You have been blocked from seeing ads.

எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 3

வளம் பெருகுக

1) தகடூர் என்பது தற்போது ——– அழைக்கப்படுகிறது.

     விடை: தர்மபுரி

2) நாரைபிரியும் விளைவயல்

யாணர்த் தாகஅவன்அகன்றலைநாடே! –இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

     விடை: புதுவருவாய்

3) போரெல்லாங்காவாது வைகுக! போரின்

உருகெழும் ஓதைவெரீஇப் பெடையோடு – இதில் அடிக்கோடிட சொல் எதைக் குறிக்கிறது?

     விடை: ஓசை

4) வெரீஇ என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: அஞ்சி

5) அக்களத்து என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: அம் + களத்து

6) கதிர் + ஈன என்னும் சொல்லை சேர்த்து எழுதுக

     விடை: கதிரீன

மழைச்சோறு

1) கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் யாது?

     விடை: பெருமழை

2) வாசலெல்லாம் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: வாசல் + எல்லாம்

3) பெற்றெடுத்தோம் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

     விடை: பெற்று + எடுத்தோம்

4) கால் + இறங்கி என்பதனைச் சேர்த்து எழுதுக

     விடை: காலிறங்கி

5) கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்ற நூலின் பதிப்பாசிரியர் யார்?

     விடை: அ. கௌரன்

கொங்குநாடு வணிகம்

1)  வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

     விடை: தொல்காப்பியம்

2) முடியுடைய மூவர்களில் ——– பழமையானவர்கள்.

     விடை: சேரர்கள்

3) சேரர்களின் நாடு ——– எனப்பட்டது.

     விடை: குடநாடு

4) சேரர்களின்  தலைநகரம் எது?

     விடை: வஞ்சி

5) சேரர்களின் கொடி —– ஆகும்.

     விடை: வில்

6) சேரர்களின் பூ —— ஆகும்.

     விடை: பனம்பூ

7) கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையம் என்று யார் குறிப்பிட்டுள்ளார்?

     விடை: கிரேக்க அறிஞர் தாலமி

8)  முத்து நகரம் என்று அழைப்படுவது எது?

     விடை: தூத்துக்குடி

9) குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர் எது?

     விடை: சிவகாசி

10) தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது எது?

     விடை: மதுரை

11) தீப நகரம் என்று அழைக்கப்படுவது எது?

     விடை: திருவண்ணாமலை

12) தமிழ்நாட்டில் பின்னலாடை நகரமாக விளங்குவது எது?

     விடை: திருப்பூர்

13) தென்னிந்தியாவிலே முட்டை உற்பத்தியிலும் முட்டைக் கோழி உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கும் நகரம் எது?

     விடை: நாமக்கல்

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 1

14) இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

     விடை: திருப்பூர் (நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா)

15) தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் நகரம் எது?

     விடை: திண்டுக்கல்

16) தமிழ்நாட்டிலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் மாவட்டம் எது?

     விடை: ஈரோடு

17) கடம்பர் என்னும் கொள்ளையனை அடக்கியது ——- மன்னர்கள் ஆகும்.

     விடை: சேரர்கள்

18) தேயிலை தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படும் மாவட்டம் எது?

     விடை: நீலகிரி

19) நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

 கொல்ளீ ரோவெனச் சேரிதோறும் நுவலும் – என்ற வரிகள் எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

     விடை: அகநானூறு

20) மூவேந்தர்களில் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தவர்கள் யார்?

     விடை: சேரர்கள் (செங்குட்டுவன் கடற்போரில் வெற்றி கொண்டான்)

21) பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?

     விடை: நெல்

22) ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?

     விடை: அமராவதி

23) வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது?

     விடை: கோயம்புத்தூர்

24) இந்தியாவிலேயே ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது?

     விடை: சேலம்

25) சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் எது?

     விடை: சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)

காலம் உடன் வரும்

1) கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எந்த விருதைப் பெற்றுள்ளார்?

     விடை: இலக்கியச் சிந்தனை விருது

2) கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்கள் யாவை?   

 •      கன்னிவாடி
 •      குணச்சித்திரங்கள்
 •      உப்புக்கடலைக் குடிக்கும் பூனை

புணர்ச்சி

1) புணர்ச்சி என்றால் என்ன?

     நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது ஆகும்.

புணர்ச்சி

You have been blocked from seeing ads.

2) புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

     விடை: 4

3) உயிரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?

     நிலைமொழியின் கடைசி எழுத்து உயிர் எழுத்தாக இருப்பது ஆகும்.

      எ.கா: சிலை + அழகு = சிலையழகு ( லை = ல் + ஐ)

4) மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?

     நிலைமொழியின் கடைசி எழுத்து மெய்யெழுத்தாக இருப்பது ஆகும்.

      எ.கா: மண் + அழகு = மண்ணழகு (ண்)

5) உயிர்முதல் புணர்ச்சி என்றால் என்ன?

     வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருப்பது ஆகும்.

      எ.கா: பொன் + உண்டு = பொன்னுண்டு ( உ)

6) மெய்முதல் புணர்ச்சி என்றால் என்ன?

மேலும் படிக்க  பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் 2

     வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருப்பது ஆகும்.

      எ.கா: பொன் + சிலை = பொற்சிலை (சி = ச் + இ)

7) தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மூன்றில் வருவது ———– புணர்ச்சி ஆகும்.

     விடை: விகாரப் புணர்ச்சி

8) இயல்பு புணர்ச்சி என்றால் என்ன?

     நிலைமொழியும் வருமொழியும் எந்த வித மாற்றமும் இன்றி இணைவது ஆகும்.

      எ.கா: தாய் + மொழி = தாய்மொழி

9) தோன்றல் விகாரம் என்றால் என்ன?

     புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது ஆகும்.

      எ.கா: தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

10) திரிதல் விகாரம் என்றால் என்ன?

     ஒரு எழுத்து வேறு எழுத்தாக மாறுவது ஆகும்.

      எ.கா: வில் + கொடி = விற்கொடி ( ல் = ற்)

11) கெடுதல் விகாரம் என்றால் என்ன?

     ஓர் எழுத்து மறைவது ஆகும்.

      எ.கா: மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி

12) விகாரப் புணர்ச்சி —— வகைப்படும்.

     விடை: மூன்று

13) பாலாடை – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி  யாது?

     விடை: இயல்பு புணர்ச்சி

14) பொருத்துக:

 1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
 2. மரவேர் – இயல்பு புணர்ச்சி
 3. மணிமுடி – கெடுதல் விகாரம்
 4. கடைத்தெரு – திரிதல் விகாரம்

           விடை:

 1. மட்பாண்டம் – திரிதல் விகாரம்
 2. மரவேர் – கெடுதல் விகாரம்
 3. மணிமுடி – இயல்பு புணர்ச்சி
 4. கடைத்தெரு – தோன்றல் விகாரம்
எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 2.2
You have been blocked from seeing ads.

1 thought on “எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் – 3”

Comments are closed.