ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 1

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

1) நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியவர் யார்?
விடை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
2) மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேங்களில் வாழக் கற்றுக் கொள் – என்ற பொன்மொழியைக் கூறியவர் யார்?
விடை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சுபாஸ் சந்திரபோஸ் (1)

3) இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான் என்று கூறியவர் யார்?
விடை: இராணுவப்படை தலைவர் தில்லான்
4) இந்திய தேசிய இராணுவம் 1944 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆன் நாள் எந்த இடத்தில் மூவண்ணக்கொடியை ஏற்றியது?
விடை: மொய்ராங்
5) “வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” – என்று கூறியவர் யார்?
விடை: அப்துல்காதர்

சீவக சிந்தாமணி

1) சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
விடை: திருத்தக்கத் தேவர்
2) விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
விடை: சீவக சிந்தாமணி
3) மணநூல் என்று அழைக்கப்படும் காப்பியம் எது?
விடை: சீவக சிந்தாமணி
4) சீவக சிந்தாமணியின் உட்பிரிவுகள் ——– என்று அழைக்கப்படுகிறது.
விடை: இலம்பகங்கள்
5) சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது?
விடை: 13
6) திருத்தக்கத்தேவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
விடை: கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
7) திருத்தக்கத்தேவர் சீவக சிந்தாமணி நூலை இயற்றுவதற்கு முன்னோட்டமாக ——– நூலை இயற்றினார்.
விடை: நரிவிருத்தம்
8) பொருத்துக
1.நற்றவம் – வினைத்தொகை
2.செய்கோலம் – உவமைத்தொகை
3.தேமாங்கனி – இடைக்குறை
4.இறைஞ்சி – பண்புத்தொகை
5.கொடியனார் – வினையெச்சம்
விடை:
1.நற்றவம் – பண்புத்தொகை
2.செய்கோலம் – வினைத்தொகை
3.தேமாங்கனி – உவமைத்தொகை
4.இறைஞ்சி – வினையெச்சம்
5.கொடியனார் – இடைக்குறை
9) பொருத்துக

 1. வருக்கை – கொம்பு
 2. மால்வரை – மணம்
 3. மருப்பு – பலாப்பழம்
 4. வெறி – பெரியமலை

விடை:

 1. வருக்கை – பலாப்பழம்
 2. மால்வரை – பெரியமலை
 3. மருப்பு – கொம்பு
 4. வெறி – மணம்

முத்தொள்ளாயிரம்

1) அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய விழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம் – இதில் குறிப்பிடப்பட்டுள்ள அள்ளல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
விடை: சேறு
2) கமுகு என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: பாக்கு
3) வெண்குடை, இளங்கமுகு என்பது ——— தொகை ஆகும்.
விடை: பண்புத்தொகை
4) மூன்று சேரர்களைப் பற்றி பாடப்படும் நூல் எது?
விடை: முத்தொள்ளாயிரம்
5) முத்தொள்ளாயிரம் ——– பாடல்களைக் கொண்டது.
விடை: 900
6) கொல்யானை, குவிமொட்டு என்பது ———- தொகை ஆகும்.
விடை: வினைத்தொகை
7) நந்து என்ற சொல்லின் பொருள் யாது?
விடை: சங்கு

மதுரைக்காஞ்சி

1) மதுரைக்காஞ்சி என்ற நூலை இயற்றியவர் யார்?
விடை: மாங்குடி மருதனார்
2) மதுரைக்காஞ்சி ——— நூல்களுள் ஒன்று.
விடை: பத்துப்பாட்டு
3) காஞ்சி என்பதன் பொருள் யாது?
விடை: நிலையாமை
4) மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் ——– பாடல்களைப் பாடியுள்ளார்.
விடை: 13
5) தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
அ) மதுரைக்காஞ்சியை பெருகுவள மதுரைக்காஞ்சி என்றும் கூறுவர்.
ஆ) மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
இ) 900 அடிகளைக் கொண்டுள்ளது மதுரைக்காஞ்சி
ஈ) மதுரைக்காஞ்சி 354 அடிகளிலும் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்து கூறியுள்ளது.
விடை:
6) பொருத்துக

 1. புரிசை – சாரளம்
 2. அணங்கு – அங்காடி
 3. நியமம் – மதில்
 4. புழை – முரசு
 5. பணை – தெய்வம்
மேலும் படிக்க  எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் - 2.2

விடை:

 1. புரிசை – மதில்
 2. அணங்கு – தெய்வம்
 3. நியமம் – அங்காடி
 4. புழை – சாரளம்
 5. பணை – முரசு

7) இலக்கணக் குறிப்பைப் பொருத்துக

 1. வாயில் – பண்புத்தொகை
 2. மா கால் – வினையாலணையும் பெயர்
 3. நெடுநிலை, முந்நீர் –வினைத்தொகை
 4. மகிழ்ந்தோர் – உரிச்சொல் தொடர்
 5. இமிழிசை – இலக்கணப்போலி

விடை:

 1. வாயில் – இலக்கணப்போலி
 2. மா கால் – உரிச்சொல் தொடர்
 3. நெடுநிலை, முந்நீர் – பண்புத்தொகை
 4. மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்
 5. இமிழிசை – வினைத்தொகை

8) நிலைஇய என்பது ———- அளபெடை ஆகும்.
விடை: சொல்லிசை
9) குழாஅத்து என்பது ———- அளபெடை
விடை: செய்யுளிசை

சந்தை

1) 18 ஏக்கர் பரப்பில் 8000 கடைகளுடன் 125 ஆண்டுகளாக ——- ஊரில் சந்தை இயங்கி வருகிறது.
விடை: போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி)
2) மணப்பாறை ——- சந்தைக்கு பெயர் பெற்றது.
விடை: மாட்டு
3) ஆட்டுச்சந்தைக்கு பெயர் பெற்ற ஊர் எது?
விடை: அய்யலூர்
4) கருவாட்டுச் சந்தைக்கு பெயர் பெற்றது எது?
விடை: காராமணி குப்பம்

ஆகுபெயர்

1) “முல்லையைத் தொடுத்தாள்” என்பது ———- ஆகுபெயர்.
விடை: பொருளாகு பெயர்
2) பொருளாகு பெயருக்கு —— என்ற பெயரும் உண்டு.
விடை: முதலாகுபெயர்
3) “வகுப்பறைச் சிரித்தது” என்பது ——- ஆகுபெயர்.
விடை: இடவாகு பெயர்
4) “கார் அறுத்தான்” என்பது ——– ஆகுபெயர் ஆகும்,.
விடை: காலவாகு பெயர்
5) “மஞ்சள் பூசினான்” என்பது ——– ஆகுபெயர்.
விடை: பண்பாகு பெயர்
6) “வற்றல் தின்றான்” என்பது ——– ஆகுபெயர்.
விடை: தொழிலாகு பெயர்
7) “வானொலி கேட்டு மகிழ்ந்தான்” என்பது ——- ஆகுபெயர்.
விடை: கருவியாகு பெயர்
8) “பைங்கூழ் வளர்ந்தது” என்பது ——- ஆகுபெயர்.
விடை: காரியவாகு பெயர்
9) “அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்” என்பது ——- ஆகுபெயர்.
விடை: கருத்தாவாகுபெயர்
10) “ஒன்று பெற்றால் ஒளிமயம்” என்பது ——– ஆகுபெயர்.
விடை: எண்ணலளவை ஆகுபெயர்
11) “இரண்டு கிலோ கொடு” என்பது ——– ஆகுபெயர்.
விடை: எடுத்தலளவை ஆகுபெயர்
12) “அரை லிட்டர் வாங்கு” என்பது ——- ஆகுபெயர்.
விடை: முகத்தலளவை ஆகுபெயர்
13) “ஐந்து மீட்டர் வெட்டினான்” என்பது —– ஆகுபெயர்.
விடை: நீட்டலளவை ஆகுபெயர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) இந்திய தேசிய இரா ணுவத்தை ……………இன் தலைமையில் ……………… உருவாக்கினர்.
அ) சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்
ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பா னியர்
இ)மோகன்சிங், ஜப்பா னியர்
ஈ மோகன்சிங், இந்தியர்
விடை: இ) மோகன்சிங்க், ஜப்பானியர்
2) சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை – இருக்கை___ஆ) புள் – தாவர ம்
இ) அள்ளல் – சேறு ஈ) மடிவு – தொடக்கம்
விடை: இ) அள்ளல் – சேறு
3) இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.
அ ) உருவகத்தொட ர், வினைத்தொகை ஆ) பண்புத்தொகை, வினைத்தொ கை
இ) வினைத்தொ கை, பண்புத்தொ கை ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்
விடை: ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை
4) நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே ,
அ ) பாண் டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ) சோழ நாடு, பாண் டிய நாடு
விடை: இ) சேர நாடு, சோழ நாடு
5) வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
இ. செறிவா ன வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
ஈ. பசுமை யான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்
விடை: அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
6) கூற்று – இந்திய தேசிய இராணுவப்பட தலைவராக இருந்த தில்லா ன், ”இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.
காரணம் – இந்திய தே சிய இரா ணுவத் திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள்
தமிழர்கள் .
அ) கூற்று சரி; காரண ம் சரி
ஆ) கூற்று சரி; காரண ம் தவ று
இ) கூற்று தவ று; காரண ம் சரி
ஈ) கூற்று தவ று; காரண ம் தவ று
விடை: அ. கூற்று சரி; காரணம் சரி

 ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம்-3

1 thought on “ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 1”

Comments are closed.