ஆங்கிலேயரை முதலில் எதிர்த்த பூலித்தேவன்…

இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்து வெற்றி பெற்ற முதல் மாவீரன்.

தன்னுடைய 12 வயதிலியே அரியணை ஏறியவன்.

17 ஆண்டுகளாக ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்களுக்கு எதிராக வேல் கம்புகளையும் வாளையும் கொண்டு போரிட்டு விரட்டியவர்.

அவர் தான் பூலித்தேவன் என்ற புலித்தேவன்.

இவரே அனைத்து புரட்சிக்காரர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

சிப்பாய்க் கலகம் வருவதற்கு முன்னாடியே இவர் ஆங்கிலேயரை எதிர்த்தார்.

இவரே சுத்த மாவீரன் எனலாம், ஆனாலும் வருத்தம் என்னவென்றால் இப்படிப்பட்ட மாவீரனை யாரும் அறியாமல் இருப்பது தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

1900 ஆம் ஆண்டுகளில் வந்த காந்தி, நேருவின் புகழ் உலகெங்கும் தெரிகிறது, அதற்கு முன்னால் தென்னிந்தியாவில் தன்னுடைய வீரத்தினால் முழக்கம் இட்டு நேருக்கு நேர் நின்று எதிர்த்தவரின் புகழ் மறைக்கப்பட்டு காணாமலே போய்விட்டது.

ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்த தமிழ் வீரன்.

கட்டபொம்மனுக்கு முன்னாடியே கப்பம் கட்ட மறுத்தவர் ஆனால் கட்டபொம்மனை தெரிந்த அளவு கூட யாருக்கும் தெரியவில்லை பூலித்தேவனை.

இளமைக்காலம்:

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவ்வல் என்னும் ஊரில் 1715 ஆம் ஆண்டு சித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும் மகனாகப் பிறந்தார்.

இவர் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூலிதேவன் வம்சத்தில் 10 தலைமுறையாக தோன்றியவர்.

பூலிதேவனின் இயற்பெயர் காத்தப்ப பூலிதேவன்.

இவர் சிறுவயதிலே இலஞ்சியத்தைச் சேர்ந்த சிவஞான சுப்பிரமணியன் என்பவரிடம் கல்வி பயின்றார்.

இவர் யானைப் படை, குதிரைப்படை, வாள் வீச்சு, மல்யுத்தம், அம்பு எறிதல் போன்ற வீர கலைகளில் சிறந்து விளங்கினார்.

இவரின் செய்கைகளாலும் வீரத்தாலும் வியந்த இவரது பெற்றோர்கள் இவரின் 12 ஆம் வயதிலே முடிசூட்டி அரியணையில் அமர வைத்தனர்.

1726 முதல் 1767 வரை இவர் நல்லாட்சி புரிந்து வந்தார்.

இவர் செம்ம நாட்டு மறவர் இனத்தைச் சார்ந்தவர்.

இவர் அவருடைய அக்கா மகளான கயல்கண்ணி என்ற பெண்ணை மணந்து கொண்டார்.

இவர்களுக்கு கோமதி முத்து தலவாச்சி, சித்திரபுத்திர தேவன் மற்றும் சிவஞான பாண்டியன் என்று மூன்று குழந்தைகள் இருந்தது.

இவர் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள புலிகளை வேட்டையாடி கொல்வதை வழக்கமாகக் கொண்டார்.

இதனால் இவரின் பெயர் புலித்தேவன் என்றானது.

ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவன் வரலாறு

இவர் ஆறடி உயரமும் பரந்து விரிந்த மார்பும் பவள உதடுகளை கொண்டு அழகிய தோற்றம் கொண்ட ஆண்மகனைப் போல் இருப்பாராம்.

இவரின் வீரத்தைக் கண்டு பல அரசர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள், நெற்கட்டு செவலை படையெடுக்கக் கூட பயந்தார்கள்.

இவரின் ஆட்சியில் பல கோயில்களில் சீர்சிருத்தங்களை மேற்க்கொண்டார், அதில் குறிப்பிடத்தக்கவைகள் சில, சங்கரன் கோவில், பால்வண்ணநாதர் கோவில், நெல்லைவாகையாடி அம்மன் கோவில், மதுரை சொக்கநாதர் கோவில் போன்ற பல கோவில்களில் சீர்திருத்தங்களை மேற்க்கொண்டுள்ளார்.

மேலும் இவர் பல சத்திரங்களையும் குளங்களையும் அமைத்து உள்ளார்.

ஆங்கிலேயரை எதிர்த்து படையெடுப்பு:

பூலித்தேவன் 1751 ஆம் ஆண்டு திருச்சிக்கு வந்த ராபர்ட் கிளைவ் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க  முதல் தற்கொலைப் போராளி குயிலி வரலாறு

அவர் போர்புரிய காரணம் என்னவென்றால் தென்னிந்தாவில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரும் வந்து என்னை பேட்டி காண வேண்டும் என்றதனால் தான், அவரின் அகங்கார வார்த்தையை கேட்க முடியாமல் போர்தொடுத்தார் வீரத்தமிழன் பூலித்தேவன்.

பின்னர் இரண்டு ஆற்காடு நவாப்புகளுக்கு இடையே சண்டை வந்து இருவரும் குறுநில மன்னர்களிடம் வரிவசூலிக்க முயற்ச்சி செய்தனர்.

இதனால் யாரும் வரி கொடுக்கவில்லை, இதனையடுத்து மாபூஸ்கான் என்னும் நவாப் ஆங்கிலேயரிடம் உதவியை நாடினான்.

வெள்ளையனோ இனிமேல் வரிவசூல் செய்வதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டான்.

ஆற்காடு நவாப்பும் செம்பறி ஆட்டைப் போல தலையாட்டி விட்டு வந்தான்.

அன்று தொடங்கியது வெள்ளையனின் ஆட்டம், அன்று முதல் குறுநில மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடம் வரிவசூலிக்க கிளம்பினான் வெள்ளையன்.

எல்லா குறுநில மன்னர்களும் கொடுத்தனர் ஆங்கிலேயரின் படைகளையும் ஆயுதங்களையும் கண்டு.

கப்பம் கட்ட மறுப்பு:

1755 ஆம் ஆண்டு கர்னல் கீரோன் என்பவன் மற்ற பாளையக்காரகளிடம் வசூலிப்பதைப் போல இலகுவாக வரியை வசூலிக்கலாம் என்று நினைத்து பூலித்தேவனிடம் வந்து வரியைக் கேட்டான்.

ஆனால் சிங்கம் கொதித்தெளுந்தது, என்னுடைய நிலத்தில் வரி கேட்க நீ யார்? என்னுடைய நிலப்பகுதியில் இருந்து ஒரு மணி நெல்லைக் கூட தரமாட்டேன் என்று விரட்டினான்.

அவர் அப்படி ஒரு நெல்லைக் கூட தரமாட்டேன் என்று கூறியதனால் தான் அந்த ஊரே நெற்கட்டான் செவ்வல் என்றானது.

புலித்தேவனின் செய்கையால் ஆத்திரம் அடைந்த வெள்ளையன் தன்னை முதன் முறையாக எதிர்த்தவனை வளர விடக் கூடாது என்று நினைத்து போர் தொடுத்து வந்தான் ஆனால் வந்தவன் தோல்வியையே சந்தித்தான்.

1755 ஆம் ஆண்டு களக்காட்டிலும் நெற்கட்டான் செவ்வல் பகுதியையும் முற்றுகையிட்டனர் ஆனால் அதிலும் பூலித்தேவனுக்கு வெற்றி தான்.

அந்தப் போரில் வெள்ளையர்கள் நவீன பீரங்கிக்கியளை வைத்து 10 நாட்களுக்கு மேலாக பூலித்தேவனின் கோட்டையை உடைக்க முயற்ச்சி செய்தனர்.

ஆனால் அவர்களால் ஒரு சிறிய ஓட்டையைக் கூட போட முடியவில்லை, மாறாக ஆங்கிலேயரின் படைகள் அனைத்தும் உணவும் தண்ணியும் இல்லாமல் தவித்துப் போனது, அவர்கள் கொண்டு வந்த அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்து போனது.

இதனை அறிந்த பூலித்தேவன் கோட்டையை விட்டு கிளம்பி அங்கிருந்த வெள்ளையர்களை வெட்டி வீழ்த்தினார்.

1755 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் தம்பியை தோற்கடித்து விரட்டினார்.

இவர் ஒருமுறை இவருடைய நாட்டில் இருந்து கவர்ந்தது சென்ற ஆநிரைகளை எல்லாம் எதிரி நாடு சென்று அவர்களை நேருக்கு நேர் தாக்கி ஆநிரைகளை மீட்டு வந்துள்ளார், இதனால் இவரின் வீரம் சுற்றி இருக்கும் நாடுகளுக்கு எல்லாம் பரவியது.

1756 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த போரில் பூலித்தேவனின் ஆருயின் நண்பனான மூடேமியாவை பல துண்டுகளாக வெட்டி போட்டனர், இதனைப் பார்த்து மனம் நொந்து போய் வந்தார்.

அதனால் அந்தப் போரில் திருநெல்வேலியை கைப்பற்றினான் மாபூஸ்கான்.

மேலும் படிக்க  கொடிக்காத்த குமரன் வாழ்க்கை வரலாறு

இவரின் வீரத்தைக் கண்டு பயந்த வெள்ளையன தமிழனையே அவருக்கு எதிராக நியமித்து போரிடச் செய்தனர்.

அந்த நபர் தான் யுசூபுகான் என்ற மருதநாயகம், அவன் மதத்தால் இந்து தான், பின்னர் பணத்தாசையால் தன்னுடைய மதத்தை மாற்றிக் கொண்டு நவாப்களுக்கும் வெள்ளையனுக்கும் கூலியாக வேலை பார்த்தான்.

யூசப்கானைக் கொண்டு பூலித்தேவனை அழிக்க திட்ட மிட்டனர்.

இவனை வைத்து சுதேசிப்படை ஒன்றை இயக்கி வந்தனர் வெள்ளையர்கள்.

மருதநாயகத்தின் சூழ்ச்சி:

1760 ஆம் ஆண்டு யூசப்கான் பூலித்தேவன் மீது போர்த்தொடுத்து வந்தான். ஆனால் பூலித்தேவனின் படைகள் அவனை விரட்டியடித்து.

1761 ஆம் ஆண்டு மீண்டும் பூலித்தேவனின் மீது படையெடுத்தான், இம்முறை அவன் வஞ்சகமான முறையில் படையெடுக்க முடிவு செய்திருந்தான்.

பூலித்தேவனுக்கு நெருக்கமாக நாடுகளை எல்லாம் சூழ்ச்சி முறையில் எதிராகளாக்கினான்.

இதனால் பல நாடுகளைச் சேர்ந்த மன்னர்களின் படைகளையும் ஒன்று திரட்டி யூசப்கான் நெற்கட்டான் செவ்வலை முற்றுகையிட்டனர்.

இந்தப் போரில் பல முயற்சிக்குப் பின் கோட்டையில் துளை ஏற்ப்பட்டது, பல வீரர்கள் இறந்து போயின.

இதனால் கடலடி என்னும் இடத்தில் தலைமறைவானர் பூலித்தேவன், சிறிது ஆண்டுகள் யூசப்கான் நெற்கட்டான் செவ்வலை ஆண்டான்.

ஆனால் பூலித்தேவன் மறைமுகமாகவே படைகளைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதனை அறிந்த வெள்ளையன் மீண்டும் 1766 ஆம் ஆண்டு போர் தொடுத்தான், இம்முறையும் பூலித்தேவனுக்கு வெற்றி தான்.

மீண்டும் 1767 ஆம் ஆண்டு பிளைண்ட் மற்றும் ஹார்பர் என்ற ஆங்கிலேயரின் தலைமையின் கீழ் போர்தொடுத்து வந்தனர்.

இதில் பூலித்தேவனின் படைகள் சேதமாகின, இதனால் மீண்டும் தலைமறைவானர் மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில்.

அப்பொழுது பூலித்தேவனின் குடும்ப உறுப்பினர் அனைவரையும் உயிரோடு தீயிட்டு கொளுத்தினார்கள்.

வெள்ளையர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையில் பூலித்தேவனை கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் சங்கரன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, தன்னுடைய குருவின் ஆத்த ஞானத்தால் நேரடியாக சொர்கத்திற்கு என்றார் என்று கூறப்படுகிறது.

சிலர் அவரை தீயிட்டு கொளுத்தி கொன்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

அவர் நேரடியாக மறைந்த இடம் இன்னும் சங்கரன் கோவில் இருக்கிறது.

இவர் 17 ஆண்டுகளாக ஆங்கிலேயரை எதிர்த்ததால் பல போர்களை சந்தித்து இருக்கிறார், அதில் 15 போர்களில் வெற்றி தான், இரண்டு போர்களில் மட்டுமே தோல்வியை சந்தித்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட வீரனை நாம் இன்றுவரை அறியாமல் இருந்து விட்டோமே!

புரட்சி வீரர்கள் மருது சகோதரர்கள் வரலாறு