You have been blocked from seeing ads.

பிருத்திவிராஜன் சம்யுக்தாவின் காதல் கதை

மாமன்னன் பிருத்திவிராஜ் சம்யுக்தாவின் காதல் கதை…

பிருத்திவிராஜனின் காதல்:

டெல்லியை ஆட்சி செய்த மாமன்னன் பிருத்திவிராஜன் ஆவான். இவன் தன் காதலி சம்யுக்தைக்கு காதல் கடிதம் எழுத தொடங்கி திருப்தி இல்லாமல் எரிந்து கொண்டிருக்கிறான்.

காலையில் இருந்து எழுதுகிறான் இரவு வந்தும் அதன் தொடக்க நிலையிலேயே இருக்கிறான்.

பிருத்திவிராஜன் நிலாவைப் பார்த்து, சம்யுக்தா நீ நிலாவில் மட்டும் இருந்திருந்தால் அங்கேயும் என் கொடி பறந்திருக்கும் என்று கூறி கொண்டிருக்கும் பொழுதே, தன் நண்பனான தில்சாகர் உள்ளே நுழைந்து, டெல்லியில் கொடி பறக்கும் போதே இத்தனை அவமானம் என்றான், சற்று வருத்தத்துடன்.

பிருத்திவிராஜன் தில்சாகர் அருகில் வந்து என்ன அவமானம் என்று புன்னகையுடம் கேட்கிறான்.

உங்கள் காதலி சம்யுக்தாவிற்கு சுயம்வரமாம், ஜெயச்சந்திரன் அறிவித்திருக்கிறான்.

ஆனால், உங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

சம்யுக்தாவின் சுயம்வரம்:

பிருத்திவிராஜனோ இன்னும் புன்னகையுடன் இருக்கிறான்.

அவன் தங்களின் உருவச்சிலையை சுயம்வர மண்டபத்தில் காவல்காரனாய் நிற்க வைத்துள்ளான்.

மேலும் சுயம்வரம் சுத்த ஆண்களுக்காக மட்டும் நடத்தபடுவதாகும்

அதனால் தான் தங்களை அழைக்கவில்லையாம். அவன் தங்களின் காதலியின் தந்தை மட்டும் இல்லையென்றால் அவன் நாக்கு வெட்டப்பட்டிருக்கும் என்றான் கொந்தளிப்புடன்.

பிருத்திராஜனுக்கு கோவம்  இரத்தத்தில் காட்டுத்தீயாய் பரவியது.

 பிருத்திராஜன் எனது வில் எங்கே? இது காதல் யுத்தம் மட்டும் இல்லை எனது மானப்பிரச்சனை ஆகும்.

அவன் நண்பனான தில்காசனுக்கு நெஞ்சில் ராட்டிணம் ஆடுகிறது.

தன் நண்பன் வில் எடுத்தால் இந்த வானையே வளைத்து விடுவான் இந்த ஜெயச்சந்திரனை வீழ்த்த இயலாத என்ன.

பிருத்திவியின் மூச்சுக்காற்று அனல் காற்றாய் வீசத் தொடங்கியது.

ஜெயச்சந்திரனின் கன்னோசி நாட்டை நோக்கி காலாட்படையும் யானைப்படையும் மலைபோல் வருவதை கேள்வியுற்ற சம்யுக்தா காலையில் மலரும் செந்தாமரை போல் முகம் மலருகிராள்.

ஜெயச்சந்திரனின் திட்டம்:

இதைக் கேள்வியுற்று ஜெயச்சந்திரன் அவசர ஆலோசனை சபை கூட்டுகையில், பிருத்திராஜனின் நண்பன் தில்சாகர் அவர்கள் முன் தூதுவனாய் நின்றான், தில்சாகர் பேசினான் “என் மன்னனை வாயில் காவலனாக நிற்க வைத்த கன்னோசி சபையே, உங்கள் நாட்டின் எல்லையில் இருக்கிறது எங்கள் மன்னனின் வில்”.

நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில் உங்களின் படைவீரர்களின் தலைகளை வெட்டி விடுவோம், ஆனால் நீங்கள் ஆயத்தமாக அவகாசம் தருவதற்காக எல்லையில் நிற்கிறார்,

ஆயத்தமான பின்பு தகவல் அனுப்பு தலையறுக்க வருகிறோம் என்று கர்ஜித்து விட்டு, காவலாளியாக நின்ற தன் நண்பனின் சிலையை தன் மார்பில் சுமந்தபடி சென்றான்.

தில்சாகரின் கர்ஜனையைக் கேட்டு பயந்து தான் போனான் கன்னோசியின் மன்னன் ஜெயச்சந்திரன். இவனே இப்படி இரத்தம் கொதிக்க உள்ளான் என்றால் இவன் நண்பன் காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருப்பான்.

ஒரு திட்டம் தீட்ட முடிவு செய்தான். ஒரு ஓலை அனுப்பினான். அதில் எல்லையில் இருந்தே என் கோட்டையின் கொடியை நீ சாய்த்துவிட்டு தனி ஒருவனாய் நீ வா…….. என்றான்.

பிருத்திராஜனும் பதிலுக்கு ஓலை அனுப்பினான். வருகிறேன் சம்யுக்தாவின் கணவனாக என்று அனுப்பினான்.

பிருத்திவிராஜனின் வெற்றி:

இரவு நேரம் வேறு கோட்டைக்கும் எல்லைக்கும் அரைக்கிலோ மீட்டர் தூரம், எப்படி கொடியை வீழ்த்த முடியும் என்று தில்சாகரும் படைவீரர்களும் சோகத்துடன் பார்க்க, பிருத்திவிராஜனோ அலட்சியமாய் தன் வில்லை எடுத்து, தன் மார்பை உயர்த்தி, வில்லை பின்னுக்கு இழுத்து கொடிக்கு குறி வைத்தான். காற்றை கிழித்துக் கொண்டு வில் சென்று கொடியை வீழ்த்தியது.

மேலும் படிக்க  கடைசி வரை வரும் உறவு - தமிழ் கதை

     ஓ…. வெற்றி வெற்றி என்று ஆனந்தமாய்க் கூச்சளிட்டனர் பிருத்திவிராஜனின் படைகள்.

தன் சிலையை தோளில் சுமந்து வைத்திருந்த தன் நண்பனிடம் கல் கணக்கவில்லையா நண்பா? கீழே வை என்றான்.

அதற்கு தில்சாகரோ மாற்றான் மண்ணிலா தங்களை வைப்பது, நம் நாடு வரும் வரையிலும் தங்களை தோலில் சுமந்து வருவேன் என்றான்.

படை வீரர்களே நாடு திரும்ப ஆயத்தமாகுங்கள். என் சம்யுக்தாவை கொண்டு வந்து விடுகிறேன்.

அவன் கோட்டையை நோக்கி தீயாய் புறப்பட்டான் கையில் வாளுடன். கன்னோசி படைகள் அவனுக்கு வழிவித்தான் செய்தனர்.

சம்யுக்தா எதிரே மான் போல் ஒடி வந்தாள்.

piruthvi

You have been blocked from seeing ads.அவளை குதிரையில் இருந்தபடியே தூக்கி வைத்துக் கொள்கிறான்.

குதிரை பாய்ந்து புறப்படுகிறது. அன்று இரவு இருவரும் இன்ப வெள்ளத்தில் பாய்ந்து கொண்டிருந்தனர்.

பிருத்திராஜன் வாத்சாயனாரின் எட்டு வகையான முத்தங்களை சம்யுக்தாவிற்கு கற்று தந்து கொண்டிருக்கிறான்.

ஆனால் தில்சாகருக்கோ மனதில் தீ பரவிக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் ஆப்கானிஸ்தானிலிருந்து முகமது கோரி என்னும் போர் வெறியன் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்னும் செய்தி கேட்டு அவன் கவலை கொண்டிருக்கிறான்.

முதலிரவில் எப்படி மன்னரை இடையூறு செய்வது என்று, அவன் சேவலாய் மாறி கூவ ஆரம்பித்தான்.

அந்தப்புரத்திலிருந்து வெளியில் வந்து பார்த்தான் பிருத்திவிராஜன் இன்னும் விடியவில்லை விடியாத பொழுது ஏன் சேவல் கூவியது? என்று சொல்லிக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்டான்.

முகமது கோரி:

நண்பா, சேவலாய் கூவியது நானே என்றான் தில்சாகர். நீயா? ஏன் என்றான்?. மன்னித்து விடு நண்பா, நம் டெல்லியிம் மீது ஒரு பயங்கரபடை படையெடுக்க வருகிறது. டெல்லியின் மீது பலர் போர் தொடுத்து வந்தனர்.

அவர்களை தோல்வியுறச் செய்தோம். ஆனால் இம்முறை வந்திருப்பதோ ஆப்கானிஸ்தானிலிருந்து முகமது கோரி வந்திருக்கிறான்.

முகமது கோரியின் பேரைக் கேட்டதும் சம்யுக்தாவின் மனதில் ஒருவித வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அவள் பிருத்திவிராஜனிடம் முகமது கோரி பயங்கர வீரராமே? என்றாள்.

அதற்கு அவனோ வீரன் தான். ஆனால் எந்த வீரனையும் தோல்வியுறச் செய்யும் என் வீரம் உன் கண்களில் உள்ளது என்றான்.

முகமது கோரி டெல்லியை தொட்டான். பிருத்திராஜனும் தில்சாகரும் எரிமலையாய் இருபுறமும் சூழ்ந்து முகமது கோரியின் படைகளை சாம்பலாக்கினர்.

ஒரு வீச்சுக்கு ஒரு தலையென எதிரிகளை நாசம் செய்தான் பிருத்திவிராஜன்.

இறுதியில் முகமது கோரி தோல்வியுற்றான். அவன் கைதானான். ஆனால் பிருத்திவிராஜனோ அவனை தண்டிக்காமல் அவனை வீரனாய் மதித்து விடுதலை செய்தான்.

ஆனால் இதுவே பின்னாளில் விஷமாக மாறும் என்பதனை அறியாமல் இருந்தான் பிருத்திவிராஜன்.

ஜெயச்சந்திரனின் சூழ்ச்சி:

பிருத்திவிக்கும் சம்யுக்தாவிற்குன் மீண்டும் காமப்போர் ஆரம்பிக்கத் தொடங்கியது.

முகமது கோரி ஒரு நல்ல பாம்பின் விஷமாகவே மாறியிருந்தான்.

சந்தர்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சம்யுக்தாவின் தந்தை ஜெயச்சந்திரன் முகமது கோரியுடன் நட்பு பாராட்டினான்.

மேலும் படிக்க  நீதான் என் கண்மணி - காதல் கதை

ராஜபுத்திர மன்னர்களையும் முகமது கோரிக்கு நட்பாக்கினான்.

முகமது கோரி டெல்லிக்கு நுழைய ஜெயச்சந்திரன் பக்க பலமாக இருந்தான். முன்னறிவிப்பு இல்லாத போராக இருந்தது.

கோரியுடன் தன் இனத்தவரும் இணைந்து போரிட்டனர். இதனால் பிருத்திராஜன் கைது செய்யப்பட்டான்.

முகமது கோரி வெற்றி பெற்ற பின் முதலில் தனக்கு உதவிய இராஜபுத்திர மன்னர்களுக்கும் ஜெயச்சந்திரனனுக்கும் பரிசளித்தான்.

பிறகு அவன் உங்கள் இரத்தம் ஓடுபவனுக்கே துரோகம் செய்தீர்கள் எனக்கு செய்ய மாட்டீர்களா என்று அவர்களுக்கு மரண தண்டனையை பரிசளித்தான்.

 முகமது கோரி சம்யுக்தா என்ற அழகு இராட்சசியை கேள்விப்பட்டு, அவளை அபகரிக்க அந்தப்புரம் நோக்கிச் சென்றான்.

ஆனால் சம்யுக்தா தன் கணவன் கைதான செய்தி கேட்ட அடுத்து நிமிடமே தீக்குளித்து இறந்து போனாள்.அவளின் சாம்பலை ஆத்திரத்துடன் பார்த்து திரும்பினான் முகமது கோரி.

முகமது கோரியின் மூர்க்கச் செயல்:

 பின்பு பிருத்திவிராஜனின் வில்லாற்றலை அறிந்து அவன் கண்களை இரும்புக் கம்பிகளைக் கொண்டு நோண்டச் செய்தான்,

தில்சாகரின் கால்களை உடைத்து முடமாக்கினான். பின்பு தில்காசனை பிருத்திராஜன் தோளில் அமர வைத்து,

உன் நண்பன் உனக்கு வழி சொல்வான் நீ அவனை சுமந்து எங்களின் பின் தொடர்ந்து வா என்றான். தில்சாகரின் கண்கள் இரண்டும் அழுதன, தன் நண்பனுக்காக.

பிருத்திராஜனின் கண்களும் அழுதன சம்யுக்தாவிற்காகவும் தில்சாகருகாகவும்.

இவர்கள் மனதில் வன்மம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

சிந்து நதியின் கரையோரத்தில் ஒரு மரத்தில் இருந்த பழங்களைப் பார்த்து, ஏய் குருடனே பிருத்திராஜா, அந்த மரத்தில் உள்ள பழங்களை உன்னால் வில்லால் அடித்து வீழ்த்த முடியுமா என்று கொண்டாட்டமாக கொக்கரித்தான்.

அதற்கு பிருத்திவிராஜனோ முடியும் என்றான். வில் வந்தது,

அவன் கையில் ஏந்தினான். “ஏய் முட்டாளே, கண்ணில்லாத நீ எப்படி அம்பு விடுவாய்? சரி உன் நண்பன் இடத்தின் குறியை காட்டுவான் பின்பு அம்பு விடு என்றான்.

 பிருத்திவிராஜனின் வில்:பிருத்திராஜனும் தில்சாகரும் ஒன்றையே நினைத்தனர்.

வார்த்தைகளால் பேசாமல் இருவரும் ஒருமித்த உணர்வுகளால் முடிவு செய்தனர்.

தில்சாகர் திசை சொன்னான். அம்பை விட்டான் பிருத்திராஜன் பழம் விழும் என்று அனைவரும் பார்த்தனர்.

ஆனால் விழுந்ததோ முகமது கோரியின் தலை. தில்சாகர் குறி சொன்னது  பழத்திற்கு அல்ல. முகமது கோரியின் தலைக்கு.

தன் நண்பன் வாய்ப்பை பயன்படுத்தி முகமது கோரியின் தலைக்கு குறி சொல்வான் என்று நம்பிக்கை கொண்டிருந்தான் பிருத்திராஜன். அவர்களின் வன்மம் தீர்ந்தது.  

கஜினி முகமதுவின் வரலாற்று காதல் கதை
You have been blocked from seeing ads.