ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் 1

இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

1) ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

விடை: செஸ்டர் கார்ல்சன்

2) எந்த ஆண்டு ஜெராக்ஸ் இயந்திரம் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது?

விடை: 1959

3) கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

விடை: ஹாங்க் மாக்னஸ்கி (1985)

4) தானியங்கி பண இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

விடை: ஜான் ஷெப்பர்டு பாரன்

5) இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?

விடை: மைக்கேல் ஆல்ட்ரிச்

6) வையக விரிவு வலையை உருவாக்கியவர் யார்?

விடை: டிம் பெர்னெர்ஸ் லீ

7) கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் எந்த இணைய வழி தேர்வை நடத்துகிறது?

விடை: ஊரகத் திறனறித் தேர்வு

8) photo copier என்பதின் தமிழ் பெயர் என்ன?

விடை: ஒளிப்படி இயந்திரம் (ஜெராக்ஸ் மிஷின்)

10) Fax என்பதின் தமிழ் பெயர் என்ன?

விடை: தொலைநகல் இயந்திரம்

ஓ, என் சமகாலத் தோழர்களே!

1) கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் எது?

விடை: தேனி மாவட்டட்தில் உள்ள மெட்டூர்

2) கள்ளிக்காட்டு இதிகாசத்துக்காக 2003 ஆம் ஆண்டு வைரமுத்து என்ன விருதைப் பெற்றார்?

விடை: சாகித்ய அகாதெமி

3) இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான ——- விருதை வைரமுத்து பெற்றார்.

விடை: பத்மபூஷன்

4) வைரமுத்துவின் கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழியெர்க்கப்பட்டுள்ளன?

விடை: இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம்

5) சொன்னோர் என்பது —– பெயர் ஆகும்.

விடை: வினையாலணையும் பெயர்

6) புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி – என்று அன்றே அறிவியலைப் பற்றி கூறிய நூல் எது?

விடை: புறநானூறு

7) பண்பும் அன்பும், இனமும் மொழியும் என்பவை ——– ஆகும்.

விடை: எண்ணும்மை

உயிர்வகை

1) தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் ———- ஆகும்.

விடை: தொல்காப்பியம்

2) தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

விடை: தொல்காப்பியர்

3) தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?

விடை: 3 (எழுத்து, சொல், பொருள்)

4) தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

விடை: 27

5) புல் மரம் என்பவை ——— உயிர்கள் ஆகும்.

விடை: ஓரறிவு

6) சிப்பி, நத்தை என்பவை ——— உயிர்கள் ஆகும்.

விடை: ஈரறிவு

7) கரையான், தும்பி —— உயிர்கள் ஆகும்.

விடை: மூவறிவு

8) நண்டு——- உயிர் ஆகும்.

மேலும் படிக்க  ஆறாம் வகுப்பு முதல் பருவம் – பாடம் 3

விடை: நான்கறிவு

9) பறவை, விலங்கு ——— உயிர்கள் ஆகும்.

விடை: ஐந்தறிவு

விண்ணையும் சாடுவோம்

1) இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார்?

விடை: சிவன்

2) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?

விடை: விக்ரம் சாராபாய்

3) இந்திய ஏவுகணையின் தந்தை என்றழைப்பட்டவர் யார்?

விடை: அப்துல்கலாம்

4) முதல் செயற்கைக்கோளான ஆர்யப்பட்டா விண்ணில் செலுத்த காரணமாக இருந்தவர் யார்?

விடை: விக்ரம் சாராபாய்

5) இந்தியா 2022 வரை எத்தனை செயற்க்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது?

விடை: 45

6) அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

விடை: வளர்மதி

7) ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

விடை: வளர்மதி

8) 2013 ஆம் ஆண்டு மங்கள்யான் செயற்க்கைகோளை உருவாக்கியவர் யார்?

விடை: அருணன் சுப்பையா

9) இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர் யார்?

விடை: அருணன் சுப்பையா

10) இளைய கலாம் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: மயில்சாமி அண்ணாதுரை

11) ஆய்வுக்கலம் சந்திரயான் -1 திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

விடை: மயில்சாமி அண்ணாதுரை

12) கையருகே நிலா என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை: மயில்சாமி அண்ணாதுரை

வல்லினம் மிகா இடங்கள்

1) அது, இது என்னும் சுட்டுப் பெயர்களில் ———- மிகாது.

விடை: வல்லினம்

_வல்லினம் மிகாதுஇடங்கள்

2) சரியான தொடர்களைத் தேர்வு செய்க

அ) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

ஆ) வியங்கோள் வினைமுற்றில் வல்லினம் மிகாது.

இ) பெயரெச்சத்தில் வல்லினம் வரும்.

ஈ) வினைத்தொகையில் வல்லினம் வரும்.

விடை: அ, ஆ

3) தவறான தொடர்களைத் தேர்வு செய்க

அ) மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.

ஆ) விளித்தொடர்களில் வல்லினம் மிகும்.

இ) எழுவாய் தொடர்களில் வல்லினம் மிகாது.

ஈ) வினாப் பெயர்களில் வல்லினம் மிகாது.

விடை:

4) அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி களில் ——– மிகாது.

விடை: வல்லினம்

5) மூன்று, நான்கு, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் —-

விடை: மிகும்

6) இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் ——— வராது.

விடை: வல்லினம்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 3