You have been blocked from seeing ads.

புத்தரின் வாழ்க்கை வரலாறு கதை

மகாமாயாவின் கனவு:

கபிலவஷ்துவை ஆட்சி செய்து வந்த மன்னர் தான் சுத்தோதனன்.

இவரின் மனைவி மகாமாயா ஆவாள். ஒருநாள் இரவு மகாமாயா தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு வருகிறது, அதில் ஆறு தந்தங்களைக் கொண்டு வெள்ளை நிறத்தில் ஒளி பொருந்திய யானை காட்சி அளிக்கிறது.

பிறகு இவளின் உடலில் அந்த வினோத யானை புகுவதை உணர்கிறாள்.

இந்தக் கனவை தன் கணவன் சுத்தோதனனிடம் சொல்கிறாள், அரசன் அரண்மனையில் இருக்கும் பெரியோர்களிடமும் ஞானிகளிடமும் இந்தக் கனவின் பொருளை வினவுகிறார்.

அந்த பெரியோர்கள் இது போன்ற கனவு வந்தால் உலகம் போற்றும் சிறந்த மகன் பிறப்பான் என்று கூறினார்கள்.

அரசனும் அரசியும் மிகுந்த ஆனந்தத்தில் அந்த நாட்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்

சித்தார்தரின் பிறப்பு:

     ஒருநாள் அரசி மகாமாயா கர்ப்பம் தரித்தால், ஒன்பது மாதம் நிறைவடையும் நேரத்தில் பிரசவத்திற்காக தன் தாயின் இல்லத்திற்கு பல்லக்கில் சென்று கொண்டிருக்கும் போது, லும்பினி என்னும் ஊரில் அழகிய பூஞ்சோலையைப் பார்த்து மிகவும் ஆனந்தம் கொள்கிறாள் மகாமாயா.

     அவள் அந்த பூஞ்சோலையை சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு பல்லக்கில் இறங்கும் தருவாயில் அவளுக்கு பிரசவ வலி ஏற்ப்படுகிறது, பிறகு அந்த லும்பினி என்னும் இடத்திலேயே ஒரு மகன் பிறக்கிறான்.

     தன் மகனை தூக்கிக் கொண்டு தன் கணவன் வீட்டிற்குச் செல்கிறாள் மகாமாயா.

      அரண்மனையில் சுத்தோதனனும் மகாமாயாவும் தன் மகனுக்கு சித்தார்தர் என்று பெயர் சூட்டுகின்றனர்.

சித்தார்த்தரின் தந்தையின் பயம்:

அரண்மனையில் உள்ள ஜோதிடர்கள் சித்தார்த்தரின் ஜாதகத்தைக் கனித்து, இவன் பிற்காலத்தில் மிகப் பெரிய துறவியாக வருவான் என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளானார் மன்னர் சுத்தோதனன்.

ஏனென்றால் தன்னுடைய மகனும் தன்னைப் போல் ஒரு பெரிய சக்கரவர்த்தியாக வரவேண்டும் என்று எண்ணினார்.

அரசன் ஒரு முடிவு எடுத்தார், தன் மகனுக்கு ராஜ வாழ்க்கையை மட்டுமே கொடுக்க வேண்டும். கஷ்டங்கள், துயரங்கள் பற்றி எதுவும் அறியக் கூடாது என்று முடிவு எடுத்து, தன் கோட்டையின் மதில் சுவர்களையும் உயரமாக கட்ட உத்தரவு பிறப்பித்தார். சில ஆண்டுகள் இப்படியே கடந்து ஓடியது.

சித்தார்த்தர் ஆடம்பர வாழ்க்கை மட்டும் அனுபவித்துக் கொண்டிருந்தார். சித்தார்தருக்கு 16 வயது வந்தது.

சித்தார்த்தரின் திருமணம்:

மன்னர் சுத்தோதனன் தன் மகன் வாலிப பருவத்தை அடைந்தவுடன் அவன் மனம் மாறி துறவியாக போகும் வாய்ப்பு இருக்கிறது என்று பயந்து சித்தார்த்தருக்கு 16 வயது இருக்கும் போதே தன் தங்கையின் மகளான யசோதையை மணம் முடித்து வைத்தார்.

மேலும் படிக்க  இந்திரா காந்தி வாழ்க்கை கதை - தமிழில்

அவர்கள் மணவாழ்வில் சந்தோஷமாக இருந்து ஒரு மகனும் பிறந்தான்.

தனக்கு மகன் பிறந்த உடன் பொறுப்பு வந்ததாக உணர்கிறார் சித்தார்த்தர். வெளியுலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவல் கொள்கிறார்.

சித்தார்த்தர் வெளியுலக வாழ்க்கைப் பற்றி அறிதல்:

     வெளியுல வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள தன் தேரோட்டி சகன்னாவுடன் நாட்டை சுற்றிப் பார்க்க புறப்படுகிறார் சித்தார்தர்.

   தேரில் அமர்ந்தபடி தன் நாட்டு மக்களை பார்த்துக் கொண்டு செல்லும் வழியில் ஒரு வயதான முதியவரைப் பார்க்கிறார். இப்படி கூட மனிதர்கள் இருக்கிறார்களா? என்று தன் தேரோட்டியிடம் வினவுகிறார்.

    தேரோட்டியும் மதில் சுவருக்கும் அப்பால் உள்ள வாழ்க்கை இப்படித்தான் இருக்கும், எல்லோருக்கும் இளமைப் பருவத்தைப் போன்று முதுமைப் பருவமும் வரும் என்றார்.

     அரசர்களுக்கும் முதுமைப் பருவம் வருமா? என்று கேள்வி எழுப்பினார் சித்தார்தார்.

      அனைத்து மனிதர்களுக்கும் முதுமை கண்டிப்பாக வரும் என்றார் சகன்னா.

அடுத்து ஒரு நோய் உற்றவனைப் பார்க்கிறார் சித்தார்த்தர், யார் இவன் இவனுக்கு என்னாயிற்று என்று வினவுகிறார். இவனுக்கு பிணி வந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறான், எல்லா மனிதருக்கும் பிணி வரும் போகும் இதுதான் வாழ்வின் நியதி என்கிறான்.

அந்த நோய் வரும் போது அது கொடுக்கும் வலியினால்தான் அவன் துடித்துக் கொண்டிருக்கிறான் என்று விளக்கம் அளிக்கிறார் சகன்னா.

இதைக் கேட்டதும் சித்தார்தரின் மனம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

அடுத்து நகர்ந்து போகும் போது ஒருவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் அவரின் உறவினர்கள் கதறிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பார்த்த சித்தார்தர், ஏன் அவரை சுமந்து கொண்டு செல்கிறார்கள்?, அவரின் உறவினர்கள் ஏன் கண்ணீர் வடிக்கின்றன? என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார் சகன்னாவிடம்.

இது அவரின் இறுதிக் காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு தான் இறுதிக் காலம் அதுதான் அங்கே நடந்திருக்கு என்று விளக்கம் அளிக்கிறார் தேரோட்டி. இதை அனைத்தையும் தெரிந்து கொண்ட சித்தார்த்தர் மனதளவில் பாதிப்பு அடைகிறார்.

அவருக்கு இரவு முழுக்க தூக்கம் வரவில்லை மனிதனுக்கு வாழ்வில் இவ்வளவு துன்பங்களா? என்று யோசிக்கிறார். நடு இரவில் தன் மனைவி மகன் தூங்க்கிக் கொண்டிருக்கும் பொழுது அரண்மனையை விட்டுப் புறப்பட்டார்.

கௌதம புத்தர்_1

You have been blocked from seeing ads.

சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்:

வாழ்வின் துன்பங்களுக்கு எது காரணமாக இருக்கும் என்பதை அறிய வீட்டை விட்டு வெளியே வந்து பல ஞானிகளைச் சந்தித்து தீர்வு கேட்கிறார். அவர்கள் சொன்ன ஒரே பதில் உடலை வருத்தி தவம் செய்வதால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார்கள்.

மேலும் படிக்க  மனுநீதிச் சோழன் கதை – (எல்லாளன்)

அவரும் மெது மெதுவாக உணவைக் குறைத்து கடைசியில் ஒரே ஒரு பருக்கையை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டார். அவர் உடலில் எழும்பு மட்டுமே தெரிந்து ஒரு எலும்புக்கூடைப் போல் காட்சி தந்தார்.

இப்படி உணவு உண்ணாமல் இருப்பதால் உடலும் மனமும் சோர்ந்து போகுமே தவிர தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்து மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் சித்தார்தர்.

சில வருடங்கள் கழித்து சித்தார்தரின் 35 வயதில் பீகாரில் உள்ள போர்க்காயா என்னும் இடத்தில் அரச மரத்தடியில் ஞானம் பெற்றார், அதன்பின் அவர் புத்தர் என்றும் அழைக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து 45 ஆண்டுகள் மக்களுக்கு தனது போதனைகளையும் கருத்துகளையும் வழங்கினார். அவர் வழங்கிய போதனைகளுள் முக்கியமானது ஆசையே துன்பத்திற்கு காரணம்.

ஒரு மனிதன் ஆசையை அடக்கினால் அவனுக்கு துன்பம் வராது என்பதை உணர்த்தியவர், இவரைப் பின்பற்றி இவருடைய மனைவியும் மகனும் துறவு வாழ்க்கையில் ஈடுபட்டனர்.

கருத்து:

ஒவ்வோரு மனிதனும் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தாலே போதும், மனிதன் எதற்கும் ஆசைப்படாமல் நல்ல எண்ணங்களோடு இருந்தாலே கடவுள் அனைத்தும் கொடுப்பார்.

சித்தன்னவாசலில் நடந்த காதல் கதை
You have been blocked from seeing ads.

2 thoughts on “புத்தரின் வாழ்க்கை வரலாறு கதை”

Comments are closed.