You have been blocked from seeing ads.

காட்டுக்குள் ஒர் காதல் தீ – காதல் கதை (ரஞ்சா-ஹீரா)

 சீனாவின் நதிக்கரையில்:

ஹசாரா என்ற தன் கிராமத்தில் ஒரு வானம்பாடியாகத் திரிந்தவன் தான் ரஞ்சா. ஒரு மிராசுதாரரின் மகனாய்ப் பிறந்து தன் தந்தை இறந்தபின் தன்னுடைய சகோதரர்களாலே

கோரமாய் காயப்படுத்தப்பட்டு இன்று ஒரு கந்தல் துணியைப் போல் காட்சியளிக்கிறான்.

அவனுக்கு ஆறுதலாய் இருந்தது அவனுடைய புல்லாங்குழல் மட்டுமே. ரஞ்சா சீன நதியின் கரையோரப் பகுதியில் அமர்ந்து புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தான்.

அவனின் புல்லாங்குழல் இசை காற்றில் மெல்லிய அழுகுரலை மொழியாக்கிக் கொண்டிருந்தது. அவனின் மனதில் உள்ள வேதனைகளை எல்லாம் புல்லாங்குழல் வழியே வெளியிட்டான்.

தன் சகோதரர்களின் துரோகத்தால் விரக்தியின் விளிம்பிற்கு வந்து, ஒரு தனிமரமாய் நின்றான்.

அவனுக்கு வாழவே பிடிக்காமல் உயிரை விடத் துணிந்தான் சீன நதியின் படகோரத்தில் அமர்ந்து இருந்தவன் திடீரென்று தண்ணீரில் குதிக்க முயன்றான்.

படகில் இருந்த கிராமவாசிகள் அவனை தடுத்து மறுகரை கிரமமான சீயல் கிராமத்தில் இறக்கி விட்டன.

 ரஞ்சாவின் வாழ்க்கை:

சீயல் கிராமத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியும் அதன் அருகில் இருக்கும் சீன நதியின் தாளமும் இவனின் புல்லாங்குழல் இசைக்கு உயிரூட்டும் விதமாக இருந்தது.

ரஞ்சாவின் சோக இசை சீயல் கிராமத்தின் மக்களை காட்டுப்பகுதிக்கு அழைத்தது. ரஞ்சா சுதந்திரமாகத் திரிந்தான், அனைவரும் அவனுக்கு உணவு அளித்தனர்,

அனைவரின் வீட்டுத் தோட்டத்திலும் படுத்துத் தூங்குவான். சீயல் கிராமத்தின் ஜமீன் மிரசுக்காரர் ரஞ்சாவின் இசைக்கு அடிமை ஆனார்.

ஒருநாள் மாலைப் பொழுதில் காட்டுப்பதியின் நதிக்கரையின் அருகில் ஒரு குடில் இருந்தது. அவன் அதுவரை அந்தப் பகுதிச் சென்றதில்லை.

அவன் நதியின் பாறைகளின் மேல் நடந்து ஒரு பகுதிக்கு வந்தான். அங்கே ஒரே பெண்களின் சத்தமாக இருந்தது. அவனின் கண்களில் பட்டது இளம் பெண்கள் நீராடும் காட்சி.

ரஞ்சாவின் காதல்:

அந்தப் பெண்களின் கூட்டத்தின் அழகின் ஓவியமாய் ஒருத்தி தன் அரைகுறை ஆடையில் மஞ்சல் மெழுகிய முகமாய் இருந்தாள். அவளை கண் இமைக்காமல் இரசித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு வாழ்கையில் இன்று தான் நாம் வாழவேண்டும் என்று எண்ணமே தோன்றியது. அவள் ராஜஸ்தான் கோதுமையின் நிறமும் குஜராத் குங்குமப்பூவின் நிறமும் கலந்ததைப் போல் அவளின் நிறம்.

அவளின் இதழ் மலர்ந்த ரோஜா பூவின் இதழ் போலக் காட்சியளித்தது. அவன் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏய் யாரு நீ? என்று அவளின் குரலில் குத்தீட்டி முளைத்தது. இவன் ஓடி மறைந்தான், அருகில் இருந்த குடிலில்.                 அந்தக் குடிலில் ஒரே ஒரு திரைச்சீலை. இது என்ன இடம் என்று புரியாமல் மனம் பேதலித்து போனான்.

மேலும் படிக்க  குமண வள்ளல் கதை - தமிழ் கதை

குடிலின் கதவு கதவை திறந்து கொண்டு யாரோ உள்ளே வருவது போன்று இருந்தது. வெளியே பெண்களின் சத்தம் ஏய் ஹீரா சீக்கிரம் உடைமாற்றி வா வெளியே வா என்று. ம்ம் ….. சரி.. வருகிறேன் என்றாள் உள்ளே இருந்த பெண்.

ரஞ்சா பயந்து பதுங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது திரைச்சீலை விலகியது. அவளின் நனைந்த ஆடை இடையில் இருந்து நழுவி விழும் தருவாயில், ஐயோ என்று அலறல் சத்தம் போட்டால் இவனைக் கண்டதும்.

ரஞ்சா

You have been blocked from seeing ads.

அவளின் ஆடை இல்லாத நிலையில் கையே அவளுக்கு ஆடையாக இருந்தது.

அவள் வீல் என்று கத்த முயன்ற போது அவளால் கத்த முடியவில்லை காரணம் அவளின் உதட்டின் மேல் அவனின் உதடு இறுக்கமாக பொருத்தப்பட்டிருந்தது.

அவள் சீ என்றால், அவன் விலகினான். வேண்டாம் கத்தாதே என்று கெஞ்சினான் ரஞ்சா…… அவள் சுதாரித்து பன்மடங்கு வேகமாய் வீல் என்று கத்த முயன்றாள்.

திரும்பவும் அவளால் கத்த முடியவில்லை. இம்முறையும் அவளின் இதழ் இவளின் இதழோடு பிணைந்திருந்தது. அவள் பயந்து நடுங்கி வியர்ந்து போயிருந்தாள்.

தோழிகள் கதவைத் தட்டினர், குடிலை விட்டு வெளியே வந்தாள். ஏய் ஏன் கத்தினாய் ஐயோ என்று… என்று அவளின் தோழிகள் துளைத்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே ஒருவன் என்று தொண்டைவரை வந்த வார்த்தை, வாயில் வரும்பொழுது பல்லி என்று விழுந்தது. ஒரு பல்லிக்கா இப்படி கத்தினாய், சீயல் மீர்சுக்காவின் மகள் ஒரு பல்லிக்குப் போய் பயப்படலாமா? என்று கேளி செய்தனர்.

அவர்கள் இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக் கொண்டது. பிறகு ஹீராவின் சிபாரிசினால் மீர்ச்சுக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டுப் பகுதிக்கு காவலாளியாக நியமிக்கப்பட்டன் ரஞ்சா.

 காட்டுக்குள் காதலர்கள்:

ஹீராவின் நாடிச் சத்ததில் ஒரு சராசரி மனிதனின் புல்லாங்குழல் ஓசை கேட்டுக் கொண்டிருக்கிறது. வெயில் கூட நுழையாத அந்த அடர்ந்த காட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் மகிழ்ந்து திரிந்தான் ரஞ்சா தன் காதலி நினைவில்.

அவன் தன்னுடைய கவலைகளை எல்லாம் பாடிக் கொண்டிருந்த காலம் போய் ஒரு பெண்ணைப் பற்றி பாடிக் கொண்டிருக்கிறான்….. தூரத்தில் இருந்து ஹீரா செருமினாள்… அவன் அவளைப் பற்றி கவிதையில் வர்ணித்துக் கொண்டிருந்தான்…

அவர்கள் இருவரும் அந்த அடர்ந்த காட்டில் ஓடி ஓடி திரிந்தனர். இறுதியில் ஒரு புதரின்மேல் இருவரும் விழுந்தனர். ஹீரா அவனிடம் ஒரு பாட்டுப் பாடு என்றாள்.

அதற்கு அவன் நீ கண்ணை மூடு என்றான். அவளும் கண்ணை மூடினாள். அவன் அவளின் உதட்டின் அருகில் சென்று புல்லாங்குழலை வைத்து அவனின் உதட்டால் இறுக்கி புல்லாங்குழல் வாசிக்கத் துவங்கினான்.

மேலும் படிக்க  மனுநீதிச் சோழன் கதை – (எல்லாளன்)

ஓரிரு நிமிடங்களில் புல்லாங்குழலும் அவர்களின் முத்த இசையுடன் சேர்ந்து கொண்டது. இருவரும் தினமும் இந்தச் இசைப் பயிற்சியைக் கற்றுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் காதல் லீலைகள் ஹீராவின் தந்தையான மிர்சுக்காரருக்கு தெரியவே அவர் காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவது போல் உள்ளே நுழைந்தார்

மிராசுக்காரரின் செயல்:

அவரின் வருகையை உணர்ந்த காட்டுக் குயில்களும் கத்தின. முயல்குட்டிகளும் பதைபதைத்தன, மரச்சருக்களும் எச்சரித்தனர்.

அவளின் சுவாசத்தை இவன் இழுத்துச் சுவாசித்துக் கொண்டிருந்த கததப்பில்  இருந்தான். அவளை பூக்களால் பின்னப்பட்ட இளகிய ஊஞ்சலில் அமரவைத்துத் தாலாட்டினான்.

அவளின் மேல் பூக்களைத் தூவி அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தான், அவர்கள் இருவரும் தன்னை மறந்து இன்பலோகதற்கு செல்ல இருக்கும் நிலையில் அவனின் மேல் ஒரு குதிரையை சவுக்கு இடியாய் வந்து விழுந்தது.

அவனின் தோல்கள் எரிந்தன. அவன் அம்மா என்று அலறிய சத்ததில் அந்த சீன நதியே கண் கலங்கியது.

ஹீராவை பிரித்து ஒரு குதிரையில் ஏற்றினார்கள். ரஞ்சாவை நன்கு அடித்தார்கள்.

பிறகு அவனின் உடலில் மலைத்தேனை தடவி ஒரு மரத்தின் அடியில் கட்டினார்கள்.

அவனின் உடல் மலைத்தேனில் பிசுபிசுத்தது. ரஞ்சாவைப் பார்த்து ஹீராவின் தந்தை, இதோ பார் இனி இந்த காட்டு எல்லையிலே உன்னைப் பார்க்கக் கூடாது என்றார்.

அதற்கு அருகில் இருந்தவன் இவனை அதிகாலை வந்தாலே பார்க்க முடியாது என்று சிரித்தான்.

அவனை கட்டியிருந்த மரத்தில் காட்டு எறும்புகள் அவனின் பாதத்திலும் உடலிலும் நமநமத்தன…………..  refer from p. vijay story

கேரளாவில் நடந்த காதல் கதை (சந்து – உன்னியார்ச்சா)

ஒரு கிராமத்து காதல் கதை
You have been blocked from seeing ads.

3 thoughts on “காட்டுக்குள் ஒர் காதல் தீ – காதல் கதை (ரஞ்சா-ஹீரா)”

Comments are closed.