ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 3

விரிவாகும் ஆளுமை

1) திருவள்ளுவரை உலகப் புலவர் என்று பாராட்டியவர் யார்?

     விடை: ஜி,யு.போப்

2) உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார்?

     விடை: தனிநாயகம் அடிகள்

3) தனிநாயகம் அடிகள் தொடங்கிய ——- இதழ் இன்று வரை வெளிவந்து கொண்டிடுருக்கிறது.

     விடை: தமிழ்ப் பண்பாடு

4) “படுதிரை வையம் பாத்திய பண்பே” – என்று எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

     விடை:  தொல்காப்பியம்

5) “பூட்கையில்லோன் யாக்கை போல” – குறிக்கோள் இல்லாதவன் சதைப்பண்டம் போல என்று எந்நூலில் யார் குறிப்பிட்டுள்ளார்?

     விடை: நூல் – புறநானூறு

             ஆசிரியர் – ஆலத்தூர்கிழார்

6) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – என்று பாடியவர் யார்?

     விடை: கணியன் பூங்குன்றனார்

7) தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் ——– ம் ஒருவர்.

     விடை: தனிநாயகம் அடிகள்

அக்கறை

1) கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?

     விடை: கல்யாண சுந்தரம்.

2) வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்பவர் யார்?

     விடை: கல்யாண்ஜி

வண்ணதாசன்

3) வண்ணதாசனின் எந்த சிறுகதை 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகதெமி விருதைப் பெற்றது?

     விடை: ஒரு சிறு இசை

4) கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள் யாவை?

 •      புலரி
 •       முன்பின்
 •       ஆதி
 •       அந்நியமற்ற நதி
 •       மணல் உள்ள ஆறு

5) கல்யாண்ஜி (அ) வண்ணதாசன் எழுதிய சிறுகதைகள் யாவை?

 •      கலைக்க முடியாத ஒப்பனைகள்
 •       தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
 •       உயரப் பறத்தல்
 •       ஒளியிலே தெரிவது
 •       ஒரு சிறு இசை

6) வண்ணதாசனின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ——– பெயரில் வெளியானது.

     விடை: சில இறகுகள் சில பறவைகள்

குறுந்தொகை

1) குறுந்தொகை —— நூல்களுள் ஒன்று.

     விடை: எட்டுத்தொகை

2) குறுந்தொகையை இயற்றியவர் யார்?

     விடை: பாலை பாடிய பெருங்கடுங்கோ

3) பாலை பாடிய பெருங்கடுங்கோ ——- மரபைச் சேர்ந்தவர்.

     விடை: சேர மரபு

4) குறுந்தொகை எத்தனை பாடல்களைக் கொண்டது?

     விடை: 401

5) குறுந்தொகையை 1915 ஆம் ஆண்டு முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?

     விடை: சௌரிப்பெருமாள் அரங்கனார்

6) நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டது ——- ஆகும்.

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம்-3

     விடை: குறுந்தொகை

7) பொருத்துக

 1. நசை – ஆண்யானை
 2. பிடி – உரிக்கும்
 3. வேழம் – பெண்யானை
 4. பொளிக்கும் – விருப்பம்

     விடை:

 1. நசை – விருப்பம்
 2. பிடி – பெண்யானை
 3. வேழம் – ஆண்யானை
 4. பொளிக்கும் – உரிக்கும்

 8) பிடிபசி என்பது ——– வேற்றுமைத் தொகை ஆகும்.

     விடை: ஆறாம்

9) பெருங்கை, மென்சினை என்பது ——- தொகைகள்.

     விடை: பண்புத்தொகைகள்

தாய்மைக்கு வறட்சி இல்லை

1) சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் —— ஊரைச் சேர்ந்தவர்.

     விடை: திப்பணம்பட்டி

2) சு. சமுத்திரத்தின் எந்த புதினம் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது?

     விடை: வேரில் பழுத்த பலா

3) சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசைப் பெற்ற சிறுகதை எது?

     விடை: குற்றம் பார்கில்

4) சமுத்திரம் எழுதிய சிறுகதைகள் யாவை?

 •      வாடாமல்லி
 •       பாலைப்புறா
 •       மண்சுமை
 •       தலைப்பாகை
 •       காகித உறவு

அணியிலக்கணம்

1) இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – இதில் எந்த அணி வந்துள்ளது?

     விடை: உவமை அணி

2) போல, போன்ற உருபுகள் மறைந்து வருவது —— அணி ஆகும்.

     விடை: உவமை அணி

3) உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது ——- அணி ஆகும்.

     விடை: உருவக அணி

4) இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

  வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி

  அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

  பைங்கூழ் சிறுகாலைச் செய் – இதில் என்ன அணி பயின்று வந்துள்ளது?

     விடை: உருவக அணி’

5) ஒரு செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்தால் அது —— அணி ஆகும்.

     விடை: சொல் பின்வருநிலையணி

6) ஒரு செய்யுளில் வந்த பொருளே மீண்டும் மீண்டும் வருவது —— அணி ஆகும்.

     விடை: பொருள் பின்வருநிலையணி

7) சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வருவது —— அணி ஆகும்.

     விடை: சொல் பொருள் பின்வருநிலையணி

8) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

  துப்பாய தூஉம் மழை – இதில் எந்த அணி வந்துள்ளது?

     விடை: சொல் பின்வருநிலையணி

9) அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 1

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்

விண் டன கொன்றை விரிந்த கருவிளை

கொண்டன காந்தள் குலை  – இதில் எந்த அணி வந்துள்ளது?

     விடை: பொருள் பின்வருநிலையணி

10) தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் – இதில் என்ன அணி வந்துள்ளது?

     விடை: வஞ்சப்புகழ்ச்சி அணி

11) எல்லா விளக் கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

   பொய்யா விளக்கே விளக் கு.

  இக்குறட்பா வில் என்ன அணி வந்துள்ளது?

     விடை: சொற்பொருள் பின்வருநிலையணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோ டிட்ட சொல்லின்

பொருள் யாது?

அ) கொம்பு ஆ) மலையுச்சி இ) சங்கு ஈ) மேடு

     விடை: ) மலையுச்சி

2)  தமிழ்ப் புலவரைப் போலவே உரமோச் சிந்தனையாளர் கொண்ட  கொள்கை

அ) நிலையற்ற வாழ்க்கை ஆ) பிறருக்காக வாழ்தல் இ) இம்மை மறுமை

ஈ) ஒன்றே உலகம்

     விடை: ஆ) பிறருக்காக வாழ்தல்

3)  வண்ணதாசன் னுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல்

அ) ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்

     விடை: அ) ஒரு சிறு இசை

 1. யா மரம் என்ப து எந்த நிலத் தில் வள ரும்?

அ) குறிஞ்சி ஆ) மருதம் இ) பாலை  ஈ) நெய்தல்

     விடை: இ) பாலை

 1. கேடில் விழுச் செல்வ ம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

அ ) சொல் பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொற்பொருள் பின்வரு நிலையணி ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி

     விடை: ஆ) பொருள் பின்வருநிலையணி

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் -2

1 thought on “ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 3”

Comments are closed.