் அமர்ந்து அவர்களுக்குப் பிறகு ஆட்சி செய்யும் 100 வாரிசுகளை காணவேண்டும் அதுவும் அவர்கள் என் வயிற்றில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்கிறாள்.

மேலும் படிக்க  சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை

இதைக் கேட்டதும் எமனுக்கு என்ன செய்வதென்று புரியாமல், அவளின் அறிவுத் திறனை பாராட்டி சத்யவானின் உயிரை அவனின் உடலுக்கே கொடுத்து விட்டார்.

தன்னுடைய உண்மையான அன்பினால் தன் கணவனின் உயிரையும் காப்பாற்றி விட்டாள் சாவித்திரி.

நல்லதங்காள் கதை – உண்மை சம்பவம்

கடைசி வரை வரும்உறவு – தமிழ் கதை