You have been blocked from seeing ads.

நாட்டிய தாரகை அம்ராபாலி காதல் கதை

நாட்டிய தாரகை அம்ராபாலி – பிம்பிசாரனின் காதல் கதை…

பிம்பிசாரன் ஆட்சி:

பிம்பிசாரன் மகத நாட்டின் அரசன் ஆவான். அன்றைய காலக்கட்டத்தில் குப்தர்களின் ஆட்சி செழித்து இருந்தது.

குப்தர்களின் ஆதிக்கம் நேபாள், அஸ்ஸாம், பஞ்சாப், மகதம், வைசாலிநகர், உஜ்ஜையினி போன்ற தேசங்களில் இருந்தது.

இந்த தேசங்கள் எல்லாம் குப்தர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும்.

ஆனால் அந்த அடிமை தனத்தை எதிர்த்த ஒரே அரசன் மகத நாட்டின் பிம்பிசாரன் ஆவான்.

அதில் வைஷாலி நகர மன்னன் நிர்பாதுரன் குப்தர்களிடம் அதிக நட்புடன் இருந்தான்.

குப்தர்கள் செல்வாக்கு காரணமாக தன் அண்டை தேசங்களில் உள்ள மக்களுக்கும் மன்னர்களுக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தான்.

     குப்த சாம்ராஜ்யத்தின் கோபமும் வைசாலி நகர் மன்னன் நிர்பாதுரனின் கோபமும் மகத நாட்டின் அரசன் மீது இருந்தது.

அதற்கு காரணம் அவன் கூறிய வார்த்தைகள் ஆகும், ”மகத நாடு ஒன்றும் விலை மாது அல்ல, மகத நாட்டின் எல்லையில் கால் வைத்தால், அவன் தலை இருக்காது என்று அவன் கூறிய வார்த்தைகளே ஆகும்.

இதனால் மகத மன்னரை அடிமைப்படுத்த சந்தர்பத்திற்காக காத்திருந்தான்.

வைசாலி நகர் மன்னன் நிர்பாதுரன் :

அந்த சமயத்தில் வைஷாலி நகரில் ஒரு மாபெரும் திருவிழா நடந்தது,  திருவிழாவிற்கு மாபெரும் கூட்டம் வந்தது.

அந்த கூட்டம் அனைத்தும் நாட்டிய தாரகை அம்ராபாலியை காணவே வந்திருந்தது.

அன்று திவ்ய பதஞ்சலி, அம்ராபாலி வந்ததும் அந்த தேசத்தின் ஆண்கள் அவளின் அழகில் சொக்கித்தான் போனார்கள். 

அவளைப் பார்த்த பெண்களுக்கும் பொறாமை வந்து விட்டது.

அவள் ஆடத் தொடங்கியதும் அங்கிருந்த பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் திக்கு முக்கு ஆடிப் போயின, அவளின் நடன அசைவைக் கண்டும் உடல் அசைவைக் கண்டும்.

அவள் ஆடி முடித்துவிட்டு தன் இல்லத்திற்கு திரும்பினாள், ஆனால் அவளின் அழகைக் கண்டு அந்த ஊர் ஆண்களின் கண்களில் தூக்கம் வரவில்லை.

     அந்த இரவு நேரத்தில் மகத நாட்டின் முக்கிய வீதிகள் எரிந்து கொண்டிருந்தது.

சமைக்க வைத்திருந்த தானியங்களை தீ எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.

மகத நாட்டின் வணிகர் வீதிகளில் தீ பரவ இருந்த போது அதை அணைத்து விட்டனர்.

இது எல்லாம் வைஷாலி நகர ஒற்றர்களின் சதி என்பதை விசாரிக்காமலே தெரிந்தது. மகத நாட்டின் மன்னன் பிம்பிசாரன் ஊருக்குள் வந்து நின்று ஒரு கூட்டம் போட்டான்.

இது வைஷாலி நகரத்திற்கு எதிராக வரும் அறைகூவல் இல்லை, குப்த அரசுக்கு எதிராக தாக்கும் போர் என்றான்.

மகத நாட்டின் இளம் வீரர்களே, கோவம் வர வேண்டிய நேரத்தில் வந்துவிட வேண்டும், இல்லையென்றால் காலம் நம் மீது கோவப்படும் என்றான்.

மீசை வைத்த இளைஞன் வேண்டாம், வீரம் வந்த இளைஞன் என்னோடு யுத்தத்திற்கு வா என்றான்.

ஒரு சிறிய படை திரண்டது இவனின் அறைகூவலை ஏற்று.

மகத நாட்டின் போர்:

குப்த சாம்ராஜ்யத்தின் மொத்த படைகளும் வைஷாலி நகருக்கு ஆதராவக நின்றது.

இரண்டு மணி நேரத்தில் மகத நாட்டின் சிறிய படை துவம்சம் செய்யப்பட்டு அந்த நாட்டின் அரசனான பிம்பிசாரனை இரண்டு குதிரைகளுக்கு இடையில் இழுத்து வரப்படான்.

அவன் உடலில் இருந்து குருதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டான், மறுநாள் விடிவதற்குள், இரவோடு இரவாக அங்கிருந்து தப்பித்து அடர்ந்த காட்டுப்பதியில் நடந்து கொண்டிருக்கும்போது தாகம் ஏற்பட்டு சுருண்டு கீழே விழுந்தான்.

மேலும் படிக்க  மாவீரன் நெப்பொலியன் வாழ்க்கை கதை
அம்ராபாலியை காணல்:

பிம்பிசாரன் கண் விழித்துப் பார்த்த போது ஒரு அழகிய நங்கையின் தொடையில் தன் தலை வைத்திருப்பதை உணர்ந்தான்.

அவனைச் சுற்றிப் பார்த்தான், மூங்கில் குடிலுக்குள் அவன் இருப்பதை. அவன் உடல் முழுவதும் ஏற்ப்பட்ட காயங்களில் மூலிகைச்சாறு வழிந்து கொண்டிருந்தது.

அந்த அழகிய நங்கை அவனை பையத் தூக்கி நிமிர வைத்தாள்..

அவள் அவனிடம் உங்கள் பெயரென்ன என்று வினவினாள், இவன் என் பெயர் சிப்பாய் என்றான். அவளோ நான் அம்ராபாலி, ஓர் எளிய நர்த்தகி என்றாள்.

 

அம்ராபாலி

You have been blocked from seeing ads.

     அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது தாகத்தால் விழுந்த என்னை அம்ராபாலி தான் தூக்கி வந்து காப்பாற்றியிருக்கிறாள் என்று.

அன்று மாலை அம்ராபாலியின் நடனம், அதைக் காண புறப்பட்டான் பிம்சாரன், சிப்பாய் என்ற புதிய பெயரோடு.

எப்பொழுதும் போல் அம்ராபாலியின் நடனம் அற்புதமாக இருந்தது, அவளை அரண்மனையின் ராஜநர்தகியாக தேர்வு செய்தனர்.

அவள் இளவரசி உடையில் இன்னும் அழகாய் தெரிந்தாள்.

பிம்சாரனின் காதல்:

சிப்பாய் அவளின் குடிலிலே இருந்து அவளை இரசித்துக் கொண்டிருந்தான்.

அவளின் எளிமையும் அழகும் இவனை வாட்டி எடுத்தது, அவளிடம் தன் காதலை சொல்ல தடுமாறிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் ஒரு அசட்டு தைரியத்துடன் அம்ராபாலியிடம் தன் காதலை சொல்லி விட்டான்.

அவளும் முதல் சந்திப்பிலேயே இவன் மீது மையல் கொண்டதால் வானில் மிதந்தாள்.

அம்ராபாலி ஒருநாள் அரண்மனை குளத்தில் நறுமணப் பூச்சு பூசி நீராடிவிட்டு வந்தாள், சிப்பாய்

அறைக்குள் நுழைந்தான், அம்ராபாலி என்ற அழகு தேவதையை தன் வாயால் குடித்தான்.

அம்ராபாலி இராஜநர்தகியாக அரண்மனையில் நடனம் புரிய அவளுக்கு பாதுகாவலனாக வளம் வந்தான்.

அவளுக்கு அரண்மனையில் ஏகபோக செல்வாக்கு இருந்தது, அரசியுடன் நட்புக் கொண்டிருந்தாள்.

அவளின் நடனத்தை காணும் ஆர்வத்தில் அரண்மனை வாசிகள் தன்னை மறக்கும் தருவாயில் சிப்பாய் அரண்மனை போர் பிரிவுகளில் நுழைந்து, துப்பறிந்தான் அவர்களின் பலத்தையும் பலவீனத்தியயும் பற்றி நன்கு அறிந்தான்.

அன்று அம்ராபாலியின் இல்லத்தில் விருந்திருக்காக சில முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர், அம்ராபாலியை யார் ஆசை நாயகியாக அடைவது என்று அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது ஒரு கோப்பை மது வைஷாலிநகர் அரசரிடம் வந்தது. அந்த மதுவில் காட்டுநாக விஷம் கலந்திருந்தது, அதை சன்னல் வழியாக கவனித்துக் கொண்டிருந்த சிப்பாய் என்ற பேரில்  வலம் வரும் மகத அரசன் பிம்பிசாரன் சிரித்துக் கொண்டிருந்தான்.

அரசன் துர்பாதுரன் அந்த மது கோப்பையை அம்ராபாலியிடம் நீட்டினாள், என்ன மது இது? ருசியில்லாத மது.

பிம்பிசாரனின் செயல்:

நீ குடித்துப்பார் என்றான். உன் இதழ் பட்ட மது வேண்டுமென்று நாடக மிட்டான் துர்பாதுரன். அம்ராபாலி உடனே அதை வாங்கி ஒரு வாய் குடித்தாள்.

அடுத்த ஒருநொடியில் சிப்பாய் பாய்ந்து சென்று அம்ராபாலியின் வாயில் இருந்த மதுவை தன் வாயால் உறிஞ்சி எடுத்தான். அரண்மனை வளாகமே அதிர்ந்து போனது அந்த ஒரு நொடியில்.

அம்ராபாலியின் தொண்டைக்குள் விஷம் போவதற்கு முன் விஷத்தை எடுத்து துப்பினான். அம்ரபாலியும் சிப்பாயும் உதட்டில் ஆலிங்கனம் செய்ததில் உறைந்த சபை அவன் விஷம் கலந்ததை மறந்து போயின.

ஆனாலும் சிப்பாயைத் தாக்க 10 க்கும் மேற்பட்ட வாள்கள் அவனைச் சுற்றி நின்றது.

அம்ராபாலியின் வேண்டுகோளால் உயிர் தப்பித்தான் சிப்பாய். விருந்து மண்டபம் கலைந்தது.

இவன் விருந்து மண்டபத்திலே இப்படி செய்கிறான் என்றால், குடிலில் என்ன செய்வான் என்று அரச பிரமுகர்கள் துர்பாதுரனை சூடேற்றிக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க  மூன்சென் ஸ்ரீரங்கநாதர் காதல் கதை

அம்ராபாலி சிப்பாயின் மார்பில் சாய்ந்து கொண்டு , ஏன் விருந்து மண்டபத்தில் இப்படி நடந்து கொண்டீர்கள் என்றாள்.

உன் உதடுகளைப் பார்த்ததும் ஒரு உணர்ச்சி வந்து விட்டது என்றான்.

அவள் மெதுவாக எழுந்து அவளின் விரல்களை அவனின் மேல் தடவினாள்.

பின்பு ஒரு வாய் திராட்சை மதுவை தன் வாயில் ஊற்றிக் கொண்டு அவன் வாயில் நிரப்பினாள்.

இந்த கூடல் நிகழ்வுகளை துர்பாதுரனின் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது அனல் பொங்கும் வெப்பமாய்., அவளின் குடிலின் வெளியில் நின்று.

 துர்பாதுரனுக்கு அந்த இரண்டு நிகழ்வுகளும் கண்களில் தத்துருபமாய் ஓடிக் கொண்டிருந்தது.

அம்ராபாலியை நாட்டிய மஹாலுக்கு வர ஆணை இட்டான். அவள் வந்தாள், நாட்டிய சபை வெறிச்சோடிக் கிடந்தது.

அரசே, இங்கு யாருமே இல்லையே என்றாள், உன் நடனம் என் இரண்டு கண்களுக்கு மட்டும் தான்.

தாளவாத்திய குழுவினர்களும் வெளியில் அனுப்பப்பட்டன. தன் சலங்கையின் ஒலியியின் தாளத்திற்கு இவள் நடனம் புரிவாள் என்றான் துர்பாதுரன்.

இவள் ஆடத்தொடங்கினாள். துர்பாதுரன் இவள் இடையில், முதுகில் நுழைந்து வெப்பமாய் ஆக்கினான் தன் உடலை.

அம்ராபாலியை கண்காணிக்க நேரம் இல்லாததால் பிம்பிசாரன், வைஷாலி நகரின் மொத்த இரகசிய வரைபடமும் எடுத்து அதன் இரகசியத்தை இன்று தான் ஓலையில் எழுதி தன் நாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தான்.

அவன் அந்த வேலையை முடிக்கப் போகும் தருவாயில் சில படை வீரர்கள் இவனை சுற்றி வளைத்தனர்.

அவனை இரும்புக் கம்பியாள் பிணைத்து அரசரிடம் இழுத்துச் சென்றனர்.

அரசே, இவன் நீங்கள் சொன்னது போல் மகத நாட்டின் பிம்பிசாரன் ஆவான்.

அவனை தனிமைப்படுத்தி, கண்காணித்து கைது செய்தான் துர்பாதுரன்.

நீதி மன்றம் கூடட்டும். அம்ராபாலி திரும்ப திரும்ப ஒரே வார்த்தையை சொல்லிக் கொண்டிருந்தாள், இவன் சிப்பாய் தான் என்னுடைய காதலன், பிம்பிசாரன் இல்லை என்று.

அவன் என்னிடம் பொய் சொல்ல மாட்டான் என்றாள்.

அவளின் வார்த்தையைக் கேட்டு பிம்சாரன் நொந்து போனான்.

அம்ராபாலியின் நம்பிக்கையை ஒடைக்கப் போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தான்.

துர்பாதுரன் தீர்ப்பு:

அரசன் துர்பாதுரன் ஒரு தீர்ப்பைச் சொன்னான், நீ பிம்பிசாரன் என்று ஒத்துக் கொண்டாள் உனக்கு விடுதலை, இல்லையென்றால் ராஜாங்க ரகசியம் திருடிய குற்றத்திற்கு உனக்கும் துணைபோன அம்ராபாலிக்கும் மரண தண்டனை என்றான்.

துர்பாதுரன் நினைத்தான் அவன் பிம்பிசாரன் என்று ஒத்துக் கொண்டு விடுதலை ஆவான், அம்ராபாலியை அந்தப்புரத்தில் அடையலாம் என்று.

அம்ராபாலி தன்னை அடைய இப்படி நாடகம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சிப்பாய் இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தான். அம்ராபாலியின் முகத்தைப் பார்த்தான், நான் பிம்பிசாரன் இல்லை அம்ராபாலியின் காதலன் என்று, துர்பாதுரன் ஏமாந்து போனான்.

அவர்களுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. இருவரும் சொர்க்கம் நோக்கி கைகோர்த்துப் புறப்பட்டனர்.  

சத்யவான் சாவித்திரி கதை – தமிழ் கதை

     

You have been blocked from seeing ads.