மூன்சென் ஸ்ரீரங்கநாதர் காதல் கதை

மூன்சென் ஸ்ரீரங்கநாதர் காதல் கதை

திருச்சியில் மூன்சென்:

அலாவுதின் கில் என்னும் முகலாய மன்னனின் யுத்த தளபதி முகமது அலி ஆகும்.

இவருடைய மகள் தான் மூன்சென். தென்னிந்தியாவில் காவல் கட்டமைப்பு பணிக்காக திருச்சியில் முகாம் இட்டு தங்கியிருந்தனர்.

மூன்சென் திருச்சியை சுற்றிப்பார்க்க வந்திருக்கிறாள் என்னும் செய்தி கேட்டு மக்கள் மனதில் இறுக்கம், அவளைச் சுற்றி 1000 துப்பாகிகளைக் கொண்ட படைவீரர்கள் வருக்கின்றனர்.

அவள் திருச்சியின் முக்கிய வீதிகளில் நடந்தாள். அவள் நடக்கும் அழகைக் கண்டு பாதுகாப்பு படையின் காவலர்கள் சொக்கித்தான் போனார்கள்.

மூன்சென் காவிரியில் இறங்கி நீராடத் தொடங்கினால், அவளின் வெண்ணிற பாதத்தை மீன்கள் புசிக்க ஆரம்பித்தனர்.

அவள் மீன்களோடு தண்ணீரில் மிதந்தவள் அண்ணாந்து பார்க்கிறாள், ஸ்ரீரங்கத்தின் தலைக்கோபுரம் தெரிந்தது.

அவள் ஆச்சர்யத்துடன் வாய் பிளந்து பார்கிறாள்.கோவிலுக்குள் நுளைய மறுப்பு:

     அது என்ன? என்று உருது மொழியில் தன் விரலைக் காட்டி கேட்கிறாள் படைவீரர்களில் ஒருத்தனிடம். அதற்கு அவனோ அது இந்துக்களின் பள்ளிவாசல், ஸ்ரீரங்கம் என்றான். அங்கு நான் போக வேண்டுமே என்று காவிரியில் இருந்து எழுந்தாள்.

அதற்கு அவனோ அது இந்துக்களின் கோவில் என்றான்.

அதற்கு அவள் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு  நகர்ந்தாள்.

அவள் ஈர உடையுடன் ஸ்ரீரங்கத்தின் கோபுரம் நோக்கி நடந்தாள்.

அவளுக்கு பலநாள் பிரிந்த கணவனை மீண்டும் காண செல்லும் ஒரு பத்தினியின் மோகம் அவள் இதயதில் ஓடியது.

அவள் வேகமாக நடந்தாள். எங்கும் நறுமணம் வீசியது, அவள் ஸ்ரீரங்கத்தின் நுழைவாயில் நுழையும் போது, திடீரென்று கதவுகள் அடைக்கப்பட்டன.

     மூன்சென்னின் முகத்தில் அவமானம், அவள் எரிமலையின் தீக்குழப்புகளாய் மாறிக் கொண்டிருந்தாள்.

உடைக்கச் சொல்லுங்கள் கோயில் கதவை உருது மொழியில் கர்ஜித்தாள்.

அவள் கதவை உடைங்கள் என்னும் சொல் வைணவர்களின் செவிகளை கிழித்தது.

ஸ்ரீரங்க வாசிகள் அனைவரும் குழுமி நின்றனர். அவள் ஸ்ரீரங்கத்தின் கதவை உடைக்க சொல்லி அவள் போட்ட உத்தரவு அவளின் தந்தையையே மிரட்டியிருக்கிறது.

ஸ்ரீரங்கத்தின் கதவுகளை உடைக்க பனைமரங்களை ஏந்திய யானைகள் வந்தன. யானைகள் சற்றே பின்னோக்கி வந்து முன்னேற, ஒரு பாறைகள் நொறுங்கும் அளவிற்கு ஒரு குரல் வந்தது, நில்லுங்கள் என்று.

அந்த குரலைக் கேட்டு யானைகளும் நின்று விட்டன.

வருகிறவர் இராமானுஜர் என்று மக்கள் கும்மிட்டனர் அந்த மகானை.

அவர் உள்ளே வந்தததும் ஸ்ரீரங்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.

வைணவர்கள் வெளியில் வந்தனர், அவர்களிடம் இராமானுஜர், ஒரு மனிதன் மதத்தை உடையின் வழியே தீர்மானித்தாள், அதை கழட்டும் பொழுது மதமும் கழன்று விடுகிறது.

மேலும் படிக்க  மாவீரன் நெப்பொலியன் வாழ்க்கை கதை

இந்தப் பெண் உள்ளே செல்வதால் திருமால் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்.

இவர்களை உள்ளே அனுமதியுங்கள் என்றார். அவரின் கட்டளையை வைணவர்கள் ஏற்றனர்.

ஸ்ரீரங்கநாதரின் தரிசனம்:

     மூன்சென் ஸ்ரீரங்கத்தின் ஆலயத்துக்குள் பிரவேசித்தாள்.

அவளின் விளிகள் அனைத்தையும் கண்டு வியந்து போகின.

கோயிலில் போடப்பட்டிருக்கும் கோலங்கள், சிலைகள், சிற்பங்கள், கொடிமரங்கள் இவற்றைப் பார்த்து பிரமித்துப் போகிறாள்.

அவள் இப்பொழுது கோயிலின் சந்நிதிக்கி வருகிறாள், திருமாலின் முகத்தைக் காண்கிறாள் தீப ஒளியில் காட்சியளிக்கிறார். திருமாலின் உருவச்சிலையை மூளை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

மூன்சென் ஸ்ரீரங்கநாதரின் சிலைக்கு பூச்சூட்டலும், பிரகார சுற்றலும், ஸ்ரீரங்கநாதர் சேவையும் வைணவர்களை வியக்க வைத்தது.

ஆனால் முகமது அலிக்கு வேதனை அளித்தது.

     மூன்சென் மதம் மாறி விடுவாளோ என்ற பயத்தில் டெல்லிக்கி அனுப்ப முடிவு செய்தார் முகமது அலி. மூன்சென் ஒரு சிறிய கடப்பாறையோடு வந்து ஸ்ரீரங்கநாதரின் சந்திதியில் நுழைந்து திருமாலின் சிலையை உடைக்கிறாள், சிலை ஆட்டம் காண்பித்து விட்டு சிறிது நேரத்தில் கையில் வந்து விட்டது.

மூச்சென் மூடி வைத்த தேரில் திருடிய திருமால் சிலையுடன் டெல்லிக்கி புறப்படுகிறாள்.

அந்த இரவு நேர பயணத்தில் மூன்சென் மடியில் திருமால் சிலை தாலாட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது

முஸ்லீம் பெண்ணின் உருக்கமான காதல் கதை

.

மூன்சென்னின் பக்தி:

     அவள் திருமாலை குளிப்பாட்டினாள், தினமும் பூ வைத்தாள், கோலமிட்டாள், முத்தமிட்டள், வெட்கப்பட்டாள்.

மூன்சென் காதலித்து கொண்டிருக்கிறாள். அவள் ஒரு முஸ்லீம் மீரா ஆவாள்.

அவள் திருமாலுக்கு அந்தர் அபிஷேகம் செய்தாள்,போலி நெய்வேத்யம் செய்தாள், தகதகக்கும் பட்டாடை அலங்காரம் செய்தாள்.

அங்கு ஸ்ரீரங்கதில் சிலை திருட்டு போன விஷயம் இராமனுஜருக்கு தெரிய வந்தது.

இது முன்சென் தான் எடுத்து சென்றிக்க வேண்டும் என்பதை அறிந்த அவர் டெல்லிக்கி புறப்பட்டார்.

ஒரு பெண்ணின் பக்தியை எப்படி உடைப்பது, அவளிடம் இருந்து எப்படி சிலையை வாங்குவது என்று சிந்தித்தார்.

இராமானுஜர் முகமது அலிலை சந்தித்தார். அவர் இராமானுசரை அளைத்துக் கொண்டு முன்சென் அறைக்குள் நுழைந்தார். முன்சென் அப்போது அங்கில்லை.

இராமானுஜர் வியந்து போனார் திருமாலின் சிலைக்கு செய்த வேலைப்பாடுகளின் வாயிலாக அவளின் காதலையும் பக்தியையும் கண்டு.மூன்சென்னின் மறைவு: 

    முகமது அலிக்கு மூன்சென் வருவதற்குள் சிலையை கொடுக்க வேண்டும் என்பது.

இராமனுஜரும் சிலையை வாங்கிக்கொண்டு புறப்பட்டார். அங்கு ஸ்ரீரங்கத்தில் விழாக்கோலம் பூண்டனர் வைணவர்கள்.

சிலை மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டது. அப்போது ஒரு தகவல் வந்தது.

திருமாலின் பிரிவு முதலில் மூன்சென்னின் பேச்சை நிறுத்தியது, பின்பு மூச்சை நிறுத்தியது.

மேலும் படிக்க  ஷாருகான் வாழ்க்கை கதை – தமிழில்

இராமானுஜரின் கைகள் ஆடத் தொடங்கின. கண்கள் அழத் தொடங்கின. வைண்வர்களும் கண்ணீர் விட்டனர்.

இராமானுஜர் ஒரு முடிவு எடுத்தார். மூன்சென் காதலுக்கும் பக்திக்கும் புனிதம் சேர்க்கும் வகையில் ஸ்ரீரங்கநாதரின் கோவிலின் உள்ளே மூன்சென்னுக்கும் கோயில் நிறுவப்படும்.

அவளின் நினைவாக திருமாலுக்கு போளி என்ற உணவும் படைக்கப்படும், “துலுக்க நாச்சியார் கோயில்” என இந்த புனிதஸ்தலம் அழைக்கப்படும் என்றார்.

திப்பு சுல்தான் – ரங்கநாயகி காதல் கதை