You have been blocked from seeing ads.

போதி தர்மர் வாழ்க்கை கதை – தமிழில்

போதி தர்மர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், இவர் புத்தருக்கு இணையானவரே.

புத்தர் எப்படி தன்னுடைய அரச வாழ்க்கையை துறந்து துறவு வாழ்க்கைக்குச் சென்றாரோ அதே போல தான் போதி தர்மனும் துறவு வாழ்க்கையை மேற்க்கொண்டார்.

புத்தரை தெரிந்ததில் கால்வாசி அள    வுகூட போதி தர்மரைப் பற்றி யாருக்கும் தெரியாது. காரணம் என்னவென்றால் இவர் இந்தியாவில் இல்லாமல் சீனாவிற்கு சென்றதனால் தான்.

சீனாவில் இவரை போற்றி வருகின்றனர், ஆனால் இவரின் பூர்விகமான தமிழ்நாட்டில் இவர் யார் என்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

 இளமை காலம்!

போதி தர்மம் கி.பி 475 முதல் 550 ஆம் ஆண்டு காலத்தில் வாழந்தவர் ஆகும்.

இவருடைய தந்தை காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பல்லவ மன்னன் கந்தவர்மன் ஆகும்.

கந்தவர்மனுக்கு 3 பிள்ளைகள், அதில் மூன்றாவதாக பிறந்தவர் தான் போதி தர்மர்.

இவருடைய இயர்பெயர் புத்தவர்மன் ஆகும், இவருடைய தந்தை புத்தர் மேல் உள்ள அதீத ஈர்ப்பினால் தன் மகனுக்கு புத்தவர்மன் என்னும் பெயரை வைத்தார்.

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் புத்த மதம் தலைதோங்கிக் கொண்டிருந்தது.

போதி தர்மனை புத்த சிந்தனையும் ஞானமும் பெற புத்த துறவிகளிடம் சிறுது காலம் தங்க வைத்தார் கந்தவர்மன்.

மேலும் இவர் களறி போன்ற வீர விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

கந்தவர்மனுக்கு புத்தவர்மன் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அவரின் முதல் இரண்டு மகன்களை விட புத்தவர்மனுக்கு தான் நாட்டை ஆளும் தகுதி இருக்கிறது என்று கருதினார்.

காரணம் என்னவென்றால் புத்த ஞானமும் வீரமும் பொறுமையும் ஒன்று சேர இருந்ததது புத்த வர்மனுக்கு தான்.

புத்தவர்மன் தன் நாட்டு மக்களுக்கு புத்த மதத்தின் சிந்தைகளை பரப்பிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கந்தவர்மன் புத்தபீடத்தின் 27 வது குருவான பிரஜனதாரா என்னும் பெண்துறவியை தன் நாட்டிற்கு வரவழைத்தார்.

போதி தர்மர்

You have been blocked from seeing ads.

பிரஜனதாராவும் காஞ்சிபுரத்திரத்திற்கு வருகை வந்தார், அவர் வந்ததனால் தான் இந்த மண் புனிதம் அடைந்தது என்று எண்ணினார் கந்தவர்மன்.

புத்தவர்மன் புத்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பிரஜனதாராவுடன் நலந்தா விற்கு செல்ல முடிவு எடுத்து இருந்திருந்தார். ஆனால் கந்தவர்மன் இதை விரும்பவில்லை.

புத்தவர்மனே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணம் கொண்டதால் புத்தவர்மனை தடுத்தார்.

புத்தவர்மனோ நான் மரணத்திற்கு அப்பால் நிகழும் ஞானத்தை அறிய விரும்புகிறேன் தந்தையே என்னை தடுக்காதீற்கள் என்றான்.

தன் மகன் எதை செய்தாலும் மக்களுக்கு நன்மையே பயக்கும் என்பதை உணர்ந்து அறைகுறை மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

இருவரும் நலந்தா சென்றனர், பிரஜனதாராவிற்கு புத்தவர்மனின் செய்கைகள் ஆனந்ததை அளித்தது, புத்தவர்மனை ஒரு மரத்தின் அடியில் தியானம் செய் என்றார்.

பிறகு அவருடைய பெயரை போதி தர்மன் என்று மாற்றினார், தனக்கு தெரிந்த அனைத்து புத்தமத கோட்பாடுகளையும், கல்வி ஞானத்தையும் அவருக்கு அளித்தார் பிரஜனதாரா.

பிரஜனதாரா தனக்கு தெரிந்த சித்த மருத்துவம் மற்றும் பிற கலைகளையும் போதிக்கு கற்றுக் கொடுத்தார்.

அவரிடம் பயிற்ச்சி பெற்ற போதி தர்மன் முற்றும் தெரிந்த ஞானியாக விளங்கினார்.

புத்தபீடத்தின் 28 ஆவது குருவாக போதி தர்மன் விளங்கினார்.

சீனாவில் போதி தர்மன்!

ஒருநாள் சீனாவில் உள்ள அமைச்சர் ஒருவர் பிரஜனதாராவின் ஆசிரமத்திற்கு வருகை தந்தார்.

அவர் சீனாவில் மக்கள் பல தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு மடிந்து கொண்டிருக்கின்றனர், அதோடு மட்டுமல்லாமல் சீன துறவிகள் பலர் கொள்ளையர்களின் துன்பறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மேலும் படிக்க  சந்திரவதனி கௌதமராஜனின் காதல் கதை

தாங்களோ அல்லது தங்களின் சீடர்கள் எவரேனும் வருகை தந்தால் சீனமக்களின் துன்பம் துடைக்கப்படும் என்று கூறினார்.

பிரஜனதாரா தன் சீடனான போதி தர்மனை இதற்கு தேர்வு செய்து சீனாவிற்கு வழியனுப்பினார்.

சீனாவில் இவரை அனைவரும் வரவேற்றனர், அன்று சீனாவை ஆட்சி செய்து வந்த வூ என்பவர் போதி தர்மரை தன்னுடைய அரண்மனையில் தங்குமாறு வற்புறுத்தினார்.

ஆனால் அவர் அதை விரும்பாமல் மலையின் குகையில் வந்து தங்கினார்.

அங்கு கொள்ளையர்கள் மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அனைவரையும் ஒற்றை ஆளாக வீழ்த்தினார்.

மேலும் அங்கு பரவிக்கிடந்த தொற்றுக் நோய்க்கும் மருத்து தயாரித்துக் கொடுத்தார், இதை உண்ட மக்கள் அனைவரும் இவரை ஒரு கடவுளாகவே வணங்கத் தொடங்கினர்.

சீனாவில் உள்ள துறவிகள் அனைவரும் மக்களிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் போதி தர்மரும் அவரின் சீடர்கள் ஒன்பது பேரும் விவசாயம் செய்து அதில் விளையும் பொருட்களைக் கொண்டு உண்டு வாழ்ந்தனர்.

போதி தர்மர்

அவர் ஒன்பது வருடமாக தனியாகவே தவம் புரிந்து கொண்டிருந்தார், இவரிடம் பல துறவிகள் சீடனாக வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தனர்.

ஆனால் இவர் ஒரு சிலரையே தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொண்டார்.

ஒருவன் தன் கையை வெட்டி அவரின் முன் போட்டுவிட்டு நீங்கள் என்னை சீடனாக ஏற்கவில்லை என்றால் உங்களின் முன் என் தலை வந்து விழும் என்றான்.

உடனே தியானத்திருந்து எழுந்து உன் தலையை வெட்ட அவசியம் இல்லை, அது இந்த உலகிற்கு பயன்பெற வேண்டும் என்று தடுத்து நிறுத்தினார்.

அந்த துறவியையே தன்னுடைய முதல் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

தன்னுடைய சீடர்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் குங் பூ  என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்தார்.

சித்த மருத்துவத்தையும் புத்த மதத்தின் சிந்தனைகளையும் சொல்லிக் கொடுத்தார்.

இவர் அரச குடும்பத்தில் பிறந்து இருந்ததால் போர்கலைகளையும் கற்றிருந்தார்.

தம்மை தாக்க வருவர்களை எப்படி தடுக்க வேண்டும் என்ற யுக்தியையும் சொல்லிக் கொடுத்தார்.

போதி தர்மனாலயே சீனாவில் புத்தமதம் எட்டுத் திக்கெங்கும் பரவ  தொடங்கியது, இவர் புத்த மதத்தின் சில கருத்துகளை உட்புகுத்தி அதை ஜென் மதம் என்று கூறினார்.

   ஜென் துறவி!

போதி தர்மரே ஜென் மதத்தை தோற்றுவித்தவர், இந்த மதத்தை பின்பற்றும் துறவிகள் ஜென் துறவிகள் என்று அழைக்கப்பட்டனர்.

இவர் சாவோலின் என்ற இடத்தில் புத்த கோயில் ஒன்றை கட்டியுள்ளார், அந்த கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த போதி தர்மன் கட்டிய கோயில் இது என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் தமிழகர்களுக்கு இன்றளவும் பெருமையே! அவர் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தாலும் அவரின் பெயர் இன்றளவும் சீனாவில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இவர் தான் தங்கிருந்த இருப்பிடத்தில் சுவற்றிற்கு அப்பால் தான் தன்னை தேடி வரும் மக்களிடம் பேசுவாராம் அவர்களின் முகத்தை பார்த்தது பேச மாட்டாராம் அவர்களின் மனதில் உள்ளதை தன் உள்மனதை வைத்தே கண்டுபிடித்து சொல்லுவாராம்.

இதனால் சீன மக்கள் அவரை முற்றும் அறிந்த ஞானியாகவே கருதினர்.

போதி தர்மர் நெறிமுறை!

ஒருமுறை சீன துறவிகள் பிச்சை எடுத்து வாழ்ந்ததால் அங்குள்ள மக்கள், இவர்கள் நாம் சம்பாதிக்கும் பொருளை பிடிங்கி திங்கிறார்கள் என்று கருதி அவர்களை அடித்து விரட்டினர்.

ஆனால் போதி தர்மனின் சீடர்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை, காரணம் இவர்கள் சொந்தமாக விவசாயம் செய்து உணவு உண்டதால் தான்.

மேலும் படிக்க  கற்கால மனிதனின் மூடநம்பிக்கை

சீனாவை ஆட்சி செய்த வூ அரசன் ஒருமுறை இவரிடம் நான் இறந்த பின் சொர்க்கதிற்கு செல்வேனா இல்லை நரகத்திற்கு செல்வேனா என்று கேட்டபோது, நீ நரகத்திற்கு தான் செல்வாய் என்று சிறிதேனும் யோசிக்காமல் கூட பதிலளதித்தார் போதி தர்மர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வூ நான் பல புத்த கோவில்களையும் புத்த மடங்களையும் கட்டியுள்ளேன் பிறகு ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்றான்.

நீ உன்னுடைய ஆட்சி நிலைபெற வேண்டுமென்பதற்காகவும் தன்னுடைய பெயர் நிலைபெற வேண்டும் என்பதற்காக தான் கோயில்களை கட்டினாய், “நீ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை” உன்னுடைய சுயநலனுக்காக செய்யும் எந்த செயலும் சொர்க்கத்தை சென்றடையும் வழி கிடையாது என்றார்.

போதி தர்மர்

அன்றிலிருந்து அவன் மனம் திருந்த ஆரம்பித்தான்

போதி தர்மர் தன்னுடைய சொந்த நாட்டிற்கு கிளம்புகிறேன் என்று மக்களிடம் சொன்னபோது அவர்கள் அனைவரும் இவரை தடுக்க முயன்றன.

இறப்பு:

ஆனால் அவர் கேட்கவில்லை, பின்னர் அவரை கொல்ல தீர்மானித்தனர், அவர் இந்த பூமியில் இருந்ததனால் தான் நாம் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம், அவருடைய உடலாவது இங்கு இருந்தால் நமது பூமி புனிதமடையும் என்று நினைத்து அவருக்கு உணவில் விஷத்தை கலந்தனர்.

முற்றும் அறிந்த ஞானிக்கு உணவில் விஷம் இருப்பது தெரியாதா? என்ன!

அவருக்கு தெரிந்தும் அந்த உணவை உண்டார், நான்  உணவில் விஷம் கலந்திருப்பதை அவர்களிடம் சொன்னால் அவர்கள் வருத்தப்படுவார்கள், அவர்கள் சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம் என்று எண்ணினார்.

பின்னர் தனக்கு நெருக்கமாக சீடனை அழைத்து, அவர் கையில் ஒரு மூலிகையை கொடுத்து பின்பு இந்த உணவை நான் உண்ண பின் எனது உடலில் இருந்து உயிர் பிரிந்து விடும்.

இந்த மூலிகைச்சாறு பிரிந்த உயிரை மீண்டும் உடலோடு சேர்க்க வல்லது, நான் இறந்த பின்பு இதை செய் என்றார்.

சீடனும் அழுதவாறே தலையசைத்தான், பிறகு அவர் அந்த விஷம் கலந்த உணவை உண்ட சிறுது நேரத்தில் இறந்து போனார்.

அவரை சீன மக்கள் அனைவரும் கண்ணீரோடு புதைத்தனர்.

அவர் இறந்த பல வருடம் கழித்து சீன ஆற்றின் வழியே இவர் ஒற்றை கால் செருப்புடன் நடந்து கொண்டிருந்ததைக் கண்ட ஒருவன், நீங்கள் இறக்கவில்லையா? என்றான்.

இல்லை, என்னை பார்த்தாக உன் அரசனிடம் போய் கூறு என்றார், அவனும் அவ்வாறே செய்தான்.

பின்னர் அவரை புதைத்த இடத்தில் வந்து தோண்டிப் பார்த்தனர், அதில் அவரது உடல் இல்லை மாறாக அவரது மற்றொரு கால் செருப்பு இருந்தது.

இவரை சீனா, ஜப்பான் நாடுகளில் கடவுளாக பார்க்கின்றன, இவர் 150 வருடம் வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

போதி தர்மரை பொறுத்தவரை ஞானம் என்பது கடின உழைப்பு, சுறுசுறுப்போடு செயல்படுதம் மற்ரும் விடாமுயற்சியும் மட்டும் தான்.

விஸ்வாமித்திரர் வாழ்க்கை வரலாறு – தமிழில்
You have been blocked from seeing ads.