You have been blocked from seeing ads.

சந்து – உன்னியார்ச்சாவின் காதல் கதை

கேரளாவில் நடந்த காதல் கதை (சந்து – உன்னியார்ச்சா)…

பாரம்பரிய போர்கலை:

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஒரு வழக்கம் இருந்தது.

மன்னர்களுக்கும் மன்னர்களுக்கும் இடையில் நடக்கும் போர்கள் படைகளோடு அல்லாமல் இரண்டு களறி வீரர்களைக் கொண்டு நடத்தப்படும்.

தன் நாட்டின் பொருள் மற்றும் உயிர்பலிகளை தடுக்கவும் இந்த முறை கையாளப்பட்டது.

இரண்டு மன்னர்களும் இரண்டு களறி வீரர்களை தேர்ந்தெடுத்து மோத விடுவார்கள்.

இறுதியில் எந்த வீரன் வெற்றி பெறுகிறானோ அந்த நாட்டின் மன்னன் வெற்றி பெற்றவன் ஆவான்.

தோல்வி பெற்ற களறி வீரனின் மன்னன் தோல்வி பெற்றவன் ஆவான். வீரத்துக்காக உயிர் வாழும் ஒரு களறி குடும்பத்தின் தலைவன் தான் அரிங்கோடர்.

அரிங்கோடர் களறியை கற்றுக் கொடுக்கும் குரு ஆவார்.

அவருக்கு ஆரோமல் சேகவர் என்ற ஆண் மகனும் உன்னியார்ச்சா என்ற பெண் புலியும் இருந்தன.

இருவரும் களறி வீரர்கள் ஆவார். இவர்கள் இவரும் தன் தந்தையின் சிஷ்யர்கள் விளங்கினர்.

ஒருநாள் தன் தேகம் வியர்க்க தன் தந்தையும் குருவுமான அரிங்கோடர் பாதம் பணிந்தாள்.

தன் மகளின் வீரத்தைக் கண்டு கர்வம் கொண்டார்.

அவரின் மூங்கில் வீட்டினுள் பல சிஷ்யர்கள் இருந்தனர், அதில் மூத்த சிஷ்யனாய் இருந்தவன் ஆரோமல் ஆவான்.

அவர்களின் அருகில் ஒரு இளைஞன் நின்றிருந்தான்.

அவனை அழைத்து அரிங்கோடர் அறிமுகம் செய்தார் அனைவருக்கும்.

இவன் பெயர் சந்து, தலைசிறந்த களறி வீரன் சில நுணுக்கங்களை பயில என்னிடம் சிஷ்யனாக வந்துள்ளான்.

இவனை யாரும் வென்றவர் இல்லை. களறியில் இவன் களிறு என்றான்.

உன்னியார்ச்சாவின் கோபம்:

 உன்னியார்ச்சாவின் கண்ணில் கோபக்கனல் தெரித்தது.

அவன் அண்ணன் ஆரோலின் வாளைப் பறித்து சந்துவிடம் வீசினான்.

சந்து அந்த வாளை எட்டிப் பிடித்துக் கொண்டான். சந்து சிரித்தான்.

அவன் குறும்பு பார்வையோடு பார்த்தான். என்னோடு யுத்தம் செய் என்றாள் உன்னியார்ச்சா.

இருவரும் யுத்தம் புரிந்தனர். களறி வீரர்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வட்டமிட்டனர்.

அரிங்கோடர் தன் உதட்டில் சிரிப்பை வெளிப்படுத்தினார்.

இருவருக்கும் இடையில் போர் முற்றத் தொடங்கியது.

kalari

You have been blocked from seeing ads.

அவன் தன் வாளை மேலே வீசி விட்டு அவிழ்ந்த தன் கொண்டையை சரி செய்தான் சுற்றி இருந்தவர்கள் வாய் பிளந்தார்கள் அவனின் வீரத்தைக் கண்டு, ஆனால் ஆரோமலின் கண்ணில் கோவம் தன் தங்கை தோல்வி உற்றுவாளோ என்ற பயம் இருந்தது.

ஒரு கட்டத்தில் சந்துவின் வாள் உன்னியார்ச்சாவின் உடலில் ஒரு பகுதியை கிழித்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

உன்னியார்சா அதை கண்டு கொள்ளாமல் வாளிலே கவனத்தை வைத்திருந்தாள்.

பெண்ணே வீரம் காக்கம்முன் மானமும் காக்கபட வேண்டும் என்றான் உன்னியார்ச்சாவின் வாளைப் பிடித்து நிறுத்தி நீயும் நானும் வெற்றியும் பெறவில்லை தோல்வியும் பெறவில்லை.

மேலும் படிக்க  உன்னை பைத்தியமாக்கும் காதலே - (துளசி)

இன்னொரு நாள் இந்த யுத்தத்தை தொடர்வோம் என்றான்.

சந்துவின் காதல்:

உன்னியார்ச்சாவின் வீரத்திலும் அழகிலும் தன்னை பரிகொடுத்தான் சந்து.

அவன் கனவிலும் அவள் வந்து சென்றாள். சந்துவின் கைகள் களறி வாள்கள் பிடித்தாலும் அவன் நினைவுகள் அனைத்தும் உன்னியார்ச்சாவையே எண்ணிக் கொண்டிருந்தன.

ஒரு மன்னின் சார்பாக சந்து களறிக்கு அழைக்கப்பட்டான்.

களறியில் வெற்றியும் பெற்றான். தன் குருவான அரிங்கோடரிடம் உன்னியார்சாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி வேண்டினான்.

அரிங்கோடர் நீ ஒரு அனாதை உனக்கு எப்படி என் மகளை தருவது என்று கோபமுற்றார்.

உன்னியார்ச்சாவின் அண்ணனான அரோமலும் தீப்போல் எரிந்து கொண்டிருந்தான்.

 உயர்ந்த களறி குடும்பத்தில் பிறந்த குஞ்சுராமனை தன் தங்கை உன்னியார்சாவிற்கு மணம் முடித்து வைத்தான்.

 உன்னியார்சாவும் குஞ்சுராமனும் தேன் நிலவுகளில் இருக்கும் வேளையில் கையில் வாளோடு உன்னியார்சாவின் வீட்டிற்குள் புகுந்தான். ஏ…… உன்னியார்சா என்று கத்தினான்.

இன்பத்தில் மிதந்தவர்கள் இந்த குரலைக் கேட்டு திடுக்கிட்டனர்.

உன்னியார்சா கண்டு பிடித்து விட்டாள் இது சந்துவின் குரல் என்று.

யாருடா நீ என்று குஞ்சுராமன் கோபத்தில் வெளிவந்தான். சந்து அவனை அறையினுள் தள்ளினான்.

குஞ்சுராமனின் இறப்பு:

சந்து உன்னியார்சாவின் அருகில் ஓடி நின்றான். குஞ்சுராமன் அவனை தடுத்தான்.  பின்பு அவன் குஞ்சுராமனை தூரமாக தள்ளி விட்டான்.

அவன் உன்னியார்சாவின் அருகில் நின்று அவன் மனதில் உள்ள காதலை கவிதை வடிவில் சொல்லிக் கொண்டிருந்தான்.

உன் வீட்டு வாசலின் கோலமாக அல்ல உன் பாதத்தின் காலணியாக வந்திருக்கிறேன் பார் என்று அவளிடம் மண்டியிட்டு வேண்டிக் கொண்டிருந்தான்.

அவளின் பார்வை ஒரிடத்தில் மற்றும் நிலைத்திருந்தது.

அடே சண்டாளா, என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினாள்.  குஞ்சுராமனின் உடல் ஒரு குத்து விளக்கில் சொருகி இருந்தது.

அதைப் பார்த்ததும் சந்து நடுங்க ஆரம்பித்தான், நான் அவனை கொல்லவில்லை என்று புலம்பினான்.

உன்னியார்சா அவனை கோபத்தீயில் கத்தினாள். நீ ஒரு சதிகாரன் என்று.

அரிங்கோடர் களறி குழுவிலிருந்து   சந்து நீங்கியிருந்தான்.

உன்னியார்சாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, அதன் பெயர் ஆரோமல் உன்னி. உன்னியார்சா தன் தந்தையின் இல்லத்தில் வசித்திருந்தாள்.

ஆரோமல் சேகருக்கும் திருமணமாகி ஒரு மகன் இருந்தான்.

அவன் பெயர் குஞ்சுக்கண்ணன். ஒரு களறி யுத்தம் நடக்கவிருந்தது.

அதில் ஒரு மன்னன் சந்துவையும் இன்னொரு மன்னன் ஆரோமல் சேகரையும் தேர்ந்தெடுத்தனர்.

சந்துவின் வீரத்தை அறிந்த அரிங்கோடர் சந்துவை அந்த களறியில் இருந்து விலகுமாறு தூதுவிட்டு ஆரோமலுக்கு ஒரு வாள் செய்து தரும்படி வேண்டினார்

சந்துவின் புலம்பல்: 

    தான் சதிசெய்து குஞ்சுராமனை கொல்லவில்லை என்று உணர்ந்தால் போதும் என்று நினைத்து  போட்டியில் இருந்து விலகி அவனுக்கு ஒரு வாளும் செய்து கொடுத்தான்.

மேலும் படிக்க  நீதான் என் கண்மணி - காதல் கதை

அங்கும் அவனையறியாமல் சில விஷக்காரர்கள் அந்த வாள் செய்யப்பட்ட உலோகத்தில் கலப்படங்கள் கலந்து வைத்தனர்.

அதைப் பயன்படுத்தி களறியில் யுத்தம் செய்த ஆரோமலின் வாள் உடைந்து விழுந்தது, அடுத்து கணம் அவன் தலை மண்ணில் சாய்ந்தது.

இதுவும் சந்துவின் திட்டம் தான் என்று உன்னியார்சாவின் குடும்பம் தீர்ப்பளித்தது.

சந்து தனிமரமானன். ஒரு மலைக்காட்டில் குருகுலம் அமைத்து தன் காதலை சுவாசிக்க தொடங்கினான்.

அப்போது இரண்டு வாலிபர்கள் சந்து….. சந்து….. என்று அழைத்தனர். சந்து அவர்களை விசாரித்தான்.

அதில் ஒருவன் உன்னியார்சாவின் மகன் ஆரோமல் உன்னி, இன்னொருவன் ஆரோமல் சேகவரின் மகன் குஞ்சுக்கண்ணன் என்றனர்.

நாங்கள் இருவரும் உன்னுடைய எமன்கள். என்னுடைய தாய் உன் இரத்ததை கொண்டு வரச் சொன்னார்கள் என்றான்.

சந்து தன் கை விரலை வெட்டி இதோ என்னுடைய இரத்தம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்றான்.

எங்களோடு யுத்தம்புரி உன்னை கொன்று விட்டு வருவது வருவது தான் உன்னியார்சாவின் உத்தரவு என்றனர்.

அதற்கு சந்து, என்னை களறியில் வெல்ல யாரும் பிறக்கவில்லை என்றான், நீங்கள் இருவரும் போங்கள் என்றான்.

முடியாது, ஆடு களறி என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

சந்து அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்படாதுவாறு களறி ஆடினான், ஆனால் அதிலும் அவர்கள் தோல்வியடைந்தன.

போங்கள் பிஞ்சுகளா என்றான் சந்து.. அவர்கள் மறுத்தனர்.

ஒன்று நீ இருக்க வேண்டும் இல்லை நாங்கள் இருக்க வேண்டும் என்று கொக்கரித்தனர்.

சந்துவின் இறப்பு:

சந்து மெல்ல எழுந்தான், குட்டிகளா சந்து எவனாலும் மரணம் அடைய முடியாதவன்.

அவன் உன்னியார்சாவின் மகனிடம் வந்து இது யாருடைய வாள் என்றான்.

அவனோ இது என் தாயின் வாள் என்றான். அதை வாங்கி முத்தமிட்டான்.

உன் தாய் என்ன கேட்டாள்? என்றான். சந்துவின் உயிர் கேட்டாள் என்றான் சிறுவன்.

இதோ எடுத்துச் செல் என்று கூறி வாளை தன் வயிற்றில் தானே இறக்கிக் கொண்டு உயிரை விட்டான்.

முகலாய சுல்தானி ரசியாவின் கதை

You have been blocked from seeing ads.