பெரியாரின் சிந்தனைகள்
1) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: தந்தை பெரியார்
2) குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் போன்ற இதழ்களை நடத்தியவர் யார்?
விடை: தந்தை பெரியார்
3) பெரியார் விதைத்த விதைகள் யாவை?
- கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
- பெண்களுக்கான இடஒதுக்கீடு
- பெண்களுக்கான சொத்துரிமை
- குடும்ப நலத்திட்டம்
- கலப்புத் திருமணம்
- சீர்சிருத்தத் திருமணம் ஏற்பு
4) “மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்” – என்று கூறியவர் யார்?
விடை: தந்தை பெரியார் (ஈ.வே.ரா)
5) பெரியார் எதிர்த்தவை எவை?
- இந்தித் திணிப்பு
- குலக்கல்வித் திட்டம்
- தேவதாசி முறை
- கள்ளுண்ணல்
- குழந்தைத் திருமணம்
- மணக்கொடை
6) ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும் – என்று கூறியவர் யார்?
விடை: தந்தை பெரியார்
7) 1938 நவம்பர் 13 ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா வுக்குப் ———– பட்டம் வழங்கப்பட்டது.
விடை: பெரியார்
8) எந்த அமைப்பு 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கியது?
விடை: யுனெஸ்கோ மன்றம்
9) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
விடை: தந்தை பெரியார் – 1925
10) வெண்தாடி வேந்தர் , பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம், சுயமரியாதைச் சுடர், புத்துலக தொலை நோக்காளர் என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?
விடை: தந்தை பெரியார்
11) ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும் ஔவை என்பதனை அவ்வை என சீரமைத்தவர் யார்?
விடை: தந்தை பெரியார்
ஒளியின் அழைப்பு
1) புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
விடை: ந. பிச்சமூர்த்தி
2) ந. பிச்ச மூர்த்தியின் முதல் சிறுகதை எது?
விடை: ஸயன்ஸூக்கு பலி
3) பிக்ஷூ, ரேவதி என்ற புனப்பெயர்களில் படைப்புகளைப் படைத்தவர் யார்?
விடை: ந, பிச்சமூர்த்தி
4) “இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத்தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்” – என்று கூறியவர் யார்?
விடை: வல்லிக்கண்ணன்
5) வேண்டி என்பதன் வேர்ச்சொல் எது?
விடை: வேண்டு
6) பிறவிஇருள். ஒளியமுது, வாழ்க்கைப்போர் என்பவைகள் ——- ஆகும்.
விடை: உருவகங்கள்
7) பிச்சமூர்த்தி எந்த எந்த இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றினார்?
விடை: ஹனுமான், நவ இந்தியா
தாவோ தே ஜிங்
1) சீனச் சிந்தனையின் பொற்க்காலமாக திகழ்ந்தது ——— காலம்.
விடை: கன்பூசியஸ்
2) லாவோட்சு எந்த சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர்?
விடை: தாவோயியம்
3) லாவோட்சு எந்த நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்?
விடை: பொ.ஆ.மு.இரண்டாம் நூற்றாண்டு
யசோதர காவியம்
1) யசோதர காவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது?
விடை: 5
2) அவந்தி நாட்டு மன்னனான யசோதரனைப் பற்றி குறிப்பிடும் காப்பியம் எது?
விடை: யசோதர காவியம்
3) ஐஞ்சிறுக்காப்பியங்களுள் ஒன்று ——– ஆகும்.
அ) சிலப்பதிகாரம் ஆ) யசோதர காவியம் இ) சீவக சிந்தாமணி ஈ) மணிமேகலை
விடை: ஆ) யசோதர காவியம்
யாப்பிலக்கணம்
1) யாப்பின் உறுப்புகள் ——– வகைப்படும்ம்.
விடை: ஆறு
2) யாப்பிலக்கணம் அடிப்படையில் எழுத்து ——– வகைப்படும்.
விடை: மூன்று
3) அசை எத்தனை வகைப்படும்?
விடை: 2
4) சீர் ——— வகைப்படும்.
விடை: நான்கு
5) நேர் அசையின் வாய்ப்பாடு ——–
விடை: நாள்
6) நிரை அசையின் வாய்ப்பாடு ——-
விடை: மலர்
7) நேர்பு அசையின் வாய்ப்பாடு——
விடை: காசு
8) நிரைபு அசையின் வாய்ப்பாடு ——–
விடை: பிறப்பு
9) தளை ——- வகைப்படும்.
விடை: 7
10) அடி எத்தனை வகைப்படும்?
விடை: 5
11) தொடை ——- வகைப்படும்.
விடை: 8
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) இதில் எது சரியானது:
கூற்று – பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’
என்பதனை ’அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரண ம் – சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமி ழ் எழுத்துகளின்
எண்ணிக்கையைக் குறை க்கலா ம் என்று எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை: ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
2) காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பா டு யாது?
அ) நாள் ஆ) மலர் இ)கா சு ஈ)பிறப்பு
விடை: ஈ) பிறப்பு
3) முண்டி மோதும் துணிவே இன்ப ம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
அ) மகிழ்ச்சி ஆ) வியப்பு இ) துணிவு ஈ) மரு ட்சி
விடை: அ) மகிழ்ச்சி
4) விடைக்கேற்ற வினாவைத் தேர்க .
விடை – பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்ப டுகிறது.
அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்ப டுகிறது?
ஆ) பானை எப்படி நமக்குப் பயன்ப டுகிறது?
இ) பானை எதனால் நமக்குப் பயன்ப டுகிறது?
ஈ) பானை எங்கு நமக்குப் பயன்ப டுகிறது?
விடை: அ) பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது
5)‘ஞானம்’ என்பதன் பொருள் யாது?
அ) தானம் ஆ) தெளிவு இ) சினம் ஈ) அறிவு
விடை: ஈ) அறிவு
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 1