நல்லதங்காள் கதை – உண்மை சம்பவம்

அர்ச்சனாபுரம்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்சனாபுரம் என்னும் ஊரையும் அதைச் சுற்றி உள்ள பகுதியையும் ஆட்சி செய்து வந்தவர் தான் இராமலிங்க சேதுபதி, அவருடைய மனைவி இந்திராணி.

அர்சானாபுரம் செல்வ செழிப்பில் காணப்பட்டது, அந்த ஊரில் தென்னை மரங்களும் தேக்கு மரங்களும் எண்ணிட முடியாத அளவுக்கு இருந்தது.

இராமலிங்க சேதுபதிக்கும் இந்திராணிக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து தான் இரண்டு குழந்தைகள் பிறந்தது.

அதில் ஆண் குழந்தையின் பெயர் நல்லதம்பி, பெண் குழந்தையின் பெயர் நல்லதங்காள்.

இருவரும் வளர்ந்து வரும் தருணத்தில் இந்திராணி உடல்நல குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

அதனால் அந்தக் குடும்பத்தை நிர்வகிக்க ஒரு பெண் தேவை என்பதால் நல்லதம்பிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

நல்லதம்பியின் திருமணம்:

குந்தல நாட்டில் உள்ள இராஜவம்சத்தைச் சேர்ந்த மூழி அலங்காரியை திருமணம் முடித்து வைக்கின்றனர்.

சிறிது நாட்களில் அவர்களின் தாய் இந்திராணியும் இறந்து போய்கின்றார்.

பிறகு இராமலிங்க சேதுபதி தன் மனைவியின் பிரிவு தாங்காமலும் தன் மகளுக்கு இன்னும் திருமணம் முடிக்கவில்லையே என்ற ஏக்கத்திலும் தன் உயிரையும் விட்டார்.

நல்லதம்பி தன் தங்கை மேல் அளவு கடந்த பாசத்தை வைத்து இருந்தான்.

நல்லதங்காகவின் பெற்றோர்கள் பாசம் காட்டியதை விட நல்லதம்பியே அதிகமான அன்பை பொழிந்தான்.

அவனுடைய அன்பு தாய்பசுவின் மடியில் கரந்த தூய பாலுக்கு இணையாகவும் மேகம் பொழியும் மாரியைப் போன்று தூய்மைகாவும் இருந்தது.

நல்லதம்பி அவளுக்கு பல மாதங்களாக பல இடங்களில் நல்ல வரனுக்காக அலைந்துகொண்டிருந்தான்.

பிறகு நல்ல ஒரு வரனை தேடிப் பிடித்தார்.

நல்லதங்காவின் திருமணம்:

சிவகங்கையை அடுத்த மானாமதுரையில் ஆட்சி செய்த காசிராஜாவிற்கு நல்லதங்காவை கோலாகாலமாக திருமணம் நடத்தி வைத்தான் நல்லதம்பி.

திருமணத்தின் சீர் வரிசையே ஓர் ஊர் அளவிற்கு கொடுத்தார். அவளுக்கு பணிவிடை செய்ய ஏழு பணிப்பெண்களையும் அனுப்பி வைத்தார்.

மாடுகளும் ஆடுகளும் விலையுயர்ந்த ஆபரணங்களும் கொடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்த நல்லதம்பியின் மனைவிக்கு கோபம் தாங்க முடியவில்லை.

தன் தங்கையின் திருமணத்தன்று நல்லதம்பி ஒரு தாயைப் பிரிந்த குழந்தை போல தேம்மி அழுது கொண்டிருந்தான்.

நல்லதங்காவிற்கு திருமணம் முடித்த பிறகு அவனை மானமதுரைக்கு நல்லதங்காவை பார்க்க அனுமதிக்கவில்லை மூழி அலங்காரி, எதாவது காரணம் காட்டி தடுத்து விடுவாள்.

நல்லதங்காவின் நிலை:

மானாமதுரையில் 12 ஆண்டுகளாக மழை பொழியாமல் விவசாயம் நடை பெறாமலும் மக்கள் பசியிலும் பட்டினியில் வாடிக் கொண்டிருந்தான்.

நல்லதங்காவிற்கு 12 ஆண்டுகளில் 7 குழந்தைகள் பிறந்தனர், 4 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும்.

தன் நாட்டின் மக்களின் பசியைப் போக்க காசிராஜா தன் அரண்மனையின் தானியக் கிடங்கில் உள்ள தானியங்களை எல்லாம் மக்களுக்கு வழங்கினார்.

தன்னுடைய மக்கள் சாப்பிட்ட பின்னே காசிராஜா சாப்பிடுவான்.

அனைத்து தானியங்களும் முடிந்த பின் தன்னுடைய நாட்டு மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தார் காசிராஜா.

காசி ராஜாவும் நல்லதங்காவும் வீட்டில் உள்ள உரல், பண்டங்கள், பாத்திரங்கள் அனைத்தையும் விற்று பசியைப் போக்கினர்.

ஒருசமயத்தில் விற்பதுக்குகூட ஒன்றும் இல்லாமல் இருந்தது.

நாட்கள் செல்ல செல்ல நல்லதங்காவின் பிள்ளைகளும் பசியால் வாடத் தொடங்கினர்.

ஒரு எலும்புக்கூடைப் போல் காட்சியளித்தனர். இதனால் நல்லதங்காள் காசிராஜவிடம் என் அண்ணன் இத்தனை ஆண்டுகளாக என்னை பார்க்க வரவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை.

நாம் நேரில் சென்று நம்முடைய நிலையை சொன்னால் நமக்கு உதவி செய்வார் என்றாள்.

அதற்கு காசிராஜா நாம் இந்த நிலமையில் அங்கு செல்லக் கூடாது. நாம் நல்ல நிலையில் இருந்து சென்றால் தான் நமக்கு பெருமை என்றான்.

மேலும் படிக்க  MOTIVATIONAL STORY - மாயாவின் அவமானம்

நாம் கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம். அங்கு செல்ல வேண்டாம் என்றான்.

அதற்கு நல்லதங்காள் நம்மளுடைய குழந்தைகள் பசியால் இறந்து விடுவார்கள் உணவு இல்லாமல், இவர்களுக்காகவாது நான் செல்கிறேன். இவர்கள் பசியாவது போகும் என்றாள்.

சரி நீயும் குழந்தைகளும் செல்லுங்கள் நான் இங்கே இருக்கிறேன் என்றான்.

அவளும் தன் ஏழு குழந்தைகளை அழைத்துக் கொண்டு நல்லதம்பியின் வீட்டிற்குச் செல்கிறாள்.

ஒரு காட்டின் வழியே போகும் போது குழந்தைகள் பசியால் அலறிக் கொண்டிருந்தனர்.

இவர்களின் அலறல் சத்ததைக் கேட்டு ஒரு வேட்டுவக் கும்பல் இவர்களின் அருகில் வந்தது.

அந்த வேட்டுவக் கும்பலின் தலைவனாக இருந்தவன் நல்லதங்காவின் அண்ணன் நல்லதம்மி, தன் தங்கையின் இந்த நிலையைக் கண்டு கண்ணீர் வடிக்கிறான்.

அவன் தன் தங்கையைப் பார்த்து என்னாயிற்றுமா உனக்கு நீயேன் நடந்து வருகிறாய்? தேர்களும் குதிரைகளும் எங்கே? என்று வினவுகிறான்.

பிறகு நல்லதங்காள் தன் நாட்டில் உள்ள கடும்பஞ்சத்தைச் சொல்கிறாள். அதைக் கேட்டதும் மனமுடைகிறான் நல்லதம்பி.

நீ வீட்டிற்கு செல் அங்கு உன்னுடைய அண்ணி உன்னை நன்றாக கவனிப்பாள். நான் இரண்டு நாட்களில் திரும்பி வருகிறேன்.

இந்த காட்டில் உள்ள சிறுத்தை மக்களை அதிகமாக தொந்தரவு செய்கிறது அதை கொன்று விட்டு வருகிறேன் என்றான்.

மூழி அலங்காரியின் செயல்:

இதைக் பார்த்துக் கொண்டிருந்த மூழி அலங்காரியின் தம்பி வேகமாகச் சென்று தன் அக்காவிடம் நல்லதங்காளின் வருகையை தெரிவிக்கிறான்.

மூழி அலங்காரிக்கு கோவம் ,ஏற்கனவே திருமணத்தின் போது அனைத்தையும் கொண்டு சென்றுவிட்டாள், இன்னுமா இங்கே உள்ளதை எடுத்துச் செல்ல வருகிறாள் என்று நல்லதங்காவை திட்டிக் கொண்டிருந்தாள்.

பிறகு வீட்டைப் பூட்டி வைத்து விட்டு தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி ஒரு அறையில் போய் படுத்துக் கொண்டாள்.

அனைத்து உணவுப் பொருட்களையும் பாதாள அறையில் கொண்டுபோய் வைக்கச் சொன்னாள் பணிப்பெண்களிடம்.

வெகுநேரம் நல்லதங்காவும் குழந்தைகளும் வாசல்படியிலே நின்று கொண்டிருந்தனர், குழந்தைகள் பசியாலும் கால்வலியாலும் கத்திக் கொண்டிருந்தன.

பிறகு நல்லதங்காள் நான் ஒரு பத்தினி என்றாள் கதவு திறக்கட்டும் என்று கடவுளிடம் வேண்டினாள், கதவு திறந்தது.

அவளின் குழந்தைகள் வீட்டிற்குள் ஓடி கீழே கிடக்கும் மாங்காயையும் தேங்காயையும் எடுத்து வாயில் வைத்தனர்.

மூழி அலங்காரி அதைப் பார்த்து அவர்கள் கையில் இருந்த மாங்காயையும் தேங்காவையையும் பிடிங்கிப் போட்டுவிட்டு ஒரு அழுகிய மாங்காயையும் தேங்காயையும் எடுத்துக் கொடுக்கிறாள்.

நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்படி சொல்கிறாள்,

அதற்கு அவளின் அண்ணி எனக்கே உடம்பு சரி இல்லை.

அதோடு மட்டுமல்லாமல் அரண்மனையில் அனைவரும் விரதமாக உள்ளோம் உங்க அண்ணன் காட்டில் இருந்து நல்லபடியாக திரும்புவதற்காக, அதானால் இங்கு உணவு சமைக்கவில்லை என்றாள்.

பிறகு அவள் அரிசியை கொடுங்கள் நான் என் பிள்ளைகளுக்கு மட்டும் உணவு சமைத்து கொடுத்துவிட்டு அண்ணன் வரும்வரை விரதமாக நான் உள்ளேன் என்றாள்.

அதற்கு மூழி அலங்காரி உங்கள் ஊரைப்போலவே இங்கும் பயங்கர பஞ்சம்தான் அதனால் கொஞ்சம் கேப்பை மட்டுமே உள்ளது என்றாள்.

சரி கொஞ்சம் கேப்பயாது தாருங்கள் குழந்தைகள் பசியால் வாடுகிறார்கள் என்றாள் நல்லதங்காள்.

மூழி அலங்காரி ஏழு வருடங்களுக்கு முன்பு உள்ளதை எடுத்து வந்து கொடுத்து ஒரு உடைந்த மண்சட்டியையும் பச்ச மட்டையையும் கொடுக்கிறாள்.

நல்லதங்கா கடவுளிடம் வேண்டிக் கொண்டு பச்சமட்டையை பத்த வைக்கிறாள், அதில் தீப்பிடித்து கூழும் கிண்டி முடிக்கிறாள்,.

மேலும் படிக்க  ஜகவர்லால் நேரு வாழ்க்கை வரலாறு

இதைப் பார்த்த மூழி அலங்காரி இப்படியே விட்டாள் இவள் இங்கேயே தங்கி விடுவாள் என்று நினைத்து அந்த கூழ் சட்டியை எடுத்து உடைக்கிறாள்.

பிள்ளைகளின் அவலநிலை:

கீழே கொட்டிய கூழை எடுத்து நல்லதங்காவின் பிள்ளைகள் அள்ளிக் குடிக்கின்றனர். இதனைக் கண்டு கண்டு கண்ணீர் வடிக்கிறாள் நல்லதங்காள்.

மூழி அலங்காரி மேலும் அவளை கடுஞ்சொல்லால் வசை பாடினாள். அவளின் சொற்களை கேட்க முடியாமல் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நடக்கிறாள்.

அவளுக்கு அப்பொழுது தான் தன் கணவர் பேச்சை கேட்காமல் வந்தது தவறு என்று புரிந்தது.

போகும் வழியில் ஆடுமேய்ப்பவரிடம் தண்ணீர் தாகமாக உள்ளது, இங்கே பாலுங்க்கிணறு எங்கே உள்ளது என்று கேட்டுக் கொண்டு அந்தத் திசையை நோக்கி நடந்தாள்.

அவள் போகும் வழியில் ஆவாரம் இலைகளை போடுக்கொண்டே சென்றாள், தன் அண்ணனின் அடையாளத்துக்காக.

பிறகு தன் தாலியை கழட்டி கிணற்றின்மேல் வைத்தாள், தன்னுடைய அண்ணி கொடுத்த அழுகல் மாங்காயையும் தேங்காயையும் அதன் அருகில் வைத்து விட்டு தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கிணற்றில் போட்டு விட்டு தானும் அதில் குதித்து உயிரை விட்டாள்.

நல்லதம்மி வீட்டிற்கு வந்து தன் தங்கையை தேடுகிறான், அவள் காணவில்லை அவனின் மனைவியிடம் கேட்டபோது அவள் கோபித்துக் கொண்டு இங்கே இருந்து போய்விட்டாள் , அவளுக்கு என் கையால் உணவு பரிமாறவில்லை என்பதால் என்று நல்லதம்பியிடம் பொய் சொல்கிறாள்.

பிறகு அவன் பணிப்பெண்களிடம் விசாரிக்கிறான், அவர்கள் நடந்ததை எல்லாம் விவரமாக சொன்னார்கள்.

அவன் தேடிச் செல்கிறான் ஒரு ஆட்டுக்காரரிடம் விசாரித்த போது அவர்கள் பாலும் கிணறை நோக்கி சென்றார்கள் என்றான். நல்லதம்பி அங்கு ஓடிப் போய்பார்கிறான்.

நல்லதங்காவும் அவளின் ஏழு குழந்தைகளும் இறந்து கிடந்தனர். அவன் கண்ணீர் விட்டு கதறுகிறான்.

நல்லதங்கா மானாமதுரையில் இருந்து வந்த கொஞ்ச நாட்களிலே அங்கு மழை பொழிந்து, வயல் வெளிகளில் செழித்துக் காணப்பட்டது.

அதனால் தன் பிள்ளைகளையும் மனைவியையும் அழைத்துச் செல்ல காசிராஜா அங்கு வருகிறார். தன் மனைவி, பிள்ளைகளின் நிலையைக் கண்டு கதறினார், பின்பு தானும் ஈட்டியால் பாய்ந்து இறந்து போய்கிறார்.

நல்லதம்பியின் பழிதீர்த்தல்:

இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் மூழி அலங்காரி தான் அவளை பழி வாங்க வேண்டும் என்று நினைத்தான்.

அவளின் தம்பிக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது இவனே போலி திருமண மண்டபம் ஏற்பாடு செய்து அவர்களின் சொந்தகளை மட்டும் உள்ளே இருக்குமாறு செய்து மண்டபம் விழுகுமாறு செய்தான்.

அவர்கள் அனைவரும் இறந்த பிறகு தானும் ஈட்டியில் பாய்ந்து இறந்து போனான். தன் தங்கை மேல் உள்ள பாசத்தால் அவனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

அர்சனாபுரத்தில் நல்லதங்காவிற்கு ஒரு கோயில் அமைந்துள்ளது, அதில் நல்ல தம்பி மற்றும் அவளின் ஏழு குழந்தைகளின் சிலைகளும் அமைந்துள்ளன.

ஒரு கிராமத்து காதல் கதை

புத்தரின் வாழ்க்கை கதை