ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 1

திராவிட மொழிக்குடும்பம்

1) தமக்குத் தோன்றிய கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவியின் பெயர் என்ன?
விடை: மொழி
2) இந்தியாவில் ———– க்கும் மேற்ப்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
விடை: 1300
3) மொழிக்குடும்பங்களை ——— வகைகளாக பிரிக்கின்றன.
விடை: நான்கு
4) மொழிக்குடும்பங்கள் யாவை?

 1. இந்தோ – ஆசிய மொழிகள்
 2. திராவிட மொழிகள்
 3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
 4. சீன – திபெத்திய மொழிகள்

5) இந்திய நாடு மொழிகளின் கட்சிசாலையாகத் திகழ்கிறது என்று யார் குறிப்பிட்டுள்ளார்?
விடை: ச. அகத்தியலிங்கம்
6) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
விடை: குமரிலபட்டர்
7) தமிழ் என்னும் சொல்லிருந்து திராவிடம் என்னும் சொல் பிறந்தது ——— குறிப்பிட்டுள்ளார்.
விடை: ஹீராஸ் பாதிரியார்
8) திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்று திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் குறிப்பிட்டவர் யார்?
விடை: கால்டுவெல்
9) திராவிட மொழிகளின் எண்ணிக்கை யாது?
விடை: 28
10) தமிழ் வடமொழியின் மகளன்று, அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – என்று குறிப்பிட்டவர் யார்?
விடை: கால்டுவெல்
11) தமிழில் பழமையான இலக்கிய நூல் எது?
விடை: சங்க இலக்கியம்
12) தமிழில் பழமையான இலக்கண நூல் எது?
விடை: தொல்காப்பியம்
13) ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்த திராவிட மொழி எது?
விடை: தமிழ்
14) திராவிட மொழிகளின் தாய்மொழியாக விளங்குவது ——- ஆகும்.
விடை: தமிழ்

தமிழோவியம்

1) தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை: ஈரோடு தமிழன்பன்
2) வணக்கம் வள்ளுவ என்னும் கவிதை நூலுக்கு 2004 ஆம் ஆண்டு —— விருது வழங்கப்பட்டது.
விடை: சாகித்திய அகாதெமி விருது
3) ஈரோடு தமிழன்பனின் எந்நூல் தமிழக அரசால் பரிசு பெற்றது?
விடை: தமிழன்பன் கவிதைகள்
4) ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்தவர் யார்?
விடை: ஈரோடு தமிழன்பன்
5) உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை: பிப்ரவரி 21
6) ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான் என்று குறிப்பிட்டவர் யார்?
விடை: ஈரோடு தமிழன்பன்
7) இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூரியவர் யார்?
விடை: பிங்கல நிகண்டு
8) காலமும் என்பது ——– ஆகும்.
விடை: முற்றுமை
9) தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் யாவை?
விடை: இலங்கை, சிங்கப்பூர்

மேலும் படிக்க  ஏழாம் வகுப்பு முதலாம் பருவம் பாடம் – 3

தமிழ்விடு தூது

1) மூன்று குணங்கள் யாவை?
சத்துவம், அமைதி, மேன்மை
2) வண்ணங்கள் ஐந்து என்பது எந்த நிறத்தைக் குறிக்கிறது?
வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை
3) தூது என்பது ——– இலக்கியம் என்றும் ——- இலக்கியம் என்றும் அழைக்கப்படும்.
விடை: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
4) தமிழ் விடுதூது எத்தனை கண்ணிகளைக் கொண்டது?
விடை: 268
5) 1930 ஆம் ஆண்டு தமிழ்விடு தூதுவை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
விடை: உ.வே.சா
6) தூது என்பது ——— வகைகளுள் ஒன்று ஆகும்.
விடை: சிற்றிலக்கிய வகை
7) இலக்கணக் குறிப்பை பொருத்துக:

 1. முத்திக்கனி – ஓரெழுத்து மொழி
 2. தெள்ளமுது – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 3. சிந்தா மணி, குற்றமிலா – உருவகம்
 4. நா – பண்புத்தொகை

விடை:

 1. முத்திக்கனி – உருவகம்
 2. தெள்ளமுது – பண்புத்தொகை
 3. சிந்தாமணி, குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 4. நா – ஓரெழுத்து மொழி

வளரும் செல்வம்

1) சாப்ட்வேர் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பெயர் என்ன?
விடை: மென்பொருள்
2) ப்ரௌசர் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பெயர் என்ன?
விடை: உலவி
3) க்ராப் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பெயர் என்ன?
விடை: செதுக்கி
4) கர்சர் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பெயர்பெயர் என்ன?
விடை: ஏவி அல்லது சுட்டி
5) சர்வர் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பெயர் என்ன?
விடை: வையக விரிவு வலை
6) போல்டர் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பெயர் என்ன?
விடை: உறை
7) உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது ——— மொழி ஆகும்.
விடை: கிரேக்கம்
8) பொருத்துக

 1. முந்திரி – 1/20
 2. ஒருமா – 1/320
 3. காணி – 1/5
 4. நாலுமா – 1/80

விடை:

 1. முந்திரி – 1/32
 2. ஒருமா – 1/20
 3. காணி – 1/80
 4. நாலுமா – 1/5

9) கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்பதை எந்நூல் குறிப்பிட்டுள்ளது?
விடை: எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்

தொடர் இலக்கணம்

1) படித்தாய் என்பது ———- எழுவாய் ஆகும்.
விடை: தோன்றா எழுவாய்

தமிழ் - தொடர் இலக்கணம்


2) நான் வந்தேன் என்பது ———— ஆகும்.
விடை: வினைப் பயனிலை
3) சொன்னவள் கலா என்பது ——- பயனிலை ஆகும்.
விடை: பெயர்ப் பயனிலை
4) விளையாடுபவன் யார்? என்பது —– பயனிலை ஆகும்.
விடை: வினாப் பயனிலை
5) நல்ல நூல் ஒன்று படித்தேன் என்பது ——- ஆகும்.
விடை: பெயரடை
6) மகிழ்நன் மெல்ல வந்தான் என்பது ——– ஆகும்.
விடை: வினையடை
7) அப்பா சென்றார் என்பது ——– தொடர் ஆகும்.
விடை: செய்வினை
8) தோசை வைக்கப்பட்டது என்பது ———- தொடர் ஆகும்.
விடை: செயப்பாட்டு வினை
9) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு ( பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றா பருவம் பாடம் – 3

2 thoughts on “ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதலாம் பருவம் பாடம் – 1”

Comments are closed.