You have been blocked from seeing ads.

கண்ணப்ப நாயனார் வாழ்க்கை கதை – தமிழில்

கண்ணப்ப நாயனார் பிறப்பு:

உடுப்பி என்னும் ஊரில் வாழ்ந்த நாகனார் மற்றும் தத்தை என்ற வேட்டுவகுல தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகாலமாக குழந்தை இல்லாமல் இருந்தனர்.

பின்னர் அவர்கள் முருகப் பெருமானிடம் மனம் உருகி வேண்டியதால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை பிறக்கும் பொழுது நல்ல திடமாக இருந்ததால் திண்ணன் என்று பெயர் சூட்டினர்.

திண்ணன் வேட்டுவ குலத்தில் பிறந்ததால் அனைத்து வித கலைகளையும் முறையாக கற்றான்.

அவனின் குருவே திண்ணனின் வில்வித்தையைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.

கண்ணப்ப நாயனார் முற்பிறவி:

திண்ணன் அர்ச்சுனனின் அவதாரம், அதனால் தான் வில்வித்தையில் சிறந்து விளங்கினான் என்றும் பலர் கூறுவார்கள்.

அர்ச்சுனன் பாசுபதாத்திரத்தை வேண்டி தவம் புரியும் பொழுது சிவ பெருமான் ஒரு வேட்டுவ குலத்தலைவன் போல் தோன்றி அர்ச்சுனனை சோதித்துப் பார்த்தார்.

அப்பொழுது அர்ச்சுனனும் சிவ பெருமானும் ஒரு காட்டெருமையை கொன்று வீழ்த்தியது நான் தான் என்று இருவரும் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

நீ ஒரு வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் அது உன்னுடைய அம்பாக இருக்காது என்று ஏலனமாக கூறி விடுவான்.

அப்பொழுது சிவ பெருமான் தன்னுடைய உண்மையான உருவத்தில் காட்சியளித்தார்.

அதைப் பார்த்த அர்ச்சுனன் தனக்கு பாசுபதாத்திரம் வேண்டாம் பெருமானே தங்களின் தரிசனமே போதும் தனக்கு முக்தி அளித்து விடுங்கள் என்று வேண்டுவான்.

அப்பொழுது சிவன் அவனின் கையில் பாசுபதாத்திரத்தைக் கொடுத்து விட்டு நீ அடுத்து பிறவியில் வேட்டுகுலத்தில் பிறந்து உன்னுடைய முக்தியை அடைவாய் என்று கூறி மறைந்து விடுவார்.

அதனால் தான் திண்ணன் இந்தப் பிறவியில் வேட்டுவ குலத்தில் பிறந்து வில்வித்தையிலும் சிறந்து விளங்கினான்.

திண்ணனின் பக்தி:

திண்ணன் வாலிபனாக வந்த பொழுது அவனுக்கு வேட்டுவ தலைவன் என்ற பதவியையும் அளித்தனர்.

ஒருநாள் திண்ணன் வேட்டையாடுவதற்காக நாடன் காடன் என்ற வேட்டுவர்களுடன் காட்டிற்குச் சென்றான்.

அப்பொழுது ஒரு காட்டுப்பன்றி ஒன்று இவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அருகில் உள்ள மலைப்பாங்கான காட்டிற்குச் சென்றது.

அதனை வேட்டையாட மூவரும் தொலைதூரம் வந்து விட்டனர், இருப்பினும் அதை கண்டு பிடித்து அதனை கொன்று வீழ்த்தினான் திண்ணன்.

அப்பொழுது அந்தப் பன்றியை காடனிடம் கொடுத்து தீயை மூட்டி சமைக்க சொன்னான் திண்ணன்.

நாடன் அருகில் இருந்த காலகஸ்தி மலையில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது நானும் தந்தையும் வந்தால் அங்கு சென்று சிவனை வழிபட்டு வருவோம், இப்பொழுது சென்று வழிபட்டு வரலாமா? என்று திண்ணனிடம் கேட்டான்.

மேலும் படிக்க  கடைசி வரை வரும் உறவு - தமிழ் கதை

திண்ணனுக்கு அந்த மலையை பார்த்ததும் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி தோன்றியது.

மலையின் மீது ஏறிய களைப்புக் கூட திண்ணனுக்கு தெரியவில்லை, அங்கு ஒரு மரத்தின் அருகில் தனியாக அமர்ந்து இருந்த சிவ லிங்கத்தைப் பார்த்து பேரானந்தம் கொண்டார் திண்ணன்.

அதன் அருகில் சென்று சிவனுக்கு யார் இந்த இலை தளைகளை உணவாகப் படைத்தது என்று கோவம் கொண்டான்.

பிறகு அவன் மார்போடு அணைத்துக் கொண்டான், இந்தக் காட்டில் இப்படி தனியாக இருந்தால் காட்டு விலங்குகள் தொந்தரவு செய்யுமே என்று அச்சம் கொண்டான்.

சிவனுக்கு படையல்:

பிறகு நாடனும் திண்ணனும் மலையின் கீழிறங்கி காடன் சமைத்த பன்றி கறியின் இறைச்சியை ஒவ்வொன்றாய் ருசி பார்த்தான் எந்தக் கறி சுவையாக உள்ளதோ அதை தனியாக எடுத்து வைத்தான்.

திண்ணனின் செயலைக் கண்டு அவனுக்கு பைத்தியம் புடித்துவிட்டது என்று நினைத்து அவனின் தந்தைக்கு தகவல் தெரிவிக்க தங்களின் இருப்பிடத்திற்குச் சென்றனர் நாடனும் காடனும்.

பிறகு அருகில் இருந்த ஆற்றில் உள்ள நீரை தன் வாயில் நிரப்பிக் கொண்டு காட்டில் பூத்திருந்த பூக்களை தன் தலையில் சூடிக்கொண்டும் இறைச்சியை கையில் எடுத்துக் கொண்டு விரைந்து சிவனை நோக்கி சென்றார்.

அங்கு தன் வாயில் இருந்த தண்ணீரை சிவ லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்து தன் தலையில் சூடிய மலர்களை எடுத்து லிங்ககத்தின் மேல் வைத்து பூஜை செய்தான் பின்பு இறைச்சியை சாமியிடம் படைத்தான்.

பிறகு இரவு முழுவதும் சிவ லிங்கத்தின் பாதுகாப்பிற்காக அங்கேயே காவல் காத்தான். சிவனை தனியாக விட்டுச் சென்றால் காட்டு விலங்குகள் துன்புறுத்த நேரிடும் என்று கவலை கொண்டான்.

காலை விடிந்ததும் சிவ லிங்கத்திற்கு உணவு படைப்பதற்காக மலையின் மீது உள்ள காட்டிற்கு சென்று விலங்குகளை வேட்டையாடி அதை தீயில் வாட்டி எடுத்து வந்து படைத்தான்.

அந்த சிவ லிங்கத்தை சிவபோச்சாரியார் என்ற பிராமணர் பூஜை செய்து வந்தார், அன்று சிவ லிங்கத்தைச் சுற்றி மாமிச உணவுகள் கிடந்ததைப் பார்த்து கடும் கோவம் கொண்டார்.

இந்தச் செயலை செய்தவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று திட்டிக் கொண்டே சிவ லிங்கத்தை தூய நீரால் நீராட்டி பூஜை செய்து விட்டுச் சென்றார்.

கண்ணப்ப

You have been blocked from seeing ads.

மறுநாளும் காலையில் சிவ லிங்கத்தைச் சுற்றி மாமிசம் கிடந்ததைக் கண்டு மன வேதனையில் இருந்தார் சிவபோச்சாரியர்.

அவரின் மனவேதனையைப் போக்க சிவன் அவரின் கனவில் வந்து நீ கவலை கொள்ள அவசியம் இல்லை அவன் எனக்கு படைக்கும் பூ தேவர்கள் என் மீது தூவும் பூவை விட சிறந்தது.

மேலும் படிக்க  அப்துல்கலாம் சொல்லும் கதை - MORAL STORY

அவன் எனக்கு படைக்கும் உணவு அமிர்ததை விட சிறந்தது, நாளை அவனின் பக்தியை நீ மறைந்து இருந்து பார் உனக்கு அவனின் மேல் உள்ள கோவம் மறைந்துவிடும் என்று கூறி விட்டு சென்று விட்டார் சிவன்.

திண்ணன் எப்பொழுதும் போல் வேட்டையாடி விட்டு வரும்பொழுது சிவனுக்கு ஏதோ ஆபத்து வருவதைப் போன்று உணர்ந்து விரைந்து சென்றான்.

திண்ணனின் செயல்:

அங்கு சிவனின் ஒரு கண்ணில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்டு அருகில் இருந்த மூலிகை செடிகளின் சாறை எடுத்து வந்து சிவ லிங்கத்தின் கண்ணில்  விட்டான்.

ஆனால் இரத்தம் வழிவது நிற்கவில்லை, பிறகு தான் வைத்திருந்த அம்பால் தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து சிவனின் இரத்தம் வழியும் கண்ணிற்கு பொருத்தினான்.

திண்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது சிவனின் துயரத்தை போக்கியதைக் நினைத்து, ஆனால் சிறிது நேரத்தில் சிவனின் மறு கண்ணில் இருந்து இரத்தம் வழியத்தொடங்கியது.

திண்ணன் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய கால் ஒன்றை சிவனின் இரத்தம் வழியும் கண்ணில் வைத்து விட்டு தன்னுடைய மறுகண்ணையும் அம்பால் புடுங்க முயற்சி செய்யும் பொழுது சிவன் திண்ணனின் கையைப் பிடித்து நிறுத்தினார்.

திண்ணனின் இந்தப் பக்தியைக் கண்டு மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபோச்சாரியார் மெய்சிலித்தார்.

பிறகு சிவன் திண்ணனுக்கு கண்ணப்பர் என்ற பெயரையும் வைத்து தன்னுடைய தரிசனத்தையும் காட்சியளித்தார்.

தன் கண்ணையே நம்ப முடியாத கண்ணப்பர் ஆனந்த கண்ணீர் வடித்தார், தங்களின் தரிசனம் கிடைத்ததே நான் முற்பிறவியில் செய்த புண்ணியமாக இருக்கும்.

எனக்கு முக்தி அளித்து விடுங்கள் என்று சிவனிடம் வேண்டினார் கண்ணப்ப நாயனார், உனக்கு 4 நாட்களில் முக்தி அளிக்கிறேன் என்று சொல்லி மறைந்து விடுவார் சிவ பெருமான்.

பிறகு கண்ணப்ப நாயனார் சிவனின் தரிசனம் அடைந்த 4 நாட்கள் கழித்து முக்தி அடைந்தார்.

சத்யவான் சாவித்திரி கதை 
You have been blocked from seeing ads.

1 thought on “கண்ணப்ப நாயனார் வாழ்க்கை கதை – தமிழில்”

Comments are closed.