ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 3

ஏறு தழுவுதல்

1) காளைச் சண்டையை தேசிய விளையாட்டாக கொண்டிருக்கும் நாடு எது?

     விடை: ஸ்பெயின் நாடு

2) தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் ——- ஆண்டு காலம் தொன்மையுடையது.

     விடை: 2000

3) எந்த அகழ்வாய்வில் மாடு தழுவும் கல் முத்திரை கிடைத்தது?

     விடை: சிந்து சமவெளி

4) எழுந்தது துகள்,

  ஏற்றனர் மார்பு,

  கவிழ்ந்தன் மருப்பு,

  கலங்கினர் பலர் – இந்த வரிகள் எந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

     விடை: கலித்தொகை

5) அகழ்வாய்வில் கிடைத்த கல் முத்திரை தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ——– தெரிவித்துள்ளார்.

     விடை: ஐராவதம் மகாதேவன்

மணிமேகலை

1) மணிமேகலையை இயற்றியவர் யார்?

     விடை: சீத்தலைச் சாத்தார்

2) இரட்டைக் காப்பியங்கள் யாவை?

     விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை

3) தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?

     விடை: இளங்கோவடிகள்

4) பெண்மையை முதன்மைப் படுத்தும் புரட்சிக் காப்பியம் என்று ——– அழைக்கப்படுகிறது.

     விடை: மணிமேகலை

5) ஐம்பெருங்குழு என்பவர் யார்?

 1. அமைச்சர்
 2. சடங்கு செய்விப்போர்
 3. படைத்தலைவர்
 4. தூதர்
 5. சாரணர்

6) எண்பேராயம் என்பர்கள் யார் யார்?

 1. கரணத்தியலவர்
 2. கரும விதிகள்
 3. கனகச்சுற்றம்
 4. கடைக்காப்பாளர்
 5. நகரமாந்தர்
 6. படைத்தலைவர்
 7. யானை வீரர்
 8. இவுளி மறவர்

7) தாழ்பூந்துறை என்பது —– தொகை ஆகும்.

     விடை: வினைத்தொகை

8) நண்பொருள், தண்மணல், நல்லுரை என்பது ——– தொகைகள் ஆகும்.

     விடை: பண்புத்தொகைகள்

9) பாங்கறிந்து என்பது ——– தொகை ஆகும்.

     விடை: இரண்டாம் வேற்றுமைத்தொகை

10) மாற்றுமின், பரப்புமின் என்பது —— வினைமுற்றுகள்.

     விடை: ஏவல் வினைமுற்றுகள்

11) உறுபொருள் என்பது —— தொடர் ஆகும்.

     விடை: உரிச்சொல்

12) காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் என்பது —– தொகைகள் ஆகும்.

     விடை: இரண்டாம் உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகள்

அகழாய்வுகள்

1) கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்கள் எல்லாம் ——– ஆண்டுகளுக்கு முற்ப்பட்டவை.

     விடை: 2300

2) 1914 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ——– கண்டுபிடிக்கப்பட்டன.

     விடை: முதுமக்கள் தாழிகள்

3) 1863 ஆம் ஆண்டு பல்லாவரத்தின் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தவர் யார்?

மேலும் படிக்க  ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் - பாடம் 3

     விடை: இராபர்ட் புரூஸ்புட்

4) ரோமானியர்களின் பழங்காசுகளை ——— ல் கண்டெடுத்தோம்.

     விடை: கோவை

5) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானியர்களின் ——– கிடைத்தன.

     விடை: மட்பாண்டங்கள்

6) பட்டிமன்றத்தின் இலக்கிய வழக்கு என்ன?

     விடை: பட்டிமண்டபம்

வல்லினம் மிகும் இடங்கள்

1) விகாரப் புணர்ச்சி ——- வகைப்படும்.

     விடை: மூன்று

வல்லினம் மிகும் இடங்கள் (2)

2) சரியான தொடரை தேர்வு செய்க

அ) சுட்டு எழுத்துகளில் வல்லினம் வராது.

ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் வராது.

ஈ) ஆறாம் வேற்றுமையில் வல்லினம் வரும்.

           விடை:

3) தவறான தொடரை தேர்வு செய்க

     அ) ஓரெழுத்து ஒருமொழிக்கு பின் வல்லினம் வரும்.

     ஆ) திசைப்பெயர்களில் வல்லினம் வராது.

     இ) மிக என்னும் சொல்லில் வல்லினம் வரும்.

     ஈ) இனி, தனி என்னும் சொற்களில் வல்லினம் வரும்.

           விடை:

சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுக

1) பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோ ள் – எருதுகட்டி  ஆ) திருவாரூர் – கரிக்கையூர்

இ) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு  ஈ) பட் டிமன்றம் – பட்டிமண்டபம்

     விடை: ஆ) திருவாரூர் – கரிக்கையூர்

2) முறையான தொடர் அமைபினைக் குறிப்பிடுக

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல் . 

ஆ) தமிழர்க ளின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.       

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல் .        

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளை யாட்டு ஏறுதழுவுதல் .

            விடை: ஈ

3) பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொ டர் –

அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்க ள் கிடை த்தன.

ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ள து.

இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

            விடை: அ, இ

4) ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.

அ) திசைச்சொற்கள் ஆ) வடசொற்கள்  இ) உரிச்சொற்கள் ஈ) தொகைச்சொற்கள்

     விடை: ஈ) தொகைச்சொற்கள்

5) சொற்டொர்களை முறைப்படுத்துக

அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது.

     விடை: ஆ – அ – இ

மேலும் படிக்க  6ம் வகுப்பு  தமிழ் முதல் பருவம் பாடம் 2

திருக்குறள்

1) அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை .- இதில் என்ன அணி பயின்று வந்துள்ளது?

     விடை: உவமை அணி

2) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்  – இதின் என்ன அணி பயின்று வந்துள்ளது?

     விடை: சொல்பொருள் பின்வருநிலையணி

3) பெருமைக்கும் ஏனைச் சிருமைக்கும் தத்தம்

  கருமமே கட்டளைக் கல் – இதில் என்ன அணி வந்துள்ளது?

     விடை: ஏகதேச உருவக அணி

4) சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று – இதில் என்ன அணி வந்துள்ளது?

     விடை: உவமை அணி

5) உலகப் பனுவல் என்று அழைக்கப்படும் நூல் எது?

     விடை: திருக்குறள்

6) திருக்குறள் ——— நூல்களுள் ஒன்று.

     விடை: பதினெண்கீழ்கணக்கு

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 2

1 thought on “ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 3”

Comments are closed.