You have been blocked from seeing ads.

லிட்டில் பிரின்சன்ஸ் – சிறுகதை (ஆதிரா)

ஆதிரா வீட்டில் நான்காவது பிள்ளை, ஆதிராவின் அம்மா ஜெயந்தி இரண்டு குழந்தையே போதும் என்றாள் ஆனால் ஜெயந்தியின் கணவனோ எங்க அண்ணனுக்கு எல்லாம் 8 பிள்ளைகள் இருக்கு நமக்கு நான்காவது இருக்கட்டும் என்று சொன்னான்.

அதனால் வேறுவழியின்றி நான்கு குழந்தைகளையும் பெற்றாள் மூன்றாவது குழந்தை ஆண் குழந்தை என்பதால் அதை பாசமாக வளர்தார்கள்.

ஆனால் நான்காவது பெண் குழந்தை ஏற்கனவே ஒன்று இருக்கிறது, இதில் இதுவேறு என்று வேண்டா வெறுப்பாக பார்த்தாள் ஜெயந்தி.

ஜெயந்தி அவள் கணவன் சொன்னதையும் மீறி நான்காவதாக கர்ப்பம் தரித்திற்கும் பொழுது கருவை கலைக்க பலமுறை முயற்ச்சி செய்தால் ஆனால் ஆதிரா பிறந்து விட்டாள்.

ஆதிரா பார்ப்பதற்கு நன்றாக இருக்க மாட்டாள், கருப்பாக இருப்பதால் ஜெயந்தி குழந்தையாக இருக்கும் பொழுது எங்கும் அழைத்துச் செல்ல மாட்டாள்.

பெரும்பாலும் ஆதிராவிற்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் மற்ற குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களில் பாதி அளவு கூட ஆதிராவிற்கு கிடைக்காது.

ஆதிரா வளர்ந்து வந்தபொழுதும் அவளை எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துவாள் ஜெயந்தி, எப்படி இருக்குனு பாருங்க மூஞ்சினு.

அந்த பிஞ்சி வயதிலே அவளுடைய மனம் கண்ணீர் வடிக்கும், ஆனாலும் தன் தாய் தந்தை மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள் ஆதிரா.

அவளுடைய அம்மாவிற்கு ஒருநாள் காய்ச்சல் வந்தாக் கூட தூங்காம அவள் அருகிலே இருந்து சாமியின் விபூதியை பூசிவிடுவாள்.

ஆனால் ஜெயந்தி மற்ற குழந்தையை அதிகமாக நேசித்தாள், ஆதிராவிற்கு அழகில்லை என்றாலும் நல்ல மனசும் நன்றாக படிக்கும் திறமையும் இருந்தது.

ஒருநாள் ஆதிராவின் இரண்டாவது அண்ணன் உடல்நிலை சரியில்லாம் இறந்து போனான்.

அப்பொழுது கூட ஆதிரா அழுதுகொண்டே நீ செத்ததுக்கு நானாவது செத்துருக்கலாம் அண்ணே! என்றாள்.

இதை கவனித்த ஆதிராவின் பெற்றோர்கள் மனம் வருந்தினர், அன்றிலிருந்து ஏதோ அவளையும் கவனிக்கத் தொடங்கினர்.

ஆதிராவின் அக்கா சுமித்ராவோ படிப்பில் மக்கு, அவளின் மூத்த அண்ணனும் மக்கு.

இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தினர், ஆனால் ஆதிரா எல்லா வகுப்புகளிலுமே முதல் மதிப்பெண் தான்.

அவள் பத்தாவது மற்றும் 12 ஆவது படிக்கும் பொழுது முதல் மதிப்பெண் வாங்கியதால் அவளுக்கு நிறைய பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டது, அப்பொழுது அவளின் பெற்றோர்களை மேடையில் ஏற்றி பெருமைப் படுத்தினாள் ஆதிரா.

இருவருமே நெகிழ்ந்து போயினர். பின்பு அவள் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவள் அக்காவிற்கு மாப்பிளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவள் அக்காவிற்கும் ஒரு நல்ல இடத்தில் 12 பவன் நகை போட்டு கல்யாணம் செய்து கொடுத்தனர்.

மேலும் படிக்க  கல்லூரி காதல் கதை - வர்ஷா

அப்பொழுது அவர்கள் குடும்பம் 8 லெட்சம் கடன் வாங்கியிருந்தது, அந்த கடனை ஆதிராவின் அண்ணனை நம்பித்தான் வாங்கினார்கள்.

ஆனால் ஆதிராவின் அண்ணனோ அவன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டே சென்று விட்டான்.

கடனை எப்படி அடைக்கப் போறோமுனு தெரியாமல் ஆதிராவின் பெற்றோர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

ஆதிராவின் செயல்:

அப்பொழுது ஆதிரா நான் இருக்கேன்மா நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னாள், பின்னர் அவ படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பார்ட் டைம் ஷாப்புக்கு போனால், அதில் வரும் தொகையைக் கொண்டு சிறிது சிறிதாக கடனை அடைக்க முயன்றாள்.

அவள் படித்து முடித்தும் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள், அதில் அதிகமாக சம்பளம் வந்ததால் சிறிது ஆண்டுகளிலே வாங்கின கடனை முழுவதுமாக அடைத்தாள்.

ஆதிராவின் பெற்றோர்கள் வெட்கி தலை குனிந்தனர், இந்தக் குழந்தையை நாம் வேண்டாமுனு சொன்னமே இன்னைக்கி இதுதானே குடும்ப பாரத்தை சுமக்குதுனு நினைத்து.

ஆனால் ஆதிராவின் அக்கா எனக்கு 12 பவுன் தான் நகை போட்டிங்க இன்னும் 3 பவுன் நகை போடுங்க எங்க மாமியார் கேட்குறாங்கனு சொன்னதும் ஜெயந்திக்கி எல்லையில்லா கோவம் வந்தது.

ஆதிரா

You have been blocked from seeing ads.

அவளை ஏன் பெத்தோமுனு நினைக்கையில்ல நம்ம மேலே நமக்கே ஆத்திரம் வருதுங்க என்று கணவனிடம் வருந்தினாள் ஆதிராவின் அம்மா.

ஆதிராவும் கடனை அடைத்து வீடும் கட்டினாள், பெற்றோர்களை நல்ல வசதியாக வைத்துக் கொண்டாள்.

ஆனால் அவளுக்கு இப்பொழுது வயது 30 யைத் தாண்டியது, அவளை திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளைகள் வந்தாலும் எனக்கு வேண்டாம் என்று சொல்வாள்.

காரணம் கேட்டாள் நான் திருமணம் ஆகிப் போய்டேனா இவங்கள யாரு பாத்துப்பா, என்னையும் என் பெற்றோயையும் பாத்துக்குற நல்ல மாப்பிளை வந்தா கல்யாணம் பண்ணுவேன் இல்லையென்றால் நானே கடைசி வரை எங்க அம்மா அப்பாவ பாத்துப்பேன் என்பாள்.

இவளின் வார்த்தையைக் கேட்டதும் ஜெயந்தியும் அவள் கணவனும் பெருமிதத்தோடு அவளை வாரி அணைத்து கொண்டார்கள்.

நாம் எந்தக் கருவை வேண்டாமுனு நினைக்கிறமோ அது தான் நல்ல விதையா இருக்கு, நீ எங்களுக்கு வேண்டாமுனு நினைச்சோம் ஆனால் நீதான் இன்று எங்களை பெருமைப்படுதுற.

நீதான் எங்களுக்கு கிடைத்த கடைசி தேவதை என்று ஆதிராவின் கன்னத்தில் முத்தம் இட்டாள் ஜெயந்தி.

நாம் எந்தப் பிள்ளையை வேண்டாமுனு நினைக்கிறமோ அது தான் நாளைக்கி நமக்கு சோறு போடும்.

கடைசியாக பிறக்கும் பெண் குழந்தைகள் மீது வெறுப்பை காட்டாமல் அவர்களை தேவதையாக நினையுங்கள்.

கடைசி குழந்தைகள் அனைவருமே லிட்டில் பிரின்சஸ் தான்.

மேலும் படிக்க  காமராஜர் சிறுவயது கதை - தமிழில்

எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி நினையுங்கள், யாரிடத்திலும் வேற்றுமை காட்டாமல்.

பெண்குழந்தைகள் பிறந்து விட்டதே இனி நாம் என்ன செய்வோம் என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு ஆதிராவைப் போலத்தான் உங்களின் பெண் குழந்தைகள் இருக்கும்.  ஆகவே யாரும் கவலை கொள்ளாதீர்கள்.

ஆண் பெண் பேதம் பார்க்காமல் அனைத்து குழந்தைகளிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்ளுங்கள்.

நல்ல நண்பன் – நன்னெறிக் கதை
You have been blocked from seeing ads.