You have been blocked from seeing ads.

ஜகவர்லால் நேரு வாழ்க்கை வரலாறு

ஜகவர்லால் நேரு குழந்தைகளின் மீது அதிக அன்பு வைத்திருந்த காரணத்தால் அவருடைய பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

பிறப்பு :

நேரு புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் மிகப்பெரிய செல்வந்தருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 நாள் மகனாகப் பிறந்தார்.

இவருக்கு விஜயலக்ஷ்மி பண்டிட் மற்றும் கிருஷ்ணாவு என்ற இரண்டு சகோதரிகள் இருந்தனர்.

நேரு பண்டிட் இனத்தைச் சேர்ந்தவர், அதனாலயே இவர் பண்டிட் ஜகவர்லால் நேரு என்றழைக்கப்பட்டார்.

இவர் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் என்னும் இடத்தில் பிறந்தார்.

இவருடைய தாய்மொழி உருது ஆகும்.

கல்வி :

நேருவின் குடும்பம் செல்வச்செழிப்பில் இருந்ததால் அவரை பள்ளிப்படிப்பை படிக்கவே இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தனர்.

பெரும்பாலும் கல்லூரிப் படிப்புக்காகத்தான் வெளிநாடு செல்வார்கள் ஆனால் நேருவின் தந்தை இந்திய மக்களுக்கு சேவை செய்ய தன் மகனை சிறுவயதிலிருந்தே செதுக்க நினைத்தார், அக்காரணத்திலால் தான் அவர் இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.

1907 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்தார்.

பின்பு 1910 ஆம் ஆண்டு இயற்கை அறிவியலில் பட்டம் பெற்றார்,

1910 முதல் 1912 ஆம் ஆண்டு இன்னர் டெம்பிள் கல்லூரியில் சட்டம் படித்தார்,

திருமண வாழ்க்கை:

தன்னுடைய 26 ஆம் வயதில் 16 வயதுடைய கமலா கவுல் என்ற பெண்ணை 1916 ஆம் ஆண்டு மணந்து கொண்டார்.

திருமணம் ஆன ஒருவருத்திடலே இந்திரா பிரியதர்ஷினி பிறந்தார்.

இவர் தன்னுடைய மகளுக்கு பிரியதர்ஷினி என்று தான் பெயர் வைத்தார், ஆனால் இவருடைய தந்தை மோதிலால் நேரு தன் தாயின் நினைவாக இந்திரா என்று வைத்தார்.

அதனால் அவருடைய பெயர் இந்திரா பிரியதர்ஷினி என்று வைத்தார்.

நேருவின் மனைவியான கமலா கவுல் தன்னுடைய 36 வயதிலே உடல்நலக் குறைவால் இறந்து போனார்.

தன் மனைவி இறந்த பிறகு வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தன் மகளுடன் வாழ்ந்து வந்தார்.

பிறகு விடுதலைப் போராட்டாத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்திராவையும் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தார்.

அரசியல் வாழ்க்கை:

நேருவின் தந்தை அரசியலில் இருந்ததால் நேருவையும் அரசியல் மாநாடுகளுக்கு அழைத்துச் செல்வார்.

1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் ஆங்கிலேய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே ஆங்கிலயே அரசு பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அனைவரிடத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

மேலும் படிக்க  ஜான்சி இராணி லக்ஷ்மிபாய் கதை

அதில் ஏராளமான மக்கள் இறந்து போயின, அதுவே ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று பின்னாளில் அழைக்கப்பட்டது.

நேரு

அந்த சம்பத்திலிருந்து தான் தன்னை முழுமையாக சுதந்திரப் போராட்டத்திலும் அரசியலிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.

1920 ஆம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின் 1922 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

காந்தியடிகளின் மீதும் அவரின் கொள்கைகளின் மீதும் நேரு ஈர்க்கபட்டார், அதனால் காந்தியடிகள் இயக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1924 ஆம் ஆண்டு அலகாபாத் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1929 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை காந்தியடிகளின் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார்.

இவர் 9 ஆண்டு காலம் சிறையில் இருந்துள்ளார், இவர் சிறையில் இருந்த நாட்களில் தன் மகளுக்கு பல கடிதங்கள் அனுப்பிள்ளார், அதுமட்டுமல்லாமல் சில நூல்களையும் எழுதியுள்ளார்.

1934 ஆம் ஆண்டு உலக வரலாற்றின் காட்சிகள், 1936 ஆம் ஆண்டு தன் சுயசரிதை மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவர் 1942 ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தில் கலந்து கொண்டதால் சிறை சென்றார்.

ஆகஸ்டு 15, 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைந்தபின் இந்திய நாட்டின் முதல் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.

இவர் பிரதமராக ஆன பின்பு முதல் ஐந்தாண்டு திட்டத்தை உடுவாக்கினார், அதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வியை மேம்படுத்துவதற்காக பல அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளையும் கட்டினார்.

இலவச மதிய உணவு திட்டத்தையும் கொண்டுவந்தார், பின்னர் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு அரசுப்பணிகளில் இடஒதிக்கீடு செய்தார்.

இந்தியாவில் மக்காளாட்சியை அமல்படுத்தினார், இதனால் வயது வந்த அனைவரும் ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுத்தனர்.

இவருடைய ஐந்தாண்டு திட்டத்தால் 0.7% இருந்த உள்நாட்டு  உற்பத்தி திறன் 4% உயர்ந்தது.

இவர் நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்பட்டார்.

இவர் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தான் இறக்கும் வரை பிரதமராக பதவி வகித்தார்.

நேரு குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் கருணையும் வைத்திருந்தார், இதனால் இவருடைய பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

இவர் நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையை நடத்திய வந்தார்.

இறப்பு:

இவர் 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி புதுதில்லியில் காலமானார்.

நேரு

You have been blocked from seeing ads.

16 ஆண்டு தொடர்ந்து பிரதமாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இவரின் நினைவாக மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு நேரு துறைமுகம் என்று வைத்தனர்.

பல்கலைகழகத்திற்கும் இவருடைய பெயரை வைத்தனர்.

முத்துராமலிங்கத் தேவர் வரலாறு
You have been blocked from seeing ads.

2 thoughts on “ஜகவர்லால் நேரு வாழ்க்கை வரலாறு”

Comments are closed.