நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு

இளமைகாலம்:

நெல்சன் மண்டேலா தான் உலகத்திலேயே அதிகநாள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தவர்.

இவர் காந்தியின் அறவழியையும் நேதாஜின் ஆயுதப் போராட்டத்தையும் கையில் எடுத்தவர்.

தன் நாட்டு மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவே கடுமையான சிறைவாசத்தை மேற்க்கொண்டார்.

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 நாள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிர்வேஷா என்ற கிராமத்தில் ஹேட்லா ஹென்றிக்கும் ரோகா விற்கும் மகனாகப் பிறந்தார்.

இவருடைய முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா ஆகும்.

அவரது கிராமத்தில் அவர் தான் முதலில் பள்ளிக்குச் சென்றவர், அந்த நாட்டில் வெள்ளையர்கள் குறைவாகவும் கருப்பின மக்கள் அதிகமாக இருந்தாலும் கருப்பின மக்களை அவர்களின் கீழ் வைத்திருந்தனர்.

கருப்பு நிற மக்கள் சொந்தமாக தனக்கென்று ஒரு நிலம் வைத்து இருக்கக் கூடாது, தன்னுடைய சொந்த நாட்டிலே ஒரு இடத்தில் இன்னொரு இடத்திற்கு சுதந்திரமாக பயணம் செய்யக் கூடாது, அப்படி செய்தால் கையில் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டுமாம்.

இப்படி அடிப்படை உரிமைகள் கூட வெள்ளையர்கள் இவர்களுக்கு வழங்கவில்லை.

அதனால் தன் இனத்து மக்களின் சுதந்திரத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்தார் நெல்சன்.

இவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டார், குத்துச் சண்டை மற்றும் போர் கலைகளையும் கற்றார்.

இவர் சோசா மொழி பேசும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர், இவருக்கு 9 சகோதரிகளும் 3 சகோதரர்களும் இருந்தனர்.

மண்டேலா சிறுவயதில் சகோதரர்களுடன் மாடு மேய்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தார்.

இவர் ஒரு கிறித்துவப் பள்ளியில் படிக்கும் பொழுது அங்கு உள்ள ஆசிரியர் மண்டேலாவிற்கு நெல்சன் என்று கிறித்துவப் பெயரை வைத்தார், அங்கு படித்த அனைத்து மாணவர்களும் கிறித்துவ பெயர்களே இருந்தது.

இவருடைய தந்தை இவர் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுதே இறந்து போனார்.

மண்டேலாவுக்கு சிறுவயதில் இருந்து வெள்ளையர்களின் அடக்குமுறை மீது கோவம் கொண்டார், அதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

1938 ஆண் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த மண்டேலா தன்னுடைய பட்டப் படிப்பை லண்டனில் உள்ள “போர்ட்ஹேர்” பல்கலைகழகத்தில் படித்தார்.

அந்தக் கல்லூரியில் மட்டும் தான் மேலைநாட்டு கல்வி கற்றுத் தரப்பட்டது.

மண்டேலா

அந்தக் கல்லூரியில் மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னின்று நடத்தியதால் அந்தக் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டர்.

பின்னர் தென்னாப்பிரிக்கா பல்கலைகழகத்தில் சேர்ந்து தன் பாதி பட்டப் படிப்பை படித்து முடித்தார்.

1941 ஆம் ஆண்டு தன்னுடைய சட்டப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்தார்.

பின்பு நோமதாம் சங்கர் என்ற செவிலியரை மணந்து கொண்டார், அவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் பிறந்தது.

இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

பின்னர் வின்னி மடிகி லேனா வை திருமணம் செய்து கொண்டார், இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது.

அரசியல் வாழ்க்கை:

1942 ஆம் ஆண்டு தென்னாப்ப்பிரிக்கா தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

தேசிய காங்கிரஸில் 60 இளைஞர்களைக் கொண்டு இளைஞர் அணி ஒன்றை உருவாக்கினார்.

60 இளைஞர்களுக்கும் கறுப்பின மக்களின் அடிமைதனத்திற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று உரிமை குரலை எழுப்பினார்.

மேலும் படிக்க  TOP 5 BEST SMART PHONE IN INDIA 2021

பின் இளைஞர்களைக் கொண்டு தன்னுடைய நாட்டு மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் உரிமையை எடுத்துக் கூறினார், நாம் வாக்குரிமை பெற வேண்டும், நம்முடைய சொந்த நாட்டிலே நாம் ஏன் இப்படி அடிமையாக வாழ வேண்டும் என்று உணர்ச்சி பொங்க அமைதி வழியில் அறப் போராட்டம் செய்தார்.

இவர்களின் போராட்டத்தால் தூக்கி கிடந்த மக்கள் சற்று விழிக்க ஆரம்பித்தனர், அந்நாட்டு மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த வெள்ளையர்கள் அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று மண்டேலாவையும் அவரது நண்பர்களையும் 1956 ஆம் ஆண்டு கைது செய்தது.

அவர் சிறையில் இருக்கும் பொழுதே சிறைவாசிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மண்டேலா

பின்பு அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு 1960 ஆம் ஆண்டு மண்டேலா சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.

அவர் வந்த பிறகு தன் சொந்த நாட்டில் பாஸ்போர்ட் வைத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்ற வெள்ளையர்களின் சட்டத்திற்கு எதிராக பல இளைஞர்களைக் கொண்டு ஊர்வலம் நடத்தினார்.

அப்பொழுது வெள்ளையர்களின் அரசு 69 பேரை சுட்டுக் கொண்டது. அமைதியான முறையில் போராட்டம் செய்வது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த மண்டேலா நேதாஜி போல் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதத்தை ஏந்த தீர்மானித்தார்.

அவர் ஆயுதப் படையின் தலைவரானர், பின்பு வெள்ளையர் அரசின் மீது தாக்குதல்களை நடத்தினார், இதனால் இவரை கைது செய்ய வெள்ளையர்கள் அரசு வலைவீசி தேடியது.

1962 ஆம் ஆண்டு தலைமறைவாய் இருந்த மண்டேலாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்பு 1964 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அரசை கலைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

நாட்டின் மீது பற்று:

1969 ஆம் ஆண்டு தன்னுடைய மகன் கார் விபத்தில் இறந்த செய்தி கேட்டு மனம் உடைந்த மண்டேலா மகனின் ஈமை காரியத்திற்கு செல்ல அனுமதி கேட்டார்.

ஆனால் வெள்ளையர்கள் நீ மன்னிப்பு கேட்டால் விட்டு விடுகிறோம் என்று கூறினார்கள்.

அதற்கு மண்டேலாவோ நான் செய்தது தவறில்லை, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

அவர் நினைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டு விட்டு தன் மகனின் முகத்தை கடைசியாக பார்க்க சென்றிருக்கலாம் ஆனால் தன் நாட்டின் மக்களுக்காக அதை தவிர்த்து விட்டார்.

அவர் சிறையில் இருக்கும் பொழுது அவரை விடுதலை செய்யக்கோரி அவரது இரண்டாவது மனைவியும் அந்நாட்டு மக்களும் போராட்டம் செய்தனர்.

இவரின் விடுதலைக்காக உலக நாடுகள் அனைத்தும் குரல் கொடுத்தனர், இவர் சிறையில் இருக்கும் பொழுதே இந்திய நாடு அவருக்கு நேரு சமாதான விருது வழங்கியது,

அதனை அவரது மனைவி டெல்லியில் வந்து பெற்றுச் சென்றார்.

தொடந்து 27 வருடம் சிறை தண்டனை பெற்றார், பின்பு வெள்ளை அரசின் ஜனாபதி பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆட்சிக்கு வந்த பிறகு மண்டேலாவின் மக்களாட்சி கோரிக்கைகள் ஏற்க்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 வில்  அவருடைய 71 வயதில் விடுதலை செய்தது.

மேலும் படிக்க  போதி தர்மர் வாழ்க்கை கதை – தமிழில்

இவரின் விடுதலை நாளன்று உலக நாட்டு மக்கள் அவரை வரவேற்க ஏற்ப்பாடுகள் செய்தனர், அவர் சிறையில் இருந்து வந்ததை அந்நாட்டு மக்கள் டிவி யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மண்டேலா

இந்தியா சார்பாக வி.பி.சிங் தலைமையில் வரவேற்புக்குழு ஒன்று அமைத்து அவரை வரவேற்றது.

இவர் 1994 ஆம் ஆண்டு மே 10 மக்களாட்சி தேர்தலில் போட்டியிட்டு தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஆனார், அவரே கருப்பின மக்களின் முதல் ஜனாதிபதி ஆவார்.

மண்டேலாவின் செயல்:

1999 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அவர் அடுத்த தேர்தலில் பங்கேற்கவில்லை, ஏன் என்று காரணம் கேட்டால் ஒருவனே ஒருநாட்டை ஆளக்கூடாது, இளைய சமுதாயத்திற்கும் வழிவிட வேண்டும் என்று கூறினார்.

இவர் ஜனாதிபதியாக இருக்கும் பொழுது ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பக்கத்து டேபிளில் தனியாக அமர்ந்து சாப்பிட்ட ஒருவரை அழைத்து இவருடன் சாப்பிடச் செய்தார்.

அந்த நபரின் கை, கால்கள் நடுங்கிக் கொண்டே இருந்தது, பிறகு வேகமாக சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அப்பொழுது மண்டேலாவின் உதவியாளர், தங்களின் அருகில் இருந்து சாப்பிடுவதற்கு பயந்து இருக்கிறார் அவரின் கை, கால்கள் நடுங்கின என்றார்.

அதற்கு மண்டேலாவோ இவரை இதற்கு முன்னாலே எனக்கு நன்றாக தெரியும், நான் சிறையில் இருக்கும் பொழுது என்னை அடித்தவர், அவர் அடிக்குப் பொழுது தாகமாக இருக்கிறது தண்ணீர் தாருங்கள் என்று கேட்டால் அவரின் சிறுநீரை என் முகத்தில் அடித்து குடி என்பார்.

நான் இன்று ஜனாதிபதி யாக இருப்பதால் அவரை தண்டித்து விடுவேன் என்று தான் பயந்து போயிருப்பார், ஒரு நாட்டை ஆட்சி செய்யும் நான் பழிவாங்கும் குணம் கொண்டிருந்தால் வன்முறை மட்டுமே நிகழும்.

மன்னிக்கும் குணம் கொண்டிருந்தால் நாட்டை அமைதியான வழியில் ஆட்சி செய்யலாம் என்றார், இவரின் பதிலைக் கேட்டு உதவியாளர் மெய் சிலிர்த்துப் போனார், இப்படியும் ஒரு தலைவரா என்று.

மண்டேலா

இன்று எந்த அரசியல் வாதிகள் இப்படி இருப்பார்கள், இவரை தென்னிந்தியாவின் கருப்பு காந்தி என்றும் அழைப்பார்கள்.

1990 ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது. 1993 யில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் மேலும் நல்லிணத்துனக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது வழங்கப்பட்டது.

இவர் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 5 தேதி  தன்னுடைய 95 ஆம் வயதில் இம்மண்ணை இட்டு மறைந்தார்.

ஜகவர்லால் நேரு வாழ்க்கை வரலாறு

.