You have been blocked from seeing ads.

ஏகலைவன் கதை – மகாபாரதக் கிளைக்கதை

ஏகலைவனின் பிறப்பு:

ஏகலைவன் மகத நாட்டைச் சேர்ந்தவன், இவனின் தந்தை ஒரு வேட்டுவன் ஆவார்.

இவன் சிறுவயதிலே தன் தந்தையைப் போலவே சிறந்த வேட்டுவனாக மாற வேண்டும்  என்ற எண்ணம் கொண்டிருந்தான்.

அவனுடைய தந்தை விலங்குகளை வேட்டையாடும் நுணுக்கங்களை ஏகலைவனுக்கும் கற்றுக் கொடுத்தார்.

ஒருநாள் வேட்டைக்குச் செல்லும் பொழுது அஸ்தினாபுர காட்டில் நிறைய மாணவர்கள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஏகலைவனின் ஆசை:

இதைப் பார்த்ததும் ஏகலைவனுக்கும் தானும் அந்த குருவிடம் முறையாக பயிற்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினான்.

இதனால் ஏகலைவனின் தந்தை குரு துரோணச்சாரியாரிடம் சென்று தன் மகனை அவருடைய  சிஷ்யனாக ஏற்று பாடம் கற்பிக்கும் படி வேண்டினார்.

ஆனால் துரோணாச்சாரியாரோ, நான் சத்திரிய குலத்திற்கு மட்டும் தான் பயிற்சி அளிப்பேன் மற்ற சாமானிய மக்களுக்கு என்னுடைய கலையை சொல்லித் தர மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

ஏகலைவனின் தந்தையும் மன்றாடி பார்த்தார், ஆனால் குரு மனம் இறங்கவில்லை.

இதைப் பார்த்த ஏகலைவன் தன்னால் தானே உங்களுக்கு இந்தக் கஷ்டம் இனி நீங்கள் வருத்தப்பட தேவையில்லை.

குரு துரோணரின் உருவச்சிலையை வைத்தே நான் தினமும் பயிற்சிகள் மேற்கொள்கிறேன் என்னை நினைத்து நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் என்று தன் தந்தைக்கு ஆறுதல் தெரிவித்தான்.

ஏகலைவன்

You have been blocked from seeing ads.

ஆற்றில் கிடந்த களிமண்ணைக் கொண்டு குரு துரோணரின் உருவச் சிலையை வடித்தான்.

பின்பு தினமும் அவரின் சிலையின் முன்னால் தியானம் செய்து விட்டு தானே பயிற்சி எடுத்துக் கொண்டான்.

ஏகலைவன் இரவும் பகலுமாக பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தான், அதனால் புது புது வில்லாற்றல்களை அவனே கற்றுத் தேர்ந்தான்.

ஏகலைவனின் அற்புதச் செயல்:

ஒருநாள் அவன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒருநாய் அவனுக்கு இடையூராக நின்று கொண்டிருந்தது, அது குரைத்து விடும் என்ற பயத்தில் அதன் வாயில் தன்னுடைய அம்பைக் கொண்டு பூட்டி இருந்தான்.

அது குரைக்க முடியாமல் அந்த இடத்தை விட்டுச் சென்று குரு துரோணரின் குரு குலத்தை அடைந்தது.

அந்த நாயின் வாயில் பூட்டப் பட்டிருந்த அம்பைப் பார்த்து அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள், அர்ச்சுனனுக்கு பேரதிர்சியாக இருந்தது, தனக்கு இந்த பயிற்சி எல்லாம் ஏன் குரு சொல்லித் தரவில்லை என்ற வினாவும் ஓடிக் கொண்டிருந்தது.

அர்ச்சுனன் அந்த நாயைக் காட்டி இவ்வாறு இந்த நாயின் வாயில் அற்புதத்தை நிகழ்த்தியது யார் குரு தேவா?

எனக்கு நீங்கள் ஏன் இந்த அற்புத வித்தையை இன்னும் கற்றுத்தர வில்லை, என்னை விட ஒரு சிறந்த வில்லாளி இருக்கிறார்.

மேலும் படிக்க  அம்பிகாவதி அமராபதி காதல் கதை

அர்ச்சுனன் அப்படி கூறியதும் துரோணருக்கே அது யார்? அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

பின்பு தன் சீடர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அந்த நாய் வந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.

அங்கு ஓரிடத்தில் குரு துரோணரின் உருவச்சிலையும் அதன் அருகில் ஒரு இளைஞனும் இருந்தனர்.

அந்த இளைஞனிடம் யார் நீ? ஏன் என்னுடைய உருவச் சிலையை வைத்திருகிறாய்? என்று வினவினார்.

அதற்கு அவன் நான் ஏகலைவன் சில வருடங்களுக்கு முன்னால் தங்களிடம் சிஷ்யனாக ஏற்கும்படி நானும் என் தந்தையும் வந்தோம் ஆனால் தாங்கள் ஏற்கவில்லை.

அதனால் தங்களைப் போலவே ஒரு உருவச்சிலையை செய்து தங்களை என்னுடைய மானசீக குருவாக ஏற்று தினமும் பயிற்சிகள் மேற்கொள்கிறேன் என்றான்.

சரி ஒரு நாயின் வாயில் அம்பை எய்தியது யார் என்று கேட்டார்? நான் தான், நான் வேட்டையாடும் பொழுது குரைத்து விடக் கூடாது என்பதற்காக அதன் வாயை பூட்டி விட்டேன் என்றான்.

அதைக் கேட்டதும் துரோணருக்கு பேரதிர்சியாக இருந்தது, அர்ச்சுனனை இந்த உலகத்தில் சிறந்த வில்லாளியாக மாற்றுவேன் என்று வாக்களித்துள்ளோம், ஆனால் இவன் அவனை விட சிறந்த வில்லாளியாக இருக்கிறானே இவனை என்ன செய்வது என்று யோசித்தார்.

குருதட்சனை:

பின்பு ஏகலைவனிடம் தனக்கு குரு தட்சனையாக என்ன தருவாய் என்று கேட்டார் துரோணர்.

அதற்கு ஏகலைவன் தாங்கள் எதைக் கேட்டாலும் கொடுப்பேன் என்றான்.

உன்னுடைய வலது கை கட்டைவிரலை எனக்கு குரு தட்டையாக கொடுப்பாயா? என்று கேட்டார்.

இதைக் கேட்ட ஏகலைவன் சற்று அதிர்ந்தாலும் குருவின் ஆசையை நிறைவேற்ற தன் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கட்டை விரலை வெட்டி குரு தட்சனையாகக் கொடுத்தான்.

ஏகலைவனின் இந்தச் செயலால் காலம் உள்ளவரை அனைவராலும் பேசப்பட்டான்.

மகாபாரதத்தில் கர்ணன் அர்ச்சுனனை விட சிறந்த வில்லாளி ஏகலைவனே ஆவான்.

இறுதியில் மகததிற்கும் துவாரகைக்கும் போர் நடந்ததில் கிருஷ்ணரின் கையால் இறந்து போனான் ஏகலைவன்.

பின்பு பல ஆண்டுகள் கழித்து ஏகலைவனின் மகனால் கிருஷ்ணன் கொல்லப்பட்டார்.

கண்ணப்ப நாயனார் வாழ்க்கை கதை
You have been blocked from seeing ads.

1 thought on “ஏகலைவன் கதை – மகாபாரதக் கிளைக்கதை”

Comments are closed.