ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் -2

கல்வியில் சிறந்த பெண்கள்

1) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

     விடை: டாக்டர் முத்துலெட்சுமி

2) இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவர், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

     விடை: முத்துலெட்சுமி (1886 – 1968)

3) தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்ற பெண் யார்?

     விடை: மூவலூர் இராமாமிர்தம் (1883 – 1962)

4) வேலூரில் இலவசமாக மருத்துவம் அளித்த வெளிநாட்டுப் பெண்மணி யார்?

     விடை: ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் (1870 – 1960)

5) முதல் பெண் ஆசிரியர் யார்?

     விடை: சாவித்திரிபாய் பூலே (1831 – 1897)

6) பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமென்று தன்னுடைய 12 வயதில் போராட்டக்களத்தில் குதித்த பெண்மணி யார்?

     விடை: மலாலா (1997)

7) குழந்தைத் திருமணத்தை தடுக்க தடுக்க 1929 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் எது?

     விடை: சாரதா சட்டம்

8) சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்கலை எழுதிய பெண்மணி யார்?

விடை: ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார் (1906-1955)

9) 1930 ஆம் ஆண்டு அவ்வை இல்லம், 1952 ஆம் ஆண்டு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை கட்டிய பெண்மணி யார்?

     விடை: டாக்டர் முத்துலெட்சுமி

10) சங்ககால பெண்பால் புலவர்கள் யாவை?

 • ஔவையார்,
 • ஒக்கூர் மாசாத்தியார்,
 • ஆதிமந்தியார்,
 • வெண்ணிக் குயத்தியார்,
 • பொன்முடியார்,
 • அள்ளூர் நன்முல்லையார்,
 • நக்கண்ணையார்,
 • காக்கைப்பாடினியார்,
 • வெள்ளிவீதியார்,
 • காவற்பெண்டு
 • நப்பசலையார்

குடும்ப விளக்கு

1) குடும்ப விளக்கு என்ற நூலின் ஆசிரியர் யார்?

     விடை: பாரதிதாசன்

2) பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

     விடை: கனக சுப்புரத்தினம்

3) பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?

 • பாண்டியன் பரிசு
 • அழகின் சிரிப்பு
 • இருண்ட வீடு
 • குடும்ப விளக்கு
 • தமிழியக்கம்

4) பாரதிதாசன் எழுதிய நாடக நூலான பிசிராந்தையார் என்னும் நூலுக்கு ——- விருது கிடைத்தது.

     விடை: சாகித்ய அகாதெமி

5) கல்வி கற்காத பெண்களை பாரதிதாசன் —— என்று குறிப்பிடுகிறார்.

     விடை: களர்நிலம்

6) “மாக்கடல்” என்பது ——– தொடர் ஆகும்.

     விடை: உரிச்சொல் தொடர்

7) “வில்வாள்” என்பது ——— தொகை ஆகும்.

     விடை: உம்மைத்தொகை

8) “தவிர்க்கஒணா” என்பது ——- பெயரெச்சம் ஆகும்.

     விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

9) “பொன்னேபோல்” என்பது ——– ஆகும்.

     விடை: உவம உருபு

10) “மலர்க்கை” என்பது ——- தொகை ஆகும்.

     விடை: உவமைத்தொகை

சிறுபஞ்சமூலம்

1) சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் யார்?

     விடை: காரியாசான்

2) சிறுபஞ்சமூலம் ———- கணக்கு நூல்களுள் ஒன்று.

     விடை: பதினெண்கீழ்கணக்கு

3) ஐந்து சிறிய வேர்கள் யாது?

 • கண்டங்கத்திரி
 • சிறுவழுதுணை
 • சிறுமல்லி
 • பெருமல்லி
 • நெருஞ்சி

4) மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?

     விடை: காரியாசான்

5) 10 வயதிற்குள்ளே சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர் யார்?

மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் 3

     விடை: வள்ளலார்

6) 16 வயதிலே தனது தந்தையின் போர்ப்படையில் தளபதியானவர் யார்?

     விடை: மாவீரன் அலெக்சாண்டர்

7) 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்கு தன் கவிதைகளை எழுதியவர் யார்?

     விடை: விக்டர் ஹியூகோ

8) 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பாரதி பட்டம் பெற்றவர் யார்?

     விடை: பாரதியார்

9) 17 வயதில் பைசா நகர் கோபுரத்தின் விளக்கு ஊசல் ஆடுவது குறித்து ஆராய்ச்சி செய்தவர் யார்?

     விடை: கலீலியோ

10) “தாவா” என்பது —— பெயரெச்சம் ஆகும்.

     விடை: ஈறுகெட்ட எதிர்மறை

வீட்டிற்கோர் புத்தகசாலை

1) அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

     விடை: 2010

2) நடுவண் அரசு அண்ணா உருவப் படம் உள்ள ஐந்து ரூபாய் நாணயத்தை எந்த ஆண்டு வெளியிட்டது?

     விடை: 2009

3) நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்வையாக இருக்கட்டும் – என்று கூறியவர் யார்?

     விடை: அறிஞர் அண்ணா

4) தென்னகத்து பெர்னட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?

     விடை: அறிஞர் அண்ணா

5) அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் ——- மொழிச் சட்டத்தை உருவாக்கினார்.

     விடை: இருமொழி

6) சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் யார்?

     விடை: அறிஞர் அண்ணா

7) அண்ணா எந்த எந்த இதழ்களில் ஆசிரியாக பணிபுரிந்தார்?

 • ஹோம்ரூல்
 • ஹோம்லேண்ட்
 • நம்நாடு
 • திராவிடநாடு
 • ,மாலைமணி
 • காஞ்சி

8) அண்ணா துணை ஆசிரியாக பணியாற்றிய இதழ்கள் யாவை?

 • குடியரசு
 • விடுதலை

9) உலகின் மிகப்பெரிய நூலகம் எது? அது எங்கு அமைந்துள்ளது?

 • நூலகம்: லைப்ரரி ஆப் காங்கிரஸ்
 • இடம்: அமெரிக்கா

10) இந்தியாவிலே மிகப்பெரிய நூலகம் எது? அது எங்கு அமைந்துள்ளது?

 • நூலகம்: தேசிய நூலகம்
 • இடம்: கொல்க்கத்தா

11) இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நூலகம் எது? அது எங்கு அமைந்துள்ளது?

     நூலகம்: திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

13) உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது? அது எங்கு அமைந்துள்ளது?

14) ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எது?

 • நூலகம்: சரஸ்வதி மகால் நூலகம்
 • இடம்: தஞ்சாவூர்

15) சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞர்களின் வாதம் ஒரு விளக்கு – என்று கூறியவர் யார்?

     விடை: அறிஞர் அண்ணா

16) கத்தியை தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும் என்ற பொன்மொழிக்கு சொந்தக்காரர் யார்?

     விடை: அறிஞர் அண்ணா

இடைச்சொல் – உரிச்சொல்

1) ஆ, அல், இல் என்பவை ——— இடைநிலைகள் ஆகும்.

     விடை: எதிர்மறை

இடைச்சொல் - உரிச்சொல்

2) ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பவை —— இடைநிலைகள் ஆகும்.

     விடை: வேற்றுமை உருபுகள்

3) தல், அம், மை என்பவை ——- விகுதிகள்.

     விடை: தொழிற்பெயர்

மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 2

4) சரியான தொடர்களை தேர்வு செய்க

     அ) இது பழங்கள் அல்ல.

     ஆ) இவை பழங்கள் அல்ல

           விடை: ஆ) இவை பழங்கள் அல்ல

5) சரியான தொடரை தேர்வு செய்க:

 அ) ஏ என்னும் இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகியவற்றில் வரும்.

ஆ) ஆ என்னும் இடைச்சொல் வினாச்சொல்லாக வரும்.

இ) ஓ என்னும் இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலைகளில் வரும்.

ஈ) உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம் எச்சம் ஆகியவற்றில் வராது.

     விடை: அ, ஆ, இ

சரியான விடையைத் தேர்வு செய்க

1) பொருத்துக:

அ) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்

ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்

இ) சீவக சிந்தாமணி – 3.அற இலக்கியம்

ஈ) குறுந்தொகை –  4. தற்கால இலக்கியம்

(௧) அ-3, ஆ- 4, இ -1, ஈ- 2       (௨) அ- 2, ஆ- 3, இ- 1, ஈ- 4

(௩) அ- 3, ஆ-1, இ- 4. ஈ -2       (௪) அ- 4, ஆ -1, இ – 2, ஈ- 3

            விடை: () -3, – 4, -1, – 2       

2) பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணம் யாது?

அ) பெயரெச்சம், உவமைத்தொகை ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவக ம்

இ) வினையெச்சம், உவமை___ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொ கை

     விடை: ஈ

3) சரியான கூற்றினைத்தெ ரிவு செய்க .

அ) ‘ஆ’ என்ப து எதிர்மறை இடைநிலை.

ஆ) வீட்டிற்கோ ர் புத்தகசாலை என்ப து அண்ணாவின் மேடைப்பேச்சு.

இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்

 1. ஆ, இ சரி; அ தவ று 2. அ, இ, சரி; ஆ தவ று
 2. மூன்றும் சரி 4. மூன்றும் தவ று

     விடை: 2. அ, இ, சரி, ஆ தவறு

4) கீழ்க் காண்பனவற்றுள் உணர்ச்சித்தொடர் எது?

அ) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.

ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?

இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை !

ஈ) வாழ்க்கை யில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.

            விடை:

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 1

2 thoughts on “ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் -2”

Comments are closed.