You have been blocked from seeing ads.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு

அவர்தான் வங்காள சிங்கம், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

இளமைக்காலம்:

நேதாஜி 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 நாள் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதியினருக்கு 9 ஆவது குழந்தையாகப் பிறந்தார்.

இவருடன் 13 பேர் உடன் பிறந்தவர்கள். 7 சகோதரர்கள் மற்றும் 6 சகோதரிகள்.

இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் என்னும் இடத்தில் பிறந்தார்.

நேதாஜி சிறுவயதிலிருந்தே படிப்பில் பயங்கர சுட்டியாக இருந்தார்.

  • இவரின் தாய் பிரபாவதி அதிகமாக ஆன்மிகச் சிந்தனை உடையவராக இருந்தார், அதனால் நேதாஜியும் சிறுவயதிலிருந்தே விவேகானந்தரின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார்.

இவரின் தந்தை ஜானகிநாத் போஸ் வழக்கறிஞராக பணி புரிந்து வந்தார்.

இவர் பாப்டிஸ்ட் மிசன் பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கொல்கத்தாவில் உள்ள ரேவன்ஷா கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இவர் பிரம்மானந்தரின் மேல் அதிக ஈடுபாடு கொண்டமையால் துறவு வாழ்க்கையை மேற்க்கொள்ள முடிவு செய்தார்.

பின்னர் அவருடைய தந்தையின் வேண்டுகோளால் 1915 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் படித்தார்.

அங்கு ஓட்டன் என்னும் ஆசிரியர் இந்தியர்களை இழிவுபடுத்திக் கொண்டே இருந்தார், இதனை தாங்க முடியாத சுபாஷ் அந்த ஆசிரியரை அடித்து விட்டார்.

இதனால் அவர் அந்தக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார், பின்பு இரண்டு ஆண்டுகள் வரை எந்தக் கல்லூரியிலும் படிக்க முடியாபதபடி செய்தது அந்தக் கல்லூரி நிர்வாகம்.

1917 ஆம் ஆண்டு சி.ஆர். தாஸ் என்பரின் உதவியுடன் ஸ்காட்ச் சர்ச் கல்லூரியில் படித்தார்.

பின்பு இவர் லண்டனின் ஐ.சி.எஸ் தேர்விற்கு படிக்கச் சென்றார், அதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுபாஷ்

You have been blocked from seeing ads.

அங்கே பணி புரிந்து வந்தார், அப்பொழுது தான் இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.

அதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை அறிந்த சுபாஸ் தன்னுடைய பணியை ராஜினாமா பண்ணி விட்டார்.

அப்போது அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவர் இவ்வளவு மதிப்புக்க வேலையை விட்டு சென்றால் உன் பெற்றோர்கள் வருத்தப்பட மாட்டார்களா? என்றார்.

என் பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள், ஆனால் என் தாய் நாட்டின் வருத்தம் அதைப் விட பெரியது அல்லவா? என்று சொல்லி விட்டு அங்கிருந்து இந்தியா வந்தார்.

பின் சி.ஆர். தாஸ் என்பவரின் தேசிய கல்லூரியில் தலைவராகப் பணியாற்றினார்.

அப்பொழுது அவருக்கு வெறும் 25 வயது மட்டுமே நிரம்பியிருந்தது, சுபாஷ் சந்திரபோஸ் நாட்டில் ஆங்கிலயரின் அடக்குமுறைகளை கண்டு கொத்தளிந்தார்.

சித்தரஞ்சன் தாஸ் என்பரும் சுபாஸூம் காந்திஜியை சந்தித்து காங்கிரஸில் இணைந்தனர்.

விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி:

காங்கிரஸில் இணைந்த பிறகு மேடைப் பேச்சுகளின் போது நாம் அமைதி முறையில் போராடினால் பல ஆன்டுகள் போராடிக் கொண்டே தான் இருப்போம்.

மேலும் படிக்க  தேசியகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

இதனால் பல அப்பாவி மக்களின் உயிர்கள் தான் போகிறது, நாம் படைகளைத் திரட்டி ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து விரட்டியடிப்போம் என்றார்.

என்னிடம் உங்களின் இரத்தம் தாருங்கள், விடுதலை நான் வாங்கி தருகிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்

இவரின் பேச்சால் இளைஞர்கள் அனைவரும் உணர்ச்சி பொங்க விடுதலைப் போராட்டத்தில் இரங்கத் தொடங்கினர்.

ஆனால் காந்திஜிக்கு நேதாஜியின் வன்முறை மிகுந்த பேச்சு பிடிக்கவில்லை, அறவழியில் போராடுவதே சிறந்தது என்று கருதினார்.

னைத்து மக்களுக்கும் பரவத் தொடங்கியது, இதனைக் கவனித்த ஆங்கிலேய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

அப்பொழுது அவர் சிறையில் இருந்தபடியே வங்காளத்தில் தேர்தலில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார், இதனைக் கண்டு ஆங்கிலேய அரதே மிரண்டு போனது.

சிறையில் இருந்தபடியே ஒருவனால் வெற்றி பெற முடியும் என்றால் அவன் சாதரணமான மனிதன் இல்லை என்று நினைத்தது பிரிட்டீஷ் அரசு.

காந்தியின் சில கருத்துகள் பாதி தலைவர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் அதை அவர்முன் சொல்ல தயங்கினர், ஆனால் நேதாஜியோ அவர் முன்னாடியே இது சரியில்லை என்று கூறிவிடுவாராம்.

இதனாலே காந்திஜிக்கும் நேதாஜிக்கும் இடையே பிளவு ஏற்ப்பட்டது.

1939 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார் நேதாஜி, ஆனால் காந்திஜி அவரை எதிர்க்கும் பொருட்டு பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்தினார்.

ஆனால் நேதாஜி தேர்தலில் வெற்றி பெற்றார், இதனால் காந்திஜி தனக்கு வந்த தோல்வியாய் கருதி உண்ணாவிரதம் மேற்க்கொண்டார்.

இதனால் நேதாஜியே அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.

பின்னர் சுயராஜ்யாம் என்ற கட்சியை சி.ஆர். தாஸ் என்பவரும் நேதாஜியும் உருவாக்கினார்கள்.

அதேபோல் சுயராஜ்யா என்ற இதழையும் நடத்தினார்கள், அந்த இதழில் மக்களுக்கு உணர்ச்சி பொக்களிக்கும் வகையில் எழுதினார்.

இதனை கண்ட ஆங்கிலேய அரசு அதை தடை செய்யக் கோரியது, மேலும் புரட்சியை தூண்டுவத்ற்காக சிறையிலும் அடைத்தது நேதாஜியை.

இவர் இந்திய இராணுவப் படையை தயார் படுத்திக் கொண்டு இருந்தார், அதில் பெண்கள் பிரிவுக்கு ஜான்சிராணி படை என்று பெயரிட்டார்.

நேதாஜியின் வெளிநாட்டு பயணம்:

இரண்டாம் உலகப் போர் நடக்க இருக்கும் சமயத்தில் சிறையில் இருந்து தப்பித்து ஆப்கானிஸ்தான் சென்றார்.

பின்பு, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று இந்தியாவிற்கு உதவும் படி கேட்டார்.

ஜப்பான் உதவிக்கரம் நீட்டியது, பிரிட்டீஸ்கு ஜப்பான் தான் எதிரி நாடு அதேபோல் இராணுவத்தில் வலுப்பெற்று இருந்தது.

அங்கிருக்கும் இந்தியர்களைக் கொண்டு தேசிய இராணுவப் படையை அமைத்து வழி நடத்தினார்.

மேலும் படிக்க  ஆங்கிலேயரை முதலில் எதிர்த்த பூலித்தேவன்...

பின்பு இந்திய இராணுவப் படையை வைத்தே ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிய வைத்தார், அப்பொழுது அவர் பர்மாவில் இருந்தார்.

ஆனால் அந்தப் போர் தோல்வியை தழுவியது.

ஆனால் நேதாஜி வீரர்களுக்கு இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவிற்கு சுசந்திரம் கிடைத்துவிடும் யாரும் வருந்தாதீர்கள் என்று கூறினாராம்.

ஹிட்லர் நேதாஜிடம் இந்தியா விடுதலை பெறாது என்று கூறியதும், யாரும் எனக்கு அரசியல் சொல்லித்தர தேவையில்லை என்று சொல்லி விட்டு வந்தாராம்.

ஹிட்லரை நேதாஜியைத் தவிர யாரும் இப்படி அவமதித்தில்லை.

ர்.

விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு
You have been blocked from seeing ads.