You have been blocked from seeing ads.

பிக்பாஸ் பாவ்னி ரெட்டி வாழ்க்கை கதை

பாவ்னி பிறப்பு:

     பாவ்னி ஆந்திரா பிரதேச மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில் 9 நவம்பர் 1987 ஆம் ஆண்டு பிறந்தார்.

     இவருடைய தற்போது வயது 33 ஆகும்.

     பாவ்னிக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் துர்கா ஆகும்.

     இவர் கல்லூரி படிப்பை முடித்தவுடன் என்ன செய்வதென்று யோசிக்கும் பொழுது செய்திதாளில் வந்த சினிமா விளம்பரங்களின் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

     இவர் சின்னத்திரையில் 2012 ஆம் ஆண்டு முதல் தன் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

     இவருக்கும் சீரியலில் நடிக்கும் பிரதீப் குமார் என்பருக்கும் காதல் ஏற்பட்டது.

     இருவீட்டார்களும் இவர்களுடைய காதலை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை.

திருமண வாழ்க்கை:

இதனால் பாவ்னிரெட்டி பிரதீப் குமாருடன் தன் வீட்டை விட்டு சென்று விட்டார்.

     பிரதீப்புடன் 4 வருடங்கள் ஒன்றாக தங்கியிருக்கிறார்.

     பின்னர் பிரதீப் வீட்டார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து 2016 ஆம் ஆண்டு நிச்சயம் செய்துவிட்டு, 2017 பிப்பரவரி 14 அன்று திருமணத்தை நடத்தினர்.

பாவ்னி

You have been blocked from seeing ads.

     ஒருநாள் பாவ்னி அண்ணனின் பிறந்தாள் விழாவின் போது பிரதீப் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்துள்ளார்.

     இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்ப்பட்டுள்ளது.

     பாவ்னி ரெட்டி பாத்ரூம் கதவை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தபொழுது, கதவை திறக்குமாறு பலமுறை கெஞ்சியுள்ளார் பிரதீப்.

     ஆனால் பாவ்னி என்னை தனியாக கொஞ்ச நேரம் இருக்க விடு என்று சொல்லியதும், பிரதீப் நான் செய்கிறேன் பார் என்று சொல்லி விட்டு தன் அறையின் கதவை வேகமாக சாத்தியிருக்கிறார்.

     நான் வருவதற்காக இப்படி செய்கிறான் என்று அசால்டாக இருந்திருகிறார் பாவ்னி.

     பின்பு காலை விடிந்ததும் சூட்டிங்கிற்கு நேரம் ஆகிவிட்டதால் அவரது அறையை தட்டியிருக்கிறார்.

     டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பு என்று சொன்னதும் எந்தவித சத்தம் கேட்கவில்லை.

     பின்பு கதவை திறந்து பார்த்தால் பிரதீப் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து போயிருந்தார்.

     பிரதீப்பின் இறப்பிற்கு பாவ்னியும் அவளின் அண்ணன் தான் காரணம் என்று பிரதீபின் வீட்டார்கள் போலிஸில் புகார் செய்து இருந்தனர்.

     பாவ்னிரெட்டி அண்ணன் என்று சொல்வது உடன் பிறந்தவர் இல்லை, ஆனால் பல வருடங்களாக பாவ்னியை ஒரு தங்கையாக பார்த்து வந்திருக்கிறார்.

     இவர்களின் திருமணத்தில் கூட பாவ்னி தரப்பில் இருந்து கன்னிகா தானம் செய்து வைத்திருக்கிறார்.

     நாளடைவில் பிரதீபின் வீட்டார்களும் மனம் மாறி பாவ்னியை தன்னுடைய பிள்ளையாக ஏற்க்கத் துவங்கினர்.

மேலும் படிக்க  பகவான் பரசுராமர் வாழ்க்கை கதை

     இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 3 மாதங்களிலே பிரதீப் இறந்து விட்டார். (14.2.2017 – 17.05.2017).

சின்னத்திரையில் பாவ்னி:

     பின்பு பாவ்னி 6 மாத இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

     இவர் தெலுங்கில் பல சீரியல்களிலும், ஒரு சில படத்திலும் நடித்துள்ளார்.

     பாவ்னிரெட்டி சின்னத்தம்பி சீரியலுக்குப் பிறகு சன் டீவியில் ஒளிப்பரப்பான ராஜாத்தி சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

     இவர் தமிழில் வெளிவந்த மொட்ட சிவா கெட்ட சிவா, 465, வஜ்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

     ஹிந்தியில் வெளியான லாகின் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

     இவர் மலையாளத்தில் நீலக்குயில் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

     இவருக்கு இரண்டாவது திருமணம் ஆனந்த் ஜாய் என்பவருடன் ஏற்ப்பாடு செய்யப்பட்டு தீடிரென்று நிறுத்தப்பட்டது.

     2021 இல் அன்பே சிவம் என்ற சீரியலில் நடித்துள்ளார், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியின் ஒரு போட்டியாளராக  பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் இமானுவேல் அண்ணாச்சி வாழ்க்கை கதை

You have been blocked from seeing ads.

1 thought on “பிக்பாஸ் பாவ்னி ரெட்டி வாழ்க்கை கதை”

Comments are closed.