You have been blocked from seeing ads.

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றா பருவம் பாடம் – 3

உயிர்க்குணங்கள்

1) இறையரசனின் இயற்பெயர் என்ன?
விடை: சே. சேசுராசா
2) திருப்பாவையை இயற்றியர் யார்?
விடை: ஆண்டாள்
3) திருவெம்பாவையை இயற்றியவர் யார்?
விடை: மாணிக்கவாசகர்
4) சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்படும் நூல் எது?
விடை: திருவெம்பாவை
5) கன்னிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் யார்?
விடை: சே. சேசுராசு
6) திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்படும் நூல் எது?
விடை: திருப்பாவை
7) அடுத்தவர் வாழ்வைக் கண்டு ——- கொள்ளக்கூடாது.
விடை: அழுக்காறு (பொறாமை)
8) நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று ——–
விடை: பொச்சாப்பு (சோர்வு)
9) இன்பதுன்பம் என்னும் சொல்லை பிரித்து எழுதுக
விடை: இன்பம் + துன்பம்
10) குணங்கள் + எல்லாம் என்னும் சொல்லை சேர்த்து எழுதுக
விடை: குணங்கலெல்லாம்
11) பொருத்துக

  1. நிறை – பொறுமை
  2. பொறை – விருப்பம்
  3. மதம் – மேன்மை
  4. மையல் – கொள்கை

விடை:

  1. நிறை – மேன்மை
  2. பொறை – பொறுமை
  3. மதம் – கொள்கை
  4. மையல் – விருப்பம்

இளைய தோழனுக்கு

1) மு. மேத்தாவின் எந்த புதுக்கவிதைக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது?
விடை: ஆகயத்துக்கு அடுத்த வீடு
2) மு. மேத்தா எழுதிய நூல்கள் யாவை?
கண்ணீர்ப் பூக்கள்
ஊர்வலம்
சோழநிலா
மகுடநிலா
ஆகயத்துக்கு அடுத்த வீடு
3) உன்னுடன் நீயே ——– கொள்.
விடை: கைகுலுக்கி
4) கவலைகள் —— அல்ல.
விடை: கைக்குழந்தைகள்
5) விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக
விடை: விழித்து + எழும்
6) போவதில்லை என்னும் சொல்லை பிரித்து எழுதுக.
விடை: போவது + இல்லை
7) படுக்கையாகிறது என்னும் சொல்லை பிரித்து எழுதுக
விடை: படுக்கை + ஆகிறது
8) தூக்கி + கொண்டு என்னும் சொல்லை சேர்த்து எழுதுக
விடை: தூக்கிக்கொண்ட

சட்டமேதை அம்பேத்கர்

1) அம்பேத்தாரின் இயற்பெயர் என்ன?
பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்
2) சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கியர் யார்?
விடை: அம்பேத்கார்
3) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன தலைவராகவும் இருந்தவர் யார்?
விடை: அம்பேத்கார்
4) “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என்று குறிப்பிட்டவர் யார்?
விடை: அம்பேத்கர்
5) இந்திய அரசு அம்பேத்கரின் சமூக பணிக்களுக்கு என்ன விருது வழங்கியது?
விடை: பாரத ரத்னா
6) சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ——–
விடை: சமாஜ் சமாத சங்கம்
7) பூனா ஒப்பந்தம் ——— மாற்ற ஏற்றப்படுகிறது.
விடை: இரட்டை வாக்குரிமை
8) அம்பேத்கர் புத்தரைப் பற்றிய எழுதிய நூலின் பெயர் என்ன?
விடை: புத்தரும் அவரின் தம்மமும்
9) பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ——— சென்றார்.
விடை: லண்டன்
10) ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அம்பேத்கர் பெற்ற பட்டம் என்ன?
விடை: முனைவர்
11) எந்த மன்னரின் உதவியால் அம்பேத்கர் இளங்கலை படிப்பைப் படித்தார்?
விடை: பரோடா மன்னன்
12) ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை எந்த ஆண்டு அம்பேத்கர் நிறுவினார்?
விடை: 1924 ஆம் ஆண்டு
13) இந்திய தேசிய பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக அம்பேத்கர் —— பட்டம் பெற்றார்.
விடை: முனைவர் பட்டம்

மேலும் படிக்க  ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 3

பால் மனம்

1) கோமகளின் இயற்பெயர் என்ன?
விடை: இராஜலட்சுமி
2) கோமகளின் எந்த புதினம் தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றது?
விடை: அன்னை பூமி
3) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் ——— விருதினை கோமகள் பெற்றுள்ளார்.
விடை: தமிழ் அன்னை
4) கோமகள் எழுதிய நூல்கள் யாவை:
உயிர் அமுதாய்
நிலாக்கால நட்சத்திரங்கள்
அன்பின் சிதறல்

அணி இலக்கணம்

1) பிறிது மொழிதல் அணி என்றால் என்ன?
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது ஆகும்.
எ.கா: கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
2) வேற்றுமை அணி என்றால் என்ன?
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது.
எ.கா: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

இரட்டுறமொழிதல் அண்

You have been blocked from seeing ads.

3) இரட்டுறமொழிதல் அணி என்றால் என்ன?
ஒரு சொல் அல்லது ஒரு தொடர் இருபொருள் தருமாறு அமைவது.
எ.கா:

ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே

தீங்காயது இல்லாதிருமலைரா யன்வரையில்

தேங்காயும் நாயும்நேர்செப்பு

4) பிறிதுமொழிதல் அணியில் ——– மட்டும் இடம்பெறும்.
விடை: உவமை
5) இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது —— ஆகும்.
விடை: வேற்றுமை அணி
6) இரட்டுறமொழிதல் அணி யின் வேறு பெயர் ——–
விடை: சிலேடை அணி
7) ஒரே செய்யுளை இரு பொருள்பட பாடுவது —— அணி.
விடை: இரட்டுறமொழிதல் அணி

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் -2
You have been blocked from seeing ads.

1 thought on “எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றா பருவம் பாடம் – 3”

Comments are closed.