You have been blocked from seeing ads.

நீதான் என் கண்மணி – காதல் கதை

ஹரிஸின் விடுமுறை:

அலாரம் அடித்துக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளாமல் தன் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டு அவளின் மார்பின் கதகதப்பை விட்டு விலக மனமில்லாமல் படுத்துக் கொண்டிருந்தான் ஹரிஸ்.

ஹேமாவிற்கு அலாரச் சத்தம் காதை கிழித்துக் கொண்டிருந்தது, என்னங்க அலாரத்தை ஆப் பண்ணுங்க காது வலிக்கிது என்றாள், உடனே ஹரிஸ் அவளின் தலையை தன் மார்போடு மேலும் இறுக அணைத்துக் கொண்டு இப்போ அலார சத்தம் வருதாடி செல்லம் என்றான் கொஞ்சலாக.

ஹ்ம்ம்ம்ம்ம்… வருதுங்க லப் டப் னு சத்தம் என்று சொல்லிக்கொண்டே அவனின் மார்பின் முடியை வருடிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் போன் அலாரத்தை கண்டு கொள்ளாமல் இருந்தாலும் அவர்களின் வீட்டில் அருகில் உள்ள மணிக்கூண்டிலிருந்து காலை 10 மணி என்று ஒலித்தது.

ஹேமா வேகமாக எழுந்து கிளம்புங்க இன்னைக்கி ஒருநாள் தான் லீவ் நிறைய திங்ஸ் வாங்கனும் அப்பறம் பீச்சுக்கு போகனும் என்றாள்.

மாலுக்கு செல்லுதல்:

சரிடா செல்லம் எந்த மால்க்கு போகலாம் என்று நீயே சொல் என்றான்.

கிருஷ்ணா மால் போகலாங்க என்றாள், சரி சரி நீங்க குளிங்க அதுக்குள்ள நான் டிபன் ரெடி பன்றேன் என்றாள்.

ஹரிஸூம் டவலை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூம்க்கு போனான், ஹேமா வேகமாக டிபனை ரெடி பண்ணிவிட்டு இன்னொரு பாத் ரூம்க்கு சென்று குளித்து ஒரு புது ஜீன்ஸ் பேண்ட் அண்ட் ஷேர்ட் அணிந்து வந்தாள்.

பின்பு ஹரிஸீம் ஹேமாவும் சுடச் சுட இல்லியை சாப்பிட்டு விட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

ஹரிஸ் காரை ஸ்டார்ட் செய்யும் பொழுதே ஹேமா நான் ட்ரைவ் பன்றேங்க என்றாள்.

ஹரிஸ்

You have been blocked from seeing ads.

உனக்கு ஒழுங்கா ஓட்ட தெரியாதுல ட்ராபிக்லாம் இல்லாத இடத்தில் நீ ட்ரைவ் பண்ணலாம் என்றான்.

அவளும் அதற்கு சரி என்று ஒத்துக் கொண்டு அவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவன் காரை ஓட்டும் பொழுதே ஹேமாவிடம் எப்பொழுது எப்படி எந்த ஹியர் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சென்று ஒரு இளநீர் கடையை நோக்கி காரை ஓரம்கட்டினான்.

அவர்கள் இருவரும் ஒரே கலர் ஷேர்டும் ஜீன்ஸூம் அணிந்திருந்திருந்தார்கள்.

இருவரும் இளநீரை வாங்கிக் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த இரண்டு கல்லூரிப் பெண்கள் மேட் பார் ஈச் அதரா இருக்காங்க இந்த கப்புள் என்று முனுமுனுத்துக் கொண்டிருந்தது ஹேமாவின் காதில் விழுந்தது அவள் அதை கண்டு கொள்ளாமல் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

ஹரிஸ் காரை எடுக்கபோகும் பொழுது ஹேமா இனிதான் ட்ராபிக் அவ்வளவா இருக்காதுல நான் ட்ரைவ் பன்றேன் என்றாள்.

அவன் சிரித்துக் கொண்டே சரி வா வந்து ட்ரைவ் பண்ணு என்று சொல்லி விட்டு பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டான்.

அவன் அமரும் பொழுதே சீட் பெல்டை அணிந்து கொண்டான், ஹேமா ட்ரைவ் பன்ற ஆர்வத்தில் சீட் பெல்ட் போடாமல் இருந்தாள்.

மேலும் படிக்க  சோழ மன்னன் சிபிசக்கரவர்த்தி கதை
கார் விபத்து:

அவள் நன்றாக ஓட்டிக் கொண்டு சென்றாலும் எதிரே வேகமாக வந்த லாரி இவர்களின் கார் மீது மோதியது.

அதில் ஹேமாவின் தலையிலும் கண்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது, ஹரிஸூக்கு கையிலும் நெற்றிலும் லேசானா காயம் மட்டும் தான்.

ஹேமாவிற்க்கு அதிக இரத்தம் போய் கொண்டே இருந்தது, அவர்கள் இருவரையும் ஆம்புலசில் ஏற்றிவிட்டனர் அருகில் இருந்தவர்கள்.

ஹேமா மயக்க நிலைக்கு சென்றாள், அவளின் நிலையைக் கண்டு ஹரிஸீற்கு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தான்.

அவன் ஹாஸ்பிட்டல் சென்றதும் கைகளிலும் நெற்றியிலும் உள்ள காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டு ஹேமாவைப் பார்க்க ஐ.சி.யு விற்குச் சென்றான்.

அவளைச் சுற்றி நிறைய டாக்டர்கள் இருந்தார்கள், அவன் அந்த அறையின் வெளியிலேயே நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு டாக்டர் வெளியே வந்து உங்கள் மனைவிக்கு கண்பார்வை போய்விட்டது இனி பார்வை கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.

அவன் அப்படியே அருகில் இருந்த சேரில் உறைந்து போய் உட்கார்ந்து இருந்தான் கண்ணில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்காமல்.

அப்பொழுது அவனைச் சுற்றி ஒரு நான்கு பேர் அழுது கொண்டே ஹரிஸ் என்னப்பா ஆச்சு என்று அவனின் முதுகை தட்டுக்கின்றனர்.

அவன் அண்ணாந்து பார்க்கிறான் வந்திருப்பது அவனின் பெற்றோரும் ஹேமாவின் பெற்றோரும்.

அவர்களைப் கட்டிப் பிடித்துக் கொண்டு மூச்சு விடாமல் அழுகிறான், ஹேமாவிற்கு கண்கள் போய்விட்டதாம் இனி பார்வை கிடைக்காது என்று டாக்டர்கள் சொல்கின்றனர் என்று.

வந்த நால்வரும் கதறுகின்றனர், பின்பு ஹரிஸ் டார்கரிடம் வேறு கண்களை பொருத்தினாள் அவளுக்கு பார்வை கிடைக்குமா டாக்டர் என்றான்.

இன்னும் 12 மணி நேரம் கழித்து தான் அதைப் பற்றி சொல்ல முடியும் மிஸ்டர் ஹரிஸ் என்று நகர்ந்து சென்றார் டாக்டர்.

ஹரிஸ் பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்து இருந்தான் அப்பொழுது ஒரு மருத்துவர் வந்து ஒரு குட் நியூஸ் மிஸ்டர் ஹரிஸ் உங்க வொய்ப் க்கு வேறு கண் கொடுத்து பார்வையை கொண்டு வரலாம், ஆனால் கண் கிடைக்கிறது தான் கொஞ்சக் கஷ்டம் நாங்களும் எல்லா ஹாஸ்பிட்டலுக்கும் சொல்லிருக்கோம் கண் கிடைச்சா பொருத்திடலாம் என்றார்.

அவனுக்கு ஒரு விதமான மனதைரியம் வந்தது எப்படியும் ஹேமாவிற்கு பார்வை கிடைக்க வைச்சிடலாமுனு.

ஹரிஸின் செயல்:

அப்பொழுது ஆம்புலன்சில் இருந்து புதிதாக இரத்த வெள்ளத்தில் ஒரு சிறுமியை அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு வந்தனர்.

அந்தச் சிறுமியின் தாய் வெளியில் இருந்து கதறிக் கொண்டு இருந்தாள், அவர்களைப் பார்த்தால் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தர்வகளைப் போல் தெரிந்தது.

அந்த தாயிடம் சென்று ஹரிஸ் ஆறுதல் கூறுகிறான், ஒன்றும் ஆகாதுமா கவலைப் படாதீங்க என்றான், அவளால் அழுகையை நிப்பாட்ட முடியாமல் கதறிக் கொண்டே இருந்தாள்.

அந்த தாயிடம் வந்து ஒரு டாக்டர் பேசுவதை கவனித்தான், அப்பொழுது தான் புரிந்தது, அந்தச் சிறுமிக்கும் ஹேமாவைப் போல பார்வை போய்விட்டது என்று.

மேலும் படிக்க  ஜான்சி இராணி லக்ஷ்மிபாய் கதை

அந்தத்தாயின் கதறலைக் கேட்டு ஹாஸ்பிட்டலின் மூலை முடுக்குகளும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு டாக்டர் போனை பேசிக் கொண்டே வந்து ஹரிஸிடம் மூளைச்சாவு அடைந்த ஒரு ஆணின் கண் ஒன்று மட்டும் இருக்கிறதாம் இன்னொரு கண் அந்த மருத்துவனைக்கு தேவையாம் அதை வாங்கி பொருத்தி விடமாலா என்று கேட்டார் டாக்டர்.

அவன் சரி என்று சொல்ல நினைக்கும் பொழுது அந்தச் சிறுமியின் தாய் கதறிக் கொண்டிருந்தது காதில் இடியாய் விழுந்து கொண்டிருந்தது ஹரிஸிற்கு.

அவன் டாக்டரிடம் என்னுடைய கண்ணை என் மனைவிக்கு கொடுக்கலாமா டாக்டர் என்றான்.

அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு கண்ணை வேண்டுமானால் கொடுக்கலாம் ஹரிஸ், ஆனால் அதற்கு என்ன தேவை வந்தது அதான் ஒரு கண் கிடைத்து விட்டதே என்றார்.

அந்தக் கண்ணை அந்தச் சிறுமிக்கி பொருத்தி விடுங்கள் என்றான், அந்தக் டாக்டர் யோசித்தார் அந்தச் சிறுமியின் குடும்பத்தால் பணம் கட்ட முடியுமா என்று.

அவரின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட ஹரிஸ், அந்தச் சிறுமியின் மருத்துவச் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்.

என்னுடைய கண்ணை எப்பொழுது எடுக்கலாம் டாக்டர், உங்களை பரிசோதித்து விட்டு சொல்கிறோம் என்று கூறி அவனை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று எல்லா டெஸ்ட்டும் எடுத்து விட்டு கண்ணை இன்று 7 மணிக்கு. எடுத்து 7.15 க்கு உங்களுடைய மனைவிக்கு பொருத்தலாம், நீங்கள் நல்ல ஜீஸ் குடித்து விட்டு 3 மணிநேரம் ஓய்வெடுங்கள் என்றார்.

ஹரிஸ் அந்த அறையை விட்டு வெளியே வரும்பொழுது அந்தச் சிறுமியின் தாய் இவன் காலில் விழுந்து நன்றி தம்பி என்று கதறுகிறாள்.

அவனுக்கு ஒருவித மகிழ்ச்சியாக இருந்தது அந்தச் சிறுமியின் தாய்முகத்தில் ஆனந்தத்தை பார்த்தது.

அவன் ஜூஸ் குடித்து விட்டு ஹேமாவின் அருகில் சென்று அவளுடைய கைகளில் முத்தமிட்டான், என்னுடைய கண்மணிக்கு என்னுடைய கண்ணையே கொடுக்கப் போறேன் என்று சொல்லி அவளின் கண்ணத்தை தடவிக் கொடுத்தான்.

அவள் மயக்க நிலையில் இருந்தாள், அன்று இரவு கண்ணை எடுத்து ஹேமாவிற்கு பொருத்தினர்.

பின்பு சுயநினைவிக்கு வந்த ஹேமா தன் கணவனின் செயலை கேள்விப்பட்டு அவனின் அருகில் சென்று கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

சிறகொடிந்த பட்டாம்பூச்சியின் வாழ்க்கை
You have been blocked from seeing ads.

1 thought on “நீதான் என் கண்மணி – காதல் கதை”

Comments are closed.