இருப்பது ஒரு வாழ்க்கை – வானதி கதை

வானதி ஆசை:

வானதி உன் போன் அடிக்குது, வந்து பேசு.

யாருங்க கால் பண்றது

உன் அக்கா பன்றாங்க

வானதி வேகமாக வந்து போனை எடுத்து பேசினாள்,

(அவளுடைய பெரியம்மா மகள் ஜமுனா எதிர்முனையில் பேசிக் கொண்டிருந்தாள்).

ஜமுனா கால் பண்ணுனதே அவள் புதிதாக வாங்கின வைர நெக்லஸை பற்றி வானதியிடம் பெருமை பேசத்தான்.

ஜமுனாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார், அதனால் ஜமுனாவிற்கு பணத்தட்டுப்பாடே இருப்பதில்லை.

ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கியே தீருவாள்.

ஆனால் வானதியின் நிலை அப்படி இருப்பதில்லை, வானதிக்கும் ஜமுனாவைப் போல் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்க வேண்டுமென்று ஆசை தான்.

ஆனால் வானதியின் கணவர் விக்ரம் ஒரு தனியார் நிறுவனதில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். போதுமான சம்பளம் வரும்.

வானதியும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு தன்னுடைய அக்காவைப் போல் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை வந்தது.

எப்பொழுது ஜமுனா போன் பண்ணாலும் வானதிக்கும் விக்ரமுக்கும் சண்டை வராமல் இருக்காது.

ஜமுனாவைப் போல் நாமும் பெரிய பணக்காரர்களாக வர வேண்டும், நீங்களும் வெளிநாடு போய் சம்பாதீங்கள் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பாள்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

காவ்யாயின் மகிழ்ச்சி:

வானதி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளுக்கு எப்படியாது நாம் பணக்காரியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.

இதனால் அவள் யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாள், சிரிக்கமாட்டாள், சோகமாகதான் இருப்பாள்.

அவளுடைய கம்பெனியில் பல பெண்கள் நல்ல வசதியானவர்களாகவே இருந்தனர்.

ஆனால் காவ்யா என்ற பெண் மட்டும் இவளை விட வசதி குறைந்தவளாக இருந்தாள், தினமும் பஸ்ஸில் தான் கம்பெனிக்கு வருவாள்.

வானதி

மற்ற பெண்கள் எல்லாரும் ஸ்கூட்டியில் தான் வருவார்கள்.

ஆனால் மற்ற பெண்களை விட அதிகமாக மகிழ்ச்சியாக இருப்பவள் இவள் மட்டும் தான்.

எல்லோரிடமும் நன்றாக சிரித்துப் பேசுவாள், சொல்லப்போனாள் கம்பெனி முழுவதும் காவ்யாவிற்கு நண்பர்கள் தான்.

இத்தனைக்கும் வானதியை விட குறைவான சம்பளம் வாங்குபவள்.

வானதிக்கு ஒரே ஆச்சர்யம் அவளை விட நாம் அதிக சம்பளம் வாங்கியும் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறோம் அவள் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று.

ஒருநாள் காவ்யாவிடமே கேட்டு விட்டாள்.

நீ மட்டும் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய், உனக்கு நீ வாங்கும் சம்பளம் போதுமா? என்றாள்.

குடும்பம் நடத்துவதற்கு சரியாக இருக்கும், பிறகு எனக்கு என்ன வேண்டும்.

உனக்கு ஸ்கூட்டி வாங்கவில்லையா? என்றாள் வானதி.

மேலும் படிக்க  பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி வாழ்க்கை கதை

இப்பொழுது வாங்க முடியாது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து வாங்கி விடுவோம் என்றாள்.

உனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இருக்காதா? எதுவும் வாங்க முடியவில்லை என்று, என்னால் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது என்றாள் வானதி.

காவ்யாவின் விளக்கம்:

வானதி சொல்வதைக் கேட்டு காவ்யா மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தாள், பிறகு நமக்கு எப்பொழுது எப்படி வாழ்க்கை அமைய வேண்டும் என்பது கடவுள் தீர்மானித்து வைத்திருப்பார்.

வசதியாக வாழ முடியவில்லையே, இந்தப்பொருள் வாங்க முடியவில்லையே என்று கவலை கொள்வதால் என்ன நடக்கப் போகிறது.

நம்மளுடைய  ஒவ்வொரு நிமிடத்தையும் கிடைக்காதா ஒரு பொருளை நினைத்து கவலை கொண்டு நரகமாக்கி கொள்வதை விட இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும்.

அதோடு மட்டுமல்லாமல் நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை திரும்பவும் இன்னொரு ஜென்மம் கிடைக்குமா என்பது கூட தெரியாது.

வீணாக கவலை கொள்ளாதீர்கள் அன்பான கணவன் அருகில் இருந்தாலே போதும் என்று பாடம் நடத்தி முடித்தாள் காவ்யா.

நீ சொல்வதும் சரிதான் காவ்யா என்னோட கணவர் என்னைய நல்லா பாத்துப்பாரு ஆனா நான் தான் அவர வெளிநாடு போகச் சொல்லி டார்ச்சர் பண்ணுவேன் என்றாள்.

இனிமேல் அப்படி பண்ணக் கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் வானதி.

வானதி வீட்டிற்கு சென்று தன் கணவனுக்காக காத்திருந்தாள்.

விக்ரமிடம் இருந்து போன் வந்தது இன்னைக்கி வர லேட் ஆகும் வானதி, வந்து ஒரு குட் நியூஸ் சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டான்.

என்ன குட் நியூஸா இருக்கும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

இரவு 10 மணிக்கு தான் விக்ரம் வந்தான் வீட்டிற்கு, அவன் வந்ததும் வராததுமா என்னங்க குட் நியூஸ் என்று வேகமாக கேட்டாள்.

நீ ஆசைப்பட்ட மாதிரி நான் வெளிநாடு போகப் போறேன், காலைல 5 மணிக்கு பிளைட்.

என்ன சொல்லிறீங்க எப்படி திடீர்னு கிளம்ப முடியும் என்றாள்.

என் ஆபிசில் இன்னொருதரு போக வேண்டியது அவருக்கு அவசர வேலை ஏதோ இருக்குதாம் அதான் என்னைய போக சொன்னார்.

ஒன் இயர் கழிச்சுத்தான் வருவேன், உனக்காக தான் நான் போறேனு சம்மதம் சொன்னேன் என்றான்.

வானதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது.

விக்ரமும் வெளிநாடு சென்ற ஒரு மாதத்தில் கைநிறைய பணம் வாங்கினான்.

மேலும் படிக்க  சூழ்ச்சியில் விழுந்து விடாதே – குடும்பக் கதை

தன் செலவு போக மீதமுள்ள பணத்தை வானதிக்கு அனுப்பினான்.

அவள் நினைத்ததை விட அதிக பணம் அவளிடம் இருந்தது ஆனாலும் அவளின் கணவனின் பிரிவு அவளை வாட்டியது.

அவனின் உண்மையான அன்பு கிடைக்காமல் ஏங்கினாள்.

அவளுக்கு அப்பொழுது தான் புரிந்தது பணம் இருந்தால் மட்டும் சந்தோஷம் கிடைக்காது என்று.

நம்மை நேசிப்பவர்கள் அருகில் இருந்தால் தான் சந்தோஷம் என்று.

தன் கணவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள் வானதி.

விவேகானந்தர் சிறுவயது கதை

1 thought on “இருப்பது ஒரு வாழ்க்கை – வானதி கதை”

Comments are closed.