You have been blocked from seeing ads.

காந்தியடிகளின் எளிமைக்கான கதை

காந்தியின் எளிமை:

காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் மேல் அதிக மரியாதையும் அக்கரையும் கொண்டிருந்தார்.

காரணம் என்னவென்றால் நம் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிக வீர்ர்கள் நம் விடுதலைக்காக பாடுபட்டனர்.

காந்தியடிகள் ஒருமுறை காரைக்குடிக்கு வந்திருந்தார், அப்பொழுது அவரை தங்க வைப்பதற்கு ஒரு பெரிய பணக்காரரின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர் சில விடுதலை வீரர்கள்.

அந்தப் பணக்காரரின் வீட்டில் நிறைய வெளிநாட்டுப் பொருட்கள் இருந்தனர்.

வாசனைத் திரவியங்களும், கண்ணாடிப் பாட்டில்களும், வீட்டு அலங்காரப் பொருட்களும் ஆடம்பரமாகவே இருந்தன.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காந்தியடிகள் உங்கள் வீட்டிற்கு செலவு பண்ணிய பாதித் தொகையை எண்ணிடம் கொடுத்திருந்தால் இதை விட அழகாக மாற்றியிருப்பேன் என்றார்.
Gandhiji

You have been blocked from seeing ads.

இதனால் அந்தப் பணக்காரன் வெட்கி தலை குனிந்தார்.

காந்திஜி மறுமுறை கானடுகாத்தான் வந்தபொழுது அந்தப் பணக்காரரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அப்பொழுது அங்கு அனைத்து ஆடம்பர பொருட்களும் இல்லாமல் இருந்தது.

மேலும் அங்கு மண்ணால் ஆன பொருட்களே இருந்தனர்.

இதனைப் பார்த்து காந்திஜி மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்தப் பணக்காரரை பாராட்டிவிட்டு வந்தார்.

மதுரையில் காந்தியடிகள்:

ஒருமுறை அவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரைக்கு தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த ஊர்களில் உள்ள உழவர்கள் தங்களின் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் இடுப்பில் ஒரே ஒரு துண்டை மட்டும் அணிந்திருந்தனர்.

`     இதைப் பார்த்த காந்திஜி நம் நாட்டில் பாதி மக்கள் போதிய உடை அணிய வசதி இல்லாத போது தான் மட்டும் வேஷ்டி, மேல்சட்டை, தலைப்பாகை அணிவதா? என்று நினைத்தார்.

அன்றிலிருந்து காந்தியடிகள் வேஷ்டி ஒன்றை மட்டுமே அணிந்தார்.

தன்னுடைய உயிர் இந்த மண்ணை விட்டு பிரியும் வரையிலும் அரைநிர்வாணத்துடனே இருந்தார்.

காந்தியின் கொள்கை:

காந்திஜி மதுரையில் தங்கியிருந்த பொழுது அவரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும்படி வீரர்கள் கட்டாயப் படுத்தினர்.

அந்தக் கோவிலுக்குள் அனைவருக்கும் உள்ளே வர அனுமதி உண்டா? என்றார் காந்தியடிகள்.

அவர் அப்படி கேட்டதுக்கு காரணம் அந்தக்காலகட்டத்தில் எல்லாம் சாதி வன்முறை அதிகமாக இருந்தது.

அதற்கு வீரர்கள் இல்லை என்றனர், எப்பொழுது அனைவருக்கும் உள்ளே வர அனுமதி கிடைக்கிறதோ அன்று அந்தக் கோவிலுக்கு வருகிறேன் என்று சொன்னார்.

அவர் மறுமுறை மதுரை வரும்பொழுது மீனாட்சி கோவிலுக்கு அனைவருக்கும் செல்ல அனுமதி இருந்தது.

இதனால் அம்முறை காந்தியடிகள் மீனாட்சி கோவிலுக்குச் சென்றார்.

Gandhiji_1
இந்த நிகழ்வைப் போலவே குற்றாலத்திலும் ஒரு நிகழ்ச்சி நடந்து இருக்கிறது.

மேலும் படிக்க  புரட்சிப் போராளி பிடல் காஸ்ட்ரோ வரலாறு

காந்தியை குற்றால அருவியில் குளிக்க அனைவரும் அழைத்தபோது அவர் அனைவருக்கும் குளிக்க அனுமதி உண்டா? என்றார்.

உண்டு ஆனால் அந்த அருவியின் வழியாக செல்லும் பொழுது ஒரு கோவில் இருக்கிறது, அதன் வழியாகச் செல்ல  ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றனர்.

இதனால் அந்த அருவியில் நீராட மறுத்து விட்டார்.  அனைவருக்கும் நீராட அனுமதி எப்பொழுது வழங்கப்படுகிறதோ அப்பொழுது வருகிறேன் என்றார்.

காந்திஜி தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தார். கதர் வேஷ்டியை மட்டுமே அணிந்திருந்தார்.

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

முத்துராமலிங்கத் தேவரின் வரலாறு
You have been blocked from seeing ads.

2 thoughts on “காந்தியடிகளின் எளிமைக்கான கதை”

Comments are closed.