கடைசி வரை வரும் உறவு – தமிழ் கதை

வசந்தியின் பாசம்:

ராஜா எழுந்திரிப்பா, எழுந்து பல்ல விழக்கிட்டு டீ குடிங்க என்று தன் மகனை அன்போடு எழுப்புகிறாள் வசந்தி.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்மா என்றான்…

சரிடா கண்ணு நீ நல்லா தூங்கு என்று சொல்லிவிட்டு மகனின் தலையை தடவிக் கொடுத்தாள்.

ராஜா திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தான்.

வசந்திக்கு ஒரு 40 வயது இருக்கும். வசந்தியும் சேகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

வசந்திக்கு 2 பெண் பிள்ளைகளும் 1 ஆண் பிள்ளையும் இருந்தனர்.

அதில் இராஜா தான் மூத்தவன், வசந்தி தன் மகன் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தாள்.

விடியற்காலை 4. மணிக்கே எழுந்து சமைத்து பஞ்சு மில்லுக்கு கிளம்பி விடுவாள்.

ஞாயிறு மட்டும் விடுமுறை என்பதால் சற்று ஓய்வெடுத்துவிட்டு தன்னுடைய வயல்காட்டுக்கு சென்று எதாவது வேலை பார்ப்பாள்.

மகன் ஊருக்கு வந்திருப்பதால் வீட்டில் நின்ன விடக்கோழிய அடித்து கொழம்பு வைத்தாள்,

இருக்குற எல்லா கறியும் இராஜா தட்டுல தான் இருக்கும் அந்த இரண்டு பொம்புளப் புள்ளங்களையும் கண்டுக்கிறதே இல்ல.

சேகர் கொத்தனார் வேலை பார்க்கிறார் அவருக்கு ஓரளவு வருமானம் வரும்தான்.

இருந்தாலும் ராஜாவைப் பொறியியல் படிக்க வைப்பதற்காக நிறைய இடங்களில் கடன் வாங்கி படிக்க வைத்தனர்.

amma

வசந்தியின் செயல்:

சேகருக்கு பொறியியல் படிக்க வைக்க விருப்பம் இல்லை ஆனால் வசந்தி தன் தன் மகன் ஆசைப்பட்டதுதான் படிக்கனுமுனு சேகரிடம் சண்டை போட்டு அவனை நல்ல கல்லூரியில் படிக்க வைத்தாள்.

வசந்தியும் சேகரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்றாலும் ராஜா பிறந்த நாளிலிருந்தே தன் மகன் தான் உலகம், அவன் தான் நம்மளை நல்லா பாத்துப்பான் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள் வசந்தி.

தன் மகன் இருக்கும் நம்பிக்கையில் சேகரை வசந்தி மதிப்பதேயில்லை, சேகருக்கு ஒழுங்காக சமைத்துக் கூட கொடுப்பதில்லை.

இரண்டு மகளுகளும் தான் சேகருக்கு சோறே போட்டுக் கொடுப்பாங்க..

ஒருநாள் தீபாவளிக்கு ட்ரெஸ் எடுக்க வசந்தி தன் இரண்டு மகளையும் மகனையும் அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றாள்.

அங்கு இராஜா 2500 மதிப்புள்ள ஒரு டீ ஷ்சர்ட் வேண்டுமென்றான் ஆனால் வசந்தியிடம் 3500 தான் இருந்தது. தன்னிடம் காசு கொஞ்சம் தான் இருக்குனு சொல்லாமல் தன் மகன் ஆசைப்பட்டுடானே அதை செய்தே தீர வேண்டும் என்று அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டு தனக்கு ஒன்றும் எடுத்துக் கொள்ளாமல் வந்தால்.

உனக்கு சேலை எடுக்காலையானு மகன் கேட்டபோது எனக்கு வீட்டில நெறையா இருக்கு அதான் வாங்கலைனு சொன்னா.

மேலும் படிக்க  குமண வள்ளல் கதை - தமிழ் கதை
வசந்தியின் தலையில் இடி:

இராஜா படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பக்கத்து ஊரு பெண்ணை காதலித்து வந்தான், அந்தப்பெண் வேறு ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவள்.

வசந்தி தன் மகன் ஆசைப்பட்டால் அனைத்தும் செய்வாள் ஆனால் வேறு சமுதாயப் பெண்ணை ஏற்க மாட்டாள் என்று இராஜாவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

காரணம் வசந்தி அந்தப் பெண்ணை ஏற்றாலும் அந்த ஊர்மக்களின் பேச்சுக்குப் பயந்து ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

நாட்கள் போகப் போகப் வசந்திக்கும் சேகருக்கும் அதிகமாக சண்டை வந்துக் கொண்டிருந்தது.

பேச்சு வார்த்தை கூட இல்லாமல் இருந்தனர், வசந்திக்கு ஒரு அதீத நம்பிக்கை தன் மகன் இருக்கும் பொழுது கணவனை ஏன் மதிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால்.

இராஜாவும் படிப்பை முடித்துவிட்டு வேலைதேட ஆரம்பித்தான். அவனுக்கும் ஒரு நல்ல வேலை கிடைத்தது.

அவனுக்கு வேலை கிடைத்த ஒரு மாதத்தில் அவன் காதலித்த பெண்ணின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததால் அவளை அழைத்துக் கொண்டு தன் நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்தான்.

இந்தச் செய்தியை கேள்விப்பட்டு வசந்தி கதறுகிறாள் தன்னுடைய ஒரே நம்பிக்கை தன் மகன்தானே என்று நினைத்து இத்தனை காலம் வாழ்ந்தேன், இன்று அனைத்தும் மண்ணாகிப் போய்விட்டதே என்று புலம்புகிறாள்.

தன் மகன் திருமணம் செய்த நாளிலிருந்து அவள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாள்.

சேகரின் மீது பாசம்:

பின்பு சேகர் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைத்தார்.

இப்பொழுது வசந்திக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான் சேகர்.

வசந்தியின் கருப்பையில் கட்டி வளர்ந்துள்ளது உடனடியாக ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

சேகர் அழைந்து திரிந்து பணத்தை பிரட்டிக் கொண்டு வந்து தன் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்கிறான்.

வசந்திக்கு உணவு ஊட்டுவதில் இருந்து அனைத்து வேலைகளையும் சேகர்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

வசந்திக்கு அப்பொழுது தான் புரிந்தது தன்னுடன் கடைசி காலம் வரை வரப்போகிறது தன்னுடைய கணவன் மட்டும் தான் பிள்ளைகள் இல்லை என்று.

அன்றிலிருந்து வசந்தி தன் கணவனின் மேல் அதிக பாசத்தை பொழிந்தாள்.

மற்ற உறவு அனைத்தும் அவர்களுக்கு திருமணம் ஆனப் பிறகு சென்று விடுவார்கள் நம்முடைய இறுதிநாள்வரை இருப்பது கணவனோ மனைவியோ தான், இதை புரிந்து கொண்டு நடந்தாலே பாதிக் குடும்பங்களில் சண்டை வராது.

நல்லதங்காள் கதை – உண்மை சம்பவம்

1 thought on “கடைசி வரை வரும் உறவு – தமிழ் கதை”

Comments are closed.