You have been blocked from seeing ads.

ஜான்சி இராணி லக்ஷ்மிபாய் கதை

ஜான்சி ராணியின் பிறப்பு:

ஜான்சி இராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா.  இவரை  மனு என்றே அனைவரும் அழைத்தார்கள்.

இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் 1828 ஆண் ஆண்டு பிறந்தார்.

இவரின் நான்கு வயதிலே அவர்களின் தாய் மரணடைந்தார்..

அதனால்  குடும்ப பொறுப்பு மணிக்கர்ணிகாவின் தந்தையிடம் வந்தது.

வேலையின் காரணமாக மராத்திய மாநிலத்தில் உள்ள பித்தூருக்கு அழைத்துச் சென்றார். அங்கே தங்கி வேலை பார்த்தார்.

அங்கு மராட்டியத்தை ஆட்சி செய்யும் பாஜிராவுக்கும் மணிக்கர்ணிகாவின் தந்தைக்கும் நட்பு ஏற்ப்பட்டது.

பாஜிராவ் மனுவை சப்பிலி என்றே அழைப்பார். சப்பிலி என்றால் விளையாட்டுப்பிள்ளை என்று பொருள்.

மனு குதிரை ஏற்றம், வாள் பயிற்சி மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை கற்றால்.

பெண்கல்விக்கு முக்கியத்துவம் இல்லாத அந்தக்காலத்திலே மணிக்கர்ணிகா பாடசாலை சென்று கல்வி பயின்றாள்.

ஜான்சி இராணியின் திருமணம்:

1842 ல் மனுவிற்கு 15 வயது நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜான்சியின் மன்னனான கங்காதர ராவ் என்பருக்கு 2 வது திருமணம் செய்து வைத்தனர்.

அவர் மணிக்கர்ணிகாவிற்கு லக்ஷ்மி பாய் பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து அவர் இராணி இலட்சுமி பாய் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அவர்கள் இருவருக்கும் 9 வருடம் கழித்தே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு தாமோதரன் என்னும் பெயர் சூட்டினர். ஆனால் அந்தக் குழந்தை பிறந்த 4 மாதத்திலே இறந்து போனது.

பின்பு 1853 ஆம் ஆண்டு ஒரு குழந்தையை தந்து எடுத்து வளர்த்தனர்.

அவனின் பெயர் ஆனந்த ராவ், ஆனாலும் இவர்கள் தாமோதர ராவ் என்றே பெயர் சூட்டி அழைத்தனர்.

தந்தெடுத்த இரண்டு வருடங்களிலே  கங்காதர ராவ் உடல்நலக் குறைவால் இறந்து போனார்.

ஜான்சியின் ஆட்சி:

கங்காதர ராவ் இறப்பிற்குப் பின் ஆட்சிப் பொறுப்பை இராணி இலக்குமி பாய் ஏற்றார்.

அதற்குப் பிறகு ஜான்சி ராணி இலக்ஷ்மி பாய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

ஜான்சி ராணி

You have been blocked from seeing ads.

ஆனால் அப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் பரவி வந்த காலகட்டம் அது.

ஆங்கிலேயர்கள் தன்னுடைய சொந்த இரத்தம் இல்லாத வாரிசுக்ளுக்கு நாட்டை ஆட்சி செய்ய உரிமை கிடையாது , அது பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம் என்று கூறினர்.

முதலில் ஜான்சி ராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், உங்களுக்கு ஓய்வூதியமாக வருடம் 60000 வழங்கப்படும், எங்களிடம் நாட்டை ஒப்படையுங்கள் என்றனர் ஆங்கிலேயர்கள்.

ஜான்சி இராணி முதலில் இதற்கு ஒத்துக் கொண்டார்.

பிறகு தன்னுடைய நாட்டுக்கும் தன்னுடைய நாட்டு மக்களுக்கும் ஆபத்து வருவதை எண்ணி பல முறை மேல்முறையீடு கடிதத்தை பிரிட்சீஷ் அரசுக்கு அனுப்பி வர்த்தார்.

மேலும் படிக்க  இருப்பது ஒரு வாழ்க்கை - வானதி கதை

ஆனால் கடிதத்தை ஆங்கிலேயே அரசு நிராகரித்தது.

பிறகு ஜான்சிராணி பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போர் புரிய முன் வந்தார்.

ஆங்கிலேய அரசு ஜான்சிக்கு எதிராக ஒரு படையை திரட்டி அனுப்பினர்.

அப்பொழுது ஜான்சி இராணிக்கு உதவி புரிய வந்த அவரின் பால்ய நண்பனான தாந்தியா தோவிடம் ஆயுதத்தைப் பறித்து அதை ஜான்சிக்கு எதிராக பயன்படுத்தினார்கள்.

அந்தப்போரில்  தன் வளர்ப்பு மகனை தன் தோளில் மீது வைத்துக் கொண்டு போர் புரிந்தார்.

அப்பொழுது முழுவதுமாக ஜான்சி கோட்டையை ஆங்கிலேயர்கள் சுற்றிலும் வளைத்து கைப்பற்றினார்கள்.

இதை அறிந்த ஜான்சி இராணி தன் வளர்ப்பு மகனை பாதுகாப்பக தன் தோளில் வைத்துக்  கொண்டு தப்பித்து வந்தார்.

அப்படி தப்பித்துச் சென்று ஒரு பெரும்படையை திரட்டிக் கொண்டு குவாலியருக்கு சென்று அங்கு அவர்களின் ஆட்சியை கைப்பற்றினார்.

அதை அறிந்த ஆங்கிலேயர்கள் குவாலியருக்குச் சென்று ஜான்சியின் படைகளுடன் மோதுகின்றன.

அதில் ஆண் வேடமிட்டு ஜான்சி இராணி வீரத்துடன் போர் புரிகிறார்,.

அங்கு 5 நாள் போர் நடைபெறுகிறது , ஆனால் ஜான்சியின் சிறிய படையால் ஆங்கிலேயரின்  படையை எதிர்கொள்ள முடியவில்லை.

ஜான்சியின் இறப்பு:

அங்கில கவர்னர் ஜான்சி இராணியை கொல்ல இரகசிய திட்டம் ஒன்று தீட்டி வைத்திருந்தார்.

ஆனால் அவர் ஆண்வேடம் தரித்து போரிட்டதால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

பிறகு அவர் போரில் பலத்த காயம் அடைந்தார்.

இறந்தாலும் தன்னுடைய உடல் ஆங்கிலேயருக்கு கிடைக்க கூடாது என்று எண்ணி ஒரு இஸ்லாமியரின் மடத்திற்கு சென்றார்.

பிறகு 1858 ஆண் ஆண்டு ஜூன் 17 ஆம் நாள் ஜான்சியின் உயிர்  இம்மண்ணை விட்டுச் சென்றது.

இவர் குறுகிய நாட்கள் வாழ்ந்தாலும் தன்னுடைய வீரத்தால் அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இதனால் தான் நேதாஜி பெண்களின் இராணுவப் படைக்கு ஜான்சி இராணி என்று பெயரிட்டார்.

இவரின் நினைவாக இந்திய அரசு ஜான்சி இராணி பல்கலை கழகத்தை நிறுவியுள்ளது.

நல்லதங்காள் கதை

முகலாய சுல்தானி ரசியாவின் கதை
You have been blocked from seeing ads.

2 thoughts on “ஜான்சி இராணி லக்ஷ்மிபாய் கதை”

Comments are closed.